கொள்ளையடித்த நகைகளை பதுக்கி வைத்த இடத்திலிருந்து முருகன் எடுத்துக்காட்டு வதும், அதை பெங்களூரு போலீஸ் செக் பண்ணு வதும் வைரல் வீடியோவாக பரவுகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முருகனிடமும், சுரேஷிடமும் நடத்திய விசாரணையில், நகைக்கடை முதலாளி என்று பொய்சொல்லி கொள்ளையடித்த நகைகளை நடிகைகளிடம் கொடுத்து மாமனும் மச்சானும் உல்லாசம் அனுபவித்து வந்தது தெரியவந்துள்ளது.

mmm

திருச்சி லலிதா ஜுவல்லரியில் 28 கிலோ நகைகளை கொள்ளையடித்த முருகன் பெங்களூரு கொள்ளை வழக்கிற்காக நீதிமன்றத்தில் சரண்டர் ஆனான். அந்த வழக்கில் முருகனை போலீஸ் காவலில் எடுத்த பெங்களூரு போலீசார், தமிழக போலீசாருக்கு தகவல் சொல்லாமல், முருகனை திருச்சிக்கு அழைத்து வந்தனர். கொள்ளிடக்கரை மண்ணில் புதைத்த நகைகளை தோண்டி எடுத்துத் தந்தபோது, அதை பெங்களூரு போலீஸ் செக் பண்ணும் வீடியோதான் வைரல் ஆகியிருக்கின்றது.

மீட்கப்பட்ட நகைகளுடன் பெங்களூரு வுக்கு திரும்பிச் செல்லும் போது திருச்சி போலீ சில் சிக்கிக்கொண்டனர். "நகைகளை பெங்களூரு நீதிமன்றத்தில் சரண்டர் செய்துவிடுகிறோம். நீங்க ஆவணம் காட்டி எடுத்துக்கொள்ளுங்கள்' என்று பெங்களூரு போலீஸ் சொல்லிவிட்டது.

Advertisment

அப்போது திருச்சி போலீஸ் முருகனிடம் விசாரித்தபோது, ""2018-ல் சென்னை அண்ணா நகரில் 18 வீடுகள் கொள்ளையடித்த வழக்கில், கூட்டாளிகள் அத்தனைபேரும் சிக்கிக்கொள்ள நான் மட்டும் தப்பினேன். ஆனால், அந்த இன்ஸ் பெக்டர் கிருஷ்ணமூர்த்தி என்னை தொடர்ந்து தேடிவந்தார். அதனால் அவரிடம் பேரம்பேசி 10 லட்சம் கொடுத்தேன், அதன் பிறகு திருச்சி பஞ்சாப் வங்கியில் ssகொள்ளையடித்த நகைகளை விற்று 20 லட்சம் கொடுத்தேன். நான் சொல்றதை நம்பலன்னா சென்னைக்கு வெளியே "99 காபி ஷாப்' முன்னாடி என்னுடைய ண்20 காரில் பணத்தை வைத்தேன். அதை கிருஷ்ணமூர்த்தி எடுத்துச் சென்றார். அந்த கடை சி.சி.டி.வி. கேமிராவை செக்பண்ணுங்க. இது உண்மையென்று தெரியும்''’’என்று வாக்குமூலம் கொடுக்க... அதிர்ச்சியில் ஆடிப் போனார்கள் போலீசார். திருச்சியைச் சேர்ந்த போலீஸ் உயரதிகாரிகளுக்கு முருகன் கார் வாங்கித் தந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் செங்கம் நீதி மன்றத்தில் சரண்டர் ஆன சுரேஷை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து திருச்சி தனிப்படை போலீசார் விசாரித்தபோது, ""எனது மாமா (முருகன்) என்னை கதாநாயகனாக வைத்து சினிமா படம் எடுக்க திட்டமிட்டார். அவரோட அம்மா பெயரில், என்.ராஜம்மாள் ஃபிலிம்ஸ், பாலமுருகன் புரடக்ஷன்ஸ்’ எனும் நிறுவனங்களை ஆரம்பித்து, அதன் மூலம் "மனச வினவே', "ஆத்மா'’உள்ளிட்ட தெலுங்குப் படங்களும், ஒரு தமிழ்ப் படமும் எடுத்துள்ளார். "மனச வினவே’ திரைப்படத்தில் என்னை நடிக்க வச்சார். 2013-ஆம் ஆண்டு தெலுங்கில் "ஆத்மா' என்ற படத்தை எடுக்கத் தொடங்கினோம். 45 நாட்கள் சூட்டிங் நடந்த நிலையில் ஃபைனான்ஸ் பிரச்சினையால் படம் பாதியில் நின்றுவிட்டது. அதன்பிறகு தெலுங்கில் "மனச வினவே' என்ற படத்தை எடுத்தோம். அந்த படம் முழுவதுமாக எடுக்கப்பட்டது. கதாநாயகியாக நடித்த பிரபல நடிகைக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசி அட்வான்ஸ் 6 லட்சம் கொடுத்தோம். மீதியை கொடுக்க முடியவில்லை. அதனால் அந்த நடிகை வழக்கு போட்டதால் அந்தப் படம் வெளியாகவில்லை.

mmm

Advertisment

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகையுடன் பிரபல நடிகைகளைத் தேடினோம். சமீபத்தில் தேசிய விருது வாங்கிய வாரிசு நடிகையுடன் ஐதராபாத்தில் நேர்த்தியா பேசினோம். தேதி இல்லைன்னு சொன்னாங்க. நாங்க நகைக்கடை வைத்திருக்கிறோம்னு சொன்னவுடன் ஆர்வமானாங்க. அவுங்களுக்கு பிடிச்ச நகைகளை மாமா கொடுத்தார். இப்படி கொள் ளையடித்த பணத் தில் நடிகைகள் உட்பட நிறைய பேருடன் உல்லாச மாக செலவு செய் தோம்''’என்று சுரேஷ் பரபரப்பு ssவாக்குமூலம் கொடுத்துள்ளார்.

லலிதாவில் கொள்ளையடித்த நகைகளில் ஐந்தரை கிலோ நகைகளை முருகன் தனக்கு பங்கு பிரித்து கொடுத்ததாகவும், அதில் விலைஉயர்ந்த வைரங்களும் இருந்தன என்றும், அத்தனையும் கைப்பற்றிய போலீசார், கணக்கு காட்டுவது நான்கரைகிலோ நகைகளை மட்டும்தான் என்றும், வைரங்களை கணக்கில் காட்டவில்லை என்றும் சுரேஷ் வாக்குமூலத்தில் கூறியுள்ளான். ஆனால், தனிப்படை போலீசார் இதை ரெக்கார்டு செய்யாமல் தவிர்த்துள்ளனர்.

கொள்ளை வழக்கில் முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மனு போட்டுள்ளார். பஞ்சாப் வங்கி கொள்ளை வழக்கில் விசாரிப்பதற்காக திருச்சி புறநகர் எஸ்.பி. ஜியாவுதீனும் மனு போட்டுள் ளார். சென்னை அண்ணாநகர் தொடர் கொள்ளையிலும் சென்னை போலீஸ் கஸ்டடி மனு போட உள்ளனர். ஆனால் பெங்களூரு நீதிமன்றம் தொடர்ந்து பெங்களூரு கொள்ளை வழக்குகளில் முருகனை விசாரிக்கவே அம்மாநில போலீசாருக்கு அனுமதி கொடுத்து வருகிறது. இதனால் தமிழக போலீசார் டென்ஷனில் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர்.

-ஜெ.டி.ஆர்., செல்வகுமார்