கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கம்மாபுரம் காவல் நிலையத்தில் செங்கேணி என்பவரின் கணவர் ராசாக் கண்ணுவை கம்மாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் திருட்டு வழக்கில் அழைத்துச்சென்று அவரை கொலை செய்த சம்பவத்திற்கு நீதிகேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டதால் சம் பந்தப்பட்ட ஆய்வாளர் உள் ளிட்ட காவல்துறையினருக்கு தண்டனை கிடைத்தது. அதே ஜெய்பீம் பாணியில் மீண்டும் ஒரு கொலை நெய்வேலி காவல் நிலையத்தில் அரங்கேறி யுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி யில் கடந்த 2015-ஆம் ஆண்டு மும்தாஜ் என்ற பெண் கொலை செய்யப் பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த நெய்வேலி காவல்துறையினர், மேல் பட்டாம்பாக்கம் அருகே பி.என். பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் அந்த பகுதிக்கு பெயிண்ட் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.
அவரிடம் ஒரு வார காலம் விசாரணை செய்தனர். பின்னர் நெய்வேலி காவல் துறை யினர் அவரின் கை, கால்களின் நகங்களைப் பிடுங்கிய நிலையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சுப்பிரமணியன், சிகிச்சையளித்த மருத்துவரிடம் காவல் துறையினரின் சித்ரவதை குறித்து வாக்குமூலம் அளித்த நிலையில் உயிரிழந்தார்.
இதை இயற்கை மரணமாக மாற்றுவதற்கு முயன்றதையடுத்து இதுகுறித்து அவரது மனைவி ரேவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட காவல்துறை மீது சட்டநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதையடுத்து இந்த வழக்கு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சந்தேக வழக்காகப் பதிவு செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்களின் விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கொலையல்லாத மரணம் என்று குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
இதனையறிந்த கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தலைமையில் கட்சியினர், மாவட்டம் முழுவதும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட துடன், சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2022ஆம் ஆண்டு ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் மீது கொலை வழக்கு மற்றும் எஸ்.சி. எஸ்.டி. பிரிவுகளை சேர்த்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டது.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டிருந்த ஆய்வாளர் ராஜா, தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் மீண்டும் வடலூர் காவல்நிலைய ஆய்வாள ராக அமர்த்தப்பட்டார். இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொலைக் குற்றவாளியான ராஜாவை இந்த மாவட்டத்தைவிட்டு மாற்றவேண்டும் என மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். இதுகுறித்து
சி.பி.எம். கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் கூறுகையில்... "கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட ஆய்வாளர் ராஜா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் கட்சித் தலைவர்கள் மூலமும், பிற முக்கிய நபர்கள் மூலமும் சுப்பிரமணியன் மனைவி, குழந்தைகளுக்கு பல்வேறு நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் கொடுத்துவந்தார்.
கொலை வழக்கு மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் குற்றவாளிகளான ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்துசெய்ய வேண்டியும், விடுவிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்தனர்.
இதனால் சுமார் ஒரு வருடமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்துவந்தது. இந்த நிலையில் ரேவதியின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை உடனடியாக விசாரிக்கவேண்டும் என வழக்கறிஞர் திருமூர்த்தி மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 11.1.2024 அன்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 2 மாதத்திற்குள் இவ்வழக்கை விசா ரிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு கடலூர் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கின் எதிரிகளான ஏ1 ராஜா. கடலூர் மாவட்டத்தில் வடலூர் காவல்நிலைய ஆய்வாளராகவும், ஏ 2- கே..என்.செந்தில்வேல் திருக்கழுக்குன்றத்தில் உதவி ஆய்வாளராகவும், ஏ 3 ஜே. சௌமியன், கடலூர் மாவட்டம், கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வழக்கில் உள்ள 3 எதிரிகளும் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர் கடலூர் மாவட்டத்தில் பணியாற்று வதால் சாட்சிகளை மிரட்டி, கலைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். எனவே இவரை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் (டி.ஐ.ஜி.)அலுவலகத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம், வழக்கறிஞர்கள் ஜோதிலிங்கம், லெனின், வழக்கறிஞர் மேரி, உயிரிழந்தவரின் மனைவி ரேவதி ஆகியோர் மனு அளித்துள்ளோம்''’என்றார்.
கொடூரக் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்!
-காளிதாஸ்