Advertisment

அரசு மருத்துவர்களுக்கு கைகொடுத்த தீர்ப்பு! -சமூகநீதி போரில் மற்றொரு வெற்றி!

gg

ந்தியாவிலேயே சமூக நீதி பேசக்கூடிய முதன்மை மாநிலமாக தமிழ்நாடு பல்லாண்டு களாகத் தனித்தன்மையுடன் விளங்குகிறது. சிறுபான்மையினருக்கான நீதி, பெண்களுக்கான சம உரிமை, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது எனப் பல்வேறு தளங்களில் சமூக நீதி சார்ந்த கொள்கைகளை, சட்டங்களைச் செயல்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.

Advertisment

gg

அரசு மருத்துவர்களின் சேவை, கிராமப்புற மக்களுக்கு தேவை என்ற நோக்கில், அரசு மருத்துவர்களை ஊக்கப் படுத்தும்விதமாக, 1989-ம் ஆண்டில் கலைஞர் ஆட்சியின் போது, முதுகலை மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவர் களுக்கு 50% உள் ஒதுக்கீடு வழங்குவதைக் கொண்டுவந்தார். அடுத்து ஆட்சி மாற்றம் நடந்து, நான்காவது முறை மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபோது, அரசு மருத்துவ மாணவர்களுக்கான சலுகை, அனைத்து அரசு மருத்துவர் களுக்கும் பொருந்தும் என்று அதற்கான வழிகாட்டு முறைகளைக் கொண்டுவந்தார். ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, குக்கிராமங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் மருத்துவர் களாகப் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கும் முறையைக் கொண்டுவந்தார். இதன்மூலம், தமிழ் நாட்டில் மருத்துவ வசதியை, மலைக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள்வரை கொண்டுசேர்க்கக் காரணமாக இருந்தவர் கலைஞர்.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்குக் கிடைத்துவந்த 50% உள் ஒதுக்கீட்டுக்கு 2017 -18 கல்வி ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டுவந்த நீட் தேர்வு முட்டுக்கட்டை யாக அமைந்தது. இதை எதிர்த்து அரசு மருத்துவர்கள்

ந்தியாவிலேயே சமூக நீதி பேசக்கூடிய முதன்மை மாநிலமாக தமிழ்நாடு பல்லாண்டு களாகத் தனித்தன்மையுடன் விளங்குகிறது. சிறுபான்மையினருக்கான நீதி, பெண்களுக்கான சம உரிமை, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது எனப் பல்வேறு தளங்களில் சமூக நீதி சார்ந்த கொள்கைகளை, சட்டங்களைச் செயல்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.

Advertisment

gg

அரசு மருத்துவர்களின் சேவை, கிராமப்புற மக்களுக்கு தேவை என்ற நோக்கில், அரசு மருத்துவர்களை ஊக்கப் படுத்தும்விதமாக, 1989-ம் ஆண்டில் கலைஞர் ஆட்சியின் போது, முதுகலை மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவர் களுக்கு 50% உள் ஒதுக்கீடு வழங்குவதைக் கொண்டுவந்தார். அடுத்து ஆட்சி மாற்றம் நடந்து, நான்காவது முறை மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபோது, அரசு மருத்துவ மாணவர்களுக்கான சலுகை, அனைத்து அரசு மருத்துவர் களுக்கும் பொருந்தும் என்று அதற்கான வழிகாட்டு முறைகளைக் கொண்டுவந்தார். ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, குக்கிராமங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் மருத்துவர் களாகப் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கும் முறையைக் கொண்டுவந்தார். இதன்மூலம், தமிழ் நாட்டில் மருத்துவ வசதியை, மலைக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள்வரை கொண்டுசேர்க்கக் காரணமாக இருந்தவர் கலைஞர்.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்குக் கிடைத்துவந்த 50% உள் ஒதுக்கீட்டுக்கு 2017 -18 கல்வி ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டுவந்த நீட் தேர்வு முட்டுக்கட்டை யாக அமைந்தது. இதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டபோது, மத்திய அரசின் முடிவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில், "தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்புகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர் களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு; அதை இந்திய மருத்துவக் குழு தடுக்க முடியாது'' என்று 2020-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதையடுத்து, 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மருத் துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர் களுக்கு 50% இட ஒதுக்கீட்டுக்கான அர சாணையைத் தமிழக அரசு வெளியிட்டது.

இந்த அரசாணையால் தனியார் மருத்துவர்கள் பாதிக்கப்படுவதாக தொடுக் கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசின் அரசாணையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தனியார் மருத்துவர்கள் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், "கலந்தாய்வு நடைமுறைக்கு வந்துவிட்டதால் 2020-2021ல், 50 சதவீத இன்சர்வீஸ் இடஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கும் சூழல் இல்லை. இருப்பினும், இதுசார்ந்து மாநில அரசு பிறப்பித்த அரசாணைக்கு எந்த தடையும் கிடையாது'' என்று தீர்ப்பளித்தது.

