Advertisment

வெற்றித் தீர்ப்பு! விளைச்சலின் பலன் விவசாயிகளுக்கா? அரசுக்கா?

farmers

த்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 41 நாட்களாக டெல்லி எல்லையில் கடும் குளிரிலும் மழையிலும் தளராத உறுதியுடன் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

farmers

அரசுக்கும் விவசாயிகளுக்கும் எட்டுச்சுற்று பேச்சுவார்த்தை நடந்து அனைத்துமே தோல்வியில் முடிந்திருக்கிறது.

Advertisment

வேளாண் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களில் 61 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்நிலையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா,

த்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 41 நாட்களாக டெல்லி எல்லையில் கடும் குளிரிலும் மழையிலும் தளராத உறுதியுடன் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

farmers

அரசுக்கும் விவசாயிகளுக்கும் எட்டுச்சுற்று பேச்சுவார்த்தை நடந்து அனைத்துமே தோல்வியில் முடிந்திருக்கிறது.

Advertisment

வேளாண் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களில் 61 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்நிலையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ஆர்.ஜே.டி. எம்.பி. மனோஜ் தாக்கல்செய்த மனுக்கள் ஜனவரி 12-ஆம் தேதி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வின்முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, ""சட்டங்களை நிறைவேற்றும் முன் போதிய கலந்தாலோசனை நடத்தவில்லை. விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விதம் அதிருப்தியளிக்கிறது''’என்றார்.

""கடந்த விசாரணையின்போதே வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கப் பரிந்துரை செய் தோம், அரசுத் தரப்பில் தொடர்ந்து அவகாசம் கோரப்படுவது ஏன்?''’என கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, "பெரும் பாலான விவசாய சங்கங்கள் வேளாண் சட்டங் களை ஆதரிக்கின்றன. வெகுசில சங்கங்கள் மட்டுமே எதிர்ப்பதாக'த் தெரிவித்தார்.

""வேளாண் சட்டங்களை ஆதரித்து உச்சநீதி மன்றத்தில் ஒருவர்கூட மனுத்தாக்கல் செய்யவில் லையே'' என்ற கேள்வியெழுப்பினார் தலைமை நீதிபதி மேலும் கடும்குளிரில் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். தற்கொலை, மரணம் என நிலைமை மோசமாகிக்கொண்டே இருக்கிறது. விவசாயிகள் பிரச்சினைகளை ஆராய சிறப்புக் குழுவை அமைக்க மத்திய அரசுக்குப் பரிந் துரைத்தார். அரசுத் தரப்பில் "குடியரசுதினத்தில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்ட மிட்டுள்ளதாக' புகார் கூறினர். இதற்குப் பதிலளித்த விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ""டிராக்டர் பேரணி நடத்தும் எண்ணமில்லை'' என மறுப்புத் தெரிவித்தார்.

ஜனவரி 12-ஆம் தேதி மீண்டும் கூடிய உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களை ஆய்வுசெய்ய பாரதிய கிசான் சங்கத் தலைவர் ஜிதேந்தர், வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி, தெற்காசியாவின் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பிரமோத் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. மூன்று வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதித்தது.

"குழுவில் பங்கேற்பவர் பங்கேற்கலாம். போராடச் செல்பவர்கள் செல்லலாம் உச்சநீதி மன்றம் யாரையும் கட்டுப்படுத்தப் போவதில்லை' எனவும் அறிவித்துள்ளது. குடியரசுதின பேரணியை முன்வைத்து, விவசாயிகள் போராட்டக்களத்தை கலைத்துவிடுவதில் தீவிரமாக உள்ளது, நீதிமன் றத்தில் குட்டு வாங்கிய மத்திய பா.ஜ.க அரசு.

-தொகுப்பு: க.சுப்பிரமணியன்

nkn160121
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe