டிஜிட்டல் உலகின் இருண்ட பக்கம்!
சிறை வாழ்க்கையில், மனிதன் இரண்டு விஷயங்களைத் தவிர்க்க முடியாது. ஒன்று -கடந்த கால நினைவுகள். மற்றொன்று -அவை எழுப்பும் கேள்விகள். கடந்த அத்தியாயத்தில், சிறை வாழ்க்கையிலும் தன்னம்பிக்கையைத் தளர விடாமல் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட டாடர் பிரகாஷின் வேறு ஒரு முகத்தைப் பார்த்தோம். சிறையிலிருந்தபோதும் அவர் மருத்துவராகவும், ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், கலைஞராகவும் செயல்பட்டது, ‘குற்றவாளி’ என்ற ஒரே சொல்லால் ஒருவரை முழுமையாக மதிப்பிட முடியாது என்பதை உணர்த்தியது. நன்னடத்தையால் கிடைத்த விடுதலை, மனிதன் தவறியபோதும் திருந்தி வாழ முடியும் என்பதற்கான ஒரு உதாரணமாக இருந்தது.
அங்கே ஒரு அடிப்படை கேள்வி நிற்கிறது. மருத்அங்கே ஒரு அடிப்படை கேள்வி நிற்கிறது. மருத்துவராக மதிப்புடன் இருந்தவர் இப்படிப் பட்ட வழக்கில் எப்படி சிக்கினார்? அந்தக் கேள்விக்குப் பதில் இல்லாமல் இந்த வழக்கை முழுமையாக புரிந்ததாகச் சொல்ல முடியாது.
ஒரு மருத்துவர். மக்களை குணப்படுத்தும் பணியில் இருந்தவர். அவருடைய பெயர் திடீரென டிஜிட்டல் குற்றத்துடன் சேர்ந்து வந்தபோது, சமூகம் அதிர்ந்தது. காரணம் குற்றம் அல்ல; அதைச் செய்தவர் யார் என்பதே.
டாக்டர் பிரகாஷ் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67வது பிரிவி
டிஜிட்டல் உலகின் இருண்ட பக்கம்!
சிறை வாழ்க்கையில், மனிதன் இரண்டு விஷயங்களைத் தவிர்க்க முடியாது. ஒன்று -கடந்த கால நினைவுகள். மற்றொன்று -அவை எழுப்பும் கேள்விகள். கடந்த அத்தியாயத்தில், சிறை வாழ்க்கையிலும் தன்னம்பிக்கையைத் தளர விடாமல் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட டாடர் பிரகாஷின் வேறு ஒரு முகத்தைப் பார்த்தோம். சிறையிலிருந்தபோதும் அவர் மருத்துவராகவும், ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், கலைஞராகவும் செயல்பட்டது, ‘குற்றவாளி’ என்ற ஒரே சொல்லால் ஒருவரை முழுமையாக மதிப்பிட முடியாது என்பதை உணர்த்தியது. நன்னடத்தையால் கிடைத்த விடுதலை, மனிதன் தவறியபோதும் திருந்தி வாழ முடியும் என்பதற்கான ஒரு உதாரணமாக இருந்தது.
அங்கே ஒரு அடிப்படை கேள்வி நிற்கிறது. மருத்அங்கே ஒரு அடிப்படை கேள்வி நிற்கிறது. மருத்துவராக மதிப்புடன் இருந்தவர் இப்படிப் பட்ட வழக்கில் எப்படி சிக்கினார்? அந்தக் கேள்விக்குப் பதில் இல்லாமல் இந்த வழக்கை முழுமையாக புரிந்ததாகச் சொல்ல முடியாது.
ஒரு மருத்துவர். மக்களை குணப்படுத்தும் பணியில் இருந்தவர். அவருடைய பெயர் திடீரென டிஜிட்டல் குற்றத்துடன் சேர்ந்து வந்தபோது, சமூகம் அதிர்ந்தது. காரணம் குற்றம் அல்ல; அதைச் செய்தவர் யார் என்பதே.
டாக்டர் பிரகாஷ் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67வது பிரிவின் கீழ் வருகின்றன. இணையத்தில் ஆபாச உள்ளடக்கங்களை உருவாக்குதல், பரப்புதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களைத் தண்டிக்க உருவாக்கப்பட்ட பிரிவு அது. அதோடு பெண்களை அசிங்கமாகச் சித்தரிப்பதைத் தடைசெய்யும் 1986 சட்டத்தின் 4 மற்றும் 6வது பிரிவுகளும் இணைக்கப்பட்டன. மேலும், இது தனிப்பட்ட தவறு அல்ல, திட்டமிட்ட செயல் என்ற கோணத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 120-இ எனும் சதி குற்றப் பிரிவும் சேர்க்கப்பட்டது. இவை அனைத்தும் சேர்ந்து சொல்வது ஒன்றுதான். இது திடீர் தவறு அல்ல, ஒரு நிமிட அலட்சியமும் அல்ல. தொடர்ச்சியாக நடந்த, திட்டமிட்டு செயல் படுத்தப்பட்ட குற்றச் சம்பவங்கள்.
இதில்தான் “அறியாமை” என்ற காரணம் பலவீனமாகிறது. சட்டத்தின் பிரிவு எண் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பெண்களின் மரியாதையை காயப்படுத்துவது தவறு என்பதே தெரியாமல் இருக்க முடியுமா? இணையம், கணினி, தொழில்நுட்பம் ஆகியவற்றை நன்றாக அறிந்த ஒருவருக்கு, “இது தவறு” என்று உள்ளத்தில் ஒரு சின்ன எச்சரிக்கை கூட எழாமல் போனது எப்படி? அதுவே இந்த வழக்கின் முக்கியக் கேள்வி.
தன் பக்க நியாயமாக டாக்டர் பிரகாஷ் ஒரு காரணம் சொன்னார். “வெளிநாடுகளில் இப்படிப் பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் சாதாரணமாகக் கிடைக்கின்றன’ என்றார்.
இன்றும் பலர் இதே காரணத்தைக் கூறுகிறார்கள். ஆனால் எந்த நாடாக இருந்தாலும், எந்த சமூகமாக இருந்தாலும், ஒரு பெண்ணை அவமதிப்பதை சாதாரணமாகக் கருத முடியாது. இணையத்தில் கிடைக்கிறது என்பதற்காக அது சட்டப்படி சரி ஆகிவிடாது. உலகம் முழுவதும் இருப்பது போலத் தோன்றினாலும், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்த சட்டமும் வரம்பும் இருக்கிறது. அந்த எளிய உண்மையே இங்கு கவனிக்கப்படவில்லை.
இந்த வழக்கில் இன்னொரு தவறான நம்பிக்கை வெளிப்படுகிறது. கல்வி, நல்ல வேலை, சமூக மரியாதை - இவை சேர்ந்தபோது வந்த ஒரு ஆணவ நம்பிக்கை: “என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது” என்ற மனநிலை. சட்டம் மற்றவர்களுக்கே; நான் அதற்கு வெளியே இருப்பவன் என்ற பெருமிதம். பல டிஜிட்டல் குற்றங்களின் பின்னாலும் இதே எண்ணமே இருக்கிறது. கணினித் திரையின் பின்னால் இருப்பது, தனி அறையில் இருப்பது, யாரும் பார்க்கவில்லை என்ற நம்பிக்கை -இவை எல்லாம் சேர்ந்து, அது ஒரு குற்றம் என்பதையே உணரவிடாமல் செய்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/jail1-2026-02-23-17-05-47.jpg)
இதற்குப் பிறகுதான் சிறை வாழ்க்கை தொடங்குகிறது. தண்டனை என்பது முடிவு அல்ல; வாழ்க்கையில் வந்த ஒரு கடினமான திருப்பம். சிறை, பிரகாஷ் வாழ்க்கையில் ஒரு விசித்திரமான திருப்பமாகிறது. அங்கே அவர் மருத்துவராகவே தொடர்கிறார். கைதிகளுக்கும் சிறை ஊழியர் களுக்கும் சிகிச்சை அளிக்கிறார். கணினி பயன்படுத்த அனுமதி பெற்று, மருத்துவத்தின் நவீன மாற்றங்களைப் பின்தொடர்கிறார். எழுதுகிறார். சிந்திக்கிறார். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பிக்கிறார்.
இதுதான் சமூகம் கவனிக்காமல் விடும் உண்மை. நாம் குற்றத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள்கிறோம். மாற முயற்சித்ததை மறந்துவிடுகிறோம்.
ஒரு மனிதன் தவறு செய்தால், அவனைத் தண்டிக்க வேண்டும். ஆனால் அவன் திருந்தினால், அந்த மாற்றத்தை சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சிறை, மனிதனைத் திருத்தும் இடமாக இருக்காது. வெறும் தண்டனை அனுபவித்து வெளியே வரும் இடமாக மட்டுமே இருக்கும்.
இன்றைய டிஜிட்டல் உலகில் இந்த வழக்கு ஒரு பழைய சம்பவமாகத் தோன்றலாம். ஆனால் உண்மை அதற்கு எதிரானது. அப்போது கணினி இருந்தது. இப்போது செல்போன். அப்போது இணையம் மெதுவாக இருந்தது. இப்போது ஒரு கிளிக் போதும். கணினி மூலம் போலியாக உருவம் மாற்றிய வீடியோக்கள் (உங்ங்ல்ச்ஹந்ங்), மற்றொருவரின் படத்தை மாற்றி அமைத்தல் (ஙர்ழ்ல்ட்ண்ய்ஞ்), மூடிய தனிப்பட்ட இணையக் குழுக்கள் (டழ்ண்ஸ்ஹற்ங் ஏழ்ர்ன்ல்ள்), பணம் செலுத்தி அணுகும் சேனல்கள் (டஹண்க் ஈட்ஹய்ய்ங்ப்ள்) -பெயர்கள் மட்டும் மாறி யுள்ளன. ஆனால் அடிப்படை மனநிலை மாறவில்லை.
“நான் செய்வது என் திரை (நஸ்ரீழ்ங்ங்ய்) முன்னால்தான்” என்ற அலட்சியம் இன்னும் தொடர்கிறது. திரை முன் நான் ஒருவன் தான் என்ற பொய்யான பாதுகாப்பு உணர்வு. இதனால் யாருக்கும் உடனடி பாதிப்பு இல்லை என்ற தவறான நம்பிக்கை. ஆனால் ஒவ்வொரு கிளிக்கும் ஒருவரின் மரியாதையைக் காயப்படுத்த முடியும்; ஒரு மனிதரின் வாழ்க்கையையே மாற்றி விட முடியும்.
டாக்டர் பிரகாஷ் வழக்கு ஒரு மனிதனின் வீழ்ச்சி பற்றிய சம்பவம் மட்டும் அல்ல. நல்ல கல்வி இருந்தாலும், அறிவு இருந்தாலும், ஒரு தவறான செயல் வாழ்க்கையை எவ்வளவு குலைக்க முடியும் என்பதற்கான ஒரு பெரிய பாடம். அதே நேரத்தில், தவறு செய்தவன் வாழ்நாளெல்லாம் அதே இடத் தில் நிற்க வேண்டியதில்லை என்பதற்கும் ஒரு உதாரணம்.
இங்கே முக்கியம், அவர் தவறு செய்தாரா இல்லையா என்பதில் இல்லை. அதற்கு சட்டம் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டது. உண்மை யான கேள்வி வேறு. இப்ப டிப்பட்ட சம்பவங்கள் நடந்த பிறகு நாம் என்ன மாற்றம் செய்தோம்? இணையத்தை பயன்படுத்தும் விதத் தில் நம்மிடம் என்ன பொறுப்புணர்வு வந்தது? திரையின் மறுபுறமும் ஒரு மனிதர் இருக்கிறார் என்ற உணர்வு நமக்குள் வலுவானதா?
ஒரு வழக்கு முடிவடைவது நீதி மன்றத்தில் தான். ஆனால் அதன் அர்த்தம் முடிவடைவது சமூகத்தில் தான். நாம் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு தவறை திருத்திக்கொள்ளும் நாள்தான் இப்படிப்பட்ட டிஜிட்டல் குற்றங்கள் குறைய ஆரம்பிக்கும். இல்லையெனில், பெயர்கள் மட்டும் மாறும்; சம்பவங்கள் தொடரும். அதனால் இந்த வழக்கின் உண்மையான முடிவு நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை. அது நம்முடைய மன நிலையின் மாற்றத்தில்தான் உள்ளது.
(ஊழல் தொடர்ந்து கசியும்..)
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/jail2-2026-02-23-17-06-00.jpg)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us