மிழ்நாட்டில் ஒவ் வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு தொடங்குவது புதுக்கோட்டையில்தான் என்ற பெருமைக்கு கரும்புள்ளியாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கொலை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட் டம் திருவரங்குளம் அருகி லுள்ள வேப்பங்குடி கிராமத் தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் மகன் இன்பரசன் (20), கட்டுமான வேலை செய்து வருகிறார். மேலும், ஜல்லிக் கட்டு காளை வளர்ப்பதோடு, மாடுபிடி வீரராகவும் இருந் துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு முதல்முறையாக காளை ஒன்றை அடக்க, அது பொற்பனைக்கோட்டை "அன்பு பாய்ஸ்' காளை என்பது தெரியவந்தது. இன்பரசன் காளையை அடக்கியதை சமூக வலைத்தளங்களில் பெருமையாகப் பதிவிட்டதால், "அன்பு பாய்ஸ்' இளைஞர்களுக்கும், இன்பரசனின் நண்பர்களுக்கு மிடையே மோதல் உருவானது.

Advertisment

இந்த மோதலின் உச்சமாக கடந்த அக்டோபர் 20ஆம் தேதி, தெற்கு ராயப்பட்டி டாஸ்மாக் கடையில் இரு கும்பலுக்குமிடையே மோதல் வெடித்தது. இதில்  பொற்பனைக் கோட்டை மணக்கொல்லைதோப்பு சொக்கலிங்கம் மகன் விக்னேஷ் மீது வெங்காய வெடி வீசப்பட்டதில் காயமடைந்து சிகிச்சை பெற்றார். இந்த சம்பவத்தில் சம்மட்டிவிடுதி போலீசார், இன்பரசன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் உடனே அவர்களை பிணையில் விட்டது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு விக்னேஷ் அம்மா ராசாத்தி, இன்பரசனின் நண்பனின் அப்பாவுக்கு போன் செய்து, "என்னைக்கு இருந்தா லும் உங்க பசங்களை எங்க பசங்க விடமாட் டாங்க'' என்று கூறியுள் ளார்.

அதேபோல சில நாட்களுக்கு முன்பு, வடக்கு இம்னாம்பட்டி வீரமுத்து மகன் விக்னேஷ் தனது இன்ஸ் டாகிராம் பக்கத்தில் "விரைவில் தலைகள் சிதறும்'”என்ற வாசகத் துடன் பெரிய அரிவா ளுடன் நின்று போஸ் கொடுத்து படம் பதிவு செய்திருந்தான். இந் நிலையில், ஜனவரி 12ஆம் தேதி திங்களன்று, அழகம்பாள்புரத்தில் கட்டுமானப் பணிக்காக கம்பி கட்டும் வேலைக்குச் சக நண்பனுடன் சென்றபோது இன்பரசனை ஒரு கும்பல் வழிமறித்தது. வழி மறித்தவர்கள் அன்பு பாய்ஸ் விக்னேஷ் டீம் என்பதையறிந்து, பைக்கை போட்டுவிட்டு ஓட... விரட்டி விரட்டி வெட்டிச் சாய்த்தனர். "இந்த கைகள்தானே எங்க காளையை அடக்கியது, வெங்காய வெடி வீசியது, இந்த கைகள் இனி இந்த உடலில் இருக்கக்கூடாது" எனக்கூறியபடி கைகளை வெட்டி, இன்பரசனை துடிக்கத் துடிக்க கொன்றபின் தப்பியோடினர்.

Advertisment

தகவலறிந்து, இன்பரசன் சடலம் வைக்கப்பட் டிருந்த மருத்துவமனையில் திரண்ட இன்பரசனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கொலையாளி களை கைது செய்வதாக உறுதியளித்த பின்பே மறியலை கைவிட்டனர். இக்கொலை விவகாரத்தில், ஒரு பெண் உள்பட 7 பேரை வல்லத்திராகோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட மோதல் ஒரு கொலையில் முடிந்தது, அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

-செம்பருத்தி