Advertisment

JAIL FOLLOW UP 15 தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்! ருசி கண்ட உளவுப் பூனைகள்!

jail

சிறை விஜிலன்ஸ்: தமிழக சிறைத்துறையில் 2002ல் நுண்ணறிவு மற்றும் விழிப்புப்பணி பிரிவைத்   (Intelligence cum vigilance wing) (G.O.Ms.No.23, Home Dept. dated: 8.01.2002)  தொடங்கியபோது,  ஆய்வாளர் ஒருவர்,  சார்பு ஆய்வாளர்கள் இருவர்,  தலைமைக் காவலர் ஒருவர்  மற்றும்  இரண்டாம் நிலை கான்ஸ்டபிள் ஒருவர் என  காவல் துறையினரை மட்டும் வைத்து  தொடங்கப்பட்டது.  ஆனால் சிறைப் பணி யாளர்கள் மத்தியில் இதற்கு மறைமுகமான  எதிர்ப்பு மனநிலைதான் இருந்தது. 

Advertisment

உளவுப் பிரிவினருக்கு சிறைப்பணியாளர்கள் ஒத்துழைப்பு தராமலும்,  உளவுப் பிரிவினர் சிறைவாசிகளைத் தனியாக அழைத்து தகவல் சேகரிக்க முயலும்போது, எனது கட்டுப்பாட்டிலுள்ள சிறைவாசியை உங்களிடம் பேச அனுமதிக்க முடியாது என்றும், உயர் அதிகாரிகளிடமிருந்து ஆணை வாங்கிவந்து விசாரித்துக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டு,   எனது அனுமதி இல்லாமல் நீ யாருடனும் பேசக்கூடாது எனச் சிறைவாசிகளையும்  சிறைப்பணி யாளர்கள்  மிரட்டினர்.  நீங்கள் எந்த விதியின் கீழ் எனது கட்டுப்பாட்டிலுள்ள சிறைவாசியை விசாரிக்கின்றீர்கள்? என உளவுப் பிரிவினரிடம் சிறைப்பணி யாளர்கள் சண்டையிடுவதும், யார் திறமைசாலி எனப் போட்டி போடும்  பனிப்போரும்  நிலவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிறை DGP அனுப்பிய கடிதத்தில்  (Fi: 25326/CS1/07, dated: 27.06.2008)   உளவுப் பிரிவினர் சிறைக்குள் வந்து ஒவ்வொரு நாளும் உளவுத் தகவல்களைச் சேகரிக்கவேண்டும் என்றும், அதற்கு சிறைப் பணியாளர்கள் உதவவேண்டும் என்றும்,  இதற்காக சிறை விதியில் (519(4)/1983)  மாற்றம் செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனைத்  தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அரசாணை  (G.O.Ms.No.1236, Home (Prison I) Dept. dated: 26.09.2008) வெளியிட்டது.   

சிறை டி.ஜி.பி. தமிழ

சிறை டி.ஜி.பி. தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில்  (Fi: 25326/CS1/07, dated:31.08.2010, 22.01.2011)    ‘மத்திய சிறைகளில் உள்ள புலனாய்வு மற்றும் விஜிலன்ஸ் பிரிவு, சிறைக்குள் இருக்கும் கைதிகளிடமிருந்தும், சிறைக்கு வெளியே உள்ள கைதிகளின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிறரிடமிருந்தும் உளவுத்  தகவல்களைச்  சேகரித்து  சிறைத்துறை  தலைமை இடத்திற்கு அனுப்புகிறது. இந்நிலையில்,  16 நன்னடத்தை அதிகாரிகளின் பணியிடங்களை அரசிடம் ஒப்படைத்து,  காவல் துறையிலிருந்து, ஒரு காவல் துணைக் கண் காணிப்பாளர் (டி.எஸ்.பி.),  9 காவல் சார்பு ஆய்வாளர்கள்,  5 காவல்துறை தலைமைக் காவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.   இந்த உளவுப் பணிகளில்  சிறைப் பணியாளர்களும்  சேர்க்கப்பட்டால், சிறையின் சுமூகமான நிர்வாகத்திற்கு, உளவுத் தகவல்களைச் சேகரிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால்,  9 போலீஸ் தலைமைக் காவலர்களுக்குப் பதிலாக, 9 முதன்மை தலைமைக் காவலர்கள்  மற்றும் 4 போலீஸ் கான்ஸ்டபிள்களுக்குப் பதிலாக, 4 இரண்டாம் நிலை வார்டர்கள் சேர்க்கப்பட வேண்டும்’ எனப் பரிந்துரைத்தார். அதனைத் தமிழக அரசு, அரசாணை(G.O.Ms.No.793, Home (Prison I) Dept, dated: 21.11.2011)  பிறப்பித்ததன் மூலம்  ஏற்றுக்கொண்டது.   மேலும், சிறையின் உயர் அலுவலர்களான துணை மற்றும் உதவிச் சிறை அலுவலர்களும் சிறையின் உளவுத்துறையில் பணிபுரிவதற்காக, சிறை டி.ஜி.பி. தமிழக அரசிற்கு கடிதம் (எண்: 25326/CS1/07, 2015)  அனுப்பி அனுமதி பெற்றுள்ளார். 

jail1

Advertisment

தினசரி நிகழ்வு அறிக்கை (DSR) : கிளை,  மாவட்ட மற்றும் மத்திய சிறைகளிலிருந்து,  அன்றாட நிகழ்வுகளை ஒவ்வொரு நாளும்,  காலை மற்றும் மாலை DSR-ஐ எழுத்து மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், சிறைக் கண்காணிப்பாளரிடமிருந்து ரேஞ்ச் டி.ஐ.ஜி.களுக்கு  நேரடியாக வழங்குவார்கள். ரேஞ்ச் டி.ஐ.ஜி.கள் தலைமையிடத்து டி.ஐ.ஜி.க்கு அறிக்கை அளிப்பார்கள். இதில் ஏற்பட்ட அசௌகரியங் களைக் குறைப்பதற்கென்றே    DGP,  DIG  & SP அனைவரும்  இணைந்திருக்கும்   வாட்ஸ்அப்  குழு ஒன்று 10 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. அனைத்து எழுத்துப் பூர்வமான உநத அறிக்கைகளும்  இக்குழுவில் பதிவிடப்பட்டு அனைவருக்கும் பகிரப்படும்.   மற்றொருபுறம், சிறை உளவுப் பிரிவினருக்கு தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மத்திய சிறையிலும்  அலுவலகம் உள்ளது. அந்த மத்திய சிறையிலும், அதன் கட்டுப்பாட்டிலுள்ள கிளை மற்றும் மாவட்ட சிறைகளிலிருந்தும், ஒவ்வொரு நாளும் இருவேளை லாக்கப் அறிக்கை DSRகளை, இந்த விஜிலன்ஸ் பிரிவும் தனியாகச் சேகரிக்கும்.  இவர்கள் சிறையின் தலைமையகத்திலுள்ள காவல் ஆய்வாளர் மூலம்,   DSR க்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். DSP மற்றும் DIG (HQ) இருவரும் சிறை உஏடக்கு அறிக்கையினை வாய்மொழியாகவும்,  எழுத்து மூலமாகவும் சமர்ப்பிப்பார்கள். சிறைக் கண்காணிப்பாளர் களிடமிருந்து பெறப்படும் DSR-ம், உளவுப் பிரிவினரிடமிருந்து பெறப்படும் DSR-ம் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். வெவ்வேறாக மாறுபட்டு இருந்தாலோ, முக்கிய நிகழ்வை இரு தரப்பினரும் மறைத்தாலோ, அன்று விடிய விடிய கச்சேரிதான். அந்த அளவுக்கு கடுமையாக டோஸ் விழும்; ஒழுங்கு நடவடிக்கையும் எடுப்பார்கள். 

உளவுப் பிரிவினரின் பணி: காவல்துறை உநடயின் தலைமையில் சிறை டி.ஜி.பி. அலுவலகத்தில் இப்பிரிவு செயல்படுகிறது.  தமிழக அரசின் கொள்கைக் குறிப்பின்படி,  சிறைகளை  திறம்பட நிர்வகிப்பதும்,  பிற புலனாய்வு அமைப்புகளுடன் உளவுச் செய்திகளைப் பரிமாறிக்கொள்வதும்,  கைதிகள் மற்றும் சிறைப் பணியாளர்களின் செயல்பாடுகளைக்  கண்காணித்து,  முக்கியமான உளவுத் தகவல்களைச் சேகரித்து,  அதனை சிறை டி.ஜி.பி.க்கு உநட மூலம் உடனுக்குடன் அனுப்புவதும், குறிப்பாக   சிறைக்குள் எந்த அசம்பா விதமும், ஊழலும்  நடந்துவிடாமல் தடுப்பதற்காகவும்,  பிரச்சனைகளின்  தீவிரத்திற்கேற்ப, அதுகுறித்து தனி அறிக்கையும் (Source Report) அளிப்பார்கள். ஆனால், சிறைத்துறைக்குள் உளவுப் பிரிவு வந்தபின் நடந்ததில் சிலவற்றைப் பார்ப்போம்.  

புழல் மத்திய சிறை  I-ல் பாக்ஸர் முரளி கொலை (20.06.2018). பாளையங்கோட்டை மத்திய சிறையில் முத்து மனோ கொலை (22.04.2021). கோவை மத்திய சிறையில் சிறைவாசி ஏசுதாஸ் சந்தேகத்துக்கிடமான முறையில் (27.01.2025) இறந்தது.

jail2

புழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை குறித்து செப்டம்பர் 2018ல் பத்திரிகைகளில் ஆதாரங்களுடன்  செய்திகள் வெளிவந்தன. அதனைத் தொடர்ந்து,  சிறைவாசி களிடமிருந்து 8  செல்போன்கள், 2 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 20 தொலைக்காட்சிப் பெட்டிகள், 9 எப்.எம். ரேடியோக்கள்,  4 மிக்ஸிகள், 4 பழச்சாறு பிழியும் கருவிகள்,  27 கத்திகள், 40 லைட்டர்கள், 200 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள், கஞ்சா  பொட்டலங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருள் கள், 40-க்கும் மேற்பட்ட சமையல் பாத்திரங்கள், 120 நாற்காலிகள், 500 நவீன ஆயத்த ஆடைகள், 50 குஷன் படுக்கைகள், 50 படுக்கை விரிப்புகள், 50 அலங்காரத் திரைச்சீலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

புழல் சிறைக் கலவரம் (25.09.2015), மதுரை சிறைக் கலவரம் (23.04.2019 & 30.12.2021), திருச்சி சிறைக் கலவரம் (08.08.2022), கோவை சிறைக்கலவரம் (21.09.2023) போன்ற கலவரங்களில் பணியாளர்கள் தாக்கப்பட்டனர்.  

மேற்கூறியவை அனைத்தும் மேலோட்ட மான உதாரணங்கள்தான்.  தினந்தோறும் கணக்கில் அடங்காத குற்றங்களும், ஊழல்களும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இனியும் நடக்கத்தான் போகிறது. இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது,  சிறை உளவுத்துறை  பயனற்றதாக இருப்பது  அப்பட்டமாகவே  தெரிகிறது.   

சிறையில் உளவுப் பிரிவு  இயந்திரம் இத்தனை  சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளபோது,   இவர்களுக்குத்  தெரியாமல் எப்படி ஊழல் நடக்கும்?

அப்படியென்றால், சிறையின் உளவுப் பிரிவுகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களும், உயரதிகாரிகளுடன்  லஞ்சப் பணத்தைப் பங்கு போட்டுக்கொள்ளும் ஊழல்வாதிகளா?  என்றால், நிச்சயமாக இல்லை.  உளவுப் பிரிவுகளில் பணிபுரியும் பணியாளர்களில் 40 சதவீதம் பேர் பணம் கொடுத்தாலும் வாங்காதவர்கள்.  சிறையில்  பிறர் செலவில் காபி டீ கூட குடிக்காதவர்கள்.  ஆனால்  இந்த 40 சதவீதம் பேரும்  நேர்மையானவர்களா? என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால், இவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், எப்படி வாராவாரம் சிறைக்குள்  பீடிக் கட்டுகள்  வருகின்றன?  உணவுப் பொருள் கொள்முதல் ஊழல், சிறைத்  தொழிற்சாலைகளில் ஊழல்,  கேன்டீன் ஊழல், கைதிகளுக்கு சிறைக்குள் வசதி ஏற்படுத்தித்தர உயரதிகாரிகள் பெறும் லஞ்சப் பணம் போன்ற குற்றங்கள் குறித்த உண்மையை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டி,  அந்த ஊழல் களைத்  தடுத்து நிறுத்தி இருக்கவேண்டும் அல்லவா?  சிறை உளவுப் பிரிவில் பணிபுரியும் காவலர் முதல் டி.எஸ்.பி.வரை அனைவரும், சிறை உயரதிகாரிகள் செய்யும் ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருந்துவருவதை, ஊழலுக்குத் துணை போவதாகத்தானே கருதவேண்டி யிருக்கிறது? இவர்கள் எப்போது மாறப் போகிறார்கள்?

‘ஏதோ ஒப்புக்கு DSR சேகரித்து அனுப்பினால் போதும். மற்றபடி, எந்தவொரு உளவுப் பணியையும் சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டாம். ஊழலோ, சிறைவாசிகள் சம்பந்தப்பட்ட வில்லங்க நடவடிக்கைகளோ, எதையும் கண்டுகொள்ள வேண்டாம். உங்க ளுக்கான பங்கு வந்துவிடும்.’ என்ற உயரதி காரிகளுடான டீலில் ருசி கண்ட பூனைகளாகச் சிறைகளைச் சுற்றி வருகிறார்கள் உளவுப்பிரிவினர். 

(ஊழல் தொடர்ந்து கசியும்...)

nkn160825
இதையும் படியுங்கள்
Subscribe