2019 டிசம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் பட்டினப் பாக்கம் முதல் சீனிவாசபுரம் வரை கடலின் நிறம் பழுப்பு நிறத்தில் மாறி அலைகளுடன் சேர்ந்து அதிக அளவிலான நுரை ஏற்பட்டது. அது காற்றில் பறந்து கடற்கரை முழுவதும் பரவியது. இதை பார்ப்பதற்காகவே மெரினாவில் மக்கள் கூட்டம் பெருமளவில் கூடியது. மேலும் இந்த நுரை ஏற்படுவதால் கடல் நீரில் நச்சுத்தன்மை ஏற்பட்டு அதனால் மீன்கள் பாதிக்கப்படும் என்றும் மெரினாவில் யாரும் கால் நனைக்க வே
2019 டிசம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் பட்டினப் பாக்கம் முதல் சீனிவாசபுரம் வரை கடலின் நிறம் பழுப்பு நிறத்தில் மாறி அலைகளுடன் சேர்ந்து அதிக அளவிலான நுரை ஏற்பட்டது. அது காற்றில் பறந்து கடற்கரை முழுவதும் பரவியது. இதை பார்ப்பதற்காகவே மெரினாவில் மக்கள் கூட்டம் பெருமளவில் கூடியது. மேலும் இந்த நுரை ஏற்படுவதால் கடல் நீரில் நச்சுத்தன்மை ஏற்பட்டு அதனால் மீன்கள் பாதிக்கப்படும் என்றும் மெரினாவில் யாரும் கால் நனைக்க வேண்டாம் என்றும் பல்வேறான செய்திகள் பரவி, மக்களை பய முறுத்தியது.
இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ததோடு நிபுணர் குழு ஒன்றை அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில் கடந்த ஆண்டு அதிகப்படியான மழை பொழிந்த காரணத்தாலும் நெசப்பாக்கத்தில் உள்ள சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீராலும் இந்த நுரை ஏற்பட்டுள்ளது என்றும் இதுதவிர சென்னையில் ஓடக்கூடிய முக்கியமான ஆறுகளான பக்கிங்காம் அடையார் கூவம் ஆகியவற்றில் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீர், நேரடியாக மெரினாவில் கலப்பதால் நுரை ஏற்பட்டிருக்க கூடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், எஸ். பி. வாங்டி மற்றும் டாக் டர். நகின் நந்தா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராம் சங்கர் ஆஜராகி வாதிட்டார்.
பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய மாசு கட்டுப் பாட்டு வாரியம், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை ஒன்றாக இணைந்து கழிவு நீர் கடலில் கலப்பதற்கு முன்பாக நன்றாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறதா என்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத அளவிற்கு உள்ளதா என்றும் உறுதிசெய்து மெரினா கடல் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியதோடு இனி ஒரு முறை இதுபோன்று பாதிப்பு ஏற்படாது என்பதனை முடிவு செய்ய, அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து இதில் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவுகளை தமிழக அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முறையாக பின்பற்றினால் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா பாதுகாக்கப்படும்.
-கீரன்