பிரதமரை வரவேற்ற ஜல்சா சிவாச்சாரியார் கைது!

ss

பிரதமருக்கு பூரணகும்ப மரியாதை செய்த கோவில் சிவாச்சாரியார், கோவிலுக்கு தெய்வப்பணி செய்யவந்த பெண்ணிடம் காதல் வார்த்தை பேசி கோவிலுக்குள்ளேயே ஜல்சா செய்ததாக எழுந்த பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ss

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த ரெட்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆம்பூரில் பிரபலமான நாகநாதசுவாமி கோவிலில் உழவாரப்பணி (தூய்மைப் பணி) செய்யச் சென்றுள்ளார். அதே ஆலயத்தில் தலைமை அர்ச்சகராக பணியாற்றுபவர் தியாகராஜன் சிவாச்சாரியார். அவர்மீது அந்தப்பெண் பரபரப்பான குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். அதில், "என்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பலமுறை என்னுடன் இருந்தார். எனக்கு சென்னையிலுள்ள பிரபல கோவிலில் வேலை வாங்கித் தந்து அங்கேயே அனுப்பிவைக்கிறேன் எனச்சொல்லி நெருக்கமாகப் பழகினார். இப்போது என்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்' எனக் கடந்த ஜூன் 4ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரேயகுப்தாவிடம் நேரடியாகச்சென்று புகார் தந்தார். அந

பிரதமருக்கு பூரணகும்ப மரியாதை செய்த கோவில் சிவாச்சாரியார், கோவிலுக்கு தெய்வப்பணி செய்யவந்த பெண்ணிடம் காதல் வார்த்தை பேசி கோவிலுக்குள்ளேயே ஜல்சா செய்ததாக எழுந்த பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ss

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த ரெட்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆம்பூரில் பிரபலமான நாகநாதசுவாமி கோவிலில் உழவாரப்பணி (தூய்மைப் பணி) செய்யச் சென்றுள்ளார். அதே ஆலயத்தில் தலைமை அர்ச்சகராக பணியாற்றுபவர் தியாகராஜன் சிவாச்சாரியார். அவர்மீது அந்தப்பெண் பரபரப்பான குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். அதில், "என்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பலமுறை என்னுடன் இருந்தார். எனக்கு சென்னையிலுள்ள பிரபல கோவிலில் வேலை வாங்கித் தந்து அங்கேயே அனுப்பிவைக்கிறேன் எனச்சொல்லி நெருக்கமாகப் பழகினார். இப்போது என்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்' எனக் கடந்த ஜூன் 4ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரேயகுப்தாவிடம் நேரடியாகச்சென்று புகார் தந்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தியாகராஜன் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, "கடந்த 2024, மார்ச் 24ஆம் தேதி, கோவிலில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒருநாள் என்னிடம், கோவில் ஊழியர்களுக்கு எனது வீட்டில் உணவு செய்து வைக்கப்பட்டுள்ளது, போய் எடுத்துவா எனச் சொன்னார். நானும் சென்றேன், அப்போது வீட்டில் யாரும் இல்லை. திடீரென வீட்டுக்கு வந்தவர் என்னை வீட்டுக்குள் அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பாலியல் உறவு கொண்டார். கடந்த ஓராண்டாக இப்படி பலமுறை செய்துள்ளார் எனப் புகாரில் குறிப் பிட்டுள்ளார். அதோடு அந்த தியாகராஜன் இந்த பெண்ணுடன் முகநூல், வாட்ஸப் வழியாக சாட் செய்ததற்கான ஆதாரங் களும் உள்ளது. அதனால் தான் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்கள்.

ss

இதுகுறித்து நகரின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரித்தபோது, "இரண்டு பெண்கள் இந்த தியாகராஜன் மீது புகார் சொன்னார்கள். அதில் ஒரு பெண்ணிடம் நகரின் சில முக்கிய பிரமுகர்கள் கட்டப்பஞ்சாயத்து பேசி அந்த தியாகராஜனிட மிருந்து 4 லட்ச ரூபாய் பணம் வாங்கி அந்த பெண்ணுக்கு தந்து சமாதானம் செய்துவிட்டார்கள். மற்றொரு பெண்ணிடமும் பேரம் பேசப்பட்டது, அது படியவில்லை. அந்த பெண் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் தந்தால் நியாயம் கிடைக் காது என எஸ்.பி.யை சந்தித்து புகார் தந்தார், அதனாலேயே எப்.ஐ.ஆர். போடப்பட்டு தியாகராஜனிடம் விசாரிக்கப்பட்டது. இந்த தியாகராஜன் லேசுப்பட்ட ஆளில்லை. கோவிலை யே தனது அந்தப்புரமாக மாற்றியவன். அவனுக்கு திருமணமாகி குழந்தையுள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்பு கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணுக்கு (மாற்று சாதி) காதல் வலை வீசி, அந்த பெண்ணுடன் கோவிலுக்குள்ளேயே ஜல்சாவில் ஈடுபட்டு அந்த பெண் கர்ப்பமாகி, குழந்தையும் பெற்றுவிட்டார். அந்த பெண்ணுக்கு பணம் பேரம் பேசினார்கள். அந்த பெண், தாலி கட்டு எனச் சொன்னதால் வேறுவழியில்லாமல் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டு வாணியம்பாடியில் குடித்தனம் வைத்துள்ளான். அதன்பின்பும் அவனது லீலை குறையவில்லை. கோவிலுக்கு பணி செய்ய வருபவர்கள், சுவாமி கும்பிடவரும் பக்தைகளுக்கு காதல் வலை வீசியபடியே இருப்பான். அதில்தான் கோவில் உழவாரப்பணி செய்ய வந்திருந்த இளம்பெண் களிடம் தனது காதல் வலையை வீசியுள்ளான். இரவெல்லாம் அவரிடம் செக்ஸ் சாட் செய்துள்ளான். அந்த பெண்ணுடன் அவன் பேசிய சாட்களை பாருங்கள் எவ்வளவு காமச்சாமியராக இருந்திருக்கான் என்பது உங்களுக்கே புரியும்'' எனச் சொல்லி அந்த ஸ்கிரீன்ஷாட்களை நமக்குத் தந்தனர்.

இந்த பாலியல் புகாரை விசாரிக்க திருப்பத்தூர் டி.எஸ்.பி. சௌமியாவை சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளார் எஸ்.பி. ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் புகார்தாரர், கோவில் ஊழியர்கள், அதிகாரி, தியாகராஜனை அழைத்து விசாரணை செய்துள்ளனர்.

கோவில் இ.ஓ.வை நாம் தொடர்பு கொண்டபோது அவர் நமது லைனை எடுக்கவில்லை, குறுஞ்செய்தி அனுப்பியும் பதில் தரவில்லை. கோவில் ஊழியர்களோ, சிவாச் சாரியார் தவறு செய்கிறார் என்பது இ.ஓ.வுக்கு நன்றாக தெரியும். அதுவும் கோவிலுக்குள்ளேயே தப்பு செய்தார் என்பது தெரிந்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. அதனாலேயே பாதிக் கப்பட்ட பெண் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தந்தார். இந்த பெண் மட்டுமல்ல, இவன் ஆசை வார்த்தைகளில் மயங்கி ஏமாந்துபோன இன்னும் சில பெண்களும் இருக்கிறார்கள்'' என பகீர் கிளப்புகிறார்கள்.

சிலமாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றபோது, பாரிசில் பிரதமருக்கு பூர்ண கும்ப மரியாதை செய்து வரவேற்பளிக்கப்பட்டது. அப்படி வரவேற்பை தந்தவர் பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்த தியாகராஜன்தான். இவனது அப்பா அகோரமூர்த்தி 25 வருடங்களுக்கு முன்பு இதே ஆம்பூர் கோவிலில் சிவாச்சாரியராக இருந்தபோது, ஒருபெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ததால் இங்கிருந்து மக்களால் அடித்துத் துரத்தப்பட்டார். அப்படி துரத்தப்பட்டவர் இப்போது பாரீசில் உள்ள சிவன் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். மோடியை வரவேற்பு தர ஏற்பாடு செய்யப்பட்டபோது, மகனை பாரிஸ் வரவைத்து வரவேற்பு தரச்செய்தார் என்கிறார்கள். இந்நிலையில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த தியாகராஜனை ஜுன் 9ஆம் தேதி விடியற்காலை கைது செய்துள்ளது போலீஸ்.

nkn140625
இதையும் படியுங்கள்
Subscribe