மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி பலாத்கார கொலை வழக்கின் அதிர்வுகள் அடங்கும்முன்பே, கேரளத்தில் நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கை வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ் -மலையாளத் திரையுலகின் பிரபல நடிகை ஒருவர், 2017-ஆம் ஆண்டில் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்வினையாக நடிகைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி மலையாள நடிகைகள் கூட்டமைப்பு அளித்த புகாரின் பேரில் நீதிபதி ஹேமா ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணைக்குப் பின் 2019-ல் கேரள அரசிடம் நீதிபதி ஹேமா ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்தது. 295 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் பதிவாகி யிருந்தன. நடிகை ரஞ்சினி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு காரணமாக, கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் இதுவரை அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. தடைகோரும் மனுவை கேரள உயர்நீதி
மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி பலாத்கார கொலை வழக்கின் அதிர்வுகள் அடங்கும்முன்பே, கேரளத்தில் நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கை வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ் -மலையாளத் திரையுலகின் பிரபல நடிகை ஒருவர், 2017-ஆம் ஆண்டில் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்வினையாக நடிகைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி மலையாள நடிகைகள் கூட்டமைப்பு அளித்த புகாரின் பேரில் நீதிபதி ஹேமா ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணைக்குப் பின் 2019-ல் கேரள அரசிடம் நீதிபதி ஹேமா ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்தது. 295 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் பதிவாகி யிருந்தன. நடிகை ரஞ்சினி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு காரணமாக, கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் இதுவரை அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. தடைகோரும் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதால், தற்போது அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “மலையாளத் திரையுலகில் நடிகைகளை பாலியல்ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இப்படி ஒத்துழைக்கும் நடிகைகளுக்கே பட வாய்ப்புகள் வழங்கப்படு கின்றன. இத்தகைய இணக்கமான நடிகைகளை மலையாளத் திரை யுலகினர் ஒத்துழைக்கும் நடிகை கள் என வகைப்படுத்தியுள்ளனர். தங்களின் எதிர்பார்ப்புகளுக்கும், பாலியல் தேவைகளுக்கும் சம்ம திக்க, நடிகைகளை தயாரிப்பாளர் களும், இயக்குநர்களும் கட்டாயப் படுத்துகின்றனர். சமரசம் செய் யாதவர்களுக்கு படப்பிடிப்பில் தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை. கழிப்பறை வசதியோ அல்லது உடைமாற்றும் அறையோ ஏற்பாடு செய்து தராமல் அலைக்கழிப்பர்.
தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக நடிகைகள் இதுகுறித்து போலீசில் புகாரளிக்க முன்வருவதில்லை. கேரளத் திரையுலகில் முன்னணியில் இருப்பவர்களே நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இதில் இயக்குநர்கள் மீதே அதிக புகார்கள் உள் ளது. முத்தக் காட்சி, நிர்வாணமாக நடிக்க நடிகை கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மறுத்தால் மிரட்டப்படுகின்றனர். மலையாளத் திரையுல கத்தை மாஃபியா கும்பல் கட்டுப்படுத்துகிறது.
எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் நடிகைகள் பிரச்சனைக்குரியவர்கள் என முத்திரை குத்தப்படுகின்றனர். இவர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை கொடுக்கப்படுகிறது. ஒத்துழைப்பு தராத நடிகைக்கு அந்தரங்கமான முத்தக் காட்சியை 17 டேக் எடுத்தனர் என அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்” என்பது போன்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் ஆணையத்தின் விசா ரணையில் பதிவாகியுள்ளன. அதேசமயம், நடிகை களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைத் தடுப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை யும் நீதிபதி ஹேமா ஆணையம் வழங்கியுள்ளது.
ஆணையத் தலைவரான நீதிபதி ஹேமா, “"மலையாளத் திரையுலகின் தொழில் துறையை சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்ட 10 முதல் 15 பேர் அடங்கிய அதிகாரக் கும்பல் கட்டுப்படுத்துகிறது. இவர்கள் திரையுலகப் பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகின்ற னர். நடிகைகள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபடும் பெண்களும் பாலியல் சமரசங்கள் செய்துகொள்ள நெருக்கப்படுகின்ற னர்'’என தன் அறிக்கையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த அதிகாரக் கும்பலில் நடிகரும் அமைச்சருமான கே.பி. கணேஷ்குமாரும் அடக்கமென மலையாளத் திரையுலகில் ஒரு தரப்பு கூறுகிறது.
இதனால் ஹேமா குழுவின் அறிக்கை மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையை வெளியிடாமல் ஐந்து ஆண்டுகள் காலம்தாழ்த்தி குற்றவாளிகளைப் பாதுகாத்ததாக ஆளும் இடதுசாரி கூட்டணி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சதீஷனோ, “"குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளங்களைக் காக்க மாநில அரசு முயற்சிப்பதாகவும், அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யவேண் டும்'’எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "விரிவான திரைத்துறை சட் டத்தை உருவாக்குவது, திரைத்துறை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண தீர்ப்பாயம் அமைப்பது உள்ளிட்ட ஹேமா குழு அறிக்கையின் பல்வேறு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து வதில் அரசு தீவிரமாக உள்ளது. பாதிக்கப்பட்ட வர்கள் பக்கமே அரசு துணை நிற்கும். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.
அறிக்கை கைகாட்டியவர்களின்மேல் நடவடிக்கை இல்லாதது டைபி, ஏ.ஐ.ஒய்.எஃப். போன்ற கம்யூனிச இளைஞர் அமைப்புகளிடையே அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.
புகழ் வெளிச்சத்தில் நனை பவர்களை லைம்லைட்டில் இருப்பவர்கள் என்பார்கள். சினிமாவின் லைம்லைட்டுக்குப் பின்னால் அந்தகார இருள் போன்ற அசிங்கம் சூழ்ந் துள்ளதை ஹேமா அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த அத்துமீறல் கேரளத் திரையுலகில் மட்டும் தான் நடக்கிறதா என்ற கேள்வி முக்கியமானது.