Advertisment

நித்தி ஆசிரமத்துக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா? -கொதிக்கும் மக்கள்!

ss

சென்னை, பல்லாவரம் மலையை ஒட்டியுள்ள மலைமகள் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அதே பகுதியில் சுமார் 3.5 ஏக்கர் அரசு நிலத்தில், சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவின் சென்னை கைலாசா மடம் இயங்கிவருகிறது.

Advertisment

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய விஜி என்கிற விஜயகுமார், "இந்த சுற்றுவட்டார பகுதியில் 40 வருஷத்துக்கு முன்னாடி, அதிகமான கல்குவாரி இருந்துச்சு. அதை நம்பி லாரி டிரைவர், கிளீனர், கல் உடைக்கும் வேலை அதிகமா இருந்ததால வேலை தேடி இப்பகுதிக்கு வந்த மக்கள், 40 வருஷமா குடியிருந்து வராங்க. போன 2014-ல் கவுன்சிலரா இருந்த அன்புக்குமார், மக்களின் கோரிக்கையை ஏற்று பச்சையம்மன் கோயில் தெரு, மலைமகள் தெரு ஆகிய பகுதிகளில் சிமெண்ட் ரோடு போட முயற்சி செஞ்சார்.

Advertisment

gg

அந்த நேரத்துல மலைமகள் நகர் பகுதியை இணைக்க

சென்னை, பல்லாவரம் மலையை ஒட்டியுள்ள மலைமகள் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அதே பகுதியில் சுமார் 3.5 ஏக்கர் அரசு நிலத்தில், சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவின் சென்னை கைலாசா மடம் இயங்கிவருகிறது.

Advertisment

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய விஜி என்கிற விஜயகுமார், "இந்த சுற்றுவட்டார பகுதியில் 40 வருஷத்துக்கு முன்னாடி, அதிகமான கல்குவாரி இருந்துச்சு. அதை நம்பி லாரி டிரைவர், கிளீனர், கல் உடைக்கும் வேலை அதிகமா இருந்ததால வேலை தேடி இப்பகுதிக்கு வந்த மக்கள், 40 வருஷமா குடியிருந்து வராங்க. போன 2014-ல் கவுன்சிலரா இருந்த அன்புக்குமார், மக்களின் கோரிக்கையை ஏற்று பச்சையம்மன் கோயில் தெரு, மலைமகள் தெரு ஆகிய பகுதிகளில் சிமெண்ட் ரோடு போட முயற்சி செஞ்சார்.

Advertisment

gg

அந்த நேரத்துல மலைமகள் நகர் பகுதியை இணைக்கும் ரோடு, ராமநாத செட்டியார் என்பவர் தனக்குச் சொந்தமானது என்று தடுத்தார். அதேபோல கிருஷ்ணன் என்பவரும் அந்த இடத்தைச் சொந்தம் கொண்டாடி ரோடு வேலையைத் தடுத்தார். அந்த வழியை மக்கள் கடந்த 40 வருஷமா பயன்படுத்திட்டு வர்றாங்க. 2016-ல் லாரி கண்டெய்னர் அதுக்குள்ள வீடு, சகல வசதியோட கன்டெய்னர் வீட்டைக் கொண்டுவந்து இறக்குனாங்க. அந்த பகுதியில நித்யானந்தா ஆசிரமம் வரப்போகுதுன்னும், ராமநாத செட்டியாருக்குச் சொந்த மான இந்த இடத்துல நித்தி யானந்தா கைலாசா ஆசிரமம் நடத்தப்போறதா தகவல் வந்துச்சு. நித்தியானந்தா படத்தை வைத்து நித்தியானந்தாவோட சீடர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்திவந்தாங்க. கொஞ்ச நாள்ல போலீஸ் மற்றும் வருவாய்த் துறை உதவியுடன், அந்த சுற்றுவட்டார பகுதியில் காம்பவுண்டு எழுப்பி ஆக்கிரமிப்பு செஞ்சாங்க, இதைத் தட்டிக்கேட்ட அப்பகுதி மக்கள் 21 பேர்மீது பொய் வழக்கு போட்டு, 9 பேரை இரவோடு இரவா அரெஸ்ட் பண்ணி கொண்டுபோனாங்க.

இந்த நிலையில எங்க பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் கோர்ட் டில் வழக்கு போட் டார். இந்த இடம் சர்வே எண்: 341/9 அரசாங்க நிலம் என்றும் அதை மீட்கவேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில் அப்போதைய தாசில்தாராக இருந்த சகுந்தலா மற்றும் இளங் கோவன், அந்த இடம் மலை புறம் போக்கு என்று சாட்சியளித்தார்கள். நீதிமன்றம் அந்த அரசாங்க நிலத்தை மீட்டெடுக்க தாசில்தாருக்கு உத்தரவு போட்டது. அது செயல்படுத்தப்படவில்லை. இதனால் நீதிபதி, மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாததையும் கண்டித்தார்.

ff

தற்போதைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின் பேரில் நித்தியானந்தா ஆசிரமம் செயல்பட்டு வந்த பகுதியில் காலியாக இருந்த இடத்தில் சுமார் 1.5 ஏக்கர் நிலத்தை மட்டுமே வருவாய்த்துறை கையகப்படுத்தி யது. அதேநேரம் 40 வருஷமா குடியிருக்கும் அந்தப் பகுதி மக்க ளின் வீட்டை இடிக்கப்போறதா தாசில்தார் ஆறுமுகம் எல்லார் வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டினார். இந்த வழக்கு தொடர்ந்த முருகேசன் உள்பட பலரது வீட்டிலும் நோட்டீசை ஒட்டி, மின் இணைப்பையும் துண்டித்துவிட்டார். கடந்த வாரம் ஜே.சி.பி. ஒன்றைக் கொண்டுவந்து நிக்க வச்சுட்டு, வீடு இடிக் கப்போறதா மிரட்டல் தொனியில் செயல்பட்டார் என்றார்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முருகேசனிடம் இது குறித்துப் பேசினோம், "40 வரு டமா பொதுமக்கள் பயன்பாட் டுல இருந்த பாதையை முழுவதும் மூடிவிட்டு அதிகாரிகள், அரசி யல்வாதிகள், போலீஸ் துணை யோடு சுற்றுச்சுவர் கட்டிட் டாங்க. வருவாய்த்துறையும் நித்தி பக்கம் நின்னுச்சு. எதிர்த்துக் கேட்ட அப்பாவி ஜனங்கள சிறை யில போட்டாங்க. வருவாய்த் துறை ஆவணப் படி சர்வே எண் 341/9, சர்ச்சைக்குரிய 3.5 ஏக்கர்ல நித்தியின் கைலாசா ஆசிரமத்தை அகற்றும்படி வழக்கு தொடர்ந் தேன். நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பதிலுக்கு, "வழக்கை வாபஸ் வாங்கு. இல்லையெனில் பொதுமக்கள் வசிக்கும் பல்லா வரம் மலையைச் சுற்றியுள்ள சுமார் 2000 வீடுகளை அகற்றி விடுவோம்' என நெருக்குகின்றனர்.

வழக்கு நடந்துகொண்டிருக் கும்போதே சம்பந்தப்பட்ட இடத்திற்கு முறைகேடாக வரு வாய்த்துறையினர் பட்டா வழங்கி யுள்ளனர். என் வீட்டை இடிக்க நோட்டீஸ் ஒட்டிவிட்டு, மின் இணைப்பையும் துண்டித்துவிட் டார் தாசில்தார் ஆறுமுகம்'' என்று வருத்தமாகத் தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேச தாசில்தார் ஆறுமுகத்தைத் தொடர்புகொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி யர் ராகுல்நாத்தோ, "நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் செயல்படும்''’என்றார்.

வட மாநிலங்களின் புல்டோ சர் அரசியலை தமிழ்நாட்டில் அதிகாரிகள் கையிலெடுப்பது ஆபத்தானது.

nkn300823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe