இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் சமுதாய தொற்று என்கிற மூன்றாவது நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டி ருக்கிறது. இப்பொழுது யார் மூலமாக யாருக்கு கொரோனா வைரஸ் பரவியது என தெரிந்துகொள்ள முடியாத நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது வீட்டுக்கு பக்கத்தில் டீக்கடை நடத்துபவருக்கு கொரோனா நோய் வந்திருக்கிறது. அவருக்கு யார் மூலம் வந்தது என கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் முதல்வரின் பாதுகாவல் படையில் இருக்கக்கூடிய நூற்றுக் கணக்கானோரை கொரோனா பரிசோதனைக்கு மகாராஷ்டிரா அரசு உள்ளாக்கியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amma-isha.jpg)
அதேபோல் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டது என ஒரு முதியவர் அட்மிட் ஆகி இறந்தார். அவர் இறந்த பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த மருத்துவமனையில் வேலை பார்த்த செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் பல பேருக்கு கொரோனா நோய் பரவியுள்ளது. இப்படி யாரிடம் இருந்து கொரோனா நோய் எப்படி பரவும் என கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்தியா முழுவதும் மாநில அரசுகள் கொரோனா நோய் பாதிப்பு என சந்தேகப்படும் இடங்களில் மருத்துவ பரிசோதனைகள் செய்து வருகின்றன.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆலப்பாடு என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது மாதா அமிர்தானந்தமயி மடம். பெரும்பாலும் வெளிநாட்டினர் வந்து போகும் இந்த மடத்தில் நிரந்தரமாக 600 வெளிநாட்டவர்கள் எப்பொழுதும் தங்கியிருப்பார்கள். கொரோனா நோய் பாதிப்பு பற்றிய மத்திய அரசு அறிவிப்பு வருதற்கு முன்பே மாதா அமிர்தானந்தமயி வெளிநாட்டு பக்தர்களை சந்திப்பதை நிறுத்திவிட்டார். ஆனாலும் அந்த மடத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர்கள் தங்கியிருக்கிறார்கள் என்கிற தகவல் கேரள அரசுக்கு கிடைத்தது. கேரள அரசு உடனடியாக கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசரை அந்த ஆசிரமத்திற்குள் அனுப்பியது.
பொதுவாக அந்த ஆசிரமத்திற்குள் எந்த நாட்டில் இருந்து யார் வருகிறார்கள் என ஆசிரம நிர்வாகம் அரசிடம் தெரிவிப்பதில்லை. ஆசிரமத்திற்குள் கேரள அரசு உத்தரவுப்படி அதிரடியாக நுழைந்த கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசர் ஆசிரம ரிக்கார்டுகளை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தர விட்டார். முதலில் மறுத்த மாதா அமிர்தானந்த மயி பிறகு ஒத்துக்கொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amma-isha1.jpg)
அதன்படி கணக்கு எடுத்ததில் மொத்தம் 68 வெளிநாட்டினர்கள், உலகெங்கும் கொரோனா பாதித்த பிப்ரவரி மாதம், மாதா அமிர்தானந்தமயி அலுவலகத்திற்கு வந்தார்கள் என கண்டுபிடித்தது. அதில் 25 பேருக்கு இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர்களை அங்கிருந்து அகற்றி அரசாங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் கொரோனா சோதனை முழுமை யாக செய்து முடித்தார்கள். இதையெல்லாம் முறையாக அறிக்கையாக எழுதி, கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசர் கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகு கேரள அரசு மாதா அமிர்தானந்தமயி மடத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது.
அதேபோல் லண்டனில் உள்ள இந்து மதம் சார்ந்த இஸ்கான் கோவிலில் இருந்த பல்வேறு நாட்டைச் சேர்ந்த பக்தர்களில் 21 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பதை பிரிட்டிஷ் அரசு கண்டுபிடித்தது. அந்த அமைப்பைச் சார்ந்த தலைவர் ஒருவர் இறந்து போகிறார். அவரது இறுதி ஊர்வலத்திற்கும் நினைவு அஞ்சலி கூட்டத் திற்கும் சென்ற பக்தர்கள் ஆயிரம் பேரை அந் நாட்டு அரசு தனிமைப்படுத்தி சோதனை செய்தது. அவர்களில் ஐந்து பேர் கொரோனா நோய் பாதிப்பில் இறந்து போனார்கள்.
தென்கொரியாவில் கிறிஸ்தவ மத கூட்டங்களில் பங்கெடுத்தவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள்.
தமிழகத்தில் ஈஷா யோகா மையத்தில் தங்கி யிருக்கக்கூடிய 153 வெளிநாட்டவர்கள் விஷயத்தில் மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம் போலவோ, இஸ்கான் கோவில் போலவோ பரிசோதனை- பாதுகாப்பு-மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கேரள மாநில மாதா அமிர்தானந்தமயி மடத்தில் கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசர் நுழைந்தது போல், யாரும் ஈஷா மையத்திற்குள் செல்லவில்லை. அமிர்தானந்தமயி மடத்தில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டது போல் ஈஷா யோகா மையத்தில் சோதனை நடத்தப் படவில்லை. கேரள அரசு அமிர்தானந்தமயி மடத்தில் யார் தங்கியிருக்கிறார்கள், அவர்களது பெயர், விவரம் அவருக்கு கொரோனா நோய் இருக்கிறதா என்கிற சோதனைகள் நடத்தப்பட்ட பட்டியலை வைத்திருக்கிறது. அதை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேரளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பெற்றிருக்கிறார்கள். அதுபோல எந்த ஆவணத்தையும் ஈஷா யோகா மையமோ, தமிழக அரசோ அதனை கேட்டு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கு வழங்கவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amma-isha2.jpg)
ஈஷா யோகா மையத்தில் அமிர்தானந்தமயி மடத்தில் நடப்பது போன்ற வெளிப்படையான தன்மையை ஏன் கடைபிடிக்கவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஈஷா மையத்தில் வசிப்பவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது என தமிழக அரசு சொல்கிறது. பொதுவாக, எந்தெந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எந்தெந்த மருத்துவமனைகளில் சோதனை களுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை அரசு தனது செய்திக்குறிப்பின் மூலம் உறுதிப் படுத்தப்படுகிறது. ஆனால், ஈஷா மையத்தில் உள்ளவர்களை எந்த மருத்துவர் சோதனை செய்தார். எந்த மருத்துவமனையில் அந்த சோதனை உறுதிப்படுத்துகிறது என்பதற்கான எந்த தகவலும் அரசு வெளியிடவில்லை.
ஈஷா யோகா மையத்திற்கு உள் ளேயே ஒரு சுடுகாடு இயங்குகிறது. அதில் இறந்தவர்கள் எரிக்கப்படலாம் என்ற குற்றச் சாட்டை சமூக ஆர்வலர்கள் வைக்கிறார்கள். கோவிட்-19 வந்த பிப்ரவரி காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை எத்தனை பேர் அந்த மையத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசு மலைவாழ் கிராமங்களில் கட்டப்படும் கட்டிடங்களில் விதிமுறை மீறல்கள் இருக்குமானால் அதை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை மலைப்பகுதி அபிவிருத்தி கவுன்சில் என்கிற அமைப்பிடம் இருந்து பறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளது. அதற்காக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ள கிராமமான போலாம்பட்டி இடம் பெறவில்லை. ஆனால் ஈஷா யோகா மையம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆதிவாசிகளிடம் வாங்கி குவித்துள்ள மலை கிராமங்கள் இடம் பெற்றுள்ளன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள், இது ஈஷாவின் எதிர்கால நலன்களுக்காக, கொரோனா நோய் பாதிக் கப்பட்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு என்கி றார்கள் சமூக ஆர்வலர்கள். கொரோனா விஷயத்தில் உலகமெங்கும் உள்ள மத அமைப்புகள் அந்தந்த நாட்டு அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையால் சோதனைக் குள்ளாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஈஷா மையத்தில் உள்ளவர்கள் எந்த சோதனைக் கும் உள்ளாக்கப்படவில்லை. அதற்கு காரணம் ஈஷா மையம் பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுகிறது. இந்தியாவின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு, மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதால், அவரிடம் உள்ள செல்வாக்கின் மூலம், ஈஷா மையத்தில் எந்த சோதனையும் நடத்த வேண்டாம் என பிறப்பித்த தடை உத்தர வின் காரணமாகவே மத்திய அரசும், மாநில அரசும் ஈஷா பக்கமே தலைவைத்து படுக்க வில்லை என்கிறது மத்திய அரசு வட்டாரம்.
-தாமோதரன் பிரகாஷ், சிவா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04-08/amma-isha-t.jpg)