"ஹலோ தலைவரே, தி.மு.க. அரசுக்கு எதிராக டெல்லியின் கையாட்கள் தீவிரமாக செயல் படறாங்க போலிருக்கே...''”

Advertisment

"தமிழக அரசியல் நிலவரம், தி.மு.க. ஆட்சி நிர்வாகம் ஆகிய இரண்டிலும் என்ன நடக்குதுன்னு அடிக்கடி கவர்னர் மாளிகையும் ரிப்போர்ட் கேட்பதால், எல்லாத் தரப்பிலும் இந்தப் பேச்சு இருக்குதுப்பா. என்ன நடக்குதாம்?''”

rr

"முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு மாதிரி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு முறைவாசல் செய்ய தயாராக இல்லாததால், அதற்கு செக் வைக்க, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான ரவியை இங்கே கவர்னராக உட்காரவைத்து, அவர் மூலம் குடைச்சல் கொடுக்க நினைக்கிது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இந்த நிலையில் வேவு பார்க்க இங்கே, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப்போன ஒரு நபரையும் வைத்திருக்கிறது பிரதமர் அலுவலகம். அவர், சமீபத்தில், தமிழக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ரெய்டுகள் குறித்து ஒரு கனமான ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறாராம். அதை வைத்துக்கொண்டு டெல்லி, தி.மு.க. அரசைக் கண்டிக்கும்னு அ.தி.மு.க. தரப்பு எதிர் பார்க்குது.''”

Advertisment

"கண்டிக்கலாம்... தமிழ்நாட்டுக்கான நிதியைத் தரா மல் தண்டிக் கலாம். முந்தைய காலம் போல ஆட்சியை அத்தனை எளிதா கலைச்சிட முடியாதே?''”

"ஆமாங்க தலைவரே.. ஜனநாயகத்தைக் காக்கும் சட்டங்கள் மாறிடிச்சி. அதனால கலைப்பு என்பதைவிட இழுத்தடிப்பு என்பதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசின் ஃபார்முலாவா இருக்குது. ஒருவித பதட்டத்திலேயே தி.மு.க அரசை வச்சிக்கணும்னு நினைக்குது. மத்தியப் பணியிலிருந்து மாநிலப் பணிக்கு அழைக்கப்பட்ட அமுதா ஐ.ஏ.எஸ்.சை, முதலமைச்சரின் செயலாளர் அல்லது உள்துறை செயலாளர் ஆகிய ஒரு பதவியில் அமர்த்தப் போவதாக கோட்டை வட்டாரத்தில் டாக் அடிபட்டது. ஆனால் தற்போது அவரை ஆளுநரின் செயலாளராக நியமிக்க டெல்லி விரும்புவதாகத் தகவல் வருகிறது. இப்போது ஆளுநரின் செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் இருக்கிறார். இவரை மாற்றிவிட்டு அமுதாவை நியமிக்க ஒன்றிய அரசு விரும்புதாம். அதேபோல், அமுதாவை கவர்னரின் செயலாள ராக நியமிப்பதில், முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பமில்லை என்றும், தமிழக அரசுத் துறைகளில் ஒன்றில் முதன்மைச் செயலாளராக அவரை நியமிக்கவே அவர் விரும்புகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அமுதாவை மையமாக்கி சஸ்பென்ஸ் நீடிக்கிறது.''”

"வேற தகவல்கள்?''”

rr"இது சினிமாவும் அரசியலும் கலந்த மேட்டருங்க தலைவரே.. ஈழத் தமிழரான சுபாஷ்கரன், லைகா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதனுடன் பா.ம.க தலைவர் ஜி.கே. மணியின் மகனுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த அடிப்படையில், லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரனின் குடும்பத்தினருக்காக ஜி.கே. மணி அண்மையில் செய்த ஒரு உதவி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு பயங்கரவாதி களின் அச்சுறுத்தல் இருப்பதால் அங்குள்ள ரத வீதியில் எந்த ஒரு கனரக வாகனத்தையும் அனுமதிப் பது இல்லை. இந்த நிலை யில், சுபாஷ்கரனின் குடும்ப உறவுகள், ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய ஆசைப்பட்ட போது, அவர்களை 2 கேரவான் வாகனத்தில் அங்கே அழைத்து வந்துள்ளார் மணி. அந்த வாகனம் 3 மணி நேரமாக ரத வீதியிலேயே பார்க் செய்யப்பட்டிருக்கிறது.''”

Advertisment

"ரெய்டுக்கு ஆளான மாஜி மந்திரி வேலுமணி தரப்பு ரொம்பவும் குஷியாக தீபாவளி கொண்டாடியிருக்குதே?''”

"முன்னாள் அமைச்சர் வேலு மணியைக் குறிவைத்து சில வாரங்களுக்கு முன்பு, அதிரடி ரெய்டுகள் நடந்தது, இதையொட்டி வேலுமணி புழலுக்குப் போவாரா? வேலூருக்குப் போவாரா? என்றெல்லாம் அவங்க தரப்பிலேயே விவாதங்கள் நடந்துச்சு. இந்த களே பரத்துக்குப் பிறகும், தீபாவளியை வெளிநாட்டில் கொண்டாட ஸ்காட் லாந்து போயிருக்கிறார் வேலுமணி மகனான விகாஷ் வேலுமணி. அங்குள்ள புகழ்பெற்ற ’கிளாஸ்கோ’நகரில் நண்பர்களுடன் கொண்டாட்டமாக போட்டோ எடுத்து, அதை அவர் பேஸ்புக்கில் போட்டு அலப்பறை பண்ணியிருக்கிறார். ரெய்டெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி. சர்வதேச லெவல்ல சொத்துக்களை குவித்துவைத்திருக்கும் எங்களை என்ன செய்யமுடியும்? என்று சவால் விடுவதுபோல் இருக்கிறது அவரது முகநூல் பதிவு.''”

"கொங்குமண்டல அ.தி.மு.க. ஒ.செ.க்கள் 2 பேர் அ.தி. மு.க.வில் இருந்து கட்டம் கட்டப்பட்டிருக்காங்களே?''”

"ஆமாங்க தலைவரே, கொங்குமண்டலத்தைச் சேர்ந்த மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை அ.தி.மு.க. ஒ.செ.க்கள், அண்மையில் தி.மு.க. அமைச்சரரான செந்தில் பாலாஜியை சந்தித்தனர். ‘ நாங்கள் போன ஆட்சியில் டாஸ்மாக் பார்களை ஏலம் எடுத்திருந்தோம். இப்பவும் எங்களுக்கு அந்த பார்களை ஒதுக்கித் தரணும். அதற்கான ஃபார்மாலிட்டீஸை செய்யத் தயாரா இருக்கோம்” என் றனராம். அவர்களுக்கு அமைச்சரும் பச்சைக்கொடியைக் காட்டினாராம். இதையறிந்த அ.தி.மு.க. தலைமை, அந்த இரண்டு ஒ.செ.க்களையும் கட்டம் கட்டிவிட்டது. அதே போல் தி.மு.க. தரப்பிலும் ’கட்சி மாறி வந்தவங்களுக்கு மட்டும் வெகுமதியா?’ என்ற முணுமுணுப்பு எழுந்திருக் கிறதாம்.''”

rr

"காங்கிரஸுக்குள் புகைச்சல் தெரியுதே?''”

"ஆமாங்க தலைவரே, இந்த வருட தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் சென்று மரியாதை செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அமைத்த குழுவில், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரை வேண்டுமென்றே சேர்க்கவில்லையாம். இதன்மூலம் அழகிரி, திருநாவுக்கரசரை அவமதித்துவிட்டார்னு அவர் ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறாங்க. இதனால் அவர்கள் அழகிரியை தலைவர் பதவியில் இருந்து நீக்கணும்னு போர்க்குரல் எழுப்பப் போறாங்களாம்.''

"சசிகலா அ.தி.மு.க.வில் பகிரங்கமாகவே குட்டையைக் குழப்ப ஆரம்பிச்சிட்டாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, சசிகலா ஒரு முடிவோடு, அரசியலில் காய் நகர்த்த ஆரம்பிச்சிட்டார். தேவர் ஜெயந்தி விழாவுக்காக பசும்பொன் போக, காவல்துறைக்கு அனுமதி கடிதம் கொடுத்தபோது, அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்னு தன்னைக் குறிப்பிட்டுக் கிட்டார். அதை அ.தி.மு.க. தரப்பு பெரிதாகக் கண்டுக்கலை. அதைத் தொடர்ந்து இப்ப அ.தி.மு.க. பொதுச்செயலாளர்ங்கிற பேர்ல தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிச்சிருக்கார். இதற்கும் எடப்பாடி உட்பட அ.தி.மு.க. தரப்பிலிருந்து அன்று முழுதும் எவரும் மறுப்பு தெரிவிக்கலை.''”

rr

"நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை முதல்வர் வெளியிட்டி ருக்கிறாரே?''”

"யானை வரும் பின்னே.. மணியோசை வரும் முன் னேன்னு சொல்வதுபோல, மாநகராட்சி-நகராட்சித் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பல அறிவிப்புகள் வரிசையா வரும்னு எதிர்பார்க்கப்படுது. அதில் ஒன்றுதான், இந்த நகைக் கடன் தள்ளுபடி. 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்னு தி.மு.க அரசு வெளியிட்ட அறிவிப்பு, பெண்கள் தரப்பில் உற்சாகத்தைக் கொடுத்திருக்குது. இதை தீபாவளி பரிசா நினைக்கிறாங்க. அதே சூட்டோடு, மாதந்தோறும் உரிமைத்தொகையா ரூ.1000 வழங்கப்படும்ங்கிற வாக் குறுதியையும் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாருன்னு எதிர்பார்க்குறாங்க. அது சம்பந்தமான கணக்கெடுப்புகளையும் அரசுத் தரப்பில் விறுவிறுப்பா எடுத்துக்கிட்டிருக்காங்க. அதற்கான அறிவிப்பும் வரலாம்னு எதிர்பார்ப்பு இருக்குது. காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு என்ற அறிவிப்பு, மனித உரிமை அடிப்படையில் பொதுவான வரவேற்பைப் பெற்றிருக்குது. இதுவும்கூட காவலர்கள் எலெக்சன் ட்யூட்டி பார்க்கும்போது யூஸ்ஃபுல்லா இருக்கும்னு எதிர்பார்ப்பு இருக்குது.''”

"மேயர் தேர்தலில் ஆளுங்கட்சி தரப்பில் யார், யார் வேட்பாளரா நிறுத்தப்படுவாங்கங்கிற எதிர்பார்ப்பு இப்பவே கண்ணைக் கட்டவும், கல்லா கட்டவும் செய்திருக்குதாம். மாநகராட்சியை உள்ளடக்கிய மாவட்டங்களின் மந்திரிமார்கள் தங்களுக்குத் தோதான ஆட்களை ரெடி பண்ணிக்கிட்டிருக்காங்க. ஆனால், கட்சியின் தலைமை இதில் ரொம்ப கவனமா இருக்குது. நேரடித் தேர்தலா, கவுன்சிலர்கள் மூலம் மேயரைத் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலான்னு இன்னும் முடிவாகலை. ஆனாலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த பார்வையையும் ஈர்க்கும் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு, சென்னை எம்.எல்.ஏ. ஒருவரின் வாரிசோட பெயர் டிக் செய்யப்படும்னு பரவலா பேச்சு அடிபடுது.''”