Advertisment

உண்மையை மறைத்த கக்கன் பேத்தி! -நீர்த்துப்போய்விடுமோ நிர்மலாதேவி வழக்கு?

ss

"கவர்னர் பெயரால் கல்லூரி மாணவிகளுக்கு வலை! ஆடியோ ஆதாரம்!' என்னும் தலைப்பில், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக்கல்லூரி கணிதத்துறை உதவிப் பேராசிரி யர் நிர்மலாதேவி, நான்கு மாணவிகளிடம் கவர்னர் லெவல் வி.வி.ஐ.பி. ஒருவரின் பாலியல் தேவைக்காக செல்போனில் பேசிய விவகாரத்தை, 2018 ஏப்ரல் 8-10 இதழில், முதன்முத லில் அம்பலப்படுத்தியது நக்கீரன். இதனைத்தொடர்ந்து வழக்கு பதிவாகி, 2018 ஏப்ரல் 16ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி யும் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இவ்வழக்கு சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, அப்போது சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலை மையில் 9 தனிப் படையினர் விசா ரணை மேற்கொண் டனர். நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானமும் விசாரணை நடத்தினார்.

Advertisment

sdf

கடந்த 6 வருடங்களாக இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட்டில் நடந்துவரும் நிலையில், தற

"கவர்னர் பெயரால் கல்லூரி மாணவிகளுக்கு வலை! ஆடியோ ஆதாரம்!' என்னும் தலைப்பில், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக்கல்லூரி கணிதத்துறை உதவிப் பேராசிரி யர் நிர்மலாதேவி, நான்கு மாணவிகளிடம் கவர்னர் லெவல் வி.வி.ஐ.பி. ஒருவரின் பாலியல் தேவைக்காக செல்போனில் பேசிய விவகாரத்தை, 2018 ஏப்ரல் 8-10 இதழில், முதன்முத லில் அம்பலப்படுத்தியது நக்கீரன். இதனைத்தொடர்ந்து வழக்கு பதிவாகி, 2018 ஏப்ரல் 16ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி யும் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இவ்வழக்கு சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, அப்போது சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலை மையில் 9 தனிப் படையினர் விசா ரணை மேற்கொண் டனர். நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானமும் விசாரணை நடத்தினார்.

Advertisment

sdf

கடந்த 6 வருடங்களாக இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட்டில் நடந்துவரும் நிலையில், தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர் வாணைய ஐ.ஜி.யாகிவிட்ட கக்கன் பேத்தி ராஜேஸ்வரி, மார்ச் 13-ஆம் தேதி 5 மணி நேரம் சாட் சியம் அளித்துள்ளார்.

நிர்மலாதேவி வழக்கின் போக்கு குறித்தும், ராஜேஸ்வரி ஐ.ஜி. சாட்சியம் அளித்தது குறித்தும் நீதிமன்ற வட்டாரத் தில் விசாரித்தோம்.

"சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் அளித்த சாட்சியங்கள் எதுவும் அத்தனை வலுவாக இல்லை. நிர்மலாதேவி அப்போது செல் போனில் பேசியது, மாணவி களைத் தவறான பாதைக்கு அழைத்ததுபோல் தோன்றியது என்கிற ரீதியில்தான், பலரும் சாட்சியங்கள் அளித்துள்ளனர். உரிய ஆதாரம் இல்லாமல், அவரவர் மனதுக்குத் தோன்றி யதையெல்லாம் குற்றச்செயலாக சட்டம் எடுத்துக்கொள்ளுமா?

மாணவிகளிடம் ஏன் அப்படி பேசினார் என்பதற்கு மனதுக்குள், தான் புதைத்து வைத்திருந்த காரணம் ஒன்றை, தனக்கு நெருக்கமான வட்டத்தில் நிர்மலாதேவி எடுத்து விட்டுள்ளார். ‘கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டே, தனியாக டியூசன் எடுப்பதற் காகவே மாணவிகளிடம் அவ்வாறு பேசினேன். இத னால் தனியாக ஒரு வரு மானம் கிடைக்குமென்று எண்ணினேன். இது வெளியில் தெரிந்தால் நான் பார்த்த உதவிப் பேராசிரியர் வேலை போய் விடும் என்ற அச் சத்தினாலேயே, சுற்றிவளைத்துப் பேசினேன். பெரிய தலைகளிடம் பழக்கம் இருப்பதாகக் காட்டிக்கொண் டால், மாணவிகளும் அவர் களிடம் பெரிய உதவியை எதிர்பார்த்து, என்னிடம் டியூசன் படிக்கவருவார்கள் என்று நினைத்தேன். தினமும் ஒரு முட்டை சாப்பிடவேண்டு மென்று மாணவிகளுக்கு மெசேஜ் அனுப்பியதும்கூட, அவர்களது உடல்நலனில் எனக்கிருந்த அக்கறைதான்.’ என்றெல்லாம் தனது செல்போன் பேச்சுக்கு நியாயம் கற்பித்திருக் கிறார்'' என்றனர்.

ராஜேஸ்வரி ஐ.ஜி. அளித்த சாட்சியம் எப்படி இருந்தது தெரியுமா?

"அந்தமான் தீவில் பிறந்து வளர்ந்தவர் ராஜேஸ்வரி. பெங்காலி, ஹிந்தி அளவுக்குத் தமிழ் தெரியாது. தமிழ்நாட்டுக்கு வந்தபிறகே தமிழ். எதற் கெடுத்தாலும் கோபம். நான் ஒரு ஐ.ஜி. என்னிடம் கேள்வி கேட்பதா? என்கிற ரீதியில் ஈகோ. அவருடைய காவல்துறை அனுபவத்தில், நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பது இது இரண்டாவது தடவையாம். அதனால், எப்படி சாட்சியம் அளிக்கவேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி. கோப்புகளில் உள்ள தையே மறுத்துப் பேசினார். சந்தானம் கமிட்டி ராஜேஸ் வரிக்கு எதிரான பல விஷ யங்களைப் பதிவு செய்திருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட சிலரை வேண்டுமென்றே ராஜேஸ்வரி விடுவித்தது குறித்தெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார் சந்தானம் ஐ.ஏ.எஸ். இந்தச் சூழ்நிலையில்தான், சந்தானம் கமிட்டி அறிக்கையை வெளி யிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த வழக்கின் புலன்விசாரணை அதிகாரியாக இருந்தவர், சந்தானம் கமிட்டி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று உண்மையை மறைத்து சாட்சியம் அளித்ததைக் கண்டு, நீதிமன்றமே சிரித்தது.

அந்த செல்போன் உரையாடலில், எந்த இடத்திலாவது மாணவி களை பாலியல் தொழி லுக்கு நிர்மலாதேவி அழைத்திருந்தாரா என்ற கேள்வியை எதிர்கொண்ட போது, ரொம்பவே தடுமாறினார் ராஜேஸ்வரி. ‘அப்படித்தான் இருக்கு.. அதுமாதிரிதான் இருக்கு.. மேலோட்டமாக அப்படித்தான் தெரிந்தது.’ என்று குளறலாகவே பதிலளித்தார். ‘நிர்மலாதேவி விவகாரம் பொதுவெளியில் பரபரப்பான பிறகுதானே வழக்கு பதிவானது?’ என்று கேட்ட போது, அப்படியெல்லாம் கிடையாது. கல்லூரி செயலாளர் ராமசாமி புகாரளித்ததும் வழக்கு பதிவானது’ என்று மழுப்பினார். உரிய விளக்கம் தரமுடியாதபோதெல்லாம் அதிகார மமதையை வெளிப் படுத்திக் குட்டு வாங்கியதும் நடந்தது. இந்த வழக்கில் தப்பும் தவறுமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தியதும், சில இடங்களில் கோட்டைவிட்டதும், எங்கே தங்களுக்கு எதிராகப் போய்விடுமோ என்ற பதற்றத் தில், விசாரணை எல்லாம் சரியாகவே நடந்தது என்பதை விளக்குவதற்காக பரிதவித்தார் ராஜேஸ்வரி.

dd

இந்த வழக்கை, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரோடு முடித்துவிட வேண்டும் என ஆரம்பத்தி லேயே திட்டமிட்டுவிட்டனர். உலகமே அறிந்த நிர்மலா தேவியின் ஆடியோவை மட்டுமே ஆதாரமாக வைத் துக்கொண்டு, மாணவிகளைத் தவறாக வழிநடத்த முற்பட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்களைச் சேகரிக்காமல், அன்றைய அ.தி.மு.க. ஆட்சி யாளர்களின் வழிகாட்டுதலில், பிற மேலிடத் தொடர்புகளை நோக்கிப் பயணிக்காமல், குறிப்பாக சென்னைவரை செல்லாமல், யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கத்தில், மதுரை அளவிலேயே சி.பி.சி.ஐ.டி. விசாரணையைக் கொண்டுசென்று சொதப்பி விட்டனர். இதுவே இவ்வழக் கின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.

அப்போது சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அரை குறையாக விசாரணை நடத்தியதையும், இப்போது ராஜேஸ்வரி போன்றோர் சாட்சியமளிக்கும் விதத்தையும் பார்க்கும்போது, இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்துவிடு வார்கள் என்றே தோன்றுகிறது''” என்றனர்.

நீண்டுகொண்டேபோகும் நிர்மலாதேவி வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டுகிறது!

nkn200324
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe