டந்த 11ஆம் தேதி திங்களன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜம்மு - காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அப்போது நடைபெற்ற விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், "ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது குறிப்பிட்ட ஒரு நபரால் தாமதமானது'' என்றும், "காஷ்மீரில் திடீரென சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாலேயே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது'' என்றும், மறைமுகமாக நேருவை குற்றம்சாட்டி பேசினார். மேலும், "370-வது சட்டப்பிரிவால் குறிப்பிட்ட 3 குடும்பங்கள் மட்டுமே பலன் அடைந்து வந்தன." என்றும் சூசகமாக குற்றம் சுமத்திப் பேசியிருந்தார். அமித்ஷாவின் பேச்சுக்கு, "பண்டித ஜவஹர்லால் நேரு நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். அமித்ஷாவின் பேச்சு, அவருக்கு வரலாறு தெரியவில்லை என்பதையே காட்டுகிறது'' என்று ராகுல் காந்தி பதிலடி கொடுத்தார்.

gg

தற்போது 370வது சட்டப்பிரிவு நீக்கம் செல்லுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ள நிலையில், இத்தீர்ப்பு குறித்து தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணாவிடம் கேட்ட போது, "இந்தியாவோடு ஜம்மு காஷ்மீர் மாநிலம் இணைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள், இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவ ஹர்லால் நேருவும், ஷேக் அப்துல்லாவும் தான். ஏறத்தாழ 90% இஸ்லாமியர்கள் வாழு கின்ற மாநிலம் ஜம்மு காஷ்மீர். இந்த நாடு சுதந்திரம் அடைந்த போது அவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் கொடுத்தார்கள். ஒன்று இந்தியாவோடு இருக்க லாம், இரண்டாவது பாகிஸ் தானோடு இருக்கலாம் அல்லது தனி நாடாக இருக்கலாம். அப்படியான சூழலில், இந்தியா வோடு காஷ்மீர் இணைவதற்கு ஜவஹர்லால் நேருவுக்கும், ஷேக் அப்துல்லாவுக்கும் தனிப்பட்ட முறையில் இருந்த நட்பு தான் காரணம்.

மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் நமக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என்றும், சிறுபான்மை சமுதாயத்தினராக இருக்கின்ற இஸ்லாமியர்களின் உரிமைகள், நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையோடும்தான் இந்தியாவோடு இணைய ஒப்புக்கொண்டார்கள். அப்போது, அவர்கள் சில சலுகைகளை பண்டித ஜவஹர்லால் நேரு விடம் கோரினார்கள். அந்த கோரிக்கைக்கு நாம் இணங்க வில்லையென் றால், பாகிஸ்தானோடு காஷ்மீர் சேர்ந்திருக்கக் கூடும். எனவே, அன்றைக்கு நேரு அந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு காஷ்மீரை இந்தியாவோடு இணையச்செய்தார். இப்படித்தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு உருவானது.

Advertisment

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அவர்கள் ஜனசங்கமாக இருந்த காலத்திலிருந்தே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 370வது பிரிவை ரத்து செய்வோம் என்று சொல்லிவந்தார்கள். ஏனென்றால், அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள். இப்போது ஆட்சிக்கு வந்த நிலையில், 370வது பிரிவை ரத்து செய்திருக்கிறார்கள். இந்த முடிவை சரியென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பை நான் எப்படி பார்க்கிறேனென்றால், பல நூற்றாண்டு காலமாக இருந்த பாபர் மசூதியை இடித்தார்கள். அப்படி இடித்ததைக் குற்றமென்று கூறிய அதே உச்சநீதிமன்றம், இடித்த இடத்திலேயே ராமர் கோவில் கட்டிக்கொள்ள அனுமதி கொடுத்துவிட்டது. அதேபோல் தற்போது காஷ்மீரில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 370வது சட்டப்பிரிவை நீக்கியதையும், பாபர் மசூதி இடிப்புக்கு வழங்கப்பட்ட தீர்ப்பையும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தீர்ப்பாகத்தான் பார்க்கிறோம்'' என்றார்.

gg

நேரு குறித்து அமித்ஷா வைத்த விமர் சனங்கள் பற்றி, கோபண்ணாவிடம் கேட்கையில்... "ஏற்கெனவே பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏகப்பட்ட உடமை இழப்புகளை, உயிரிழப்புகளை நாம் சந்தித்திருக்கிறோம். மறுபடியும் அதுபோன்ற கலவரம் வந்துவிடக்கூடாது. அமைதியான தீர்வைக் காண வேண்டும் என்பதற்காக அன்றைய சர்வதேச சூழலில், இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றவகையில், ஐ.நா. சபை நியாயம் வழங்கும் என்று நம்பி ஐ.நா.சபைக்கு சென்றோம். ஆனால் நாம் எதிர்பார்த்த முடிவை அவர்கள் சொல்லவில்லை. அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்ற பிரச்சனை வந்தது. ஆனால் அதற்குப் பதிலாக அங்கே பல தேர்தல்களை நாம் நடத்தியிருக்கிறோம். அந்த தேர்தலில் பெருவாரி யான மக்கள் பங்கெடுத்து வாக்களித்திருக் கிறார்களே ஒழிய, பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவர்கள் என்றும் இருந்ததில்லை.

மேலும், ஷேக் அப்துல்லா மட்டுமல்லாது, அவருக்குப்பின் வந்த ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, முப்தி முகமது சையத் உள்ளிட்ட தலைவர்கள் அனைவருமே இந்தியாவோடு காஷ்மீர் இணைவதைத்தான் விரும்புகிறார்கள். அவர்களை மேலும் மேலும் இந்தியாவை விட்டு விலக்குவதுபோல... விரிசலை ஏற்படுத்துவது போல தான் பா.ஜ.க. நடந்துகொள்கிறது. அவர்கள் மீது நாம் எப்போதும் ஒரு கருணையோடுதான் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் நம்மை நம்பி வந்தவர்கள். நாம் அப்போது வாக்குறுதி கொடுத்தோம். அந்த வாக்குறுதியைக் காப்பாற்றும் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கும் தலைமைக்கும் இருக்கிறது. மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவரும் இவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்'' என்றார். நேரு அளித்த நம்பிக்கை நீதிமன்றத்தால் நொறுக்கப் பட்டுள்ளதோ?

Advertisment