(36) அட்மிஷன் அடி மிரட்டல்!


பிரிட்டிஷ் இந்தியாவில்  இளம் குற்றவாளிகளின் சீர்திருத்தம் தொடர்பான நிறுவனங் கள் சிறைத்துறை தலைவரின் (ஐ.ஜி.) கட்டுப்பாட்டில் இருந்தது.  சீர்திருத் தப்பள்ளிகள் சட்டம்,  1897-ன் பிரிவு 6-ன்படி, இவரே சீர்திருத்தப்பள்ளி களின் தலைமை ஆய்வாளராக இருந்தார். தமிழக உள்துறையின் அரசாணை எண்:873, நாள்: 05.04.1947-ன்படி சிறைத்துறை ஐ.ஜி.யிட மிருந்து பிரித்து, தனியாக ஒரு தலைமை ஆய்வாளர் பணியிடம் உருவாக்கப்பட்டு, அவரது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட் டது. மேலும் சிறைத்துறையின் கீழ் இருந்த சீர்திருத்தப்பள்ளிகள் மற்றும் சிறார்கள் சட்ட நிர்வாகம், தமிழக அரசின் சமூகநலத்துறைக்கு அரசாணை எண்: 697, நாள்: 06.09.1975-ன்படி மாற்றப்பட்டது. 

Advertisment

சிறுவர் சீர்திருத்தச் சிறை என்பது சிறுவர் சீர்திருத்தப்பள்ளி என மாறி,  தற்போது அரசினர் கூர்நோக்கு இல்லம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் சிறப்பு இல்லம், பாதுகாப்பு இல்லம், பராமரிப்பு இல்லம், மறுவாழ்வு          இல்லம் என அதன் தன்மைக்கேற்ப ஒவ்வொன்றும் பிரித்து  செயல்படுத்தப்படுகிறது. 

Advertisment

சிறார் நீதிச் சட்டம் 2015-ன் பிரிவு 2(45)-ல் கூறப்பட்டுள்ள சிறிய குற்றங்கள்(Petty offences) என்பது மூன்று ஆண்டுகள் வரை தண்டனை வழங்குவதற்குரிய குற்றங்களாகும். பிரிவு 2(54)-ன்படி கடுமையான குற்றங்கள்  (Serious offences) என்பது 3 முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்குவதற்குரிய குற்றங்களாகும். பிரிவு 2(33)-ன்படி கொடூரமான குற்றங்கள் (Heinous Offence) என்பது 7 ஆண்டுகள் அல்லது அதற்குமேல் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களை இளம் குற்றவாளிகள் என்று கூறுவதற்குப் பதிலாக, பிரிவு 2(13)-ல் கூறப்பட்டுள்ளவாறு  "சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள்' (children conflict with law) என்று அழைக்கப்படுகின்றனர். பிரிவு 107-ன்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களைக் கையாள்வதற்காக, தமிழகத்தில்  சிறார் உதவி காவல் பிரிவு (Juvenile Aid Police Unit#JAPU) என்று காவல்துறையில் தனியாக ஒரு பிரிவு  உருவாக்கப் பட்டு, ஒவ்வொரு காவல்நிலையத்திலும் காவல் ஆளிநர் ஒருவர் நியமிக்கப்பட்டு செயல்படுகிறது.  

அட்மிஷன் அடி: 

தாம்பரத்திற்கு அருகிலுள்ள கன்னடபாளை யம், குப்பைமேடு பகுதியில் வசித்துவந்த பட்டிய-ன வகுப்பைச் சேர்ந்தவர் ப்ரியா. இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு ஆறு குழந்தைகள். அதில் மூத்த மகனான கோகுல் ஸ்ரீ (17) ஓரிடத்தில்  ‘வாட்ச்மேன்’ வேலை பார்த்தவாறு,  அங்கேயே வசித்து வந்தார். இவர் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, நவம்பர், 2022-ல் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்திலிருந்து  பெயிலில் வெளியே வந்துள்ளார். 

Advertisment

jail1

இந்நிலையில், கடந்த 29.12.2022-ல் தாம்பரம் ரயில்வே குடியிருப்பில் இருந்த பேட்டரியைத் திருடியதாக,  தாம்பரம் ரயில்வே காவல்நிலையத் தில் இவர் மீது (குற்ற வழக்கு எண்.12/2022, சட்டப்பிரிவு: 3(a) RPUP Act, 1966) வழக்கு பதிவாகி கைது செய்யப்பட்டு, 30.12.2022-ல்  செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். 31.12.2022 அன்று உணவு ஒவ்வாமையால் வலிப்பு ஏற்பட்டு சிறுவன் இறந்துவிட்டதாக சிறுவனின் தாய் பிரியாவிடம்  தெரிவிக்கப்பட்டது. மேலும் கூர்நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் என்ற  முறையில் ந.மோகன், டி1  செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில்,  குற்ற வழக்கு எண்: 599/2022#CRPC,, பிரிவு 176(1A) (i)  சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். கோகுலின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் ரீனா முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுவனின் உடலில் 96 காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

நீதி விசாரணை: 

கூர்நோக்கு இல்லத்தில் நீதித்துறை நடுவர், காவல்துறையினர் 26 பேரிடம் விசாரணை செய்ததில், இதற்குமுன் கூர்நோக்கு இல்லத்தில் கோகுல் இருந்தபோது,  பணியாளர்களுக்கும் கோகு லுக்கும் முன்விரோதம் ஏற்பட்டிருந்ததாகவும், சிறுவன் 2-வது முறை வந்தபோது சற்று திமிராகவே நடந்து கொண்டதாகவும், அதற்கு உதவி கண்காணிப்பாளர் ட.வித்யா சாகர்,  “சிறுவனுக்கு அட்மிஷன் அடி”  என்று கூறி, அனுமதி எடுக்கும்போது லத்தியால் அடித்ததாகவும், வலி தாங்கமுடியாமல் சிறுவன் இவரது கையைக் கடித்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் த.சந்துரு, முடிதிருத்துநர் ஓ.ஐ.ராஜ், வார்டன்கள் உ.விஜயகுமார், ங.சரண்ராஜ் ஆகியோர்  ஒன்றுசேர்ந்து தாக்கியதில்,  சிறுவன் அங்கேயே இறந்தது தெரியவந்தது. அதன்பிறகு கொலை வழக்காக மாற்றப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் ந.மோகன் உள்பட 6 பேரையும் 14.01.2023-ல் செங்கல்பட்டு காவல் துறையினர் கைது செய்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த அரசுசாரா தொண்டு நிறுவனமான People’s Watch-ன் பங்களிப்பு அளப்பரியது.   பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில்,  சிறுவனின் தாய்க்கு இழப் பீடாக ரூ.10 லட்சமும், ஒரு வீடும் தமிழக அரசால் வழங்கப்பட்டது. 

நீதிபதி சந்துருவின் ஒரு நபர் கமிட்டி:  

சிறுவன் கோகுலின் உயிரிழப் பும்,   2012-லிருந்து 2022 வரை  10 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தப்பித்து ஓடியதும், சிறுவர்கள் கலவரங்களில் ஈடுபடுவதும், தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள் வதும் என அதிகளவில் சம்பவங்கள் நடந்துள் ளன.  தமிழக காவல் துறை வெளியிட்ட புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் சிறார்கள் செய்த குற்றங் கள் 2019-2686, 2020-3394, 2021-2212, 2022-2607 ஆகும். கடந்த 14.04. 2023-ல் தமிழ்நாட்டில் சிறார் நீதிச் சட்டத்தின் கீழுள்ள இல்லங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். இக்கமிட்டி 14.11.2023-ல் 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.   

அதில், சமூகப் பாதுகாப்பு இயக்குநரகத்தை இரண் டாகப் பிரித்து "சிறப்பு சேவைகள் துறை' என்ற பெயரில் புதிதாக ஒரு துறையை உருவாக்கி, அதற்கென்று ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை, இத்துறையில் மூன்று வருடங்களுக்கு இயக்குநராக நியமித்து, அவரது தலைமையில் செயல்பட வேண்டும்.  சிறைச்சாலை போன்று தோற்றமளிக்காத வகையில்,  ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்துடன் கூடிய கூர்நோக்கு இல்லம் அமைந்திருக்க வேண்டும்.  ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு உளவியலாளரை   (Psychologist) நியமிக்க வேண்டும்.  முன்னாள் சிறார் குற்றவாளிகளை அரசு இல்லங்களில் ஊழியர்களாக நியமிக்கும் நடைமுறைக்கு எதிராகவும், அந்த இடங்களில் முன்னாள் படை வீரர்களை நியமிக்கவேண்டும்'’என அக்குழு பரிந்துரைத்தது.  

jail2

மேலும், "தற்போதுள்ள காவலாளிகளை வேறு துறைகளுக்கு அனுப்பிவிட்டு, தமிழ்நாடு சிறப்பு ஆயுதப்படை போலீசாரை நியமிக்கவேண்டும். அந்த போலீசார் சாதாரண உடையிலோ அல்லது வெள்ளைச் சீருடையிலோ இருக்கவேண்டும் அரசு இல்லங்களில், 13-16 வயதுள்ளவர்கள் ஒரு குழுவாகவும், 16-18 வயதுடையவர்கள் மற்றொரு குழுவாகவும் பிரிக்கப்பட வேண்டும்'’என பல பரிந்துரைகள் அவ்வறிக்கையில் இடம் பெற்றிருந்தன. 

கமிட்டியின் பெரும்பான்மையான பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் கீழ் தமிழ்நாடு அரசால் 2017-ல் வெளியிட்ட சிறார் நீதி விதிகளில்G.O.Ms.No.5, Social Welfare and Women Empowerment [SW 8 (1)], Date:30.01.2024-ன்படி திருத்தம் செய்தது. மேலும் “சமூ கப் பாதுகாப்பு இயக்குநரகம்” என்ற இத்துறையின் பெயர்,  “குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை” எனG.O. Ms. No. 14, Social Welfare and Women Empowerment [SW 8(1)], Date: 04.03.2024-ன்படி மாற்றப்பட்டது. 

(ஊழல் தொடர்ந்து கசியும்)