சிறை மருத்துவர் பணியானது, ஒரு மத்திய சிறையின் கண்காணிப்பாளருக்கு நிகரான முக்கியத்துவம் மிக்கதாகும். சிறை மருத்துவமனை மற்றும் சிறை மருத்துவர்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
மத்திய சிறையின் முதன்மை மருத்துவ அதிகாரிக்கும், சிறை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கும் பொறுப்புகள் வெவ்வேறு. சிறை விதி: 90-ன்படி தமிழகத்தின் ஒவ்வொரு மத்திய சிறையின் அருகிலுள்ள, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீனால் (Dean) நியமிக்கப்படும் அறுவை சிகிச்சை நிபுணர்(Surgeon) அல்லது மருத்துவர் (Physician) அந்த மத்திய சிறை யின் மூத்த மருத்துவ அதிகாரியாக இருப்பார். முதன்மை மருத்துவ அதிகாரி உங்ஹய் கட்டுப் பாட்டிலும், சிறை மருத்துவமனையில் பணிபுரியும் Doctors, Staff Nurses, Pharmacists ஆகியோர் மருத்துவ சேவைகள் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநரின் கீழும் வருவார்கள்.
G.O.Ms.No.517, Ds (சிறை-V) துறை, நாள் : 10.03.1988 மற்றும் சிறை ஐன் சுற்றறிக்கை எண்: ஏஒ/5027/85, நாள் : 30.03.1988 மற்றும் சிறை விதி:104 ஆகியவற்றின்படி, அரசு மருத்துவமனைகளில் Assistant Surgeon பதவியில் பணிபுரியும் மருத்துவர்கள், மத்திய சிறையில் உள்ள மருத்துவமனைக்கு சுழற்சி முறையில் அயல்பணியாக நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு ஒரு மருத்துவரை மத்திய சிறைக்கு நியமித்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் போன்றவற்றை, மருத்துவ சேவைகள் மற்றும் குடும்பநல இயக்குநர் சிறை DGP-யிடம் கலந்தாலோசித்து செயல்படுத்துவார். சுமார் 15 வருடங்க ளுக்கு முன்பு வரை சிறை மருத்துவர் பணியிடம் என்பது Punishment Post-ஆக இருந்தது. தற்போது அந்தச் சூழல் மாறியுள்ளது. தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மத்திய சிறையிலும் தற்போது மூன்று மருத்துவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒரு செவிலியரும், ஒரு மருந்தாளுநரும், மத்திய சிறையில் உள்ள மருத்துவமனைக்கு சுழற்சி முறையில், மத்திய சிறை அமைந்துள்ள மாவட்டத்தின், மருத்துவ சேவைகள் மற்றும் குடும்பநலத்துறை இணை இயக்குநரால் அயல்பணியாக நியமிக்கப்படுகிறார்கள். மேலும், Male Nursing Assistant (MNA) என்ற மருத்துவக் கடைநிலை ஊழியர்கள் இருவர் பணிபுரி கிறார்கள். இவர்கள் சிறைத்துறை அதிகாரி களால் நியமிக்கப்படுபவர்கள்.
மொத்தத்தில் ஒரு மத்திய சிறையின் மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள், இவர்களுக்கு உதவியாக ஒரு செவிலியர், இரண்டு ஙசஆ-க்கள் பணிபுரிகின்றனர். சிறை மருத்துவமனையில் உள்ள மருந்துகள் வைப்பு அறைக்கு பொறுப்பாகவும், மருந்துகள் வழங்கவும், மருந்தாளுநர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார்.
மாவட்ட சிறை மற்றும் கிளைச் சிறைகள்: சிறை விதி: 83/1983, 90/2024-ன்படி, மாவட்ட சிறை மற்றும் கிளைச் சிறைகளுக்கு, அருகிலுள்ள அரசு மருத்துவமனையின் தலைமையிடத்து உறைவிட மருத்துவ அதிகாரிதான் (Resident Medical Officer #RMO) முதன்மை மருத்துவ அதிகாரியாகச் செயல்படுவார். RMO-வால் நியமிக்கப்படும் ஒரு மருத்துவர், வாரம் இருமுறை மாவட்ட சிறை மற்றும் கிளைச் சிறைகளுக்குச் சென்று அங்குள்ள கைதிகளுக்கு மருத்துவம் பார்ப்பார். மேலும் G.O.Ms.No.1396, நாள்: 13.09.91, சிறை ஐ.ஜி. சுற்றறிக்கை எண்.24465/ 105/89, மற்றும் சிறை விதி: 93 (ஆ)/1983, 102/2024 ஆகியவற்றின்படி, மாவட்ட சிறை மற்றும் கிளைச் சிறைகளுக்கு அருகிலுள்ள மருத்துவமனையின் துணைக் கண்காணிப் பாளரும்/மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் துறையின் இணை இயக்குநரும், மாவட்ட மற்றும் கிளைச் சிறைகளில் வருடத்திற்கு ஒருமுறை சிறையின் சுகாதாரம் மற்றும் மருத்துவம் சார்ந்து ஆய்வு செய்து, மருத்துவ சேவைகள் மற்றும் குடும்பநல இயக்குநர் மூலம் சிறை DGP-க்கு ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிப்பார்கள்.
சிறை சட்டம் 1894-ன் பிரிவு 13 மற்றும் சிறை விதி: 101/1983, 110/2024-ன்படி, சிறைவாசிகளுக்கு மருத்துவம் பார்ப்பது மட்டுமே சிறை மருத்துவரது பணியல்ல. சிறையின் சுகாதாரத்திற்கும், சிறை மருத்துவரே பொறுப்பு அலுவலர் ஆவார்.
அரசாணை எண். 2595 உள்துறை நாள் 29.11.1989 மற்றும் சிறை DGP-யின் சுற்றறிக்கை எண். 34145/பொ.1/ 1985, நாள்.21.08.1991-ன்படி, மாவட்ட நல அலுவலர்/மாநகராட்சி நல அலுவலர், சிறை மருத்துவருடன் சேர்ந்து, தங்களது ஆட்சி எல்லைக்குள் இருக்கும் மத் திய சிறையை மாதம் ஒருமுறை பார்வையிட்டு, மத்திய சிறையில் பின்பற்றப்படும் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும். மத்திய சிறைக் கண்காணிப்பாளர் அந்தக் கருத்துரையைப் பெற்று சிறை DGP அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். ஆனால், தமிழகத்தில் எந்த மத்திய சிறையிலும் இதைக் கடைப் பிடிப்பது கிடையாது.
சிறை நிர்வாகத்தில் இத்தனை கடமையும் பொறுப்புகளும் சிறை மருத்துவர்களுக்கு இருக்கும்போது, உண்மையில் நடப்பது என்ன? அதனால், என்னென்ன விளைவுகளை சிறைத்துறை சந்தித்துவருகிறது?
(ஊழல் தொடர்ந்து கசியும்…)
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/24/jail1-2025-11-24-17-10-03.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/jail-2025-11-24-17-09-53.jpg)