எடப்பாடி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்திவரும் தி.மு.க.விடம் தற்போது சிக்கியிருக்கிறது ஆவின் நிறுவனம். சமீபத்தில் ஆவினில் திறக்கப்பட்ட 360 கோடி ரூபாய்க்கான டெண்டரை உயர்நீதிமன்றம் அதிரடியாக நிறுத்தி வைத்திருப்பது ஆட்சியாளர்களையும் உயரதிகாரிகளையும் பதற வைத்திருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பால் ஒன்றியங்களிலிருந்து பாலை கொள்முதல் செய்து சென்னைக்கு கொண்டு வருவதற்காக பால் டேங்கர் லாரிகளை வாடகைக்கு எடுக்கும் டெண்டரை அறிவித்திருந்தது ஆவின் நிர்வாகம். 360 கோடி ரூபாய்க்கு 312 டேங்கர் லாரிகளை 3 வருடத்துக்கு எடுக்கும் டெண்டர் இது.
டெண்டரில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக உயர்நீதிமன்றத்தின் கதவுகளை வேகமாகத் தட்டியது ஆர்.கே.ஆர். நிறுவனம். நீதிபதி தண்டபாணி வழக்கை விசாரித்தார். ஆர்.கே.ஆர். நிறுவனத்திற்காக ஆஜரான தி.மு.க.வின் மூத்த வழக்கறிஞர் வில்சன், ""பால் ஒன்றியங்களிலும் இணையத்திலும் உள்ள போர்டின் ஒப்புதலைப் பெற்றுத்தான் டெண்டர் விட வேண்டும் என்பது பால் கூட்டுறவு சங்கங்களின் விதி. டெண்டர் விடும் அதிகாரம் போர்டுக்கும் சிறப்பு அதிகாரிக்கும் மட்டுமே உண்டு. போர்டின் ஒப்புதலைப் பெறாமல் ஆவின் நிர்வாக இயக்குநருக்கோ (காமராஜ் ஐ.ஏ.எஸ்.), பால்வளத்துறை செயலாளருக்கோ (கோபால் ஐ.ஏ.எஸ்.) தன்னிச்சையாக டெண்டர் விடும் அதிகாரம் கிடையாது. இது தெரிந்தும் விதிகளை மீறி டெண்டர் விட்டிருக்கிறார்கள். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில் டெண்டர் விட்டு விலைப்புள்ளியை (கமர்சியல் பிட்) திறந்திருக் கிறார்கள். இது மிகப்பெரிய விதிமீறல். இந்த டெண்டரில் எல்லா நிலைகளிலும் விதிமீறல்கள் இருப்பதால் ஆர்.கே.ஆர். நிறுவனம் பாதிக்கப் பட்டிருக்கிறது. அதனால் டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும்'' என அழுத்தமாக வாதாடினார்.
இதே டெண்டரில்

இதே டெண்டரில் தங்களை கலந்துகொள்ள விடாமல் ஆவின் நிர்வாகம் தடுத்ததை எதிர்த்து ஏற்கனவே டெண்டருக்கு தடை வாங்கியிருக்கிறது தீபிகா ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம். அதன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ""இந்த டெண்டருக்கு ஏற்கனவே ஸ்டே கொடுக்கப் பட்டிருந்தும் அதனை மதிக்காமல் டெண்டரை திறக்கிறார்கள்'' என சுட்டிக்காட்டி ஏகப்பட்ட கோப்புகளை தாக்கல் செய்ய, ""நீங்கள் கோர்ட் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யுங்கள்' என்ற நீதிபதி தண்டபாணி, "ஏற்கனவே ஸ்டே இருப்பதால் புதிதாக எதற்கு ஸ்டே?' என கேள்வி எழுப்பி யிருக்கிறார்.
அப்போது குறுக்கிட்ட வில்சன், ""டெண்டர் ஒன்றாக இருந்தாலும் பிரச்சனைகள் வேறு வேறு'' என ஆவின் நிர்வாகத்தில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டி வாதாட, அதனை உள்வாங்கிய நீதிபதி தண்டபாணி, ""கோர்ட்டின் மறு உத்தரவு வரும்வரையில் டெண்டரை முடிவு செய்யக்கூடாது'' என உத்தரவிட்டார். ஆவின் டெண்டருக்கு ஸ்டே கொடுக்கப்பட்டிருப்பதில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் ஆவின் உயரதிகாரிகளும் இடிந்து போயிருக் கிறார்கள். இந்த விவகாரம் குறித்து, தி.மு.க. வழக்கறிஞர் வில்சனிடம் கேட்டபோது, ’’""கோர்ட் டில் வழக்கு இருப்பதால் விரிவாக எந்த கருத்தை யும் சொல்ல விரும்பவில்லை''’என்றார்.
இந்தநிலையில், ஆவின் டெண்டரில் பல கோடி ரூபாய் ஊழல் நடப்பதற்கான ஆதாரங்களை தி.மு.க.வினர் சேகரித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, "ஆவினில் என்ன நடக்கிறது?' என விசாரித்தபோது, ""ஒவ்வொரு மாவட்ட பால் ஒன்றி யத்திலும் நடந்துவந்த டெண்டர் நடை முறை களைத் தடுத்து, ஒரே டெண்டராக சென்னையி லுள்ள ஆவின் தலைமையகத்திற்கு தன்னிச்சையாக கொண்டுவந்துவிட்டனர் ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜும், துறையின் செக்ரட்டரி கோபாலும். இதற்கு எந்த விதிகளை யும் இவர்கள் பின்பற்றவில்லை. டெண்டரில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளை மொத்தமாக அள்ளுவதற்கே இந்த ஏற்பாடு. அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் முதல்வரின் செயலாளர் விஜய குமாரும் இதற்கு உடந்தை.
312 டேங்கர் லாரிகளையும் 2 வருடங்களுக்கு வாடகைக்கு எடுக்க ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட டெண்டர் தொகை 240 கோடி ரூபாய்தான். ஆனால், இடையில் டெண்டரில் திருத்தங்கள் செய்த ஆவின் நிர்வாகம், 240 கோடியை 360 கோடியாக, அதாவது 50% அளவுக்கும், 2 வருடத்தை 3 வருடமாகவும் உயர்த் தியது. டெண்டர் ட்ரான்ஸ்ஃபரன்சி சட்டத்தின் படி, "டெண்டரை திருத்தம் செய்வதாக இருந்தால் மொத்த தொகை யில் 25 சதவீதம் மட்டுமே செய்ய வேண்டும். 25 சதவீதத்துக்கு கூடுதலாக திருத்த வேண்டியதிருந்தால் மறுடெண் டர்தான் விடப்பட வேண்டுமே தவிர, தொகையை அதிகரிக்கக்கூடாது' என சட்டம் தெளிவாக சொல்கிறது. அதனை மீறியதன் பின்னணியில் இருப்பது சுமார் 120 கோடி ரூபாய் ஊழல்'' என்கிறார்கள் பால்வளத்துறையினர்.
மேலும் விசாரித்தபோது, ""15,000 லிட்டர் கொள்ளளவு மற்றும் 9000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு வகையிலான டேங்கர் லாரிகளை 360 கோடி ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கின்ற னர். தற்போது இதே டேங்கர் லாரிகள் முறையே டோல்கட்டணம் உள்பட ஒரு கிலோமீட்டருக்கு 25 ரூபாய்க்கும், 20 ரூபாய் 50 காசுக்கும் ஓடிக்கொண்டிருக் கின்றன. இதனை அடுத்த 3 வருடத்துக் கான தற்போதைய டெண்டரில் ஒரு கிலோமீட்டருக்கு 11 ரூபாய் உயர்த்த திட்டமிடப்பட்டு, அதற்கான முயற்சியில் குதித்துள்ளது ஆவின்.
இந்த அதிகத் தொகைக்கு லாரி களை எடுத்தால் ஆவினுக்கு 120 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். அந்த 120 கோடியும் காண்ட்ராக்டர்களுக்கு கொடுக்கப்பட்டு, அந்த தொகை அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் புற வழியில் திரும்பி விடும். இது தவிர, ஒரு லாரிக்கு 3 லட்சம் கமிஷன். இதில் 2 லட்சம் மேலிடத்துக்கும், 1 லட்சம் அதிகாரிகளுக்கும் பங்கு பிரிக்கத் திட்டமிடப்பட்டு பேரங்கள் நடந்து வருகின்றன'' என சுட்டிக்காட்டு கிறார்கள்.
ஆவினின் தில்லுமுல்லுகளை சேகரித்திருக்கும் தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, ""இந்த டெண்டருக்கான அறிவிப்பை ஜனவரி 10-ல் வெளியிடுகிறது ஆவின். ஆனால், நோட்டிஃபிகேசனில் 7-ந்தேதி என குறிப்பிட்டிருக்கிறார்கள். இதுவே முதல் விதிமீறல். மேலும், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதே டெண்டரை அறிவித்ததும் விதிகளுக்குப் புறம்பானது. இந்த டெண்டரில் கமிசன் கொடுக்கும் லாரி நிறுவனங்களை மட்டும் ஒருங்கிணைத்து ரகசிய சிண்டிகேட்டை உருவாக்கியிருக்கிறது ஆவின். அந்த சிண்டிகேட்டில் பங்கேற்க ஆர்.கே.ஆர். நிறுவனம் ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில், மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலைப் புள்ளியை ஆர்.கே.ஆர். நிறுவனம் கோட் செய்திருந்தால் டெண்டரை அந்த நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்து விடும் என சந்தேகப்பட்ட ஆவின் நிர்வாகம், டெண்டரில் ஆர்.கே.ஆர். நிறுவனம் கலந்துகொள்வதை தடுத்துள்ளது.
இதே டெண்டரில் ஏற்கனவே ஒரு ஸ்டே இருப்பதையும் பொருட்படுத்தாமல் டெண்டரில் கலந்துகொண்ட அனைவரின் டெக்னிக்கல் பிட்டையும் ஓப்பன் பண்ணியது ஆவின். மேலும், நாடாளுமன்ற தேர்தலின் நடத்தை விதிகள் கடந்த மாதம் 26-ந்தேதி வரை அமலில் இருந்த நிலையில், அதையும் பொருட்படுத் தாமல், ஆர்.கே.ஆர். நிறுவனத்தின் கமர்சியல் பிட்டை மட்டும் தள்ளி வைத்துவிட்டு, மற்ற நிறுவனங்களின் கமர்சியல் பிட்டை திறக்க முயற்சிக்க, அதனை கடுமையாக எதிர்த்தது ஆர்.கே.ஆர். நிறுவனம்.
இதனால் அதனை ஒருவாரம் தள்ளிவைத்த ஆவின், கடந்த 7-ந் தேதி காலை 11 மணிக்கு திறக்க திட்டமிடுகிறது. இதனையறிந்து 6-ந் தேதியிலிருந்து கோர்ட்டில் போராடி 7-ந் தேதி மதியம் 3 மணிக்கு ஸ்டே வாங்குகிறது ஆர்.கே.ஆர். நிறுவனம். அதற்குள் திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு கமர்சியல் பிட்டை திறந்துவிடுகிறார் ஆவின் காமராஜ். வழக்கறிஞர் வில்சன் இதனை கோர்ட் டில் சொன்னதும், "மறுஉத்தரவு வரும் வரை டெண்டரை முடிவு செய்யக் கூடாது' என ஸ்டே கொடுக்கிறார் நீதிபதி தண்டபாணி''’என விவரித்தனர்.
கமர்சியல் பிட் ஓப்பன் செய்யப்பட்டிருப்ப தால் ஒவ்வொரு நிறுவனமும் என்ன தொகையை கோட் பண்ணியுள்ளது என்பதை மோப்பம் பிடித்த போது, 15 ஆயிரம் கொள்ளளவு கொண்ட டேங்கருக்கு ரூ.35.99, ரூ.35.66, ரூ.36.24, ரூ.36.24, ரூ.35.66, ரூ.35.99, ரூ.35.66, ரூ.36.24 என சின்னச்சின்ன மாறுதல்களுடன் விலைப்புள்ளிகள் வரிசை கட்டுகின்றன. ஆக, நடைமுறையிலுள்ள தற்போதைய தொகையைவிட சுமார் 11 ரூபாய் கூடுதலாக கோட் செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. தனியாகப் பிரிக்கப்பட்டுள்ள டோல் கட்டணத்தையும் சேர்த்தால் ஒரு கிலோ மீட்டருக்கு 25 ரூபாய்க்கு ஓடிக்கொண்டிருக்கும் டேங்கர் லாரிகளுக்கு 40 ரூபாய் கொடுக்க வேண்டி யதிருக்கும். ஆவினின் இந்த ஊழல்களைத்தான் தற்போது தி.மு.க. கையில் எடுத்திருக்கிறது.
இது குறித்து ஆவின் எம்.டி. காமராஜிடம் கேட்டபோது, ""டெண்டரில் எந்த விதிமீறல்களும் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது டெண்டர் நடைமுறைகளுக்கு தடையேதும் கிடையாது. அதேபோல, டெண்டரை முடிவு செய்யக்கூடாது என ஸ்டே இருக்கிறதே தவிர, டெண்டர் நடைமுறைகளை துவக்கக்கூடாது என ஸ்டே இல்லை. கமர்சியல் பிட் ஓப்பன் செய்யப்பட்டிருக்கிறது. நெகோசியேஷன் செய்ய நிறுவனங்களை அழைத்திருக்கிறோம். அதில்தான் தொகை முடிவாகும். எந்த சூழலிலும் கூடுதல் தொகைக்கு லாரிகளை எடுக்க மாட்டோம். அதனால் இதில் ஊழல்களுக்கு இடமே கிடையாது. சில விதிகளில் ஆர்.கே.ஆர். நிறுவனம் தகுதி இழப்பதால் அதன் கமர்சியல் பிட்டை எடுத்துக்கொள்ளவில்லை''’என்கிறார் விளக்கமாக.
-செ.சஞ்சய்