Advertisment

தமிழ் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் வேலை! -அதிரடி அரசாணை!

dd

ன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகள், ரயில்வே நிர்வாகம் என பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் இடங்களிலெல்லாம் மொழி மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. தமிழ் மொழி தெரியாத அதிகாரிகளால் தமிழ்நாட்டுப் பாமர மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து, தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் வெளிநாட்டினர் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாமென்றும், தேர்வில் தேர்ச்சிபெற்று தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் சேரலாமென்றும் அறிவிக்கப் பட்டது.

Advertisment

dd

இதனால் தமிழே தெரியாத அதிகாரிகள், அலுவலர்களால் தமிழக அரசு அலுவலகங்கள் நிரப்பப் பட்டு, தமிழக மக்களிட மிருந்து அரசு அலு வலகங்கள் அந்நியப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட வாய்ப்பானது. அதைவிட முக்கியமாக, தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசாங்க வேலைக்கான கனவைப் பிற மாநிலத்தவர்கள் தட்டிப்பறிக்கும் சூழல் ஏற்பட்டது. அதாவது, நம் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் செயல்படக்கூடிய அரசு அலுவலகங்களில், வெளி மாநிலத்தவர்கள் பணியாளர்களாகச் செயல்படக்கூடிய நிலை.

ஏற்கனவே தனியார் துறையில் மற்ற மாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற இடங்களிலெல்லாம் வட மாநிலத் தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள் ளது. இந்நிலையில், அரசுப் பணிகளிலும் அவர்கள் பங்கெடுத்தால் தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்புக் கனவு, கனவாகவே போகக்கூடிய நிலை. "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்வோம்''

ன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகள், ரயில்வே நிர்வாகம் என பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் இடங்களிலெல்லாம் மொழி மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. தமிழ் மொழி தெரியாத அதிகாரிகளால் தமிழ்நாட்டுப் பாமர மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து, தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் வெளிநாட்டினர் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாமென்றும், தேர்வில் தேர்ச்சிபெற்று தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் சேரலாமென்றும் அறிவிக்கப் பட்டது.

Advertisment

dd

இதனால் தமிழே தெரியாத அதிகாரிகள், அலுவலர்களால் தமிழக அரசு அலுவலகங்கள் நிரப்பப் பட்டு, தமிழக மக்களிட மிருந்து அரசு அலு வலகங்கள் அந்நியப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட வாய்ப்பானது. அதைவிட முக்கியமாக, தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசாங்க வேலைக்கான கனவைப் பிற மாநிலத்தவர்கள் தட்டிப்பறிக்கும் சூழல் ஏற்பட்டது. அதாவது, நம் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் செயல்படக்கூடிய அரசு அலுவலகங்களில், வெளி மாநிலத்தவர்கள் பணியாளர்களாகச் செயல்படக்கூடிய நிலை.

ஏற்கனவே தனியார் துறையில் மற்ற மாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற இடங்களிலெல்லாம் வட மாநிலத் தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள் ளது. இந்நிலையில், அரசுப் பணிகளிலும் அவர்கள் பங்கெடுத்தால் தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்புக் கனவு, கனவாகவே போகக்கூடிய நிலை. "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்வோம்'' என்று எதிர்க்கட்சியாக இருந்த போதே குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அதனைச் செயல்படுத்தியுள்ளார்.

Advertisment

தமிழக சட்டப்பேரவையில், கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "தமிழக அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை 100 சதவிகிதம் நியமிப்பதற்காக, அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும், தமிழ்மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படும்'' என்று அறிவித்தார். அன்று அறிவித்த படி தற்போது அரசாணையாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள அரசாணையில், "அரசுத் துறைகள், மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்ய ஏதுவாக, அனைத்துத் தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் தகுதித் தேர்வை கட்டாயமாக்க அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் கட்டாயம் இடம்பெறும். அதற்கான பாடத்திட்டம் 10-ம் வகுப்பு தரத்தில் இருக்கும். இத்தேர்வு 100 மதிப்பெண் கொண்டதாக இருக்கும். இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

tnpsc

தற்போது நடைமுறையில் உள்ள தமிழ் பொதுத் தமிழ்/பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலம் தாள் தேர்வு நீக்கப்படுகிறது. பொதுத்தமிழ் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக இருக்கும். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட மாநிலத்தின் பிற தேர்வு முகமைகளில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் சம்மந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் வெளியிடப்படும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி, இனிமேல் தமிழ்மொழி தெரிந்தவர்கள் மட்டுமே அரசுப் பணியிடங்களில் செயல்பட முடியும் என்பதும், தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பிற மாநிலத்தவர்கள் தட்டிப் பறித்திட முடியாதென்பதும் தமிழக மக்களுக்கு ஆறுதலான விஷயமாகும்.

இந்த அரசாணை குறித்து செய்தியாளர் களிடம் விளக்கமளித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "தமிழ்நாட்டில், டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், வனத்துறை மற்றும் மின்சார வாரியத் தேர்வு என எந்தத் தேர்வாக இருந்தாலும், தமிழில் கேட்கப்படும் கேள்வி களுக்குப் பதில் அளித்துத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இனி அரசுப் பணி கிடைக்கும். முதலில் தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு அவர்களால் தகுதி பெறமுடியும்.

tnpsc

இந்த அரசாணை, கிராமப்புறங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வெளிவரும் மாணவர்களுக்குப் பெரிதும் பயனளிப்பதாக இருக்கும். இதுவே அனைவருக்குமான சம வாய்ப்பாகவும், சமூக நீதியாகவும் இருக்கும். அரசுப் பணிகள் மிகவும் முக்கியமானவை. தமிழ்நாடு அரசுப்பணியில் தற்போது 15 லட்சம் இடங்கள் உள்ளன. ஆனால் 9 லட்சம் இடங்களில் மட்டுமே பணியாளர்கள் உள்ளனர். எனவே காலியிடங் களுக்கு தமிழ் தெரிந்தவர்களை, சமத்துவமான முறையில் தேர்ந்தெடுக்க இந்த முன்னெடுப்பு உதவும்.

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மற்ற மொழிகளைப் புறக்கணிக்க வில்லை. தமிழ்மொழிக் கேள்வித்தாளுக்கு முனைவர் பட்டத்துக்கான தகுதி அளவுக்குத் தெரிந்திருக்க வேண்டு மென்று நாங்கள் சொல்லவில்லை. பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் அளவிற்குத் தெரிந்திருந்தால் போதுமானது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தத்துவத்தின் அடிப் படையில்தான் செயல் படுகிறோம். அரசுப் பணிகளில் அனைத்துச் சமுதாயத்தினரும் பங்களிக்க வேண்டும், கிராமப்புற இளைஞர்களும் பங்கெடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதற்கு எதிராக, ஆங்கில வழியில் படித்தவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதாக இருந்தால் செல்லட்டும். இங்கே யார் தமிழர் என்பதை அடையாளப்படுத்துவதைவிட அவர்கள் தமிழ் மொழியைக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதே முக்கியம்'' என்றார்.

இந்தியா என்பது மொழிவாரி மாநிலங்களின் கூட்டுக்கலவை என்பதே வரலாற்று உண்மை. ஆனால் இந்த உண்மையை ஒன்றிய அரசு புரிந்துகொள்ளவும், ஏற்கவும் மனமில்லாமல் இருக்கிறது. இந்தி என்ற ஒற்றை மொழி ஆதிக்கத்தையே இந்தியா முழுக்கப் பரவச்செய்ய முயலுகிறது. அந்தந்த மாநில மொழிகளுக்குரிய இலக்கிய வளம், வரலாறு, கலாச்சாரங்களைப் புறந்தள்ளவே பார்க்கிறது. இத்தகைய சூழலில் அந்தந்த மாநில அரசுகள்தான் அவரவர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது. அந்த வகையில், செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ்மொழிக்கு அரசுப் பணிகளில் முக்கியத்துவம் தரும் தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியதாகவே பார்க்கப் படுகிறது.

tnpsc

இந்த அரசாணை குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், "இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி, இந்தியர்கள் யாவரும் போட்டித் தேர்வில் பங்கேற்கலாம் என்று உள்ளது. தற்போது தமிழக அரசின் அரசாணைப் படி, தமிழ்நாட்டின் அரசுப்பணி வேலை வாய்ப்புக்கான போட்டித்தேர்வு எழுதுபவர்கள், தமிழ்மொழிப் பாடத்தைப் படித்திருக்க வேண்டியது அவசியமாகிறது. தமிழையும் ஒரு கேள்வித்தாளாக எழுதித் தேர்ச்சிபெற வேண்டியிருக்கிறது. எனவே, தமிழ் மொழி படித்தவர்களே தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கு வருவார்கள் என்பதற்கான உத்தரவாதம் கிடைத்துள்ளது. இதன்மூலம் பள்ளிக்கல்வியில் தமிழ் மொழிப் பாடத்துக்கு முக்கியத்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது'' என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

ஒரு மொழி அழியாமல் காக்கவேண்டு மானால், அம்மொழியின் இலக்கியங்கள் போற்றப்பட வேண்டும். அனைவரின் எழுத்து மொழியாகவும், பேசு மொழியாகவும் இருக்க வேண்டும். அம்மொழியைப் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். வணிக ரீதியாகவும் பயனளிக்கும்படி அம்மொழி, செல்வாக்குடன் திகழ வேண்டும். அதற்கான உறுதிப்பாடுகள் இல்லாத காரணத்தாலேயே பெரும்பாலான தனியார் பள்ளிகளும் சரி, தனியார் பள்ளி மாணவர்களும் சரி, தமிழ் மொழி மீது பெரிதும் ஈடுபாடு காட்டவில்லை. தற்போது, இக்குறையைப் போக்கும் முயற்சியில்தான் தமிழ்நாடு அரசு, அதன் அதிகாரத்துக்கு உட்பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், இனி வரும் காலத்தில், அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழிக்கான மதிப்பும், தேவையும் மேலும் உயர்வது நிச்சயம்.

2022 ஆம் ஆண்டில் குரூப் 1, குரூப்2, குரூப் 4 உள்ளிட்டவற்றுக்கான தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் தமிழுக்கு முக்கியத்துவம் தரும் இந்த அதிரடி அரசாணை, தமிழ் இளைஞர்களின் வேலைக் கனவை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

nkn111221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe