Advertisment

விஜய்யை வறுத்தெடுத்த ஜல்லிக்கட்டு ஜூலி!

juli

த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பேச்சுக்கு மெரீனா ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் நடிகை ஜூலி கொ டுத்துள்ள பதிலடி, தமிழ்நாட்டு அரசிய லில் பரபரப்பை பற்றவைத் துள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வேலூரில் தனது கட்சி நிர்வாகி களுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசும்போது சொன்ன குட்டிக்கதையில், யாராலுமே அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளை ஒன்றை ஒரு சிறுவன் புல்லுக்கட்டை போட்டு அடக்கிய தாகக் குறிப்பிட்டார். அந்த ச

த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பேச்சுக்கு மெரீனா ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் நடிகை ஜூலி கொ டுத்துள்ள பதிலடி, தமிழ்நாட்டு அரசிய லில் பரபரப்பை பற்றவைத் துள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வேலூரில் தனது கட்சி நிர்வாகி களுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசும்போது சொன்ன குட்டிக்கதையில், யாராலுமே அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளை ஒன்றை ஒரு சிறுவன் புல்லுக்கட்டை போட்டு அடக்கிய தாகக் குறிப்பிட்டார். அந்த சிறுவன் தான் தானும், த.வெ.க.வினரும் என்றும் கூறினார். 

Advertisment

அன்று அவரது பேச்சை கண்டித்து நடிகை ஜூலி வெளியிட்ட வீடியோவில், "வேலூரில் ஜல்லிக்கட்டு காளை பற்றி குட்டிக்கதை சொன்னீர்கள் அண்ணா... சாலையோரம் ஒரு காளை நின்றது. அதற்கு ஒரு குழந்தை புல்லுக்கட்டு கொடுத்து ஓரமாக விட்டது என்று சொன்னீங்க. உங்க கட்சியில் இருக்கிற பாதி பேர் சின்னவங்க. நீங்க சொல்றதை வேதவாக்கு என்று நம்பி, உண்மையிலேயே ஜல்லிக்கட்டு காளை முன்னாடி புல்லுக்கட்டு கொண்டு போய் நீட்டுனா என்ன ஆகும்? அப்படி ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு ஏற்கப் போறீங்களா? உங்களால போன உயிர் ஐம்பதாக இருக்கட்டும்... அதை 500 ஆக்கிடாதீங்க அண்ணா!'' என்று பேசியிருந்தார். 

Advertisment

இவரது இந்த வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் த.வெ.க.  தொண்டர்கள் பெருமளவு எதிர்ப்பு தெரிவித்து, மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருந்தனர். அசராத ஜூலி, அடுத்ததாக இன்னொரு வீடியோவையும் வெளியிட்டார்.

அதில், "விஜய் அண்ணா, உங்களது ரசிகர்கள் இன்னும் அரசியல்மயப்படவில்லை. உங்கள் ரசிகர்கள் என்னை அனைத்து சமூக வலைத்தளத்திலும் கடித்துவைக்கிறார்கள்.

இந்த மைனர் பசங்களில் முக்கால்வாசி போலி ஐடிகள் மட்டும்தான். அதை வைத்துதான் அவர்கள் என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நான் பயந்து அந்த வீடியோவை டெலிட் செய்ய மாட்டேன், எனது கருத்துக்களிலிருந்து பின்வாங்கவும் மாட்டேன். விஜய்ண்ணா என்னை பழிவாங்க வேண்டுமென்றால், நான் என் வீட்டில் இருப்பேன்... இல்லையென்றால் எனது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. ஆனால் அவங்கள விட்டுடுங்க.. நீங்க பனையூரை விட்டு வெளியே வர மாட்டீங்கல்ல.. நான் வேண்டு மானால் பனையூர் வருகிறேன்!

என்னை திட்டினால் என்னை திட்டுவது போலதான்!" என்று வரிக்கு வரி, விஜய் முதல்வருக்கு எதிராக எப்படி பேசி வீடியோ வெளியிட்டாரோ, அதே பாணியில் வீடியோ வில் பேசி வெளியிட்டிருக்கிறார்! தற்போது இந்த இரண்டு வீடியோக்களும் வைரலாக பலராலும் பகிரப்பட்டு வருகிறது!

nkn040326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe