rn ravi

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பரபரப்புக்கு மத்தியில் தமிழக கவர்னர் கேள்விப்பட்ட மயிலை சென்டிமெண்ட் விவகாரம் அவரை மிரள வைத்திருக்கிறது என்கிறார்கள்.

Advertisment

சென்னை மயிலாப்பூரிலிருக்கும் அய்யன் திருவள்ளுவருக்கான திருக்கோயிலை, சுமார் 400 ஆண்டுகளாக பரமரித்து வருகிறது தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை.

Advertisment

கடந்த 4-ந்தேதி திருவள்ளுவர் திருக்கோயிலில் தீப ஆராதனையும் சிறப்பு வழிபாடும் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு திருவள்ளுவரை வணங்கினார் கவர்னர் ரவி. இவருக்காகவே சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கவர்னர் மாளிகையிலும் திருவள்ளுவர் திருநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடையணிந்து மத அடையாளமாக குறியீடு செய்த விவகாரம், அரசியல் ரீதியாக சர்ச்சைகளை ஏற்படுத்தின.

இந்த நிலையில், திருவள்ளுவர் கோயிலுக்குச் சென்று வந்துள்ள கவர்னர் ரவியின் பதவிக்கு சிக்கல் உருவாகலாம் என்கிறார்கள் ஆன்மீக ஜோதிடவியலாளர்கள்.

இதுகுறித்து விசாரித்தபோது, ""தஞ்சை பெரிய கோயிலுக்கு இருக்கும் சென்டிமெண்ட் போன்றே திருவள்ளுவர் திருக்கோயிலுக்கும் உண்டு. தஞ்சை பெரிய கோயிலில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அரசியல்வாதிகளின் பதவிகள் பறிபோகின்றன என்ற சென்டி மெண்டால் அக்கோயிலில் நடக்கும் சிறப்பு வழிபாடுகளில் அரசியல்வாதிகள் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார்கள்.

அதேபோல தான் மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயிலு க்கும் இருக்கிறது. மயிலாப்பூரில் தன்னைவிட ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் யாரும் புகழடையக்கூடாது என மயிலையில் குடிகொண்டிருக்கும் கடவுள் கபாலீஸ்வரரின் (சிவன்) எண்ணம். அதனால்தான் திருவள்ளுவர் திருக்கோயிலை பிரபலமாகாமல் பார்த்துக்கொண்டார் கபலீஸ்வரர்.

திருவள்ளுவர் மீது ஆழ்ந்த பற்றுகொண்ட தி.மு.க. தலைவர் கலைஞர், இந்த கோயிலுக்கு ஒருமுறை வந்து சென்றார். இதனையடுத்துத்தான் 1976#ல் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த சென்டிமெண்ட் அன்றைக்கு பெருசாகப் பேசப்பட்டது. அதன்பிறகு கலைஞரோ, அரசியல்தலைவர்களோ, அதிகாரத்திலிருக்கும் பிரபலமானவர்களோ யாருமே திருவள்ளுவர் கோயிலுக்கு செல்வதில்லை. அதனாலேயே, திருவள்ளுவருக்கு ஒரு கோயில் இருப்பது பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. தற்போது இந்த கோயிலுக்கு கவர்னர் ரவி வந்து சென்றுள்ளார். கோயி-ன் சென்டிமெண்ட்படி கவர்னர் பதவி பறிபோவதற்கு வாய்ப்பிருக்கிறது''’’என்கிறார்கள் ஆன்மீக ஜோதிடவியலாளர்கள்.

இதுகுறித்து பழைய வரலாறுகளை அறிந்துள்ள மூத்த அரசியல்வாதிகளிடமும் சில சென்டிமெண்டுகள் உலா வருகின்றன. இதனை நாம் விசாரித்தபோது, மயிலையிலிருக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கு ஒரு சென்டிமெண்ட் உண்டு. மயிலையில் தன்னைத் தாண்டி யாரையும் புகழடையாமல் பார்த்துக்கொள்ளும் கடவுள் கபாலீஸ்வரர், திருவள்ளுவர் திருக்கோயிலையும் புகழடையாமல் பார்த்துக்கொள்கிறார்.

இது மட்டுமல்ல, 1984#-ருந்து கபாலீஸ்வரரின் பார்வை உக்கிரமடைந்தது. அதன் விளைவு, மயிலாப்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ. ஆனவர்கள் மீண்டும் இதே தொகுதியில் இன்னொரு முறை எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற முடிந்ததில்லை. இரண்டாம் முறை போட்டியிட வாய்ப்பும் கிடைத்ததில்லை. அதாவது, 1984-களி-ருந்து எடுத்துக்கொண்டால் வளர்மதி, என்.கணபதி, டி.எம்.ரெங்கராஜன், என்.பி.ராமஜெயம், கே.என்.லக்குமணன், எஸ்.வி.சேகர், ஆர்.ராஜலட்சுமி, ஆர்.நடராஜ் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக இருந்துள்ளனர்.

இதில் போலீஸ் அதிகாரியான நடராஜை தவிர மற்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கிடைத்ததில்லை. நடராஜுக்கு இரண்டாம் முறை வாய்ப்புக்கிடைத்தபோது அவர் தோற்றுப்போனார். அதாவது, மயிலை எம்.எல்.ஏ.வாக வருபவர்கள் யாரையும் புகழடைய விடுவதில்லை; விட்டதும் இல்லை கடவுள் சிவன் (கபாலீஸ்வரர்). அதேபோலத்தான் திருவள்ளுவர் கோயிலையும் புகழடையாமல் பார்த்துக்கொள்கிறார்.

இப்படி ஒரு சென்டிமெண்ட் மயிலாப்பூருக்கு இருக்கிறது. இதைத் தெரியாமல் திருவள்ளுவர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார் கவர்னர் ரவி. மயிலை சென்டிமெண்ட் அவருடைய கவர்னர் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்''’என்று செண்ட்மெண்ட் விவகாரத்தை சுட்டிக் காட்டுகிறார்கள்.

தற்போது இந்த சென்டிமெண்ட் விவகாரம், தமிழக ராஜ்பவனில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.