Advertisment

யோக்கியர்' சேகர் ரெட்டியைக் காப்பாற்றும் "உத்தமர்' எடப்பாடி பழனிசாமி!

sekarreddy

ணல் மாஃபியா சேகர் ரெட்டியின் மீதான மூன்று வழக்குகளில் இரண்டு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதன் பின்னணியில் உள்ளது எடப்பாடி அரசு.

Advertisment

sekarreddy

பதினைந்து வருடங்களுக்கு முன்பு வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வில் வேலூர் மாவட்டம் தொண்டன் துளசி கிராமத்தில் தொண்டராக இருந்தவர்தான் இந்த சேகர் ரெட்டி. அதிகபட்சம் 50,000 ரூபாய்வரை உள்ளூர் காண்ட்ராக்ட்டுகளை செய்து வந்தவருக்கு... அந்த ஊருக்கு பக்கத்து ஊரை சொந்தமாகக் கொண்ட தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன்ராவின் நட்பு கிடைத்தது. விறுவிறுவென வளர ஆரம்பித்தார்.

jayalalithaஜெ. இறந்தபின் இவரது வீடுகள் உட்பட மூன்று இடங்களில் வருமானவரித்துறை நடத்திய ரெய்டுதான் சேகர் ரெட்டியின் முழு உருவத்தை வெளிக்காட்டியது. 96.89 கோடி ரூபாய் பணம், 120 கிலோ தங்கக்கட்டிகளை வருமானவரித்துறை கைப்பற்றியது. அந்த 96.89 கோடி ரூபாயில் 9 கோடி ரூபாய், புதிதாக பண மதிப்பீட்டு நடவடிக்கையின்போது வெளியிடப்பட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுகள். அப்பொழ

ணல் மாஃபியா சேகர் ரெட்டியின் மீதான மூன்று வழக்குகளில் இரண்டு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதன் பின்னணியில் உள்ளது எடப்பாடி அரசு.

Advertisment

sekarreddy

பதினைந்து வருடங்களுக்கு முன்பு வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வில் வேலூர் மாவட்டம் தொண்டன் துளசி கிராமத்தில் தொண்டராக இருந்தவர்தான் இந்த சேகர் ரெட்டி. அதிகபட்சம் 50,000 ரூபாய்வரை உள்ளூர் காண்ட்ராக்ட்டுகளை செய்து வந்தவருக்கு... அந்த ஊருக்கு பக்கத்து ஊரை சொந்தமாகக் கொண்ட தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன்ராவின் நட்பு கிடைத்தது. விறுவிறுவென வளர ஆரம்பித்தார்.

jayalalithaஜெ. இறந்தபின் இவரது வீடுகள் உட்பட மூன்று இடங்களில் வருமானவரித்துறை நடத்திய ரெய்டுதான் சேகர் ரெட்டியின் முழு உருவத்தை வெளிக்காட்டியது. 96.89 கோடி ரூபாய் பணம், 120 கிலோ தங்கக்கட்டிகளை வருமானவரித்துறை கைப்பற்றியது. அந்த 96.89 கோடி ரூபாயில் 9 கோடி ரூபாய், புதிதாக பண மதிப்பீட்டு நடவடிக்கையின்போது வெளியிடப்பட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுகள். அப்பொழுது இவரது வீட்டில் டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், ஜெ.வின் பி.ஏ.வான பூங்குன்றனுக்கு ஒன்றரைகோடி ரூபாய் கொடுத்ததாக எழுதப்பட்டிருந்தது. ஓ.பி.எஸ்.ஸுக்கு பல தவணைகளில் பல லட்ச ரூபாய் கொடுத்ததாக டைரியில் பதிவுசெய்திருந்தார் சேகர் ரெட்டி. ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான ரமேஷ், அமைச்சர் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், வருவாய்த்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச் சர் ஆகியோரின் பெயர்களோடு, சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்க ருக்கு 5 கோடி ரூபாய் கொடுத்ததாக எழுதியிருந்தார் சேகர் ரெட்டி. இதுதவிர புதிய தமிழகம் கட்சி சார்பில் எம்.எல். ஏ.வாக இருந்த கிருஷ்ணசாமி, வருமானவரித்துறை அதிகாரி கள், அரசு அதிகாரிகள் என லஞ்சப் பட்டியல் நீண்டு கொண்டே போனது.

Advertisment

சேகர் ரெட்டியைத் தொடர்ந்து அவரது குருவான, தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன்ராவ் வீட்டிலும் அவரது தலைமைச் செயலக அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோது நடந்த இந்த ரெய்டுகள் பற்றிய பரபரப்புகள் இ.பி.எஸ். முதல்வரானதும் நீர்த்துப் போனது. ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் ஒன்றாக இணைந்த பிறகு சேகர் ரெட்டி, ராம மோகன்ராவ் ஆகிய இருவரைப் பற்றி எந்த அசைவுகளும் வருமானவரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகிய மத்திய அரசு ஏஜென்ஸிகளிடம் தென்படவில்லை.

sekarreddy

2,000 ரூபாய் புதிய நோட்டுகளை சேகர் ரெட்டிக்கு மாற்றிக் கொடுத்ததாக கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட பரஸ்மால் லோதா என்பவரைப் பற்றியும் எந்த அசைவும் இல்லை. அத்துடன், "சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுகளைப் பற்றி எங்களிடம் எந்தப் பதிவும் இல்லை' என ரிசர்வ் வங்கியே அறிவித்தது. "என்னிடம் இருந்த 96.89 கோடி ரூபாய் பணம் முழுவதும் எனக்குச் சொந்தமான மணல் குவாரிகளிலிருந்து பெறப்பட்ட பணம்' என வருமானவரித்துறையிடம் கணக்கு சமர்ப்பித்தார் சேகர் ரெட்டி. திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சேகர் ரெட்டிக்காக புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தார்கள் என கைது செய்யப்பட்ட கே.ரத்தினமும், எஸ்.ராமச்சந்திரனும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள். சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு 90 நாட்கள்வரை குற்றப்பத்திரிகையைக் கூட சி.பி.ஐ. தாக்கல் செய்யவில்லை.

ram-mohanraoஇதற்கிடையே எடப்பாடியின் சம்பந்தியான பி.சுப்பிரமணியத்தின் வியாபார வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார் சேகர் ரெட்டி. எடப்பாடிக்கு நெருக்கமான பி.நாகராஜன் போன்றோருடன் சேர்ந்து பாலாஜி என்னும் பெயரில் புதிய கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார் சேகர் ரெட்டி. "இந்த நிறு வனத்துக்கு மதுரை ரிங்ரோடை நான்குவழிச் சாலையாக்கும் 200 கோடி ரூபாய் வேலை தரப்பட்டிருந்தது' என்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள். "ரெட்டியின் ஆளான ரத்தினம் மற்றும் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சவுடு மண் எடுக்கிறோம் என்ற பெயரில் ஆற்றுமணலை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்' என்கிறார்கள் மணல் வியாபாரம் பற்றி அறிந்தவர்கள்.

இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்த 3 மாதங்களுக்குப் பிறகு, சேகர் ரெட்டியின் குருநாதரான ராமமோகன்ராவ், மாநில தொழில் முதலீட்டுக் கழக இயக்குநரக பதவிக்கு வந்துவிட்டார். சேகர் ரெட்டி மீது 3 வழக்குகள் இருந்தன. அதில் இரண்டு, அவர் சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்தார் என வருமானவரித்துறையால் அமலாக்கப் பிரிவு தொடுத்த வழக்கு. இன்னொன்று சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு. சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், 96.89 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் "9 கோடி புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றியுள்ளீர்கள். இதில் சேகர் ரெட்டிக்கு உதவிய வங்கி அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை?' என நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பினார். சி.பி.ஐ. பதில் சொல்லவில்லை. இறுதியாக ஒரே குற்றத்துக்கு எதற்கு 3 வழக்குகள் என அமலாக்கத்துறை தொடர்ந்த 2 வழக்குகளை ரத்து செய்துவிட்டது உயர்நீதிமன்றம்.

இதை எதிர்த்து நாங்கள் அப்பீல் செய்வோம் என்கிறது வருமானவரித்துறை. சேகர் ரெட்டி மீண்டும் செல்வாக்கு பெற்றுவிட்டார் எடப்பாடி அரசின் ஆதரவுடன்.

-தாமோதரன் பிரகாஷ்

ops_eps sekarreddy nkn03.7.2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe