ஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி.யான நல்லம நாயுடு, எழுதி யிருக்கும் "என் கடமை'’ என்ற வரலாற்று ஆவண நூல், பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. ஜெயலலிதா-சசிகலா தரப்பின் மீதான ’சொத்துக் குவிப்பு வழக்கின்’ பின்னணியையும், அது தொடர்பான பல அதிரவைக்கும் ரகசியச் செய்திகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் இந்த நூலை, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், அழகிய ஆவணப் புதையலாக வெளியிட்டிருக்கிறது.

சொத்துக் குவிப்பு வழக்கைத் திறம்படக் கையாண்ட, நேர்மையான புலனாய்வு அதிகாரியான நல்லம நாயுடு, கவனமாகத் திரட்டித் தந்த ஆதாரங் கள்தான், ஜெ-சசி வகையறாக்களை குற்றவாளிகள் என்று நீதியின் முன் சந்தேகமில்லாமல் நிரூபித்தது. இந்த வழக்கை விசாரித்ததால் தனக்கு ஏற்பட்ட மிரட்டல்களையும் சவால்களையும் இதில் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் நல்லம நாயுடு.

book

மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு உட்பட, தான் விசாரித்த சில முக்கிய வழக்குகள் குறித்த விவரங்களையும் நல்லம நாயுடு இதில் சுவைபட விவரித்திருக்கிறார். காவல்துறையினராலும், சட்டத் துறையினராலும் வியந்து பார்க்கப்பட்ட நல்லம நாயுடுவின் புலனாய்வு அனுபவங்களும், அவர் கையாண்ட நுணுக்கங்களும், நேர்மையாக செயலாற்ற விரும்பும் காவல்துறையினருக்கும், வருங்கால சந்ததியினருக்கும் போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நூலை நக்கீரன் குழுமம் அழகிய பதிப்பாக வெளியிட்டிருக்கிறது. இந்த நூலுக்கு நம் ஆசிரியர் நக்கீரன் கோபால் எழுதி யிருக்கும் பதிப்புரையில்...

Advertisment

’கடந்த அ.தி.மு,க. அரசு, ஜெ’வின் முடக்கப்பட்ட அத்தனை சொத்துக்களை யும் அரசுடமை ஆக்க நட வடிக்கை எடுத்திருக்கவேண்டும். இதன் மூலம் அரசுக்கு 3 ஆயிரம் கோடி வருமானம் கிடைத் திருக்கும். இப்போது அமைந் துள்ள அரசாவது இந்த நட வடிக்கையில் இறங்கவேண்டும் என்றும் நல்லம நாயுடு உரத்துக் குரல்கொடுக்கிறார். அந்தக் குரலை, தமிழகம் வழிமொழிந்து கொண்டிருக்கிறது.

அதேபோல், இந்த நூலாசிரியர் நல்லம நாயுடு, ’தமிழ் மக்களுக்கு வேண்டுகோள்’ என்ற தலைப்பில், எழுதியிருக்கும் 35 ஆவது அத்தியாயம், எல்லோரும் படித்து மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஜெ. -சசி வகையறாவைப் போன்ற ஆபத் தான, மோசமான, கீழ்மை குணம் பொருந்திய அரசியல்வாதிகளிடம் நம் தமிழ்ச்சமூகம் ஏமாறக் கூடாது என்ற கவலையோடு, உருக்கமாக இதில் மனம் திறந்து பேசுகிறார் நல்லம நாயுடு. அப்படிப் பேசும் போது...

”குறைந்தபட்சம் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்களையாவது ஊழல்வாதிகள் என்று கண்டுகொள்ளுங்கள். அவர்கள் மானம் கெட்டவர்கள். பணத்துக்காக பிறர் உயிரிரைப் பறிக்கவும் தயங்காதவர்கள்” என்று பகிரங்கமாகச் சொல்வதோடு, அப்படிப்பட்டவர்களிடம் ஏமாறாமல் தெளிவாக இருக்கவேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு வேண்டுகோளும் வைக்கிறார். அரசியல் களத்திலும் சட்டத்துறை மற்றும் காவல்துறையினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது இந்த நூல்.

Advertisment

நூல்: என் கடமை, ஆசிரியர்: நல்லம நாயுடு,

பக்கம்: 208

விலை: ரூ.225

தொடர்புக்கு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014. போன்: 044-4399 3029

நூல்களை ஆன்லைனில் பெற...

books.nakkheeran.in