(41) தப்பித்த தடா கைதிகள்!


1991-க்கு முன்புவரை தமிழகத்தில் இலங்கை நாட்டினர் தொடர்பான பெரிய நடவடிக் கைகள் எதுவும் இல்லை. 21.05.1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முகாம்களில் வசிக்காத இலங்கை அகதிகள் அரு கிலுள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்பதைத் தமிழக அரசு கட்டாயமாக்கியது. ஜூலை 1991-ல், 26,363 அகதிகள் காவல்துறையில் தங்க ளைப் பதிவு செய்தனர். பதிவு செய்யாத 1,800 பேரை யும், விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என உளவுத்துறைகளால் அடையாளம் காணப்பட்ட வர்களையும், வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறப்பு முகாம்களுக்கு அனுப்பினர்.  அவ்வாறு தமிழகத்தில் வேலூர், சென்னை, செங்கல்பட்டு, சேலம், மேலூர், துறையூர், பூந்தமல்லி, திருவையாறு மற்றும் பழனி போன்ற இடங்களில் செயல்பட்ட சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். 

Advertisment

தற்போது இலங்கை அகதிகள் இந்தியாவிற்கு வந்தால், மனிதாபிமான அடிப்படையில் ராமநாதபுரம், மண்டபம் முகாமில் ஒருமாத காலத்திற்கு தற்காலி கமாகத் தங்கவைக்கப்பட்டாலும், அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதே இறுதி நோக்க மாகும். அகதிகள், மாநில அரசின் Q-Branch மற்றும் வருவாய் அதிகாரிகளால் பரிசோதிக்கப்படு கிறார்கள். புகைப்படம் எடுக்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. போராளிகள்/குற்ற வழக்குடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டால், தனிமைப் படுத்தப்பட்டு சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்படு வார்கள். மற்றவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 104 சாதாரண இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்படுகிறார்கள். 

Advertisment

இந்தச் சிறப்பு முகாம்கள் எந்த மாவட்டத் தில் உள்ளனவோ,  அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்தான் தலைமைப் பொறுப்பு அதிகாரி யாவார். நாள்தோறும் அங்கு நிர்வாகத்தை நடத்து வதற்கு தாசில்தார்/துணை தாசில்தார் ஒருவர் இருப்பார். உள்துறைச் செயலர் அல்லது எததஞ (FRRO (Foreigner Regional Registration Officer) உத்தரவின்படி வெளிநாட்டினர் இந்த முகாம்களில் அடைப்பு செய்யப்படுகின்றனர். தமிழ்நாடு சிறப்புக் காவல் படை (Battalion)  பிரிவினர் இந்த முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் காவல்புரிகின்றனர். இந்தச் சிறப்பு முகாம்கள் வருவாய்த்துறையினரிடம் இருந் தாலும், தமிழகத்தின் அனைத்து உளவுத்துறைகளும் கண்காணித்தாலும், Q-Branch உளவுப் பிரிவின் கைதான் இங்கு ஓங்கியிருக்கும்.  இவர்களது  மேற்பார்வையில்தான் இந்த முகாம் செயல்படும்.   

வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அதிகாரி (FRRO):   இவர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும்  குடிவரவு பணியகத்தின்  (The Bureau of Immigration # BOI) கீழ் செயல்படுவார். பொதுவாக FRRO, ஒரு மூத்த SP அந்தஸ்தில் உள்ள IPS அதிகாரியாக இருப்பார்.  இவர்,   Immigration and Foreigners Act, 2025, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கைகள் எண்: 381, File No.25022/96/99#F#I  Dated:13/07/2000, Utßm No.1/AXI/Misc.#2012 Dated:02/06/2012ஆகியவற்றின் கீழ் வெளிநாட்டினர் மீது கட்டுப்பாடுகளை விதிக் கும் அதிகாரம் மிக்கவர்.  தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் DSP பதவியில் உள்ள ஒருவரை Nodal Officer-ஆக நியமித்து வெளிநாட்டினரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். 

Advertisment

1995 காலகட்டத்தில் தமிழக வரலாற்றில் முக்கியமான இரண்டு தப்பித்தல்கள் (Escape) நடந்தன.  ஒன்று,  சென்னை மத்திய சிறையிலும் மற்றொன்று வேலூர் கோட்டையில் உள்ள சிறப்பு முகாமிலும் நடந்தன.  இவையிரண்டிற்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், தப்பித்துச் சென்றவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.  

jail1

சென்னை மத்திய சிறையிலிருந்து எஸ்கேப்: 27.02.1995 அன்று இரவு 10 மணியளவில் சென்னை மத்திய சிறையின் Quarantine-2   முதல் மாடியி லுள்ள Cell No.2-ல் இருந்த ரோமியோஅசதீஸ், பிரதாப் (எ) லோகன், மேனன் குட்டி, பாலேந் திரன், விஞ்ஞானராஜன் அவிக்கி மற்றும்  Cell No.3-ல் இருந்த ஷண்முகம் (எ) ராஜ்குமார், சுந்தரம் பாலன் (எ) கணேசன், பாமி (எ)அரவிந்தன், சண்முகவேல் (எ) மேஸ்திரி ஆகியோர்,  3ணீ ஆண்டு களாகப்  பிணை கிடைக்காமல் வெவ்வேறு வழக்கு களில் சிறையிலிருந்த நிலையில், இலங்கையின்    LTTE பிரிவைச் சேர்ந்த இந்த 9 தடா (பயங் கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் -Terrorist and Disruptive Activities (Prevention) Act) சிறைவாசிகளும் தப்பித்துச் சென்றனர். அன்றைய தினம்  இலங்கையைச் சேர்ந்த 61 தடா சிறைவாசிகள் சென்னை சிறையில் இருந்தனர். தப்பி ஓடும்போது மாட்டிக்கொண்ட தால், சண்முகவேலு சிந்தாதிரிப்பேட்டையிலும், மேனன் பொன்னேரியிலும் சயனைடு குப்பிகளை விழுங்கி இறந்தனர். ந.பாலன் மற்றும் ய.பாலேந் திரன் ஆகிய இருவரும் கும்மிடிப்பூண்டி அருகில் பிடிபட்டனர். மீதமுள்ள 5 பேரும் தப்பித்து விட்டனர். 

அப்போது  சிறை ஐ.ஜி.யாக T.S.பஞ்சாப கேசன் .P.S., மற்றும் சிறை டி.ஐ.ஜி.யாக ங.சுவாமிநாதன் ஆகியோர்  பணிபுரிந்தனர். சிறைக் கண்காணிப்பாளர் ய.பவுன்ராஜ், கூடுதல் கண் காணிப்பாளர் ங.ந.செல்வராஜ், ஜெயிலர் ஈ.ராம மூர்த்தி ஆகியோர் அடுத்தநாளே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து சிந்தாதிரிப் பேட்டை எ-1 காவல்நிலையத்தில் குற்றவழக்கு எண்: 354/1995 பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு Q #Branch #C.I.D-க்கு,  மாற்றப்பட்டு  Inspector சந்திரசேகரன் விசாரணை செய்தார். தப்பிய 9 பேரும் குற்றவாளிகளாகச்  சேர்க்கப்பட்டனர். மேலும் இலங்கையைச் சேர்ந்த தளிக்குமார் என்பவர்,  சென்னை மத்திய சிறையில் தடா சிறைவாசியாக  இருந்து வெளியே சென்றவர். தப்பி ஓடிய சிறைவாசிகளுள் ஒருவரான ராஜ்குமாரை 09.02.1995 -அன்று, சென்னை மத்திய சிறையில் வைத்து மனு பார்க்கும்போது கள்ளச்சாவியையும், சயனைட் குப்பிகளையும் கொடுத்ததற்காக இவரும்  வழக்கில் சேர்க்கப்பட்டார்.   கைதிகள் தப்பிச் செல்ல உதவியதாக சிறை வார்டன்கள் தீனதயாளன், வேலாயுதபாணி, செலிக்கா மஸ்தான், அண்ணாத்துரை, சுருளிநாதன், ஆகியோரையும் வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்து கைது செய்தனர். இந்த ஐந்து பேரும் விசாரணைக்குப்பின் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

jail2

இதனைத் தொடர்ந்து,  நீதிபதி(ஓய்வு) ராமானுஜம் தலைமையில் விசாரணை ஆணை யத்தை G.O.N.o:347, Dated:05.03.1995-ன்படி தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் தனது அறிக்கையை 02.03.1997-ல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், வேண்டுமென்றே சிறைவாசிகளை முறையாக அடைப்புச் செய்யா மலும், அடைப்பைச் சோதனை செய்யவேண்டியவர்கள் வேண்டு மென்றே சோதனை செய்யாமலும் இருந்ததால்தான்,  இவர்கள் சுவர் ஏறிக்குதித்து, சென்னை பார்க் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தப்பிச் சென்றனர் என்று குறிப் பிடப்பட்டது.    

பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கைதிகள் தப்பிச் செல்வது குறித்து முன்கூட்டியே தெரியும் என்றும், தப்பிச் செல்வதற்கு உடந்தையாகவும், கூட்டுச்சதியிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் அறிக்கையின் பத்தி எண்: 4.21-ல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பத்தி எண்: 7.4-ல் கூறியுள்ளபடி, சம்பந்தப்பட்ட 9 கைதிகள் தப்பிக்க உதவியதற்காக  (1) கூடுதல் கண்காணிப்பாளர் ங.ந.செல்வராஜ், (2) ஜெயிலர் ஈ.ராமமூர்த்தி, (3) தட்சிணாமூர்த்தி (உதவி சிறை அலுவலர்),  (4) ஹரிகிருஷ்ணன் (முதன்மை தலைமைக் காவலர்), (5) காவலர் ட.ஜீவானந்தம்  ஆகியோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

கண்காணிப்பாளர் ட.ய.பொன்னுராஜைப் பொறுத்தவரை, தப்பிச்செல்லும் சம்பவத்தில் அவர் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், சிறை நிர்வாகத்தில் அவர் மிகவும் திறமை யற்றவராகவும், தனக்குக் கீழ் பணிபுரிபவர்களி டையே ஒழுக்கத்தை அமல்படுத்த முடியாதவ ராகவும், கீழ்நிலைப் பணியாளர்கள் கண்காணிப் பாளரின் உத்தரவுகளுக்கு எதிராக நடந்து தவறு செய்த போதும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என்றும், சிறைக் கண்காணிப் பாளரின் செயலற்ற தன்மையும் ஒரு வகையில் கீழ்நிலைப்பணியாளர்கள் ஊழல் செய்து பயன் பெறும் வகையில் நடந்துகொள்ள ஊக்குவித்துள் ளது என்றும் ஆணையம் குற்றம் சாட்டியது. 

கூடுதல் கண்காணிப்பாளர் ங.ந.செல்வராஜ், தனது ஆர்டர்லி ஜெயக்குமார் (சிறைவாசி) மூலம்  தடா கைதிகளுக்கு, உணவுப் பொருள்களுடன்,  மதுபாட்டில்களை மறைத்து வைத்து வழங்கியதை 26.11.1994-ல் கண்டறிந்தபோதும் (அறிக்கை பத்தி எண்:3.23), அவர் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தடா கைதிகளுக்கான அனைத்து நேர்காணல்களையும் ஜெயிலரின் அறையில் வைத்து நடத்தியது, தடா சிறைவாசிகள் இருந்த Cell  மற்றும் வராண்டா வின் கதவுகளை நாள் முழு வதும் திறந்தே வைத்திருக்க அனுமதித்தது மிகவும் தவறான நடைமுறை என்றும் குற்றம் சாட்டியது. இதன்மூலம் கைதி கள் தப்பிச் செல்வதை எளி தாக்கியுள்ளார். எனவே, கண் காணிப்பாளர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுப்பதற்கு ஆணை யம் பரிந்துரைத்தது. இந்த வழக்கு சென்னை மாநகர III Additional Sessions நீதிமன்றத்தில்  (C.C.Fi: 268/95) விசாரிக்கப்பட்டது. இதில் பாலன், பாலேந்திரன் ஆகியோருக்கு, தப்பித்ததற்காக 14 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ஐந்து  சிறைக்காவலர்களின் மீது அரசுத் தரப்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்  நிரூபிக்கப்பட வில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து 2002-ல் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத் தில் கியூ பிரிவு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது எனக்கூறி காவல்துறை மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து ஜனவரி, 2019-ல்  உத்தரவிட்டார்.

(ஊழல் தொடர்ந்து கசியும்…)