சென்னை கலாஷேத்ரா வின் முன்னாள் இயக்கு னர் லீலாசாம்சன் கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி தனது சமூக வலைத் தளத்தில், "நடனப் பிரிவின் துணை பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ஒருவர், ஒரு மாணவியுடன் தகாத உறவில் இருப்பதாகவும் அதேபோல முன்னாள் மாணவி ஒருவர், அந்த பேராசிரியரால் கர்ப்பமாகி மருத்துவமனைக்குச் சென்று கருக்கலைப்பு செய்தார்'” என்றும் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வரவே, அந்த பதிவை டெலிட் செய்துவிட்டார் லீலாசாம்சன்.

kalakshetra

Advertisment

இதுதான் பிரச்சனையின் தொடக்கப் புள்ளி. கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் இயக்கு னரே, அங்கு பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல்ரீதியில் துன்புறுத்தல்கள் நடப்பதாகப் பதிவிட்டிருந் தது, மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பர பரப்புகளுக்கு நடுவே, அமெரிக்காவை சேர்ந்த கேர் ஸ்பேசஸ் என்ற கலாச்சார அமைப்பு, கலாஷேத்ராவை சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்ட பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக புகார்கள் தெரிவித்துள்ள தாகக் கூறியுள்ளது. இதைப் பற்றி டெல்லியைச் சேர்ந்த சமூக ஊடகம் செய்தி வெளி யிடவே, தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.க்கு ட்விட் போட, தேசிய அளவில் இந்த விஷயம் பரபரப்பாகத் தொடங்கியது.

சென்னை அடை யாறில் இயங்கிவரும் கலாஷேத்ரா அறக்கட்டளை, பரதநாட்டியம் மற்றும் இசை தொடர்பான கலைப் படிப்புகளுக்கு பெயர்பெற்றது. 1936-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கலாஷேத்ராவில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு மாணவ-மாணவி களும் பயின்றுவருகின்றனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு, “"இது வரை கலாஷேத்ரா குறித்து புகார் எதுவும் வரவில்லை. இருந்தாலும் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக''த் தெரிவித்தார்.

ff

Advertisment

இதையடுத்து கலாஷேத்ரா வின் தற்போதைய இயக்குனர் ரேவதி ராமச்சந்தி ரன் டி.ஜி.பி.யைச் சந்தித்து, "அதுபோல ஓர் சம்ப வம் நடைபெறவில்லை என்றும் பாலியல்ரீதியில் பாதிக்கப்பட்டதாக கூறும் முன்னாள் மாணவியும், தற்போதைய மாணவியும் இதை மறுத்துள்ளதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவிகள் யாராவது புகார் கொடுத்தால் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் வெளிவந்ததையடுத்து கடந்த ஜனவரி 3-ஆம் தேதி கலாஷேத்ராவின் ஐ.சி.சி. கமிட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜிதா, நடன கல்லூரிப் பேராசியை ருக்மணிதேவி, நந்தினி நாகராஜன், உமாமகேஷ்வரி ஆகியோர் கலா ஷேத்ரா மாணவிகளை அழைத்து விசாரித்தபோது, ஒருவரும் புகாரளிக்க முன்வரவில்லை என்றனர். "கலாஷேத்ரா குறித்து புரளியையோ, வதந்தி யையோ கிளப்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என அதன் வலைத்தளம் எச்சரிக்கிறது.

"இப்படி விசாரணைக்கு முன்னே மிரட்டப்பட்டால் யார் தைரியமாக புகார் கொடுக்க முன்வருவார்'' என்கிறார்கள் இந்த விவகாரத்தை உற்றுக்கவனித்து வருபவர்கள்.

கலாஷேத்ரா முன்னாள் இயக்குனர் லீலாசாம்சனைத் தொடர்புகொண்டால் அவர் போனை எடுக்கவில்லை. தற்போதைய இயக்குனரான ரேவதி ராமச்சந்திரன் நக்கீரன் என்று கூறியதுமே தொடர் பைத் துண்டித்துவிட் டார். கலாஷேத்ரா விசாரணை கமிட்டி யை சேர்ந்த வழக் கறிஞர் அஜிதாவைத் தொடர்புகொண்டோம். போனை எடுத்த அவர்களின் அசிஸ்டெண்ட், “"மேடமுக்கு உடல்நிலை சரியில்லை. மெசேஜ் செய்தால் பதில் கூறுவார்''” என்று தெரி வித்தார். அதன்படி நாம் அவரை தொடர்புகொண் டோம். அதற்கு, “"கலா ஷேத்ராவில் பாதிக்கப்பட்ட தாக எந்த ஒரு புகாரும் வரவில்லை. முன்னாள் இயக்குனர் லீலாசாம்சன் மீது, பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளதாக''வும் தெரிவித் தார். இதுதொடர்பாக விசாரணை நடந்துவருவ தால் மேற்கொண்டு பேச மறுத்து விட்டார்.

