ஜெ.வின் ரத்த வாரிசு! தீபா கையில் போயஸ் கார்டன்! -அடுத்து என்ன?

jj

மிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பங் களை ஏற்படுத்திய மர்ம பங்களாவாகவும், அகில இந்திய தலைவர்களாக இருந்தாலும் கேட் திறக்கும்வரை காத்திருந்துதான் ஆக வேண்டும் என்ற எழுதப்படாத விதிமுறை யாகவும் இருந்தது போயஸ் கார்டனில் உள்ள "வேதா நிலையம்' என்கிற ஜெ.வின் பங்களா. அங்கிருந்து 2016 செப்டம்பர் 22 இரவில் என்ன நிலையில், அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெ. கொண்டு செல்லப்பட்டார் என்பது இன்னமும் மர்மமாக உள்ள நிலையில்... ஜெ.வின் மர ணத்திற்குப் பிறகு, அதனை அரசு நினைவிட மாக அறிவித்தது எடப்பாடி பழனிசாமி அரசு.

அதை எதிர்த்து ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், "வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது' என சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 24-ல் தீர்ப்பளித்தது. "வீட்டு சாவியை தீபா-தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஜெ.தீபாவி

மிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பங் களை ஏற்படுத்திய மர்ம பங்களாவாகவும், அகில இந்திய தலைவர்களாக இருந்தாலும் கேட் திறக்கும்வரை காத்திருந்துதான் ஆக வேண்டும் என்ற எழுதப்படாத விதிமுறை யாகவும் இருந்தது போயஸ் கார்டனில் உள்ள "வேதா நிலையம்' என்கிற ஜெ.வின் பங்களா. அங்கிருந்து 2016 செப்டம்பர் 22 இரவில் என்ன நிலையில், அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெ. கொண்டு செல்லப்பட்டார் என்பது இன்னமும் மர்மமாக உள்ள நிலையில்... ஜெ.வின் மர ணத்திற்குப் பிறகு, அதனை அரசு நினைவிட மாக அறிவித்தது எடப்பாடி பழனிசாமி அரசு.

அதை எதிர்த்து ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், "வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது' என சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 24-ல் தீர்ப்பளித்தது. "வீட்டு சாவியை தீபா-தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஜெ.தீபாவிடம் பேசினோம்.

jaya

இந்தத் தீர்ப்பை எப்படி பார்க்கிறீங்க?

நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒரு நியாயமான தீர்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. "அத்தையின் அனைத்து சொத்துக்களுக்கும் ரத்த சொந்தமே வாரிசு' என்ற வழக்கு சென்றுகொண்டு இருக்கிறது. அதற்கான முதல் வெற்றியாக இதை நான் பார்க்கிறேன், மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.

முந்தைய எடப்பாடி அரசு எதற்காக அரசுடைமையாக்கியது என நினைக்கிறீர்கள்?

தான் வாழ்ந்த வீட்டை, தனக்குப் பிறகு மக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும் என்று எந்த இடத்திலும் அத்தை சுட்டிக்காட்டியதே இல்லை. அதனால்தான் ஆரம்பகட்டத்தில் இருந்தே நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித் தோம். ஜெ.வின் ரத்த சொந்தம் என்ற முறை யிலும், எங்கள் பாட்டியின் பூர்வீகச் சொத்து பேத்திக்குத்தான் என்ற அடிப்படையிலேயே, இந்த வழக்கை முன்னெடுத்துச் சென்றோம். அ.தி.மு.க. அரசு அப்போதைய கட்சி சூழ்நிலைக்காகவும், எடப்பாடியின் அரசியல் வளர்ச்சிக்காவும் ஒரு கொள்கை முடிவை எடுத்தது. அதை முறியடிக்கும் வகையில் தீர்ப்பு வந்துள்ளது.

jaya

வேதா இல்லத்தில் அடித் தளம் மட்டுமே உங்கள் பாட்டி சந்தியாவுக்கு சொந்தமாகும் பட்சத்தில், தி.மு.க. அரசு சொத் துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட்டால் வேதா இல்லத்தின் மேலும் நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதே?

அதற்கு வாய்ப்பில்லை. ஏதாவது இருந்திருந்தால் இந்த வழக்கின்போதே இது தொடர்பாக முக்கிய வாதமாக வைக்கப் பட்டிருக்கும். முடிந்த ஒரு வழக்கின் அடிப் படையில் மீண்டும் நடவடிக்கை எடுப்பது இயலாத காரியமே. அந்த இடம் அத்தை அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே, சினிமாத்துறையில் இருந்த காலகட்டத்தில் வாங்கப்பட்டது.

வேதா இல்லம் உங்களிடம் ஒப்படைக் கப்பட்டால் உங்கள் இருவரில் (தீபக், தீபா) இருவரில் யார் கட்டுப்பாட்டில் இருக்கும்?

இரண்டு பேருக்கும் சம உரிமை உள்ளது. வேதா இல்லம் மட்டுமின்றி, எங்களுக்கான சொத்துகள் அனைத்திலும் உரிமையுள்ளது. இப்போதுதான் இந்த தீர்ப்பு வந்துள்ளது. மற்ற சொத்துக்களுக்கு வாரிசாகவும், பராமரிக்கவும் அறிவித்துள்ள நிலையில்... இதன் பிறகுதான் அதற்கான முடிவுகள் எடுக்கப்படும்.

ஜெ. இல்லத்தின் முன்பாகவே சசிகலா புது வீடு கட்டுகிறாரே?

அது அவருடைய சொந்த விசயம். அதில் தலையிட நான் விரும்பவில்லை,

தீபக்கை சசிகலா தரப்பு மீண்டும் கையில் எடுக்க வாய்ப் புள்ளதா?

அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய நான் முயற்சிக்க வில்லை, நடக்கும்போது எதையும் எதிர்கொள்ள வேண்டியதுதான். இன்னொன் றும் நான் சொல்லவேண்டி யிருக்கிறது. அத்தையின் பெயரை அவமதிக்கும் வகை யில் சிலர் வேண்டுமென்றே "ஜெ.மகள்' என்று அடுத்தடுத்து வந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்களை சட்டரீதியாக சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். அத்தை என்ற முறையில் நான் சிறுவயதில் இருந்தே அவருடன்தான் வளர்ந்து வந்தேன். அவருடைய வாழ்க் கையில் மறைக்கப்பட்ட, ஒளித்து வைக்கப்பட்ட பக்கங்களே கிடையாது. அது எனக்கு நன்றாகவே தெரியும்.

jj

உங்களின் அடுத்தகட்ட நகர்வு எதை நோக்கி இருக்கும். மீண்டும் அரசியலில் பயணிக்க வாய்ப்புள்ளதா?

மூன்று வாரத்திற்குள் சாவியை ஒப்படைக்கச் சொல்லியிருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக சட்டரீதியாக நடவடிக்கை என்னவோ அதை நோக்கியே என்னுடைய பயணம் இருக்கும். மீண்டும் என் வாழ்நாளில் அரசியல் செல்வதற்கான எண்ணமே இல்லை. நான் சிறுவயதில் இருந்து என் அத்தையுடன் இருந்தபோதே, என் அத்தை சொல்லும் வார்த்தை அரசியல் பிடிக்க வில்லை என்பதே. அவர்கள் சொல்லிச் சொல்லியே இந்த வார்த்தை எனக்கு பிடிக்காமல் போனது. அத்தை மறைவுக்குப் பிறகு, சிலர் வற்புறுத்தலின் பேரில் உள்ளேவந்தேன் அவர்கள் நினைத்ததை என் மூலமாகப் பயன்படுத்திக்கொண் டார்கள். பிறகு என்னால், அவர்கள் சொல்லுவதை கேட்டு ஒரு கட்டத்திற்குமேல் செயல்பட இஷ்டம் இல்லாமலே அரசியலை விட்டே வெளியில் வந்தேன். இனி யும் என் வாழ்வில் அரசியல் என்ற வார்த்தைக்கே இடமில்லை.

nkn271121
இதையும் படியுங்கள்
Subscribe