Advertisment

JAIL FOLLOWUP - 18 தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்!

jail

 

முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு  (APP)ஆப்பு!

த்திய சிறைகளுக்குள் பொருள்கள் வாங்குவதை  ஒழுங்குபடுத்தி ஊழல்களைக்  குறைத்ததுபோல்,  கிளை மற்றும் மாவட்டச் சிறைகளிலும்  மளிகைப் பொருள்கள், காய்கறி கள் வாங்குவதை ஒழுங்குபடுத்தவும், மத்திய சிறைகளுக்கும் சேர்த்து ஒரு செயலியை(APP)சிறை DGP உருவாக்கியுள்ளார். சிறைக்குள் பொருள்கள் வந்தால், அதனை இருப்புப் புத்தகத்தில் (Stock Book) , இச்செயலி வாயிலாக கணினியில் மென்பொருள் (Software) மூலம் ஏற்றியும், தேவைப்படும்போது அதுவாகவே கழித்துக்கொள்ளும் வகையிலும்,  இச்செயலியை சிறை DGP உருவாக்கி நடைமுறைப்படுத்தவுள்ளார். இதற்காக ரேஷன் ஸ்டோர் காவலர்களுக்கும், சிறை அதிகாரிகளுக்கும் சிறை உஏட அலுவலகத்தில் தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.      

Advertisment

பொருள் பெறப்படும் முறை:  சிறை விதி: 1094/1983, 1063/2024 -ன்படி சிறைக்குள் வரும் பொருள்கள் படிவம் 21-ன்படி பேணப்படும் Main Gate Register-ல் பதிவு செய்யப்பட வேண்டும். சிறை விதி: 1100/1983, 1069/2024-ன்படி Counterfoils of the receipt of the articles supplied/Delivery Challan/Delivery Note ஆகியவற்றை  சரிபார்த்த பின்பே, சிறை கான்ட்ராக்டர்களுக்கு பணம் வழங்கப்பட வேண்டும். சிறை விதி: 20(6)/1983, 29(6)/2024-ன்படி சிறைக்குள் வரும் கச்சாப் பொருள்களை சிறைக் கண்காணிப்பாளரும், ரேஷன் பொருள்களை கூடுதல் கண்காணிப்பாளர்களும் (சிறை விதி: 30(16)/1983, 39(12)/2024-ன்படி), எடை போட்டு சரிபார்த்து வாங்க வேண்டும்.  சிறைக் கண்காணிப்பாளர் ஒவ்வொரு மாதமும் சிறை தொழிற்கூடத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டுமென்றும்  (1045/1983, 1018/2

 

முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு  (APP)ஆப்பு!

த்திய சிறைகளுக்குள் பொருள்கள் வாங்குவதை  ஒழுங்குபடுத்தி ஊழல்களைக்  குறைத்ததுபோல்,  கிளை மற்றும் மாவட்டச் சிறைகளிலும்  மளிகைப் பொருள்கள், காய்கறி கள் வாங்குவதை ஒழுங்குபடுத்தவும், மத்திய சிறைகளுக்கும் சேர்த்து ஒரு செயலியை(APP)சிறை DGP உருவாக்கியுள்ளார். சிறைக்குள் பொருள்கள் வந்தால், அதனை இருப்புப் புத்தகத்தில் (Stock Book) , இச்செயலி வாயிலாக கணினியில் மென்பொருள் (Software) மூலம் ஏற்றியும், தேவைப்படும்போது அதுவாகவே கழித்துக்கொள்ளும் வகையிலும்,  இச்செயலியை சிறை DGP உருவாக்கி நடைமுறைப்படுத்தவுள்ளார். இதற்காக ரேஷன் ஸ்டோர் காவலர்களுக்கும், சிறை அதிகாரிகளுக்கும் சிறை உஏட அலுவலகத்தில் தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.      

Advertisment

பொருள் பெறப்படும் முறை:  சிறை விதி: 1094/1983, 1063/2024 -ன்படி சிறைக்குள் வரும் பொருள்கள் படிவம் 21-ன்படி பேணப்படும் Main Gate Register-ல் பதிவு செய்யப்பட வேண்டும். சிறை விதி: 1100/1983, 1069/2024-ன்படி Counterfoils of the receipt of the articles supplied/Delivery Challan/Delivery Note ஆகியவற்றை  சரிபார்த்த பின்பே, சிறை கான்ட்ராக்டர்களுக்கு பணம் வழங்கப்பட வேண்டும். சிறை விதி: 20(6)/1983, 29(6)/2024-ன்படி சிறைக்குள் வரும் கச்சாப் பொருள்களை சிறைக் கண்காணிப்பாளரும், ரேஷன் பொருள்களை கூடுதல் கண்காணிப்பாளர்களும் (சிறை விதி: 30(16)/1983, 39(12)/2024-ன்படி), எடை போட்டு சரிபார்த்து வாங்க வேண்டும்.  சிறைக் கண்காணிப்பாளர் ஒவ்வொரு மாதமும் சிறை தொழிற்கூடத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டுமென்றும்  (1045/1983, 1018/2024), வருட முடிவில் கச்சாப் பொருள்கள் மற்றும் சிறை செய்பொருள்களை  (Finished Goods) முறையாகக்  கணக்கிட்டுச் சான்றிட வேண்டும் எனவும் (1065/1983, 1035/2024) கூறப்பட்டுள்ளது. சிறைவிதி : 1071/1983, 1040/2024-ன்படி ரேஞ்ச் DIG, ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் அனைத்து இருப்புப் பொருள்களையும் சோதனை செய்து சரிபார்த்துச் சான்று அளிக்கவேண்டும்.  மேற்கூறியுள்ள  அனைத்தையும் ரேஞ்ச் DIG-யும் அவரது அலுவலகத்திலுள்ள தணிக்கைக் குழுவும், ஆய்வின்போது முழுமையாகச் சோதனை செய்யவேண்டுமென, சிறை DGP,  தனது  சுற்றறிக்கை (எண் : 27319/ஐசி.2/2007 நாள்: 28.03.2013)  மூலம்  உத்தரவிட்டுள்ளார்.  ஆனால், அதிகாரிகள் இதனை முறையாகப் பின்பற்றுவது கிடையாது.          

சிறை தொழிற்சாலைக்கு கச்சாப் பொருள்கள் கொள்முதல்: சிறை விதி 1035/1983, 1040/2024-ன்படி,  சிறையின் தொழிற்சாலைக்கு கச்சாப் பொருள் களின் அளவு மற்றும் தரத்தைச் சோதனை செய்து கொள்முதல் செய்வது சிறையின் பண்டகக் காப்பாளர் மற்றும் சிறை கண்காணிப்பாளரின் பணியாகும். தமிழ்நாடு நிதி விதிகள் தொகுதி-I, பகுதி-VII, விதி எண்: 125(16)-ன்படி, அரசு அலு வலகத்திலுள்ள ஸ்டோர்களுக்கு  பொருள்களைப் பெறும் அதிகாரி, வழங்கப்பட்ட பொருள்களின் விவரக்குறிப்புகளில்(specifications)குறிப்பிட்டுள்ள  அளவு மற்றும் தரத்தைச் சரிபார்த்து, அவை எல்லா வகையிலும் திருப்திகரமாக இருப்பதை உறுதி செய்த பிறகுதான் கான்ட்ராக்டர்களுக்கு பணம் கொடுக்கவேண்டும். நிதி  விதி எண்: 132 (A) (1) (a)-ன்படி பொருள்களைப்  பெறும்போது, ஏதாவது சேதமடைந்து/தரமில்லாமல் பொருள்கள் பெறப்பட்டால், அரசுக்கு ஏற்படும் இழப்பிற்கு, பொருளைப் பெறும் அதிகாரியே முழுப்பொறுப் பினை ஏற்கவேண்டும்.  சிறைத்துறையைப்  பொறுத்தவரை, சிறைக் கண்காணிப்பாளரே  பொருள்களைப்  பெறும் அதிகாரி ஆவார். 

jai1

Advertisment

தமிழ்நாடு நிதி விதிகள் தொகுதி II-ல், பிரிவு 9A (1-17)-லும், உற்பத்தித்துறை என்கிற தலைப்பின் கீழுள்ள சிறை விதிகளிலும், பண்டகக் காப்பாளரின் பணி குறித்தும், இதனை ஆய்வு செய்யவேண்டிய அதிகாரிகள் குறித்தும் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் நிதி விதி எண் : 137, 138-ன்படி பண்டகக் காப்பாளர், பொருள்களை வரவு வைப்பதும், இருப்புக் கணக்குகளைப் பராமரிப் பதும், பொருள்களுடன் பெறப்படும் பில்களில், பொருள்கள் நல்ல முறையில் பெறப்பட்டது எனப்  பொருளை வாங்கும் அதிகாரியிடமிருந்து கண்டிப் பாகச் சான்று  வாங்குவதும்,   இவ்வாறெல்லாம் பதிவு செய்த பிறகுதான் பணம் கொடுக்கவேண்டும் எனக் கூறுகிறது. சிறையின் ரேஷன் ஸ்டோருக்கு பண்டகக்காப்பாளர், துணைச் சிறை அலுவலர் தான்.   

ரேஞ்ச் டி.ஐ.ஜி.யின் முதன்மையான பணி: மேற்கூறிய அனைத்துப் பணிகளும் முறையாக நடைபெறுவதையும், உணவுப் பொருள்கள் மற்றும் சிறை தொழிற்சாலைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் கச்சாப் பொருள்கள் ஆகியவற்றின் அளவும்  தரமும் சரியாகப் பெறப்பட்டுள்ளனவா என்பதையும், சிறைகளில் பணப்பரிவர்த்தனை நடைபெறும் விதத்தையும், அரசுக்கு ஏதேனும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பதையும், ஒவ்வொரு முறை வருகை/ஆய்வின் போதும் 100 சதவீத சோதனை நடத்தி உறுதி செய்வது,  ரேஞ்ச் டி.ஐ.ஜி.யின்  முதன்மையான பணி என  நிதி விதி : 139, அரசாணை எண் : 1739 உள் (சிறை-D) துறை, நாள் : 20.11.1991, சிறை பழைய விதி : 18(2) (vii), (viii)/1983, சிறை புது விதி : 27(3) (xi) (xii)/2024,, சிறை DGP சுற்றறிக்கை எண்: 8204/ஆ.2/2001, நாள்: 21.06.2001  மற்றும் 41030/ஐசி.2/2008, நாள்: 30.09.2008 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.

சிறை DGP-யின் அலுவலகத்திலுள்ள தணிக் கைக்குழுவால்,  இருப்பு தணிக்கை சோதனை தமி ழக சிறைகளில் எவ்வாறு நடத்தப்பட வேண்டு மென்பதையும், அதற்கான ஒழுங்குமுறைகளை யும் தமிழ்நாடு நிதி விதிகள் தொகுதி- I-ல், பகுதி-II, பிரிவு-37 & பகுதி- VII, பிரிவு-146, நிதி விதி தொகுதி-II-ல், பிற்சேர்க்கை : 9ஆ (1-7)-ல் தெரிவிக் கப்பட்டுள்ளது. மேலும்,  மத்திய சிறைகளில் பொருள் கள் இருப்பு சோத னையின்போது தணிக்கைகுழு எவ்வாறு செயல்படவேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பிற்சேர்க்கை 9A (1-10)-ல்  தெரிவித்துள்ளது. இதன்படி,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் நடப்பதே கிடையாது.  

 ரேஞ்ச்-DIG-களுக்கும், தணிக்கை குழுக்களுக்கும், சிறை உஏட வழங்கிய சுற்றறிக் கையில் (எண் : 24246/IAA (1)/99, நாள்: 05.05.1999) சிறையின் உணவுக் கிடங்கு, சிறை தொழிற் சாலைக்கான கச்சாப் பொருள் இருப்பு, சிறை தொழிற்சாலை யில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் இருப்பு, சிறை மருத்துவமனையிலுள்ள மருந்துகளின் இருப்பு,  இவை யனைத்தையும் தணிக்கைக் குழுக்கள் வழக்கமான/திடீர் சோதனைகளின்போது முழு மையாக  ஆய்வு செய்யவேண் டும் என்றும், ஆய்வு முடிந்த பின் தணிக்கைக் குழுக்களின் தலைவரான, சம்பந்தப்பட்ட ரேஞ்ச் DIG-களிடம் கலந் தாலோசனை  செய்யவேண் டும் எனவும், சிறை DGP  உத்தரவிட்டுள்ளார்.  

 இந்த ஆணைகளை முறையாகப் பின்பற்றாததால், கோவை மத்திய சிறையின் தொழிற்கூட முறைகேடு தொடர்பாக 2006-ல் அப்போதைய சிறை DIG எஸ்ரா, சிறை நட ராஜேந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறைக்குள் வந்திறங்கும் எந்தப் பொருளுக்கும் இன்றுவரை மின்னணு பில்/ரசீதுகள், E#way பில்கள், லாரி எடை பில்கள்  (Lorry weighing receipts) ) பெறாமல், கையால் எழுதப்படும் பில்களையே பெற்று வருகின்றனர்.   ஏனென்று  சிறை அதிகாரிகளைக் கேட்டால், தமிழக அரசோ, சிறை DGPயோ மின்னணு பில்களை மட்டும்தான் பெறவேண்டும் என சுற்றறிக் கையோ, ஆணையோ  பிறப் பிக்கவில்லை எனக் கூறி தப் பித்துக் கொள்கின்றனர். பொருள் கொள்முதல் ஊழலுக்கு அச்சாணியே  இந்த கையால் எழுதப்படும் பில்கள்தான். ஏனென்றால், முறையாக மின்னணு பில்கள் பெற்றால்,  ஊழல்செய்து பணம் சம்பாதிக்க முடியாது.  தமிழக அரசோ, சிறை உஏடயோ, கையால் எழுதப் பட்ட பில்களோடு வரும் பொருள்களை சிறைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று சுற்றறிக்கையோ, ஆணையோ வெளியிட்டால்தான் இந்த ஊழல் குறையும். ரேஞ்ச் DGP-களுக்கும், தணிக்கைக் குழுவினருக்கும், உளவுப் பிரிவினருக்கும் இவையனைத் தும் தெரிந்திருந்தாலும்,  கண்டுகொள்ளாமல் இருப்ப தற்காகவே பெரிய அளவில் பணம் தரப்படுகிறது.  இவர் கள் மூவருக்கும் பணம் கொடுக்கவில்லை என்றால் ஆய்வு, தணிக்கை,  தலைமை யிடத்துக்கு  அறிக்கை அனுப்பிவிடுவேன்..’என்றெல் லாம்  மிரட்டி, சிறைக் கண்காணிப்பாளர்களிடம் பணம் பறிப்பார்கள்.   

தமிழகத்திலுள்ள சிறை களில் பொருள்கள் வாங்கு வதில்  எவ்விதமான ஊழலும் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் இந்தச் செயலியை (App)  சிறை DGP மிகுந்த சிரத்தை யுடன் உருவாக்கியுள்ளார்.  “இதெல்லாம் ஆஉஏட மகேஷ்வர் தயாள் இருக்கும் வரையிலும்தான். இவர் டிரான்ஸ்பரில் சென்றபின் இந்தச் செயலியை நாம் ஒருகை பார்த்துவிடலாம்”என  முணுமுணுக் கின்றனர்  சிறைத்துறையின் உயரதிகாரிகள்.

(ஊழல் தொடர்ந்து கசியும்…)

jail2

 

nkn270825
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe