"தமிழ் நிறம்' இணையதளத்திற்கு, பத்திரிகையாளர் அய்யநாதன் அளித்த பேட்டி...
"நாம் தமிழர்' சீமானை ஒரு பாலியல் குற்றவாளி மாதிரி நீதிமன்றம் சொல்லியிருக்கு. இந்தக் கருத்த நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?
சரியானதுதான். நீதிமன்றம் சாதாரணமா ஒண்ணும் அதைச் சொல்லல. அதுக்கு நெறைய பேரு சாட்சியங்கள்லாம் வந்துட்டு அதுபத்திச் சொல்லியிருக்கு. 2015ல வெளியேறுறேன். 13-14ல இந்தப் பிரச்சினைய பெருசாக்குறாங்க. (நீங்க இருக்கும்போதே...) ஆமா நான் இருக்கும்போதே. அப்ப 2013-2014 பீரியடுல வந்துட்டு இத எடுக்குறாங்க. அதுக்கு முன்னாடியே அந்த கம்ப்ளைண்ட் எல்லாமே இருக்குது. ஸோ, அப்ப ஜெயலலிதா சீமான காப்பாத்திர்றாங்க. ஆனா 2011 தேர்தலப்ப காங்கிரஸ்-தி.மு.க. அலயன்ஸுக்கு எதிரா நாம் தமிழர் கட்சி பரப்புரை பண்ணுச்சு. அது பெருவெற்றியைத் தந்துச்சு ஜெயலலிதாவுக்கு. அதனால அந்த இடத்துல என்னாச்சுன்னா, கம்ப்ளைண்ட் வரும்போது அவங்க காப்பாத்திர் றாங்க, முடிஞ்சு போகுது. ஆனா அத எப்ப ஹைலைட் பண்றாங்கன்னா... அது உளவுத் துறையோட வேலைதான். அப்ப சிறையில இருக்கிற அந்த 7 பேர விடுவிக்கணும்னு அப்படீங் கிறதுக்காக நாங்க திட்டமிடுறோம். பெரிய அளவுல நீதிபதிகளையெல்லாம் கொண்டுவந்து கருத்தரங்கம் வைக்கணும்னுட்டு, சில டீடெய்ஸ்லாம் கேக்கணும்கிறதுக்காக அன்னிக்கு நான் வேலூருக்கு பயணம் பண்ணிக்கிட்டிருக்கிறேன். அங்க இருக்கக்கூடிய ராபர்ட் பயாஸ், நம்ம கவிஞர் புவிதாசனுடைய பையன் பேரறிவாளன் உள்ளிட்ட எல்லாரையும் காப்பாத்துறதுக்காக நாங்க போறோம். அவங்கள்ட்ட பேசணும்ங்கிறதுக் காகவே போனோம். இவங்களை யெல்லாம் முன்னாடியே எங்க ளுக்குத் தெரியும். அப்படிப் போகும்போது அன்னிக்கு தினத்தந்தி பேப்பர்ல சீமான் மீது சொன்ன புகாரின் பேரில் காவல்துறை விசாரணைன்னு செய்தி வருது. தினத்தந்தி பேப்பர்ல அது மட்டும் கலர்ல வருது ஹைலைட் பண்ணி. நான் புரிஞ்சுக்கிட்டேன்... ரைட்டு. அப்போ தடா சந்திரசேகரும் உயிரோட இருந்தாரு. அவரோட கலந்து பேசும்போது, அப்படிப் பண்ணலாம், இப்படிப் பண்ணலாம், அதெல்லாம் ஒண்ணு மில்லன்னு பேசிக்கிட்டாங்க. அந்த விஷயத்துல அவங்க என்னை அவாய்டு பண்ணிட்டாங்க. அப்படி அது போய்க்கிட்டேயிருந்துச்சு. அப்பவே என்ன பண்ணிட்டாங்கன்னா, அரெஸ்ட் பண்றதுக்கான எல்லாவிதமான இதுவும் இருந்தது. ஸோ ஜெயலலிதா அத தடுத்து நிறுத்திர்றாங்க. விசாரிங்க, என்னன்னு பாருங்க... அதுமாதிரி சொல்லிட்டு விட்டுட்டாங்க. அதனால அப்படியே போயிட்டு இருந்து. பிறகு, ஜெயலலிதா மரணத்துக்கு அப்புறம் மறுபடி அது பெருசாகுது. அதுக்கப்புறம் ஏதோ ஒரு காம்ப்ரமைஸ் நடக்குது. அது தள்ளிப்
"தமிழ் நிறம்' இணையதளத்திற்கு, பத்திரிகையாளர் அய்யநாதன் அளித்த பேட்டி...
"நாம் தமிழர்' சீமானை ஒரு பாலியல் குற்றவாளி மாதிரி நீதிமன்றம் சொல்லியிருக்கு. இந்தக் கருத்த நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?
சரியானதுதான். நீதிமன்றம் சாதாரணமா ஒண்ணும் அதைச் சொல்லல. அதுக்கு நெறைய பேரு சாட்சியங்கள்லாம் வந்துட்டு அதுபத்திச் சொல்லியிருக்கு. 2015ல வெளியேறுறேன். 13-14ல இந்தப் பிரச்சினைய பெருசாக்குறாங்க. (நீங்க இருக்கும்போதே...) ஆமா நான் இருக்கும்போதே. அப்ப 2013-2014 பீரியடுல வந்துட்டு இத எடுக்குறாங்க. அதுக்கு முன்னாடியே அந்த கம்ப்ளைண்ட் எல்லாமே இருக்குது. ஸோ, அப்ப ஜெயலலிதா சீமான காப்பாத்திர்றாங்க. ஆனா 2011 தேர்தலப்ப காங்கிரஸ்-தி.மு.க. அலயன்ஸுக்கு எதிரா நாம் தமிழர் கட்சி பரப்புரை பண்ணுச்சு. அது பெருவெற்றியைத் தந்துச்சு ஜெயலலிதாவுக்கு. அதனால அந்த இடத்துல என்னாச்சுன்னா, கம்ப்ளைண்ட் வரும்போது அவங்க காப்பாத்திர் றாங்க, முடிஞ்சு போகுது. ஆனா அத எப்ப ஹைலைட் பண்றாங்கன்னா... அது உளவுத் துறையோட வேலைதான். அப்ப சிறையில இருக்கிற அந்த 7 பேர விடுவிக்கணும்னு அப்படீங் கிறதுக்காக நாங்க திட்டமிடுறோம். பெரிய அளவுல நீதிபதிகளையெல்லாம் கொண்டுவந்து கருத்தரங்கம் வைக்கணும்னுட்டு, சில டீடெய்ஸ்லாம் கேக்கணும்கிறதுக்காக அன்னிக்கு நான் வேலூருக்கு பயணம் பண்ணிக்கிட்டிருக்கிறேன். அங்க இருக்கக்கூடிய ராபர்ட் பயாஸ், நம்ம கவிஞர் புவிதாசனுடைய பையன் பேரறிவாளன் உள்ளிட்ட எல்லாரையும் காப்பாத்துறதுக்காக நாங்க போறோம். அவங்கள்ட்ட பேசணும்ங்கிறதுக் காகவே போனோம். இவங்களை யெல்லாம் முன்னாடியே எங்க ளுக்குத் தெரியும். அப்படிப் போகும்போது அன்னிக்கு தினத்தந்தி பேப்பர்ல சீமான் மீது சொன்ன புகாரின் பேரில் காவல்துறை விசாரணைன்னு செய்தி வருது. தினத்தந்தி பேப்பர்ல அது மட்டும் கலர்ல வருது ஹைலைட் பண்ணி. நான் புரிஞ்சுக்கிட்டேன்... ரைட்டு. அப்போ தடா சந்திரசேகரும் உயிரோட இருந்தாரு. அவரோட கலந்து பேசும்போது, அப்படிப் பண்ணலாம், இப்படிப் பண்ணலாம், அதெல்லாம் ஒண்ணு மில்லன்னு பேசிக்கிட்டாங்க. அந்த விஷயத்துல அவங்க என்னை அவாய்டு பண்ணிட்டாங்க. அப்படி அது போய்க்கிட்டேயிருந்துச்சு. அப்பவே என்ன பண்ணிட்டாங்கன்னா, அரெஸ்ட் பண்றதுக்கான எல்லாவிதமான இதுவும் இருந்தது. ஸோ ஜெயலலிதா அத தடுத்து நிறுத்திர்றாங்க. விசாரிங்க, என்னன்னு பாருங்க... அதுமாதிரி சொல்லிட்டு விட்டுட்டாங்க. அதனால அப்படியே போயிட்டு இருந்து. பிறகு, ஜெயலலிதா மரணத்துக்கு அப்புறம் மறுபடி அது பெருசாகுது. அதுக்கப்புறம் ஏதோ ஒரு காம்ப்ரமைஸ் நடக்குது. அது தள்ளிப்போட்டுக்கிட்டே போச்சு.
இதுல கவனிக்க வேண்டியது என்னன்னா... ஒரு பெண்ணினுடைய நியாயத்திற்கான போராட் டம்தான் அது. நான்கூட என்னடா இது பயங்கரமான ஒரு ஆண் உலகமா இருக்கேன்னு நினைப்பேன். அது மாதிரிதான் அந்த விடயமே நடந்துருக்கு... பயன்படுத்திட்டு தூக்கியெறியறது மாதிரி. தனிப்பட்ட முறையில அந்தப் பொண்ணு இவர்கிட்டப் பேசும்போது மாமா, மாமான்னுதான் பேசும்.
இதுல உண்மை என்னன்னு தெரிஞ்சுக் கிறதுக்காக நான் தனியா அதுபத்தி விசாரிச்சேன். இவரு எல்லாருகிட்டயும் அன்னிக்கு "பணத்த போட்டு வுடுறா' அப்படீன்னு பல தடவ சொல்லியிருக்கிறாரு. அப்பவே கேக் வெட்டுற படத்தையெல்லாம் அவங்க வெளியிட்டாங்க. ஸோ, இதுல விஜயலட்சுமிக்கு நியாயம் கிடைச்சதுன்னா... அது காலம் கடந்து கிடைச்சதாத்தான் இருக்கும். ஏன்னா அது அவ்வளவு தூரம் போராடிப் பாத்துச்சு. இன்னும் சொல்லப்போனா அது ஒரு தனி மனுஷியா.
சீமானுக்கு 2014ல கல்யாணம் நடக்குது. எல்லாருமே வந்து பார்ட்டிசிபேட் பண்றாங்க. அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு கொண்டுவரப் பட்டதே இப்பதான். நீங்க கவனிக்கணும்...! நீதிமன்றத்துக்கு ஒரு எஃப்.ஐ.ஆர். வந்ததே இப்ப தான். எஃப்.ஐ. ஆர். போடுறாங்க. போட்டதுனால சொல்றாங்க, ஆமா இவரு பண்ணுனது வன்கொடு மைதான்னு அந்த சட்டத்த போட்டு வழக்கு விசாரணை தொடரட்டும்னு சொல்லியிருக்காங்க.
இது அவருக்கு ஒரு அரசியல் நெருக்கடின்னே சொல்லலாமா? ஏன்னா இப்ப அவரு கட்சியிலேயே நெறையபேரு விலகிக் கிட்டிருக்காங்க, நீதிமன்றம் டைரக்டாவே, பலமுறை அவங்கள மிரட்டி கருக்கலைப்பு பண்ணியிருக்காங்கன்னு சொல்லும்போது இத நாம எப்படி எடுத்துக்கலாம்? இதுக்குப் பின்னாடியும் ஒரு அரசியல் இருக்கு அப்படீன்னு நாம எடுத்துக்கலாமா? இல்ல... நீங்க சொல்றது மாதிரி காலம் கடந்த நீதின்னு சொல்லலாமா?
இந்தியாவோட டெமாக்ரஸியில தனிமனித உரிமைகள் மிகப்பெரிய அளவுல பாதிக்கப்பட்டி ருக்கு. அரசியல் தலைவரால இப்படி சீரழிக்கப் பட்டேன்னு ஒரு பொண்ணு சொல்லும்போது, அது ஊடகங்கள்ல எல்லாம் வரும். அந்தப் பொண்ணு தன்னால இயன்ற அளவுக்கு எல்லாத்தையுமே பண்ணுது. பயன்படுத்திட்டு தூக்கியெறியறதுக்கு... என்னது அது? அதையெல் லாம் ஏத்துக்க முடியாது. அப்புறம் ஜனநாயகமே கிடையாது, பண்பாடும் கிடையாது.
சீமானைப் பொறுத்தவரைக்கும் பண்பாடே கிடையாது... எதுவுமே கிடையாது. பெரிய பண்பாட்டு மனிதர் மாதிரி அவரு பேசுவாரு. ஆனா அப்படி எதுவுமே கிடையாது. அதுல என்ன ஒரு பெரிய மோசடி அப்படீன்னா... இவ்வளவு வெளிப்படையா வந்து பேசுனபிறகும் கூட இந்த நாட்டினுடைய லீகல் சிஸ்டம் ரெஸ்பாண்ட் பண்ணல. இது அந்தக் கட்சியில இம்பேக்ட் எதையுமே ஏற்படுத்தல. அவங்களுக்கு அண்ணன் தான் எல்லாம் அப்படின்னுதான் எல்லாரும் இருந்தாங்க.
விஜயலட்சுமியினால எல்லாம் யாரும் கட்சியில இருந்து போகல. பெண்களே கூட வெளியில போகல. அது ஒரு தனிமனிதப் பிரச்சினைன்னுல்லாம் திருப்புவாங்க, அது வேற.
இங்க என்ன கவனிக்கணும்னா... இன்னைக்கு சீமானுடைய கட்சி கரையறதுக்கான முக்கியமான காரணம்... ஒண்ணு அவருடைய வாய், இன் னொண்ணு அவரு பேசுற கொள்கைக்கும், அவருடைய கட்சியினுடைய நடவடிக்கைக்கும் சம்பந்தமின்மை. அவருக்கு தமிழ்த்தேசியமும் கிடையாது, தமிழர் உரிமைக்காகவும் அவரு நிக்கல. அது திராவிட கட்சி மாதிரி இன்னொரு கட்சி. ஜெயகாந்தன் சொல்லுவாரே... "கடைதான் வேற... கல்லால்லாம் ஒண்ணு'ன்னு... அதுதான் சீமானுடைய கட்சி. ஒரு தொகுதியில கூட டெபாசிட் வாங்க முடியல. ஆனா அவரு எவ்வளவு சொத்து வாங்கியிருக்காரு பாருங்க.
"இருக்கிற வீட்டுக்கு வாடகையே தம்பிகள்தான் குடுத்துட்டிருக்காங்க'ன்னு இப்ப வரைக்கும் அவரு சொல்லிக் கிட்டிருக்காரே...?
அதெல்லாம் எப்பவுமே அப்படித்தான். அவருக்கு கிடைச்ச மாதிரி தம்பிகள்... ஏன் கேக்குறீங்க...? எல்லாம் மயங்கிப் போய் குடுக்குறது தான். அவரும் முடிஞ்ச அளவுக்கு ஏமாற்று வேலையெல்லாம் செய்வாரு. எல்லாருமே இவரோட ரொம்ப அட்டாச்டா இருப்பாங்க. அவரு யாருன்னே தெரியாது... ஆனா அட்டாச்டா இருப்பாங்க. சீமான் யாரையுமே அங்கீகரிக்க மாட்டாரு. என் கட்சி... அவ்வளவுதான் முடிஞ்சுப் போச்சு. அப்பவே எல்லாரும் ஒதுங்கியிருக்கணும். இத நான்தான் எடுத்துச் சொன்னேன். முதல்ல 2015ல வெளிய வரும்போதே. நம்மள்லாம் வெளிய போனபிறகுதான் மெம்பர்ஷிப்பே ஆச்சு. அப்பல்லாம் மெம்பர்ஷிப் எதுவுமே கிடையாது. யாருக்கும், உன்ன இந்த பொறுப்புக்கு நியமிச்சிருக்கோம்னு கடிதம் கூட தரமாட்டாரு அவரு. "போ... போய் வேலைய பாரு' இப்படித் தான் சொல்லுவாரு அவரு. இப்படித்தான் நம்மள நடத்திக்கிட்டிருந்தாரு.
இப்படிச் சொல்லக்கூடிய சீமான்தான் கடந்த ஈரோடு இடைத்தேர்தல்ல... பெரியாரைப் பற்றி ரொம்ப மோசமா பேசுனாரு...
ஆமா... அப்படித்தான் பேசுவாங்க. அப்படிப்பட்டவங்க அந்த மாதிரி பேசுவாங்க. பெரியாரைப் பத்தி நாங்கள்லாம் இப்போ பேசுறோம்னா ஐடியாலஜிகல் இல்ல... நன்றியுணர்ச்சிதான்! பெரியாருடைய கடவுள் மறுப்ப நான் கூட மறுத்தவன்தான். இப்ப கூட விபூதி, குங்குமம்லாம் வச்சுக்கிட்டு பக்தனாத்தான் உங்க முன்னாடி உக்காந்திருக்கேன். அதெல்லாம் கிடையாது. பெரியார் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் செய்த பணிகள், அந்த அரும்பணிகளால் பெற்ற பலன், அந்த நன்றியுணர்வால்தான் பெரியாரை நாங்க "தந்தை பெரியார்'னு சொல்றோம்.
சீமானுக்கு அதெல்லாம் எதுவுமே கிடையாதுல்ல. இயல்புல அவரு ஒரு தமிழரே கிடையாது. "தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு'ன்னு சொல்வாங்க. அதெல்லாம் அவருக்கு கிடையாது. பண்பாட்டு மனிதனே கிடையாது.
"இலையுதிர் காலம்' மாதிரி, கட்சி கலைஞ்சிக்கிட்டிருக்கு, அதை "களையுதிர் காலம் எங்களுக்கு'ன்னு சீமான் சொல்றாரே?
அதான்... "போட்டுப் பார் ஓட்ட, அப்புறம் பார் நாட்ட'ங்கிற மாதிரி, இவருல்லாம் வச னகர்த்தா. அதனால என்ன பண்ணுவாங்க, முதல்ல உக்காந்து தயாரிச்சிடுவாங்க. அப்புறம் நேரே வந்து சொல்றது மாதிரி சொல்லுவாங்க. ஏன்னா, இவங்க பண்ணக்கூடிய குசும்பு என்னன்னு தெரியுதா? பத்திரிகையாளர்கள் எப்படி கேப்பாங்கன்னு தெரியும். உடனே அதுக்கு இப்படிச் சொல்லிடுறது. வாய குடுத்து எப்படி மாட்டுறாருன்னு நீங்களே பாருங்க. "என் கட்சிக்கு வரணும்னு நினைக்கிறாங் களா... மகிழ்ச்சியுடன் வரவேற்போம். வாங்கன்னு வோம், செயல்படுங்கன்னுவோம், போறாங்களா... போங்க அப்படீன்னுவோம், வாழ்த்துகள்னுவோம், அப்ப சொல்லுவாரு இதுதான் எங்களுடைய கொள்கைன்னு சொல்லுவாரு.
இத எப்படிப் புரிஞ்சுக்கலாம்?
அண்ணாவ விட்டு சம்பத் பிரியுறாரு. இவரு எதிர்க்கிறாரே திராவிடம்... திராவிடத்தினுடைய அரசியல அண்ணா சொல்றாரு. பிரஸ்ஸ சந்திக்கப் போறாரு, அண்ணா திட்டப் போறாருன்னுட்டு எல்லாரும் நினைக்கிறப்ப... "எங்கிருந்தாலும் வாழ்க'ன்னுட்டாரு... அவ்வளவுதான்! அது உயர்ந்த உள்ளம். இவரு அப்படியில்ல... என்ன சொல்றாரு "களை'யாம். இவ்வளவு காலம் அவங்க இலையா இருந்தாங்க, கனியா இருந்தாங்க, எல்லாமுமா இருந் தாங்க... இப்ப "களை'யாம்.
2013, 2015 போன்ற ஒவ்வொரு காலகட்டத்துலயும் சீமானுடைய பேச்சுக்கு ஒரு கூட்டம் கூடிச்சு இல்லியா?
நானும் பாராட்டி யிருக்கேன் தேர்தலுக்கு முன்னாடி அவரோட சின்னம் பறிக்கிறத நான் எதிர்த்தேன். ஜனநாயகத் துக்காக அத நான் எதுத்தேன். என்னிக்கு நீ பெரியார திட்டிப்புட்டியோ, அதுக்கப்புறம்லாம் ஒண்ணுமே கிடையாது. அதுக்கப்புறம் தமிழனுக்கு நீ எதிர் சைடு. தமிழன் என்கிற ஒரு எண்ணத்துக்கோ, குணத்துக்கோ, இயல்புக்கோ எதிர் சைடு. நீ, தமிழனுடைய உட்பகை. வள்ளுவர் சொல்றபடி பாத்தம்னா நீ தமிழன் கிடையாது. "சிற்றினம் சேராமை'ங்கிற அதிகாரத்த வேணும்னா படிச்சுக்கங்க, திருந்துங்க அவ்வளவுதான்!
ஒருவேளை பா.ஜ.க.வோட கூட்டணியில இருந்துக்கிட்டு, முதல்வர் வேட்பாளர் மாதிரி ட்ரை பண்றாரோ?
ரவீந்திரன் துரைசாமியோட உடான்ஸ். தம்பி ரவீந்திரன் துரைசாமி நெறைய விடுவாரே... அதுல அவரு பறக்கவிட்ட மிகப்பெரிய காத்தாடிதான், முதல்வர் வேட்பாளர். என்னா கதை இது? அதுக்காகவா அவங்க அண்ணா மலைக்கு அவ்வளவு செலவுபண்ணி லீடராக்கப் பாத்தாங்க. "என் மண் என் மக்கள்' அப்படீங்கிற பயணம்லாம் பண்ணுனது அண்ணாமலைய லீடர் ஆக்குறதுக்கு. அண்ணாமலைய லீடராக்க முடிஞ்சதா?
சீமான் தமிழ்த்தேசியம் பேசுறதுனால... பா.ஜ.க. அந்த மாதிரியான விளையாட்டு எல்லாம் விளையாடுவாங்க இல்லியா..?
விளையாடட்டும்... விளையாடுறதுக்கு அடிப்படை இருந்தாதான. இங்க இருக்கிறது எல்லாமே டெபாசிட்டுக்கு கீழதான. இப்பக்கூட பாருங்க... பி.ஜே.பி. சப்போர்ட் ஓட்டு எல்லாமே விழுந்துச்சு. விழுந்தும் டெபாசிட் கிடைச்சுச்சா... இல்ல... அவ்வளவுதான்!
பெர்சன்டேஜ் ஏறிருக்குன்னு சொல்லிக் கிட்டிருக்காரே சீமான்...
வேற ஒண்ணுமில்ல. 12, 24 ஆனது அவ்வளவுதான். அதுல 12 கூட குறைஞ்சிருக்கலாம். ஆனா இதெல்லாம் பி.ஜே.பி.யினுடைய ஓட்டுதான். அதுலதான் அவருக்கு கிடைச்சிருக்கேயொழிய வேற எதுவும் கிடையாது.
நாம் தமிழர் கட்சியினுடைய எதிர் காலம்...? 2026 தேர்தல் நெருங்கப்போகுது... பாதி பேர் போய்க்கிட்டிருக்காங்க?
இப்ப அவருக்கு கூட்டணிங்கிறதுதான் முதல் அவசியம். ஏன்னா, இப்ப விஜய் கட்சி தொடங்கிட்டவுடனே மிகப்பெரிய அளவுக்கு இவருக்கு விழற ஓட்டெல்லாம் ஒரு பெரிய சரிவா அப்பவே வந்துச்சு. இவருக்கு 8% ஓட்டு அப்படீங்கிற அந்த மாய்மாலம் பலிக்காது. ஒரே ஒரு ஆள் மட்டும் 16% ஆகும்னு சொல்லுவாரு... ரவீந்திரன் துரைசாமி. அவருடைய தூதர் அவரு, பிராண்ட் அம்பாசிடரு. அதனால ஒண்ணும் பிரச்சினை இல்ல, அவரு பேசிட்டுப் போட்டும். இவருக்கு இன்னிக்கு எடுப்பார் இல்லை. கடை விரிப்பார் கேட்பார் இல்லைன்றது மாதிரி ஆகிடுச்சு. ஸோ, அவரு ஒரு கூட்டணி போட்டு தன்னுடைய ஓட்டு லாஸ மறைக்கணும். எங்க போவாருன்னா... எங்க வேணும்னாலும் போவாரு... அவ்வளவுதான். கொள்கைவாதிகள்னு கட்சியில நினைச்சிக்கிட்டிருக்கவன்லாம் வெளியேறிக்கிட்டே யிருப்பான். தேர்தல்ல இவரு வேட்பாளர் அறிவிச்ச பிறகுகூட வெளியேறிக்கிட்டேயிருப்பான்.
நீங்க சொல்றத பாத்தா 2026ல டைரக்ட்டாவே பி.ஜே.பி. கூட கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கோ...?
ஆமா போவாரு, எந்த இடத்துலயும் போவாரு. ஒருபோதும் மதவாதத்தை அவர் எதிர்த்ததில்லை, பாசிஸத்தை எதிர்த்ததில்லை, திருமாவளவன் போன்று பாசிஸத்தை அவர் எதிர்த்ததில்லை. அவருக்கு என்ன, தமிழனுடைய ஒற்றுமைக்காகப் பேசுறேன், தமிழுக்காக பேசு றேன்னு சொல்லிட்டு ஒரு டிஃபன்ஸ் வச்சுக்கிட்டி ருக்காரு, அவ்வளவுதான். இப்போ இவ்வளவு தூரம் மும்மொழிக் கொள்கைக்கு எதிரா மூச்சுப் புடிச்சு பேசுறதுல, ஏன் ஒரு நாம் தமிழர் கட்சிக்காரன்கூட இல்ல? ஏன் சீமான் இல்ல? ஏன்னா நல்லா தெரியும், இவங்க நடிப்பாங்கன்னுட்டு.