கலாஷேத்ராவின் முன்னாள் நாட்டிய மாணவியான "பாய்ஸ்' பட நடிகை அனிதா ரத்னத்திடம் பேசினோம். "உலக அளவில் புகழ் பெற்ற இந்த கலாஷேத்ராவால் இந்தியாவுக்குப் பெருமை. அதுவும் மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த பாரம்பரிய கலாச்சார கல்லூரியில் இப்படி ஒரு சம்பவம் என்பது எனக்கு ரொம்ப வருத்தமளிக்கிறது. கடந்த பத்து வருஷமா இதுபோல நடக்கிறதா சொல்றாங்க. புகாரில் சம்பந்தப்பட்ட பேராசிரியரை விசாரிக்கணும். இப்போதைக்கு ஒரு மாணவி புகார் சொல்ல முன்வந்ததா சொல்றாங்க. இதுபோல சம்பவம் நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமா வந்து புகார் கொடுத்தாதான் இந்த நிலை தொடராது'' என்றார்.”

kk

கலாஷேத்ரா முன்னாள் மாணவியான மீராகிருஷ்ணன் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல் களை நக்கீரனிடம் தைரியமாக வெளிப்படுத்தி னார். "நான் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவள். எங்கள் குடும்பம் கலைக் குடும்பம். கலாஷேத்ராவில் படிப்பது அங்கு தரப்படும் பட்டத்துக் காக இல்லை. கலைமீதுள்ள ஆர்வத்தால்தான். பெரிய கனவுகளுடன் நான் இங்கு வந்தேன்.

ஒருநாள் கலாஷேத்ரா வளாகத்தில் மரத்தடியில் இருந்தபோது, பேராசிரியர், ஹரிபத்மன் என்னருகே வந்து வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். எனக்கு முதலில் அது புரியவில்லை. அவரது நோக்கம் புரிந்தபோது மறுத்தேன். மீண்டும் ஒருவிதமான பாலியல் சைகையுடன், யாருக்கும் தெரியப்போவதில்லை என்று கூறி அழைத்தார். நான் அவரது அழைப்பை உறுதி யாக மறுத்தேன். அதுமுதல் எனக்கான பிரச்சனை ஆரம்பமானது. தொடர்ந்து வந்த மாதங்களில் ஹரிபத்மனால் தொந்தரவுக்கு உள்ளானேன்.

ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கல்லூரிக்கு வந் திருந்த நிலையில், வகுப்புக்கும் பாத் ரூமுக்கும் போய் வந்து கொண்டி ருந்தேன். ஒரு முறை பாத்ரூமில் இருந்து வெளி வரத் தாமத மானபோது, "பாத்ரூமில் யாருடன் இருந்துவிட்டு வருகிறாய்?' என அனைவர் முன்னிலையிலும் அசிங்கமாகக் கேட்டார். கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்களுக்கும் மேல் என்னை அவமானப்படுத்தினார்.

kalakshetra

ஒருசமயம் நாட்டிய நிகழ்வொன்றுக்காக எனக்கு கிருஷ்ணர் வேடம் கொடுத்தார். நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் நிகழ்ச்சிக்கான நாள் நெருங்கியதும், "அந்த வேடத்தை நீ சரியாகச் செய்யமாட்டாய்' என்று சொல்லி என்னிடமிருந்து பறித்தபோது நொறுங்கிப்போனேன். இத்தகைய கலைநிகழ்ச்சிகளில் ஹரிபத்மனுடன் அனுசரித்துப் போகிறவர்களுக்கே பெரும்பாலும் வாய்ப்பளிப்பார். இத்தகைய தொடர் நெருக்கடிகளால் மனமுடைந்து நான் 2019-ல் திருவனந்தபுரத்துக்கே திரும்பிட்டேன்.

இப்போது கலாஷேத்ரா நிர்வாகம் முன்னாள்- இந்நாள் மாணவிகள் யாரும் பாலியல் தொந்தரவு குறித்து புகார் செய்யவில்லை என்கிறது. இது எவ்வளவு பெரிய பொய். நானே கலாஷேத்ராவுக்கு மின்னஞ்சலில் புகார் அனுப்பியுள்ளேன்.

என்னை என்று இல்லை,… ஹரிபத்மன் கலா ஷேத்ரா பெண்கள் பாத்ரூம் பக்கம் தற்செயலாக நட மாடுவார். உணவு இடைவேளையின்போது பெண் கள் பக்கம் வந்தமர்வார். தொட்டுப்பேசுவார். இப் போது கலாஷேத்ராவில் இரண்டாமாண்டு பயிலும் சில மாணவிகள் என்னைத் தொடர்புகொண்டு பேசி னர். அவர்கள் பேசுவதை வைத்துப் பார்த்தால், ஹரி பத்மன் மட்டுமல்லாமல் வேறுசில ஆசிரியர்களும் மாணவிகளை தவறான நோக்கத்தில் அணுகுகின்ற னர். சிலர் இரவு, வீடியோ அழைப்பில் வந்து பேசச் சொல்கின்றனர். எத்தனை காலம் உண்மையை அழுத்தி, ஒடுக்கி வைத்துவிட முடியும்''’என்கிறார்.

DGPsaliendrababu

கலாஷேத்ரா முன்னாள் மாணவியான மீராகிருஷ்ணனும் மற்றொரு மாணவியும் தற்போது தைரியமாக வெளிவந்து இவ்வமைப்பில் நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்துப் பேசியுள்ளார்கள். இவர்களைப் போல மற்றவர்களும் வாய்திறக்கும் போதுதான் உண்மைகள் வெளிவரும்.

ஒரு அமைப்பு எத்தனை புகழ்மிக்கதாகவும் பாரம்பரியமானதாகவும் இருந்தாலும், அதனைவிட வும் மிக முக்கியமானது அதில் பயிலும் மாணவி களும் அவர்களின் நலன்களும். அதை மனதில் கொண்டு நியாயமான விசாரணைகள் நடைபெறு வதையும் தவறு செய்தவர்கள் தப்பாமலிருப்பதையும் மத்திய-மாநில அரசுகள் உறுதிசெய்யவேண்டும்.

-அரவிந்த்

படம்: குமரேசன்