தேர்தல் அரசியலில் சாதி அடிப்படையில் கட்சிப் பொறுப்புகளை வழங்குவது அரசியல் கட்சிகளின் நீண்டகால வழக்கம். அதன்படி, அ.தி.மு.கவில் எழுபது மாவட்டங்களுக்கான மா.செ.க்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் அளித்த பட்டியல்படியே ஒ.செ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

கள்ளக்குறிச்சி அ.தி.மு.க மா.செ.வாக இருக்கும் உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ. குமரகுருவின் பரிந்துரையிலான மாவட்ட நிர்வாகிகள், ஒ.செ.க்கள் நியமனம், கட்சிக்குள் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.

kk

இதுகுறித்து நம்மிடம் புலம்பிய அ.தி.மு.க. தொண்டர்கள், ""மாவட்டத்தில் இருக்கும் 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் சாதிய ரீதியிலேயே ஒ.செ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வன்னியர்கள் அதிகமுள்ள சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஒன்றியங்களில் நாயுடு கணக்கர் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கே ஒ.செ. பதவி வழங்கப்பட்டுள் ளது. சங்கராபுரத்தில் ஏற்கனவே ஒ.செ.வாகவும், 2006ல் ஜெ.வால் வேட்பாளராகவும் நியமிக்கப் பட்ட வன்னியரான சன்யாசி ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்.

Advertisment

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தருவதைப் போலவே, கட்சியிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு குரலெழும்புகிறது. அதன்படி, ரிஷிவந்தியத்தின் மூன்று ஒன்றியங்களில் ஒன்றில் மாவட்ட மகளிரணி மா.செ.வான அமுதாவை ஒ.செ.வாக நிய மிக்கக் கோரியபோதும் மா.செ. மறுத்துவிட்டார்.

கட்சியின் எக்ஸ் மாவட்ட பொருளாளரான திருக்கோவிலூர் சந்திரசேகரின் ஒ.செ. கனவு மா.செ.வால் கலைக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் பழைய விசுவாசிகளைக் கழற்றிவிட்டு, தனது விசுவாசிகளை பொறுப்புகளில் நியமித்திருக்கிறார் மா.செ. அதேசமயம், தியாகதுருகம் ஐயப்பா, கள்ளக்குறிச்சி ராஜசேகர் போன்ற சிட்டிங் ஒ.செ.க்களை கழற்றிவிட்டால், அதன் விளைவு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால், அவர்களை விட்டுவைத்திருக்கிறார்.

தனது தீவிர விசுவாசியான குமரகுருவுக்கு மா.செ. பதவி வழங்க, தலைமைக்கு சிபாரிசு செய்தார் முன்னாள் மா.செ. ஜெயச்சந்திரன். தற்போது, ஒ.செ. பதவிகூட கிடைக்காமல் முட்டிக் கொண்டிருக்கும் ஜெயச்சந்திரனுக்கு, தலைமையின் திக் கெஸ்ட் பிணைப்பில் இருக்கும் குமரகுரு உதவ மறுக்கிறார்.

Advertisment

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் பலமான வாக்கு வங்கியைப் பெற்றிருந்தாலும், ஒரு மா.செ. பதவிகூட இந்த சமுதாயத்தினருக்கு வழங்கப்படவில்லை. உதாரணமாக, கள் ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, மாவட்ட ஜெ. பேரவை பொறுப்புக்கு முயற்சி செய்தாலும், மாவட்ட அளவில் பொறுப்பு கிடைக்கவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கும் இதே நிலைதான். தி.மு.க.வுக்கு தாவியிருக்கும் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் மா.செ. லட்சுமணன், மாவட்ட அமைச்சர் சண்முகம்தான் கட்சித் தாவலுக்குக் காரணம் என்றிருக்கிறார். இதுபோலவே, மா.செ. குமரகுருவால் பலர் மாற்றுக்கட்சிக்கு தாவும் யோசனையில் இருக்கிறார்கள்’’ என்கின்றனர்.

“எளிய மனிதர்களுக்கும் பதவி கொடுத்தவர் ஜெயலலிதா. ஆனால், தற்போதைய தலைமையோ, அதன் கீழியங்கும் நிர்வாகிகளோ அப்படி இருப்பதில்லை. தங்களது விசுவாசிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் கட்சி கலகலத்துப் போயிருப்பதற்கு கள்ளக்குறிச்சி ஒரு உதாரணம்’’ என்று கொந்தளிக்கிறார்கள் ர.ர.க்கள்.

-எஸ்.பி.சேகர்