Advertisment

வென்றது நீதி! தீண்டாமை வழக்கில் சிறைத்தண்டனை!

papamohan

""அந்த சாதிக்காரி சமைக் கக்கூடாது!'' என சமையலர் பாப்பாள் மீது நடத்தப்பட்ட தீண் டாமை வன்கொடுமை யில், ஏழு ஆண்டுகளாக நடந்த வழக்கில் ஆறு பேருக்கு இரண்டு ஆண்டு கால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

திருப்பூர், அவிநாசி வட்டம், குட்டகம் ஊராட்சி திருமலைக்கவுண் டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றிவந்த  பாப்பாளின் சாதியை குறிவைத்து, ""அவர் இங்கு சமைக்கக் கூடாது. அதனை எங்களது குழந்தைகள் சாப்பிடக்கூடாது. ஆதலால் அவர் இங்கு பணியாற்றக்கூடாது'' என சாதிய வன்மத்தோடு நெருக்கடி கொடுத்தனர் அங்குள்ள குறிப்பிட்ட சமூகத்தினர். சமையலர் மீதான சாதித்தீண்டாமை தேசிய அளவில் பூதாகரமாக வெடிக்க, சாதி மறுப்பாளர்கள் கை கொடுக்க, அதே பள்ளியில் சமையல் வேலையினை தொடர்

""அந்த சாதிக்காரி சமைக் கக்கூடாது!'' என சமையலர் பாப்பாள் மீது நடத்தப்பட்ட தீண் டாமை வன்கொடுமை யில், ஏழு ஆண்டுகளாக நடந்த வழக்கில் ஆறு பேருக்கு இரண்டு ஆண்டு கால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

திருப்பூர், அவிநாசி வட்டம், குட்டகம் ஊராட்சி திருமலைக்கவுண் டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றிவந்த  பாப்பாளின் சாதியை குறிவைத்து, ""அவர் இங்கு சமைக்கக் கூடாது. அதனை எங்களது குழந்தைகள் சாப்பிடக்கூடாது. ஆதலால் அவர் இங்கு பணியாற்றக்கூடாது'' என சாதிய வன்மத்தோடு நெருக்கடி கொடுத்தனர் அங்குள்ள குறிப்பிட்ட சமூகத்தினர். சமையலர் மீதான சாதித்தீண்டாமை தேசிய அளவில் பூதாகரமாக வெடிக்க, சாதி மறுப்பாளர்கள் கை கொடுக்க, அதே பள்ளியில் சமையல் வேலையினை தொடர்ந்தார் பாப்பாள். எனினும் விடாது சாப்பிடும் சாப்பாட்டில் பல்லி விழுந்துள்ளது என அடுத்து பிரச்சனை யை கொண்டு வந்தனர் அதே சமூகத்தினர்.

Advertisment

""என் மீது சாதிய வன்மத்தோடு நான் இங்கே பணியாற்றக்கூடாது என்று தீண்டாமை கொடுமை நிகழ்த்தப்பட்டது பற்றிய புகார் மனுமீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் 07.08.2018, அன்று உணவு சமைத்து வழங்கியபோது, மேற்கண்ட பிரச்சினையால் இதுவரை மதிய உணவு வாங்கி சாப்பிடாமலிருந்த கந்தாயிபாளை யத்தைச் சேர்ந்த பவித்ரா என்கிற மாணவி, மதிய உணவை கீழே வைத்து விட்டு கழிப்பறைக்கு சென்றுவிட்டார். திரும்பி வந்து சாப்பிட உட்காரும்போது, பள்ளியின் தலைமையாசிரியர் சசிகலா, உணவில் பல்லி விழுந்திருப்பதாகக்கூறி, பல்லியை எடுத்துக்காட்டி, அதை செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பிறகு ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார். மற்ற மாண வர்கள் உணவை முழுவதுமாக சாப்பிட்டு முடித்தனர்.

நான் சமைக்கும் உணவி லிருந்து சிறிதளவு தனியாக எடுத்துவைத்திருந்த உணவில் எந்த நச்சுக்களும் கலக்க வில்லை என்பதை உணவு பரிசோதனை செய்ததன் மூலம் உறுதியாகத் தெரி வித்துக்கொள்கிறேன். சாதிய வன்மத்தோடு திட்டமிட்டு, மாணவி கள் சாப்பிடும் உணவில் பல்லியை மறைத்து வைத்து பழிசுமத்திய தலைமையாசிரியை சசிகலா மீது, நஈ/நப வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நட வடிக்கை எடுக்க வேண் டும்"" என்று சமையலர் பாப்பாள் அவிநாசி துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பிய புகார் குறித்து நக்கீரனில் பதிவுசெய் திருந்தோம்.

88 நபர்கள்மீது புகா ரளிக்கப்பட்டு, 36 நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை. திருப்பூர் மாவட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஏழு வருடங்களாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு  அறிவிக்கப்பட்டது. இதில், பழனிசாமி, சக்திவேல், சண்முகம், வெள்ளிங்கிரி, துரைசாமி மற்றும் சீதாலட்சுமி ஆகிய 6 நபர்கள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ஆறு நபர்களுக்கும் தலா 2 ஆண்டுகால சிறைத் தண்டனை அளித்தது நீதிமன்றம்.

""திருமலைக் கவுண்டம்பாளையம் ஊருக் குள் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் வழக்கில் தொடர்புடையவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் சாதாரணமாக பழகக்கூடியவர்கள் தான். 7 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் தீர்ப்பு பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார் சமையலர் பாப்பாள்.

""திருப்பூர் மாவட்டத்தில் வன்கொடுமை வழக்குகளுக்காக சிறப்பு நீதிமன்றம் தொடங்கப் பட்டு 3 ஆண்டுகளில் வன்கொடுமைக்கு எதிராக சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இச்சம்பவத்தில் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது. அதில் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில், விடுவிக்கப்பட்டவர் களையும் உரிய பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டுமென்று மேல்முறையீடு செய்யவுள் ளோம். இவ்வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள பாப்பா ளுக்கு அரசு வீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்பது எங்களது கோரிக்கை'' என்கிறார் சமையலர் பாப்பாளுக்குக் காக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன்.

nkn061225
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe