"தமிழர்களின் மரபுவழி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை'’-என்ற தகவல் பரபரப்பாகப் பரவி தமிழ் இளைஞர்கள் மத்தியில் தணலை மூட்டி வருகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி மிருகவதைத் தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது ஒன்றிய அரசு. அந்தத் தடையை எதிர்த்து தமிழகத்தில் தன்னெழுச்சியான கிளர்ச்சி நடைபெற்றது. மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் பெருமளவில் திரண்டு சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி னர். இந்த எழுச்சிமிகும் போராட்டத்தை உலகமே திரும்பிப் பார்த்தது.

jj

Advertisment

இந்தப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் புரட்சி என்றும் மெரினா புரட்சி என்றும் அழைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை அப்போதிருந்த அ.தி.மு.க. அரசு போலீஸ் மூலம் அடக்குமுறையை ஏவிக் கலைத்தது. இதன் மூலம் அது ஒட்டுமொத்த தமிழர்களின் கண்டனத்தையும் சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து மிருகவதை தடைச் சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு, அவசர சட்டத்தை இயற்றி, சட்டமன்றத்திலும் அதைத் தீர்மானமாக நிறை வேற்றியது. இதற்கு அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்பு தல் அளித்தார். இதன் மூலம் தமிழகத் தில் ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப் பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பீட்டா மற்றும் கூபா, பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் தமிழக அரசு பிறப்பித்த அந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இளைஞர்களை அதிரவைத்துள்ளன.

இம்மனுக்கள் மீது கடந்த மாதம் 29 ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இதனை விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன்பு விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை சுட்டிக்காட்டி னார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுதாரர், எதிர் மனுதாரர்கள் என அனைத்து தரப்பும் 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட னர். வழக்கு நவம்பர் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

jj

இந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக இணைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனிடம், அது குறித் துக் கேட்டபோது, "தமிழர்களின் பண்பாட் டிற்கு அடையாளமாக இருக்கிறது ஜல்லிக் கட்டு. காதலையும் வீரத்தை யும் போற்றிப் பாடிய தொன்மையான தமிழ் இலக்கியங்களில். ஜல்லிகட்டு 'ஏறுதழுவு தல்' எனும் பெயரில் இடம்பெற்று உள் ளது. பன்னெடுங்கால மாக தமிழர்களுக்கு ஏறு தழுவுதல் மீதான பிணைப்பு இருப்பதையே இது காட்டுகிறது. இந்த ஜல்லிக்கட்டால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் இல்லை. மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரிகள், கால்நடைத்துறை யினர், மருத்துவர்கள் ஆகியோ ரின் jjமேற்பார்வையிலேயே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சாரம் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1948-ன் படி, ஜல்லிக்கட்டை அனுமதிப்பது அவசியம். இது சாதி, மதம் கடந்த விளையாட்டு''’என்றார் அழுத்தமாக.

இதுகுறித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர் நம்மிடம், "தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து 7 ஆம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி யுள்ளோம். மத்திய -மாநில, அரசுகள் நீதி மன்றத்தில் வலுவான வாதத்தை வைக்கவேண் டும் என்பதற்காக, இந்த சிறப்புக் கூட்டத்தை நடத்தியுள்ளோம். அரசுக்கும் எங்களது கோரிக்கையை தெரிவித்துள்ளோம். இருந்த போதும் ஜல்லிக்கட்டு விசயத்தில் பொதுமக்களி டம் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது வருத்தத்திற்குரியது. ஜல்லிக்கட்டையே குறிவைக்கும் பீட்டா, கூபா அமைப்புகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் பின்னணியைத் தோலுரித்துக் காட்டுவோம். இதற்காக நாங்கள் நடத்தவிருக்கும் அடையாள நிகழ்வு, இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற் படுத்தும்''’என்கிறார் காட்டமாய்.

தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டை அழித்தொழிக்கத் துடிக்கும் சக்திகளுக்கு எதிராக. தமிழக இளைஞர்களும், தமிழர் நல அமைப்புகளும் அணி திரண்டு வருகின்றன.

மீண்டும் ஒரு மெரினா புரட்சிக்குத் தயாராகிறது தமிழகம்.

-அண்ணல்