Advertisment

விஜய்க்கு ஓட்டுப்போடணும்! த.வெ.க. மிரட்டல்!

fight

மிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அரசியல் களம் சூடுபிடித் துள்ளது. த.வெ.க. கட்சியினரை சார்ந்தவர்களை அடித்ததாகவும், அவர்கள் பொதுமக்களை தாக்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது சம்பந்தமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டன அறிக்கை வெளியிட்ட நிலையில், அமைச்சர் சேகர்பாபு இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Advertisment

வரவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகப் பணியாற்றிவரும் ந

மிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அரசியல் களம் சூடுபிடித் துள்ளது. த.வெ.க. கட்சியினரை சார்ந்தவர்களை அடித்ததாகவும், அவர்கள் பொதுமக்களை தாக்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது சம்பந்தமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டன அறிக்கை வெளியிட்ட நிலையில், அமைச்சர் சேகர்பாபு இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Advertisment

வரவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகப் பணியாற்றிவரும் நிலையில், த.வெ.க. கட்சித் தலைமை, 234 தொகுதிகளிலும் உள்ள அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலமாக அவர்கள் சார்ந்துள்ள சட்டமன்றங்களில், மக்களுக் கான தேவைகள் என்னென்ன என்பதையும், அப்பகுதி மக்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளனர் என்பதையும் ஒரு சர்வே எடுத்துத்தர வேண்டு மென்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சென்னை துறைமுகம் தொகுதியில், 60வது வட்டம் பூக்கடை பகுதியில், கடந்த 11ஆம் தேதி த.வெ.க. வினர் வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் அத்தொகுதியின் குறைகள், தேவைகளை கேட்டறிந்து, தேர்தல் கருத்துக்கணிப்பு கேட்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர். 

Advertisment

அப்போது, த.வெ.க.வினர் திலீப், பாண்டியன், தீபா உள்ளிட்ட சிலருக்கும், அப்பகுதி தி.மு.க. வட்டச் செயலாளர் கவியரசுவுக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. கவியரசுக்கு ஆதரவாகப் பேசிய பொதுமக்களும் பாதிக்கப்பட்ட நிலை யில், அப்பகுதி போலீ சார் தலையிட்டு பிரச் சனையை தீர்த்தனர். இவ்விவகாரத்தில் த.வெ.க.வினர் 10 பேர் ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், தி.மு.க. சார்பாக பேசிய பொதுமக்களில் சிலர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவ்விவகாரம் தொடர்பாக தி.மு.க.வினர் மீது ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு வைக்க, அதை மறுத்த அமைச்சர் சேகர்பாபு, பத்திரிகையாளர்களி டம் "இவர்களின் குற்றச்சாட்டு பொய்யானது, த.வெ.க.வினரின் செயலால் பொதுமக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் சிகிச்சையிலிருக்கும் அவர்களிடம் நீங்களே விசாரித்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை யிலிருக்கும் பெண் கூறுகையில், "அய்யய்யோன்னு ஒரு வீட்டுக்குள்ள கத்துற சத்தம் கேட்டு நான் ஓடிப் போய் பார்த்தப்போ, 10 பேர் வீட்டிலிருந்தவங்கள அடித்துக்கொண்டிருந்தாங்க. என்னன்னு நான் விசாரிக்கவும், "நீ யாரு? போலீசுக்கு போன் பண்ணுவியா பண்ணிக்கோ, டி.வி.கே.வுக்குதான் ஓட்டு போடணும்' என்று சொன்னார்கள். விஜய்க் குத்தான் ஓட்டு போடணும்னு சொல்றாங்க. அவங்க யார்னே தெரியாது. என்னைய பிடித்து தள்ளிவிட் டார்கள். என் மார்ல பலமா அடி. இவங்கட்ட ஆதார் கார்டு, வீட்டுல எத்தனை பேரு இருக்காங்க, யாருக்கு ஓட்டு போடுவாங்கன்னுல்லாம் கேட்டிருக்காங்க. என்னைய தள்ளிவிட்டதுல மூச்சுவிடவே சிரமமா இருக்கு சார்'' என்றார். 

த.வெ.க.வினர் தி.மு.க.வினரிடையே தேர்தல் ஃபைட் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.

-சே

nkn140226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe