ராங்-கால் : ஜெ. காலை வெட்டி பாதாள அறை திறப்பா? -ஆணையம் விசாரணை!

jaya leg

"ஹலோ தலைவரே, திங்கட்கிழமை எடப்பாடி தலைமையில் நடந்த கேபினட் கூட்டத்தை டேமேஜ் கண்ட்ரோல் கூட்டம்னு ஆளுந்தரப்பில் சொல்றாங்க.''

""ஆமாப்பா.. ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமா பசுமைத் தீர்ப்பாய உத்தரவு, 7 பேர் விடுதலை பற்றிய அமைச்சரவை தீர்மானத்தை கவர்னர் கண்டுக்காம இருப்பது, கஜா புயல் நிவாரண நிதி தட்டுப்பாடு எல்லாமும் மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கே.''

""அந்த டேமேஜை கண்ட்ரோல் பண்ணத்தான் அமைச்சரவை கூட்டமே நடந்ததுங்க தலைவரே.. தனியார் தொழில் நிறுவனங்களுக்காக நிலத்தை பொதுமக்களிடம் இருந்து எடுத்துக்கொடுக்கும் முடிவையும் எடுத்தாங்க. மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பாமல் இருக்க, தனியார் தொழில் நிறுவனங்கள் இங்கே 12 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய வைத்து, 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதுன்னும், இடைத்தேர்தல் வர்றதுக்கு முன்பே பட்ஜெட்டைத் தாக்கல் பண்ணிட்டு, துறைவாரியான விவாதம் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தேர்தலுக்குப் பிறகு வச்சிக்கலாம்னும் முடிவெடுத்திருக்காங்க.''’’

ponnaiyan

""கூட்டணி ஆலோசனைகளும் பலமா நடக்குது போலிருக்கு.

""ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலில் 5 சீட்டுகள் தரத்தயாரா இருக்கிறோம். கள்ளக்குறிச்சி, சேலம், திருவள்ளூர் ஆகிய 3 தொகுதிகள் தவிர, வடமாவட்டத்தில் நீங்கள் எந்த 5 தொகுதியைக் கேட்டாலும் உங்களுக்குக் கொடுக்க நாங்க ரெடின்னு எடப்பாடி தரப்பு பா.ம.க.வுக்குச் சொல்லியிருந்தது. இதுபற்றி நக்கீரன் ஏற்கனவே எழுதியிருந்தது. இந்த நிலையில் நாங்கள் இன்னும் யாரோடும் தேர்தல் குறித்துப் பேசவே இல்லைன்னு டாக்டர் அன்புமணி ராமதாஸ் மறுப்பு தெரிவிச்சிருக்கார். நீங்க விரும்பினால் 6 சீட் கூட தர்றோம். கூடவே ராஜ்யசபா சீட் ஒன்னும் உங்க ளுக்கு மனமுவந்து கொடுக்குறோம். எங்கக் கூட்டணிக்கு வாங்கன்னு எடப்பாடி தரப்பு பா.ம.க. தரப்புக்கு மெசேஜ் கொடுத்துக்கிட்டே இருக்கு. இதையறிந்த அ.தி.மு.க., எ

"ஹலோ தலைவரே, திங்கட்கிழமை எடப்பாடி தலைமையில் நடந்த கேபினட் கூட்டத்தை டேமேஜ் கண்ட்ரோல் கூட்டம்னு ஆளுந்தரப்பில் சொல்றாங்க.''

""ஆமாப்பா.. ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமா பசுமைத் தீர்ப்பாய உத்தரவு, 7 பேர் விடுதலை பற்றிய அமைச்சரவை தீர்மானத்தை கவர்னர் கண்டுக்காம இருப்பது, கஜா புயல் நிவாரண நிதி தட்டுப்பாடு எல்லாமும் மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கே.''

""அந்த டேமேஜை கண்ட்ரோல் பண்ணத்தான் அமைச்சரவை கூட்டமே நடந்ததுங்க தலைவரே.. தனியார் தொழில் நிறுவனங்களுக்காக நிலத்தை பொதுமக்களிடம் இருந்து எடுத்துக்கொடுக்கும் முடிவையும் எடுத்தாங்க. மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பாமல் இருக்க, தனியார் தொழில் நிறுவனங்கள் இங்கே 12 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய வைத்து, 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதுன்னும், இடைத்தேர்தல் வர்றதுக்கு முன்பே பட்ஜெட்டைத் தாக்கல் பண்ணிட்டு, துறைவாரியான விவாதம் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தேர்தலுக்குப் பிறகு வச்சிக்கலாம்னும் முடிவெடுத்திருக்காங்க.''’’

ponnaiyan

""கூட்டணி ஆலோசனைகளும் பலமா நடக்குது போலிருக்கு.

""ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலில் 5 சீட்டுகள் தரத்தயாரா இருக்கிறோம். கள்ளக்குறிச்சி, சேலம், திருவள்ளூர் ஆகிய 3 தொகுதிகள் தவிர, வடமாவட்டத்தில் நீங்கள் எந்த 5 தொகுதியைக் கேட்டாலும் உங்களுக்குக் கொடுக்க நாங்க ரெடின்னு எடப்பாடி தரப்பு பா.ம.க.வுக்குச் சொல்லியிருந்தது. இதுபற்றி நக்கீரன் ஏற்கனவே எழுதியிருந்தது. இந்த நிலையில் நாங்கள் இன்னும் யாரோடும் தேர்தல் குறித்துப் பேசவே இல்லைன்னு டாக்டர் அன்புமணி ராமதாஸ் மறுப்பு தெரிவிச்சிருக்கார். நீங்க விரும்பினால் 6 சீட் கூட தர்றோம். கூடவே ராஜ்யசபா சீட் ஒன்னும் உங்க ளுக்கு மனமுவந்து கொடுக்குறோம். எங்கக் கூட்டணிக்கு வாங்கன்னு எடப்பாடி தரப்பு பா.ம.க. தரப்புக்கு மெசேஜ் கொடுத்துக்கிட்டே இருக்கு. இதையறிந்த அ.தி.மு.க., எம்.பி.க்கள் 37 பேரும், பா.ம.க.வோடு கூட்டணி வைக்கவேண்டாம். ஏனென்றால் எங்களில் யாரும் எங்கள் தொகுதியை பா.ம.க.வுக்காக விட்டுக் கொடுக்கத் தயாரில்லைன்னு எடப்பாடியிடம் தெரிவிச்சிருக்காங்க. அதனால் அப்செட்டில் இருக்கார் எடப்பாடி.''’

""தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதா சொல்லப்படும் தங்கத் தமிழ்ச்செல்வன் தி.மு.க., அ.தி.மு.க., ரஜினின்னு பல முகாம்களுக்கும் தூதுவிட்டிருக்காராமே?

’’18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு குறித்த வழக்கில், தீர்ப்பு வர்றதுக்கு முன்பு மறுபடியும் அ.தி.மு.க.வுக்கே வந்துடுங்கன்னு தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு எடப்பாடி ’வெயிட்டாவே’ அழைப்பு விடுத்தார். அப்ப, ஓ.பி.எஸ்.சை எதிர்த்து நான் அரசியல் செஞ்சவனாச்சேன்னு தங்கத் தமிழ்ச் செல்வன் தயங்கியதால், ஓ.பி.எஸ்.சை விட்டே அவரை அழைக்கச்செய்தார் எடப்பாடி. ஓ.பி.எஸ்.சும், நான் பழைய அரசியலை எல்லாம் மறந்துட் டேன் தம்பின்னு பாசமா கூப்பிட்டார். இந்த நிலையில் அந்த வழக்கில் தங்களுக்குச் சாதகமா தீர்ப்பு வந்ததால், எடப்பாடியின் அணுகுமுறை மாறிடிச்சி. தங்கத் தமிழ்ச்செல்வனோ, ரஜினியை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்கார்.''’

""எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையிலான பஞ்சாயத்தே இன்னும் முடியலை போலிருக்கே?''’

""ஆமாங்க தலைவரே, தன்னைத் தொடர்ந்து ஒடுக்க நினைக்கும் எடப்பாடியைத் தீவிரமா எதிர்க்கும் முடிவுக்கு வந்துட்டார் ஓ.பி.எஸ். இதன் ரியாக்ஷன் தமிழகம் முழுக்கத் தெரிய ஆரம்பிச் சிடுச்சி. இரு தரப்பு ஆதரவாளர்களும் பரவலா மோதிக்கிட்டு இருக்காங்க. அண்மையில் தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளத்தில் பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், எடப் பாடி தரப்பைச் சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவும் ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த மாஜியான எஸ்.பி. சண்முகநாதனும் கடுமையா மோதிக்கிட்டாங்க.''’

""சரிப்பா, எதிர்க்கட்சியான தி.மு.க. தரப்பு எப்படி இருக்கு? நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், மா.செ.க்கள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டத்தை 24-ந் தேதி நடத்தியிருக்காரே ஸ்டாலின்?''’

dmk-meet

""ஆமாங்க தலைவரே, தேர்தல் வியூகங்களை வகுக்க ஆரம்பிச்சிட்டார் ஸ்டாலின். ’மக்களிடம் செல்வோம்; சொல்வோம், மனதை வெல்வோம்ங்கிற’ கோஷத்தோட, ஒவ்வொரு பூத்தா மக்களை அணுகி, ஆதரவைப் பெருக்கணும்ங்கிறது தான் தி.மு.க.வின் வியூகம். அதுக்காக கிராம சபைக் கூட்டங்களை ஜனவரி 3-ல் இருந்து பரவலா நடத்தப்போறாங்களாம். தமிழ்நாட்டின் 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் நடக்கவிருக்கும் கிராமசபை கூட்டங்களில் கூட்டணிக் கட்சிகளும் கலந்துக்கப் போவுதாம். கட்சியின் புது வரவான செந்தில் பாலாஜி, இந்த அறிவாலயக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளரா கலந்துக்கிட்டதுதான் சிறப்புச் செய்தி.''’

""தமிழ்நாட்டில் தாமரை இப்போதைக்கு மலராட்டியும், சின்ன மொட்டாவது விடணும்னு பா.ஜ.க. நினைக்கிது. அதுக்காக மோடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநிலத் தலைவர்களிடம் பேசி, உற்சாகமூட்ட ஆரம்பிச்சிருக்காரே?''’

""ஆமாங்க.. தலைவரே, காங்கிரஸுக்கு எதிராகக்காய் நகர்த்தும் பா.ஜ.க.வினர், இங்கே தீவிர வியூகங்கள்ல இருக்காங்க. கலைஞர் சிலை திறப்புக்காக சென்னை வந்த சோனியாவும் ராகுலும் விழாவுக்கு இடையில் அண்ணா, கலைஞர் நினைவிடத்துக்குப் போய் அஞ்சலி செலுத்தியது போல், காமராஜர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தணும்னு, காங்கிரஸ் பிரமுகரான கராத்தே தியாகராஜன், மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரிடம் மனு கொடுத்தார். ஆனால் சோனியா, ராகுல் புரோகிரா மில் இது இடம்பெறாதது சர்ச்சையாயிடிச்சி. இந்த நிலையில், தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர் கள், ஜனவரி 27-ந் தேதி சென்னையில் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடியை, காமராஜர் நினைவிடத்துக்கு அழைத்துப் போக வியூகம் வகுத்துக்கிட்டு இருக்காங்க. குஜராத் மக்களின் மனதைக் கவர, காங்கிரஸ் தலைவரான பட்டேலுக்கு வானளாவ சிலை வச்சமாதிரி, இப்ப சென்னை காமராஜர் நினைவிடத்துல போய் அஞ்சலி செலுத்தப்போறாங்களாம். வாக்காளர்களைக் கவர திடீர் திடீர்ன்னு காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு பாசம் அதிகரிச்சிக்கிட்டு வருதுங்க தலைவரே.''’

""சபரிமலை அய்யப்பன் மேல் ஆர்.எஸ்.எஸ். காரங்களுக்கு அண்மைக்காலமா வந்த அக்கறை மாதிரியா?''’

""உண்மைதாங்க தலைவரே, உச்சநீதிமன்றமே சொன்னாலும் பெண்களை சபரிமலையில் அனு மதிக்க மாட்டோம்னு இந்துத்துவா அமைப்பினர் தொடர்ந்து கலவரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இந்த நிலையில் அண்மையில் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குப் போன ’மனிதி’ அமைப்பைச் சேர்ந்த பெண்களை இங்கிருந்தே பின் தொடர்ந்து போன ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், போலீஸ் துணையோடு ஊடகங்களின் கண் எதிர்லயே அவங்களை பம்பையிலேயே வழிமறிச்சி துரத்தியடிச்சிது. அதோட, எந்த ரயிலில் அவங்க திரும்பறாங்கன்னு தெரிஞ்சி வச்சிக்கிட்டு, அவங்களை அங்கங்கே ஸ்டேஷன்களில் திரண்டு நின்று இழிவுபடுத்தித் தாக்கவும் முயற்சி செஞ்சாங்க. 24-ந் தேதி பம்பை தாண்டி, கிட்டதட்ட பொன்னம்பல மேடு வரை போன கேரளப் பெண்களான பிந்து, கனக துர்காங்கிற பெண்களையும் கலாட்டா பண்ணித் துரத்தினாங்க. இப்படி பெண்களைத் துரத்தறவங்க, கேரள பக்தர்களை விட தமிழக, கன்னட, ஆந்திர பக்தர்கள்தான் அதிகமாம்.''’

""எல்லாத்தையும் டி.வியிலே பார்க்குறேம்ப்பா.. தேர்தலுக்கு முன் ஊடகங்களின் எண்ணிக்கை பெருகிடும் போலிருக்கே?''’

rajini

""ரஜினி தரப்பில், ரஜினி டி.வி., தலைவர் டி.வின்னு ரெண்டு டி.வி. தொடங்கப்பட இருக்குது. அமெரிக்காவுக்குக் கிளம்பிய நிலையில் ரஜினி, என் ரசிகர்கள் தொடங்கறாங்கன்னு உற்சாகமா சிரிச்சார். கலைஞர் டி.வி.யை நவீனப்படுத்துவதோடு ’தளபதி டி.வி.’ன்னு தனி சேனல் தொடங்குவதில் ஸ்டாலின் ஆர்வமா இருக்காராம். என்.டி.டி.வி.யின் செய்தி ஆசிரியரான பர்கா தத்தை வைத்து, காங்கிரஸுக் காக கபில்சிபல், ஒரு சேனலைத் தொடங்க இருக்காராம். பா.ஜ.க. சார்பில் மோடி தரப்பும் புதிய சேனலைத் தொடங்கும் முயற்சியில் இருக்கு. இதுக்கு இடையில், பல்வேறு நாடுகளில் பிஸ்னஸ் செய்யும் லைகா சுபாஷ்கரன், தமிழ்நாட்டில் ஒரு சேனலையும் வார இதழையும் தொடங்கும் வியூகத்தில் இருக்காராம்.''’

""நான் ஒரு முக்கியத் தகவலைச் சொல்றேன். ஜெ.வின் மர்ம மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷனில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆஜரானப்ப, ஜெ.வுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப் பட்டதா அவர் சொன்னது பற்றி விசாரணை நடந்திருக்கு. அதுபோல, போயஸ்கார்டனில் இருந்த பாதாள அறையைத் திறக்க, ஜெ.வின் கால்களை வெட்டி எடுத்து, பயோமெட்ரிக் சிஸ்டத்தின்படி, கால் ரேகைகள் மூலம் திறக்கப்பட்டதான்னும் கேட்டிருக்காங்க. அதுக்கு பொன்னையன், நான் சொன்னதெல்லாம், பல ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான தகவல்களின் அடிப்படையில்தான்னு சொல்லியிருக்கார். ஜெ.வின் கால் தொடர்பான விவகாரத்தில் பொன்னையனுக்கும், சசியின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டிக்கும் தீப்பொறி பறக்கும் அளவுக்குக் கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கு.''’

__________________

இறுதிச்சுற்று!

பட்டாசுக்கு வேட்டு!

பசுமைப் பட்டாசு என்ற பெயரில் உச்சநீதிமன்றம் விதித்திருக்கும் நிபந்தனைகளைத் தளர்த்த, கடந்த 21-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களைத் திரட்டி, "பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம்' என்ற பெயரில் சிவகாசியில் முழு கடையடைப்பு நடத்தி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள் பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்குழுவினர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் வார்த்தைகளை, அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, அதன்படி பட்டாசு ஆலைகள் செயல்படலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டு, இத்தொழிலுக்காகப் போராடிய தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும் கொந்தளித்துக் குமுறுகிறார்கள்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

nkn261218
இதையும் படியுங்கள்
Subscribe