Advertisment

gg

அடுத்ததாக, 2022-ம் ஆண்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பயன்படுத்தத் தடை கேட்டுத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தடை விதிக்க மறுத்ததோடு, இந்த ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த என்.கார்த்திகேயன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். மத்திய அரசோ, சமூக நீதிக்கு எதிரான பார்வையுடன், இந்த இட ஒதுக்கீட்டுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. தனியார் மருத்துவர்களும் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததோடு, அரசாணையையும் உடனடியாக இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது . இதனைச் செயல்படுத்த மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது'' என்று வலுவாக வாதிட்டார்.

அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர்.கவாய் அமர்வு, மார்ச் 16-ம் தேதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், "தமிழக அரசின் அரசாணையின் படி நடப்பு கல்வி ஆண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு மாநில அரசு ஒதுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பிரதான வழக்கு ஹோலி விடுமுறைக்கு பின்னர் விசாரிக் கப்படும்'' என்று குறிப்பிட்டனர். இந்த இடைக்கால உத்தரவு, தமிழக அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "மருத்துவ மாணவர்கள் இழந்த உரிமை, தி.மு.க.வின் சட்டப்போராட்டத்தால் மீட்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீட் டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இப்போது, கிராமப்புற மருத்துவ சேவையைப் பெருக்க அந்தப் பகுதிகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களை 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது. சமூகநீதியை மதிக்காத ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு பதிலளிக்கும்விதமாக, சமூகநீதியைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு மகத்தானது. இதேபோல் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைப் பறிக்கும் நீட் தேர்வு போராட்டத்திலும் சமூகநீதி நிச்சயம் வெல்லும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

stalin

இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவம் குறித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலனிடம் கேட்டோம். "தமிழ்நாட்டில்தான் சமூக நீதித் தளத்தில், திராவிட இயக்கத்தின் கருத்தியலினால், பெரியாரின் முயற்சியால், நீதிக்கட்சியிலிருந்து தொடர்ந்து இட ஒதுக்கீடு கொள்கையை மருத்துவ மாணவர்களின் சேர்க்கையிலும், அவர்களுக்கான வேலை வாய்ப்பிலும் நாம் கொண்டுவருகிறோம். 1989-ம் ஆண்டில், கலைஞர் ஆட்சியின்போது, அரசாங்க மருத்துவ மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடானது, அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவக் கல்லூரி களிலும், அரசாங்க மருத்துவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டது.

உதாரணமாக, ஒரு மருத்துவ மாணவர், எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பைப் படித்து முடிக்கிறார். அவரே அடுத்த தாக மேற்படிப்பு படிக்க நினைக்கையில், தாராளமா படிங்க, ஆனால் அதற்குமுன் இரண்டரை வருடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுங் கள் என்று கூறுகிறார்கள். அதன்படி வேலை செய்த பின்னர் எம்.எஸ். முடிக் கிறார்கள். முடித்தபின், ஒரு மாவட்ட அரசு மருத்துவ மனையில் பணியாற்றக் கூடியவர்கள், அடுத்ததாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவம் படிக்க விரும்பினால் அவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் 50% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாக, 20 ஆயிரம் பேராக உள்ளது.

gg

எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்கு மண்ணின் மைந்தர்களைத் தேர்ந் தெடுத்துப் பயன்படுத்துவதே சரியான முறையாக இருக்கும். எளிய மக்களுக்கு சரியான முறையில் மருத்துவ உதவியைக் கிடைக்கச் செய்வதே சமூக நீதி சார்ந்த திராவிட மாடலாகும். இந்த திராவிட மாடலுக்குத் தொல்லை கொடுக்கும் வேலையைத் தான் ஒன்றிய அரசு செய்துகொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் இருந்த 50% இட ஒதுக்கீட்டை நீக்கியது ஒன்றிய அரசு. தற்போது அதனை நீதிமன்றத்தின் மூலம் முறி யடிப்பதைத்தான் தமிழக அரசு செய்துகாட்டி யிருக்கிறது.

நம் மக்களின் வரிப்பணத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் மருத்துவர்கள், வெளி மாநிலத்துக்கோ, வெளிநாட்டிற்கோ மருத்துவ சேவை செய்வதற்கா நாம் மருத்துவம் கற்றுத்தருகிறோம்? அரசாங்க மருத்துவப்படிப்பு, அந்த அரசு சார்ந்த மக்களுக்குப் பயன்படுவதே நியாயமாகும். அந்த நியாயத் தைத்தான் திராவிட மாடல் செய்துவருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுவந்த இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையை, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலமாக மீட்டெடுத்திருக்கிறார்'' என்றார்.

nkn260322
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe