வங்கிகளில் ஏழை -எளிய மக்கள் மற்றும் வேளாண் தொழில் செய்யும் விவசாயிகள் தங்கள் தேவைக்கு குறைந்த வட்டியில் வங்கியில் நகைக் கடனை பெற்று வாழ்க்கையை நடத்திவருகின்றனர். அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் ஒன்றிய அரசு தற்போது நடவடிக்கை மேற்கொண்டிருப்பது அனைத்துத் தரப்பினர் மத்தியில் எதிர்ப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அவசரத் தேவைக்கு ஏழை மக்கள், விவசாயிகள், கூலித் தொழி லாளர்கள் வங்கிகளில் நகைக்கடன் பெறுகின்றனர். இதனை ஆண்டிற்கு ஒருமுறை வட்டி கட்டி திரும்பவும் வங்கியிலே வைத்துக்கொள்ளலாம்.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) விதித்துள்ள புதிய கட்டுப் பாடுகளால் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தி திருப்பி, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்கமுடியும் . வட்டி மட்டும் கட்டி அதே தினத்தில் மறுஅடகு வைக்க முடியாது. ர
வங்கிகளில் ஏழை -எளிய மக்கள் மற்றும் வேளாண் தொழில் செய்யும் விவசாயிகள் தங்கள் தேவைக்கு குறைந்த வட்டியில் வங்கியில் நகைக் கடனை பெற்று வாழ்க்கையை நடத்திவருகின்றனர். அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் ஒன்றிய அரசு தற்போது நடவடிக்கை மேற்கொண்டிருப்பது அனைத்துத் தரப்பினர் மத்தியில் எதிர்ப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அவசரத் தேவைக்கு ஏழை மக்கள், விவசாயிகள், கூலித் தொழி லாளர்கள் வங்கிகளில் நகைக்கடன் பெறுகின்றனர். இதனை ஆண்டிற்கு ஒருமுறை வட்டி கட்டி திரும்பவும் வங்கியிலே வைத்துக்கொள்ளலாம்.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) விதித்துள்ள புதிய கட்டுப் பாடுகளால் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தி திருப்பி, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்கமுடியும் . வட்டி மட்டும் கட்டி அதே தினத்தில் மறுஅடகு வைக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதியால் ஏழை -எளிய மக்கள் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோர் அதிக பாதிப்புக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர். கடன் வாங்கியவர்கள் முழுப் பணத்தையும் புரட்ட மீட்டர் வட்டி, கந்து வட்டி வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வீராணம் ஏரியின் ராதா வாய்க்கால் பாசன சங்கத் தலைவரும் கடலூர் மாவட்ட இயற்கை வேளாண் விவசாயியுமான ரெங்கநாயகி, “"விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் அவசரத் தேவைக்கும், விவசாயிகள் நாற்று நடவு செய்யும்போதும், உரம் வாங்க, களை எடுக்கும் நேரங்களில் செலவுகளை ஈடு செய்வதற்காக உடனடியாக தாங்கள் வைத்துள்ள நகைகளை குறைந்த வட்டியில் வங்கியில் அடகுவைத்து செலவு செய்துவந்தனர். விவசாயிகள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை. தற்போது ஒன்றிய அரசு கொண்டுவரும் இந்தத் திட்டத்தால் விவசாயிகள் மற்றும் ஏழைமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு கந்துவட்டி கொடுமைக்கு ஆளாகும் சூழல் ஏற்படும். எனவே உடனடியாக இந்த புதிய விதிகளைத் திரும்பப் பெறவேண்டும்''’என்கிறார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் சரவணன், "ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்தத் திட்டத்தை நிச்சயமாக யாராலும் ஏற்க முடியாது. வருடத்திற்கு ஒருமுறை வட்டி கட்டுவதே பெரும் சிரமமாக உள்ளது. கொரோனா காலத்தில் விவசாயிகள், ஏழை மக்கள் வைத்த நகைகளை மீட்க முடியாமல் பல வங்கிகளில் ஏலம் விட்டுவிட்டனர். ஒட்டு மொத்தமாக அடித்தட்டு மக்களுக்கு ஆப்பு வைப்பதுபோல் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளனர்.
இதனால் விவசாயிகள் மற்றும் ஏழைமக்கள் தனியார் வட்டிக்கடையில் அடகு வைப்பதற்கும், கந்து வட்டிக்குப் பணத்தை வாங்கி நகைகளை மீட்கும் நிலைக்கும் தள்ளுகின்றனர். எனவே இது விவசாயிகளை அதிகளவில் தற்கொலைக்கு தள்ளிவிடும். ஏற்கெனவே பல விவசாயிகள் நாடுமுழுவதும் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில்தான் இருக்கின்றனர். ஒன்றிய அரசு உடனடியாக இந்தத் திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்''’ என்றார்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன், "பழைய திட்டத்தில் என்ன பிரச்சனை என்பதை ஒன்றிய அரசு கூறவில்லை. இது விவசாயி களிடத்திலே மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. இதுபோன்ற நடை முறையால் நகையை மீட்கமுடியாத நிலை ஏற்படும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எளிதாக நகைகளை ஏலம்விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதாவது, தனியார் நிதி நிறுவனங்கள் கொழுக் கவே இது வழிவகுக்கும். எனவே மாவட்ட ஆட்சியர், மத்திய அர சினுடைய கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டுசென்று திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
2021ஆம் ஆண்டு கொரோனா நோய் பரவல் முடிந்து மீண்ட நிலையில், பல வங்கிகளில் நகையை மீட்க முடியாத நிலை ஏற்பட்டபோது... வங்கி கிளை மேலாளர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நகைகளை ஏலம்விட்டு விவசாயிகளிடமிருந்து நகையை அபகரித்தார்கள்.
இதுகுறித்து திருமுட்டம் வட்டம் காவனூர் கிராமத்திலுள்ள தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளர் மீது கருவேப்பிலங்குறிச்சி காவல்நிலையத் தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேல்நடவடிக்கை இல்லை. இதுபோல பல விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதுபோன்ற திட்டம் வந்தால், தனியார் நிதி நிறுவனங்கள், கந்துவட்டி குண்டர் கள் வளர்ந்து விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை அழித்துவிடுவார்கள்''’எனக் கொந்தளித் தார்.
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் இம் முடிவை ஒன்றிய அரசு கைவிடுமா?
-அ.காளிதாஸ்