Advertisment

விளம்பரத்தில் காணாமல்போன ஜக்கி புகைப்படம்! எதிர்ப்புக்குக் கிடைத்த வெற்றி!

dad

முதல் நாள் தலைமை விருந் தினர்களில் ஒருவராக நாளிதழ் விளம்பரத்தில் இடம்பெற்ற ஜக்கி வாசுதேவ், எதிர்ப்பு காரணமாக மறு நாள் விளம்பரத்தில் நீக்கப்பட்ட நிகழ்ச்சி கோவையில் நடை பெற்றுள்ளது.

Advertisment

கோவை மாநகரின் பீளமேடு பகுதியில், இந்தியாவின் மாபெரும் ரியல் எஸ்டேட் மாநாடு மார்ச் 18, 19-ஆம் தேதிகளில் நடப்பதாக மார்ச் 15, தமிழ் இந்து நாளிதழில் முழுப் பக்க விளம்பரம் தரப்பட்டிருந்தது. நர்விகேட் 2023 (சஆதயஒஏஆபஊ 2023) எனும் அந்த மாநாட்டில் தலைமை விருந

முதல் நாள் தலைமை விருந் தினர்களில் ஒருவராக நாளிதழ் விளம்பரத்தில் இடம்பெற்ற ஜக்கி வாசுதேவ், எதிர்ப்பு காரணமாக மறு நாள் விளம்பரத்தில் நீக்கப்பட்ட நிகழ்ச்சி கோவையில் நடை பெற்றுள்ளது.

Advertisment

கோவை மாநகரின் பீளமேடு பகுதியில், இந்தியாவின் மாபெரும் ரியல் எஸ்டேட் மாநாடு மார்ச் 18, 19-ஆம் தேதிகளில் நடப்பதாக மார்ச் 15, தமிழ் இந்து நாளிதழில் முழுப் பக்க விளம்பரம் தரப்பட்டிருந்தது. நர்விகேட் 2023 (சஆதயஒஏஆபஊ 2023) எனும் அந்த மாநாட்டில் தலைமை விருந்தினர்களாக தமிழக அமைச்சர் கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி, செந்தில் பாலாஜி உள்ளிட்டவர் களோடு ஜக்கி வாசுதேவும் கலந்து கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment

dd

16 மாநிலங்களின் 35 நகரங் களைச் சேர்ந்த 1500 ரியல் எஸ்டேட் தொழில்சார் நிபுணர்கள், 45 கூட் டமைப்புகள் பங்குபெறுவதாகவும் இந்த விளம்பரம் தெரிவித்திருந்தது.

இந்த விளம்பரத்தைக் கவனித்த, ஈஷாவில் சிறைப்பட்டிருக்கும் இரு மகள்களுக்குத் தந்தையும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான காம ராஜ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்டு, “"நிகழ்ச்சிக்கு 420 ஜக்கியை அழைத்தால், நிகழ்ச்சி நடைபெறும் பி.எஸ்.ஜி. வளாகத்தில் அம்பேத்கார், பெரியார், இடதுசாரி இயக்கங்களின் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்''’என தெரிவித்தார்.

dd

அவரின் எச்சரிக்கையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காவல்துறையில் தெரிவித்ததையடுத்து, சில சி.ஐ.டி. அதிகாரிகள் பேராசிரியர் காமராஜைத் தொடர்புகொண்டு விசாரித்திருக் கிறார்கள். அப்போது அவர்களிடம், "ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டங்களைத் தடுக்கும் மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர் ரவிக்கு, இந்த சூதாட்டங்களால் இறந்துபோனவரின் அஸ்தியை அனுப்பும் நிகழ்ச்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெறுகிறது. அதுமுடிந்ததும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கலந்துபேசி முடிவெடுக்க உள்ளோம்''’எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, 16-03-2023 அன்று தமிழ் இந்து தினசரி இதழில் அதே ரியல் எஸ்டேட் மாநாட்டுக்கான முழுப்பக்க விளம்பரம் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த புதிய விளம்பரத்தில் ஜக்கியின் படம் இடம்பெறவில்லை. இந்த மாற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த பேராசிரியர் காமராஜ், “"இது நமது இயக்கங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். ஜக்கி எந்த பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டாலும் எதிர்ப்புத் தெரிவிப்போம்''’ எனத் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர்களில் ஒருவராகக் கலந்துகொள்கிறாரோ… இல்லையோ, எதிர்ப்புக்குப் பயந்து புகைப்படத்தை நீக்கியதே ஜக்கிக்கு மூக்குடைப்புதான்.

-சூர்யன்

nkn220323
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe