Advertisment

ராங்கால் கல்தா பீதி! ஜோசியர்களைத் தேடி ஓடும் அமைச்சர்கள்! மனித உரிமை பலி! தொடரும் லாக்கப் டெத்

rr

"ஹலோ தலைவரே, கவர்னர் மாளிகை ஒருவித டென்ஷனில் இருக்குது.''”

"ஆமாம்பா, கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னை திரும்பியிருக்கிறாரே?''”

Advertisment

rr"உண்மைதாங்க தலைவரே, துணைவேந்தர்கள் மாநாட்டை ஊட்டியில் நடத்திய கவர்னர் ரவி, சென்னை திரும்பிவிட்டார். கவர்னரிடம் இருக்கும், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு கைப்பற்றுவதற்கான மசோதாவை, ராஜ்பவனுக்கு அனுப்பி இருந்தார் சபாநாயகர். வந்த வேகத்திலேயே அதற்கான கோப்பினைப் பார்வையிட்ட கவர்னர், அதில் இருந்த சில இடங்களில் அடிக்கோடு போட்டாராம். பல்கலைக் கழகங்களுக்கு கவர்னர்தான் வேந்தர் என்றாலும், அவை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அரசுக்கும் கவர்னருக்கும் உரசல் நிலவும் நிலையில், அரசின் அனுமதி பெறாமல் துணைவேந்தர்கள் எப்படி அந்த மாநாட்டில் கலந்துகொண் டார்கள்னு கேட்டு, அவர்களுக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பத் தயாராகுது. இது ராஜ்பவனை ஏக டென்ஷனில் ஆழ்த்தி இருக்கு. இந்த நிலையில், புதுவைக்கு புது கவர்னர் நியமிக்கப்பட இருப்பதாக டாக் அடிபடுது.''”

"ஏற்கனவே புதுச்சேரி அரசு, கவர்னர் கண்ட்ரோலில்தானே இருக்குது?''”

"பா.ஜ.க.வின் ஜனநாயகம் அப்படித்தான். நான் இன்னொரு மேட்டர் சொல்றேங்க தலைவரே, தஞ்சை மாவட்டம் களிமேடு சப்பர ஊர்வலத்தில் ஏற்பட்ட மின்சார விபத்தில் 11 பேர் பலியானது தமிழகத்தையே ஹைவோல்ட் அதிர்ச்சிக்குள்ளாக்குச்சி. முதல்வர் உடனே ஸ்பாட்டுக்குப் போய், ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் சொன்னாரு. இந்த விபத்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் ரொம்ப வருத்தத்தைக் கொடுத்திருக்குதாம். அதேபோல், சென்னையில் அவரோட பொறுப்பில் இருக்

"ஹலோ தலைவரே, கவர்னர் மாளிகை ஒருவித டென்ஷனில் இருக்குது.''”

"ஆமாம்பா, கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னை திரும்பியிருக்கிறாரே?''”

Advertisment

rr"உண்மைதாங்க தலைவரே, துணைவேந்தர்கள் மாநாட்டை ஊட்டியில் நடத்திய கவர்னர் ரவி, சென்னை திரும்பிவிட்டார். கவர்னரிடம் இருக்கும், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு கைப்பற்றுவதற்கான மசோதாவை, ராஜ்பவனுக்கு அனுப்பி இருந்தார் சபாநாயகர். வந்த வேகத்திலேயே அதற்கான கோப்பினைப் பார்வையிட்ட கவர்னர், அதில் இருந்த சில இடங்களில் அடிக்கோடு போட்டாராம். பல்கலைக் கழகங்களுக்கு கவர்னர்தான் வேந்தர் என்றாலும், அவை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அரசுக்கும் கவர்னருக்கும் உரசல் நிலவும் நிலையில், அரசின் அனுமதி பெறாமல் துணைவேந்தர்கள் எப்படி அந்த மாநாட்டில் கலந்துகொண் டார்கள்னு கேட்டு, அவர்களுக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பத் தயாராகுது. இது ராஜ்பவனை ஏக டென்ஷனில் ஆழ்த்தி இருக்கு. இந்த நிலையில், புதுவைக்கு புது கவர்னர் நியமிக்கப்பட இருப்பதாக டாக் அடிபடுது.''”

"ஏற்கனவே புதுச்சேரி அரசு, கவர்னர் கண்ட்ரோலில்தானே இருக்குது?''”

"பா.ஜ.க.வின் ஜனநாயகம் அப்படித்தான். நான் இன்னொரு மேட்டர் சொல்றேங்க தலைவரே, தஞ்சை மாவட்டம் களிமேடு சப்பர ஊர்வலத்தில் ஏற்பட்ட மின்சார விபத்தில் 11 பேர் பலியானது தமிழகத்தையே ஹைவோல்ட் அதிர்ச்சிக்குள்ளாக்குச்சி. முதல்வர் உடனே ஸ்பாட்டுக்குப் போய், ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் சொன்னாரு. இந்த விபத்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் ரொம்ப வருத்தத்தைக் கொடுத்திருக்குதாம். அதேபோல், சென்னையில் அவரோட பொறுப்பில் இருக்கும் மாவட்டத்துக்குட்பட்ட சென்னை ஜி.ஹெச்.சிலும் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கிடையே சென்னை அயோத்தியா மண்டப விவகாரத்தில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு மாற்றாக உத்தரவு வந்திருப்பதும் அமைச்சரை சங்கடப்படுத்தி யிருக்கு. தெய்வபக்தி கொண்ட அமைச்சருக்கு இதுபோன்ற சோதனை கள் ஏற்படுவதிலிருந்து மீள என்ன பரிகாரம்னு அவரோட ஆதரவாளர் கள் சிலர், பிரபல ஜோதி டர்களிடம் கேட்டிருக் காங்க. ஜோதிடர்களும் அதற்கேற்ப பரி காரங்களைச் சொல்றாங்களாம். பட்ஜெட் மானியக் கோரிக்கை முடிந்ததும் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம்னு எதிர்பார்ப்பு உள்ளதால, தங்களோட இலாகா மாற்றப்படுமோங்கிற ஊசலாட்டத்தில் இருக்கிற அமைச்சர்களும் ஆதரவாளர்களும் பல மாநில ஜோசியர்களைத் தேடிப் போக ஆரம்பிச்சிருக்காங்க.''

"சமீபகாலமாக காவல்துறையில் விசாரணை மரணம் தொடருதே?''”

rr

Advertisment

"ஆமாங்க தலைவரே, எடப்பாடி ஆட்சியில் சாத்தான்குளம் போலீஸால், அப்பா மகன்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் என்னும் இருவர், கொடூர மாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், அப்பவே கடும் கண்டனத்துக்கு ஆளானது. காவல் நிலைய சித்ரவதைகளைக் காட்டிய "ஜெய்பீம்' திரைப் படம் பார்த்தபோது, முதல்வர் ஸ்டாலினே நெகிழ்ந்து போய், படம் என் மனதை கனமாக்கி விட்டதுன்னு சொன்னார். ஆனால் இப்போது தொடர்ந்து அதுபோன்ற செய்திகள் அடிபடுது. சென்னை மெரினாவில் குதிரை சவாரி மூலம் பிழைப்பு நடத்திவந்த விக்னேஷ் என்ற இளைஞர், லாக்கப்பில் மரணமடைந்ததாகச் செய்தி வந்தது. இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, கஞ்சா தொடர்பான போலீசின் நடவடிக்கைகளின் போது, ஆட்டோவில் வந்த விக்னேஷை போலீஸார் மடக்கியிருக்காங்க. அவர் போலீசை எதிர்த்துப் பேசியதும், கோபமான ஒரு போலீஸ்காரர், ஹெல்மெட்டால் அவர் தலையில் தாக்கியதாகவும், அப்போதே விக்னேஷ் மயங்கியதாகவும், லாக்கப் பில் அடைக்கும் முன்பாகவே அவர் இறந்துவிட்ட தாகவும் தெரியவந்திருக்கு. அதேபோல், திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி தங்கமணி, கைது செய்யப்பட்டு கடும் விசாரணைக் குப் பின் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உயிரிழந்திருக்கிறார். தங்கமணி மரணத்தை சி.பி. சி.ஐ.டி விசாரிக்கும்னு உத்தரவிடப்பட்டிருக்கு. அதே நேரத்தில், விக்னேஷ் விவகாரம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக போலீஸ் தரப்பில் பெரும் பேரம் நடத்தி, பணம் கொடுக்கப்பட்டதா புது சர்ச்சை கிளம்பியிருக்கு.''”

rr

"எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி, தன் மா.செ. பதவியை திடீர்ன்னு விட்டுக் கொடுத்துட்டாரே?''

"ஆமாங்க தலைவரே, அண்மையில் நடந்த அ.தி.மு.க. உள்கட்சித் தேர்தலில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி, சேலம் புறநகர் மா.செ. பதவிக்கு மீண்டும் மனு கொடுத்திருந்தார். அவரது போட்டியாளர்களோ, ஒன்றுக்கு மேற் பட்ட பதவி எதற்குன்னு வரிஞ்சிகட்டத் தீர்மானித் தார்களாம். இதையறிந்த எடப்பாடி, தானாக மா.செ. பதவியை விட்டுக் கொடுத்துவிட்டு, ஒருவருக்கு ஒரு பதவிங்கிறதை நான் ஏற்கிறேன் என்றபடி, அந்த மா.செ. பதவியில் தனது வலது கரமான சேலம் இளங்கோவனை உட்காரவைத்துவிட்டார். இது என்ன திடீர் ஞானோதயம்னு நக்கலடிக்கும் எதிர்கோஷ்டியினர், மற்றவர்களும் இதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளை கைவிடணும்னு குரல் எழுப்ப ஆரம்பிச்சிட்டாங்க.''”

"நாடார் சங்கத்திலும் பவர் யுத்தம் நடந்திருக்கே?''”

rr"ஆமாங்க தலைவரே, நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தட்சிண மாற நாடார் சங்கம், வி.வி.மினரல்ஸ் வைகுண்ட ராஜனின் பிடியில் இருந்து வந்தது. சசிகலாவைத் தீவிரமாக ஆதரித்த வைகுண்டராஜன், ஆர்.கே. நகரில் தினகரன் போட்டி யிட்ட போதும் அவருக் காக சகல உதவிகளையும் செய்தார். இதையெல்லாம் கவனித்துவந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தனது மேஜிக் மூலம், இந்த சங்கத்தில் ஆட்சிக் குழுத் தலைவராக இருந்த வைகுண்டராஜனின் சகோதரர் கணேசனை வெளியேற்றும்படி செய்தார். மேலும், மிச்ச சொச்சம் இருக்கும் அவரது ஆதரவாளர்களையும் களை எடுத்து, அவர்கள் மீது, போலீஸில் முறைகேட்டுப் புகார் கொடுக்கும் முயற்சிகளும் நடக்குது.''”

"பா.ஜ.க. ஆதரவு யுடியூபரான மாரிதாஸ் அப்செட்டில் இருக்காராமே?''”

"ஆமாங்க தலைவரே, தனக்கு அரசியல் கேடயம் வேண்டும்னு நினைக்கும் யுடியூபரான மாரிதாஸ், பா.ஜ.க.வில் முறைப்படி சேர்ந்து, ஒரு பதவியில் உட்காரவேண்டும் என்று ஆசைப்படுகிறா ராம். இதற்காக மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து டேரா போட்டவர், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையைப் பலமுறை சந்தித்து வேண்டு கோள் வைத்தாராம். அண்ணாமலையோ, அவரைக் கண்டுகொள்ளவே இல்லையாம். மாரிதாஸ் கெஞ்சிக் கேட்டும், அண்ணாமலை மனம் இரங்க வில்லையாம். அதனால், அடுத்து என்ன செய்வ தென்கிற விரக்தியிலும் பதட்டத்திலும் தவிக்கிறா ராம் மாரி. இதற்கிடையே, அண்மையில் தேர்ந் தெடுக்கப்பட்ட பா.ஜ.க. மாவட்டப் பொறுப்பாளர் களில் அதிகம் அறிமுகமாகாத திருவள்ளூர் சரவணன், பா.ம.க.விலிருந்து வந்த மயிலாடுதுறை அகோரம் போன்றவர்களுக்கே பதவி தரப்படுகிறது என்கிற சர்ச்சையும் எதிரொலிக்கிறது.''”

"இது கட்சி மாறும் சீசன் போலத் தெரிகிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, ஏற்கனவே கமலின் மக்கள் நீதி மையத்தில் இருந்த நான்கைந்து மா.செ.க்கள், கட்சி மாறிய நிலையில், மேலும் சில முக்கியப் பிரமுகர்கள், கமல் மீதான நம்பிக்கை இன்மை யால் கட்சி தாவும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். இதே போல், சிவகங்கை மாவட்டத்தில் அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி.தினகரன், மே தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், அக் கட் சிப் பிரமுகரான உமாதேவன், உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று, தினகரனை உதறியிருக்கிறார். இவர் அ.தி.மு.க.வில் மா.செ.வாகவும் எம்.எல்.ஏ.வாக வும் இருந்தவர். ஏதோ ஒரு பிரச்சினையில் தினகரன் கடுமையாகத் திட்டியதால்தான், அவர் இந்த முடிவுக்கு வந்தாராம். இதையறிந்த சசிகலா, தின கரன் இன்னும் திருந்தலையே என்று கோபப்பட் டாராம். உமாதேவனும், எந்தக் கட்சிக்குப் போக லாம் என்று இப்போது தாயம் உருட்டுகிறாராம்.''”

rr

"நானும் ஒரு செய்தியைச் சொல்றேன்.. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வலுவான கூட்டணியை உருவாக்குவதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய பங்கு வகிப் பார்னு எதிர்பார்க்கப்படுற நிலையில், தி.மு.க மாணவரணியின் இரண்டு நாள் மாநாடு நடந் திருக்குது. இதில் கல்வி -சமூக நீதி -கூட்டாட்சித் தத்துவம் பற்றி பேசுவதற்காக கேரள சி.பி.எம். அமைச்சர் ராஜீவ், சி.பி.ஐ. கட்சி எம்.பி. சந்தோஷ் குமார், பார்லிமெண்ட்டைக் கலக்கும் திரிணா மூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவர் தலைவர் கண்ணையாகுமார் இப்படி பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தாங்க. கூட்டாட்சி- மாநில உரிமை பற்றி பேசுற கல்வியாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துக்கிட்டாங்க. தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதியும் கலந்துக்கிட்ட இந்த மாநாட்டில் பேசிய அகில இந்திய பேச்சாளர்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையும் மு.க.ஸ்டாலின்தான். எம்.பி. தேர்தலுக்கான முன்னோட்டமாக மாணவரணி மாநாடு நடந்திருக்கு. டெல்லித் தரப்பும் இதை உற்றுக் கவனிச்சிருக்குதாம்.''

nkn040522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe