Advertisment

4000 பேருக்கு வேலை! -வரலாற்று சாதனையில் தமிழக அரசு!

gg

டந்த 2022ஆம் ஆண்டில் சென்னை யில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்திக் கான தனிக்கொள்கையை முதல்வர் வெளி யிட்ட அன்றே பிரபல சர்வதேச காலணி தயாரிப்பு நிறுவனமான ஃபீனிக்ஸ் அக்கார்ட் நிறுவனமும், இந்தியாவின் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனமும் இணைந்து பெரம்பலூரில் தொழில் துவங்குவதற்கான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

Advertisment

hh

அதையடுத்து, 2022, நவம்பர் 28ஆம் தேதியன்று பெரம்பலூர் மாவட்டம் எறை

டந்த 2022ஆம் ஆண்டில் சென்னை யில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்திக் கான தனிக்கொள்கையை முதல்வர் வெளி யிட்ட அன்றே பிரபல சர்வதேச காலணி தயாரிப்பு நிறுவனமான ஃபீனிக்ஸ் அக்கார்ட் நிறுவனமும், இந்தியாவின் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனமும் இணைந்து பெரம்பலூரில் தொழில் துவங்குவதற்கான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

Advertisment

hh

அதையடுத்து, 2022, நவம்பர் 28ஆம் தேதியன்று பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தில் அம்மாவட்டத்தின் முதல் சிப்காட் தொழிற்பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்த அன்றே ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டினார் முதல்வர். முதல்வர் முன்னிலையி லேயே 10 வெளிநாட்டு தொகுப்பு நிறு வனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது கோத்தாரி. அப்போது, ‘"இன்னும் ஒரே ஆண்டில் இந்த தொழிற் சாலையை திறந்து வைப்பதுதான் எனது விருப்பம்''’என கூறியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், சொன்னது போலவே நவம்பர் மாதம் 28ஆம் தேதியன்று பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் காலணி பூங்காவை திறந்துவைத்துள்ளார் முதல்வர்.

கோத்தாரி நிறுவனத்தினர், அமைச்சர் கள் சிவசங்கர், டி.ஆர்.பி.ராஜா, நீலகிரி எம்.பி. ஆ.ராசா, ம.பிரபாகரன் எம்.எல்.ஏ., உள்ளிட் டோர் முன்னிலையில், ‘ஜே.ஆர். ஒன் (பி)லிமிடெட்’ என்ற முதல் காலணி தொழிற்சாலையை காணொளிக்காட்சி மூலமாக திறந்துவைத்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “"அடிக்கல் நாட் டப்பட்ட ஓராண்டில் தொடக்க விழா நடத்துவதில் கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. முதலீட்டாளர் களின் முதல் தேர்வு தமிழ்நாடு. பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு முயற்சி எடுத்து வருகிறது. வளர்ச்சித் திட்டங்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம். இந்த காலணி தொழிற்சாலையால் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஜனவரியில் உலக முதலீட் டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்த உள் ளோம். விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவோம்'' என்றார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் கூறுகையில், “"இந்நிறுவனத்தில் 4 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். அதுவும், பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை என்றும் சொல்கிறார்கள். இங்கு, மொத்தம் 30 தொழிற்சாலைகள் வர விருப்பதாகவும், 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நல்வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்''’ என்றார். ஆக மொத்தத்தில்... பெரம்பலூர் மாவட்டத்திற்கு அடித்தது ஜாக்பாட்!

Advertisment

nkn021223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe