Advertisment

ஜெ மரண அறிக்கை! சசி கூட்டணி சிக்குமா? தப்புமா?

ss

ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றிய உண்மைகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், 600 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்து விட்டது. அந்த அறிக்கையை கடந்த 29-ஆம் தேதி கூடிய தனது அமைச்சரவையில் வைத்து விவாதித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

dd

அதனடிப்படையில் சசிகலா, டாக்டர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஆகியோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்டவல்லுநர்களின் ஆலோசனை களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்த நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகு கொடுக்கப்படும் விபர அறிக்கையுடன் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனை தனது அறிக்கையாக தி.மு.க. அரசு வெளியிட்டிருக்கும் நிலையில், சசிகலா தண்டிக்கப் படுவாரா? ஆணையத்தின் பரிந்துரைகளை வல்லுநர் குழு ஏற்குமா? என்றெல்லாம் அ.தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

ffff

ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகரிடம் கேட்ட போது, "விசாரணை ஆணையத்திற்கான அதிகாரம் என்பது, அரசுக்கு பரிந்துரைகளை மட்டுமே செய்ய முடியும். தீர்ப்பு எழுத முடியாது. அந்த வகையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, சசிகலா உள்ளிட்ட நால்வரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆணையம் சொல்லியிருப்பதால், அந்த நால்வருக்கு எதிராக என்ன குற்றத்தை ஆறுமுகசாமி ஆணையம் சுமத்தியுள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், ஏதோ ஒன்று இருக்கிறது. அதனால், விச

ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றிய உண்மைகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், 600 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்து விட்டது. அந்த அறிக்கையை கடந்த 29-ஆம் தேதி கூடிய தனது அமைச்சரவையில் வைத்து விவாதித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

dd

அதனடிப்படையில் சசிகலா, டாக்டர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஆகியோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்டவல்லுநர்களின் ஆலோசனை களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்த நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகு கொடுக்கப்படும் விபர அறிக்கையுடன் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனை தனது அறிக்கையாக தி.மு.க. அரசு வெளியிட்டிருக்கும் நிலையில், சசிகலா தண்டிக்கப் படுவாரா? ஆணையத்தின் பரிந்துரைகளை வல்லுநர் குழு ஏற்குமா? என்றெல்லாம் அ.தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

ffff

ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகரிடம் கேட்ட போது, "விசாரணை ஆணையத்திற்கான அதிகாரம் என்பது, அரசுக்கு பரிந்துரைகளை மட்டுமே செய்ய முடியும். தீர்ப்பு எழுத முடியாது. அந்த வகையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, சசிகலா உள்ளிட்ட நால்வரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆணையம் சொல்லியிருப்பதால், அந்த நால்வருக்கு எதிராக என்ன குற்றத்தை ஆறுமுகசாமி ஆணையம் சுமத்தியுள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், ஏதோ ஒன்று இருக்கிறது. அதனால், விசாரிப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும்போதும், ஆணையத்தின் அறிக்கையை மக்களுக்குத் தெரிவிக்கும்போதுதான் உண்மைகள் வெளிவரும்'' ‘ என்கிறார் அழுத்தமாக.

ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவரான வழக்கறிஞர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் விவாதித்த போது, ‘"ஆணையத்தின் முன்பு ஆஜராகும்படி வி.கே.சசிகலாவுக்கு, செக்சன் 8 பி-யின்படி சம்மன் அனுப்பினார் ஆறுமுகசாமி. அது ஒரு முக்கியமான நோட்டீஸ். அதன்படி சசிகலா ஆஜராகி, ஆணையம் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்க வேண்டும். ஆனால், வழக்கறிஞர்களின் யோசனையைக் கேட்டு அவர் நேரில் ஆஜராகாமல் தனது பதில்களை மனுவாக சமர்ப் பித்தார் சசிகலா. இளவரசி, ஓ.பி.எஸ். எல்லாம் ஆஜராகிய நிலையில், சசிகலா வராமல் போனதுதான் அவருக்கு மைனஸ் பாயிண்ட். ஆணையத்தில் நான் ஆஜராகி, ’தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்’ என எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொன்னேன். நான் கொடுத்த வாக்குமூலத்தை வலிமை யானதாக எடுத்துக் கொண்டார் ஆறுமுகச்சாமி.

சுகாதார அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில்தான் அப்பல்லோ மருத்துவமனை இருந்தது. அவர்தான் ஆதிக்கம் செலுத்தியவர். ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், அப்பல் லோவில் நடந்த ரகசியங்கள் என அனைத்தையும் அறிந்த ஒரே நபர் விஜயபாஸ்கர்தான். காரணம், மருத்துவ சிகிச்சை பற்றி சசிகலாவுக்கு என்ன தெரியும்? அவர் டாக்டர் இல்லையே! அதனால், ஆணையத்தின் பரிந்துரைகள்படி பார்த்தால் விஜய பாஸ்கர் சிக்குவது உறுதியாகிறது.

dd

அதேசமயம், இந்த ஆணையத்தின் அறிக்கையை வைத்து, தி.மு.க. அரசுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகளை சட்ட வல்லுநர்கள் வழங்குவார்கள் என்பதும், அதன் மீது என்ன விசாரணையை மேற்கொள் வார்கள் என்பதும் தெரிய வில்லை. காவல்துறை விசாரணையா? சி.பி. சி.ஐ.டி. விசாரணையா? சி.பி.ஐ. விசாரணையா? என்று எந்த கோணத்தில் தி.மு.க. அரசு விசாரிக்கப்போகிறது? அதனால், எதுவாக இருந்தாலும் விரைவான நடவடிக்கையை முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும். அரசு எடுக்கப்போகும் அந்த விசாரணை வளையத்தில் நிச்சயம் விஜயபாஸ்கரும் மேலும் சிலரும் தப்பிக்க முடியாது என்றுதான் தெரிகிறது. சசிகலா நேரில் ஆஜராகி வாக்குமூலமளித் திருந்தால் ஒருவேளை அவருக்கு சாதகமாகக் கூட அறிக்கை அமைந்திருக்கும்''’என்கிறார் அதிரடியாக.

விசாரணை ஆணைய வழக்குகளில் அனுபமுள்ள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜராஜ னிடம் பேசியபோது, ’"மருத்துவ மனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் விசாரிப்பதற்காகவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணை யத்தின் அறிக்கை, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரை சுட்டிக்காட்டி அவர்கள் மீது அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருக்கிறது.

விசாரணை ஆணையம் என்பது, எது குறித்து விசாரிக்கிறதோ அது குறித்து விசாரித்து தவறு நடந்துள்ளது அல்லது தவறு நடக்கவில்லை என சொல்லி, அதற்கான பரிந்துரைகளை அரசுக்கு கொடுக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா மரண விசயத்தில், குறிப்பிட்ட நால்வர் மீது, அரசு விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் என்பதாக ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. அரசுக்கு தெளிவு கிடைக்க வேண்டுமென்பதற்காகத் தான் ஆணையம் அமைக்கப் படுகிறது.

அப்படியிருக்கும்போது, அரசு விசாரிக்கட்டும் என ஆணையம் சொல்வதன் மூலம், ஆணையத்தால் எந்த உண்மை களையும் கண்டறிய முடியவில்லை என எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதேசமயம், ஜெயலலிதா மரணத்தில் குறிப்பிட்ட நால்வரும் தவறிழைத் திருக்கிறார்கள் என ஆதாரப்பூர்வமாக ஆணையம் கண்டறிந்திருந்தால், அதை தெரிவித்து, இவர்கள் குற்றவாளிகள்; அவர்களுக்கு இந்த தண்டனை வழங்க பரிந்துரைத்திருக்கலாம்.

விசாரணை ஆணையங்களுக்கான சட்டம்-1952-ன் படி ஆணையத்துக்கு நிறைய அதிகாரம் தரப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய-மாநில அரசாங்கத்தில் எந்த ஒரு அலுவலராக இருந்தாலும் அவரை அழைத்து விசாரிக்கவும், அர சாங்கத்திடமிருந்து எந்த ஒரு ஆவணத் தைப் பெறவும் அதிகாரம் இருக்கிறது.

அந்த வகையில் ஆராய்ந்தால், அன்றைக்கு தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் அப்பல்லோ மருத்துவமனைக்கு இரண்டு முறை சென்று ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்டறிந்து அது குறித்த ரிப்போர்ட்டை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். அவரை அழைத்து ஆணையம் விசாரித்ததாக தெரியவில்லை. அவர் அனுப்பிய ரிப்போர்ட்டை வாங்கி ஆணையம் பார்த்திருக்கலாம். அதையும் செய்ததாக தெரியவில்லை.

அதேபோல, மத்திய அரசின் உத்தரவின்படி, எய்ம்ஸ் மருத்துவர்கள் இரண்டு முறை அப்பல்லோவிற்கு வந்து சிகிச்சை முறைகளை பரிசோதித்து விட்டு அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையை ஆணையம் வாங்கிப் பார்த்ததாக தெரியவில்லை. மேலும், விசாரிக்க வேண்டிய முக்கிய நபர்களை விசாரிக்கவே இல்லை. அப்படியிருக்கும் போது எதன் அடிப்படையில் நால்வர் மீது மட்டும் விசாரிக்க ஆணையம் பரிந்துரைத்தது என புரியவில்லை.

பொதுவாக, விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்கலாம் அல்லது புறக்கணிக்கலாம். ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டுமென கட்டாயமில்லை. அதேபோல, ஆணையத்தின் பரிந்துரைகளையும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் குற்றச்சாட்டு களையும் வைத்தோ சம்மந்தப் பட்டவர்களுக்கு எதிராக ஆவண மாகவோ, சாட்சியமாகவோ நீதிமன்றத்தில் பயன்படுத்த முடியாது; வழக்கும் போடமுடி யாது. அதனால், ஆணையம் என்பது பிரச்சனைகளை தள்ளிப்போட உதவுமே தவிர, தீர்ப்பதற்கு உதவாது''’என்று சுட்டிக்காட்டுகிறார்.

அண்மைக் காலங்களில் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட விசாரணை கமிசன்கள் அமைக்கப் பட்டன. அதன் அறிக்கைகள் அரசிடம் ஒப்படைக்கவும் பட்டது. ஆனால், எதற்கும் தீர்வு காணப்படவில்லை. பணியில் இருக்கிற அல்லது ஓய்வு பெற்றுள்ள நீதிபதிகளை வைத்து ஆணையம் அமைக்கலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், ஓய்வு பெற்ற நீதிபதிகளை வைத்தே கமிஷன்கள் அமைக்கப் படுகின்றன. இதற்கு காரணம், அரசு எதிர்பார்க்கும் ரிசல்ட்டை அறிக்கையாகப் பெறுவதற்குத்தான்.

ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்க வேண் டிய கட்டாயம் அரசுக்கு இல்லை.. ஆனால், ஆணையத்துக்கு தேவைப்படும் அனைத்து செலவு களையும் அரசாங்கம்தான் ஏற்க வேண்டும். ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்க தேவையில் லாதபோது, ஆணையத்தை அமைத்து மக்களின் வரிப்பணத்தை எதற்காக வீணடிக்க வேண்டும்? ஆறுமுகசாமி ஆணையத்துக்காக மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது தமிழக அரசு. இது, மக்களின் வரிப்பணம்.

அந்த வகையில், பரிந்துரைக்க மட்டுமே அதிகாரம் கொண்டதாகவும் மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குவதாக இருக்கும் விசாரணை ஆணையங்களை அமைப்பதை விட்டுவிட்டு மாற்று வழியினை யோசிப்பதே மக்களாட்சிக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

nkn030922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe