டாக்டர் பிரகாஷ்: வீழ்ச்சியிலிருந்து விடுதலை வரை!
இருமுறை எழுதப்பட்ட “பெகுனா கைதி”
11.07.2006 அன்று மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில், ஒன்பது ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட அப்துல் வாஹித் ஷேக், சிறையி-ருந்த காலகட்டத்தில் தனது புத்தகத்தை சிறை அதிகாரிகள் அழித்ததால், “பெகுனா கைதி” (Begunah Qaidi -Innocent Prisoner) என்ற நூலை சிறையிலேயே இரண்டு முறை எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த நூலின் பக்கங்களை, தனது வழக்கறிஞருக்கு வழங்கப்பட்ட வழக்கு ஆவணங்கள் அடங்கிய கோப்புகளுக்குள் மறைத்து, சிறிது சிறிதாக வெளியே அனுப்பி, இறுதியில் முழு புத்தகத்தையும் சிறைச் சுவர்களுக்கு அப்பால் கொண்டு செல்ல முடிந்தது.
“"சிறையில் கைதிகள் எழுதுவதற்கான நடைமுறை முழுவதுமாக சிறை அதிகாரிகளின் மனநிலையைச் சார்ந்ததே. இதற்கென எந்த நிலையான விதிமுறையும் இல்லை. இது கைதியின் அடிப்படை உரிமையாக வும் கருதப்படுவதில்லை. சிறையில் நடைபெறும் நிகழ்வுகள் வெளியில் தெரியக்கூடும் என்ற அச்சத்தால், கைதிகள் எழுதத் தொடங்கும்போது சிறை நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்கிறது''’என அப்துல் வாஹித் ஷேக் கூறுகிறார்.
நாவலிலிருந்து நீதிமன்றம் வரை
கேரளாவின் விய்யூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ரூபேஷ் குமார், ஒரு வழக்கில் பத்து ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ளார். மேலும் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்தபடியே அவர் எழுதிய நாவல், மலையாள
டாக்டர் பிரகாஷ்: வீழ்ச்சியிலிருந்து விடுதலை வரை!
இருமுறை எழுதப்பட்ட “பெகுனா கைதி”
11.07.2006 அன்று மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில், ஒன்பது ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட அப்துல் வாஹித் ஷேக், சிறையி-ருந்த காலகட்டத்தில் தனது புத்தகத்தை சிறை அதிகாரிகள் அழித்ததால், “பெகுனா கைதி” (Begunah Qaidi -Innocent Prisoner) என்ற நூலை சிறையிலேயே இரண்டு முறை எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த நூலின் பக்கங்களை, தனது வழக்கறிஞருக்கு வழங்கப்பட்ட வழக்கு ஆவணங்கள் அடங்கிய கோப்புகளுக்குள் மறைத்து, சிறிது சிறிதாக வெளியே அனுப்பி, இறுதியில் முழு புத்தகத்தையும் சிறைச் சுவர்களுக்கு அப்பால் கொண்டு செல்ல முடிந்தது.
“"சிறையில் கைதிகள் எழுதுவதற்கான நடைமுறை முழுவதுமாக சிறை அதிகாரிகளின் மனநிலையைச் சார்ந்ததே. இதற்கென எந்த நிலையான விதிமுறையும் இல்லை. இது கைதியின் அடிப்படை உரிமையாக வும் கருதப்படுவதில்லை. சிறையில் நடைபெறும் நிகழ்வுகள் வெளியில் தெரியக்கூடும் என்ற அச்சத்தால், கைதிகள் எழுதத் தொடங்கும்போது சிறை நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்கிறது''’என அப்துல் வாஹித் ஷேக் கூறுகிறார்.
நாவலிலிருந்து நீதிமன்றம் வரை
கேரளாவின் விய்யூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ரூபேஷ் குமார், ஒரு வழக்கில் பத்து ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ளார். மேலும் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்தபடியே அவர் எழுதிய நாவல், மலையாளத்தில் “"பந்திதருதே ஓர்மகுறிப்புகள்'’என வெளிவந்து, பின்னர் "ஒரு கைதியின் நினைவுகள்'’என்ற பெயரில் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப் பட்டது. இந்த நூலை சிறையிலிருந்தே வெளியிட வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது.
நூலை முடித்தபின், கையெழுத்துப் பிரதியை வெளியே அனுப்ப அனுமதி கோரி சிறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்தார். ஆனால், சிறை அனுபவங் களின் உணர்வுபூர்வ விவரங்களும், மஆடஆ சட்டம் தொடர்பான குறிப்புகளும் உள்ளதால் வெளியீட்டை அனுமதிக்க முடியாது என்று வாய்மொழியாகத் தெரிவித்தனர்.
ஒரு மனிதன் வாழும் சமூகச் சூழலை எழுத்தில் பிரதிபலிப்பது இயல்பு. அதுபோல், சிறைவாசத்திலும் எழுதும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ரூபேஷ் சிறையிலிருந்தும், முன்னாள் சிறைவாசியான அவரது மனைவி ஷைனா வெளியி-ருந்தும் இணைந்து பிரச்சாரம் தொடங்கினர். ஷைனா, கேரள எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர் களுடன் இணைந்து முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தார். எனினும் மாற்றம் எதுவும் இல்லை என அவர் கூறுகிறார்.
பின்னர், கேரள உயர் நீதிமன்றத்தில் ர.ட.(ஈ).சர்.29891/2025 என்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி வி.ஜி. அருண் அமர்வு, 03.11.2025 அன்று தீர்ப்பு வழங்கியது. “கேரள சிறைகள் (மேலாண்மை) சட்டத்திலும், தொடர்புடைய விதிகளிலும் கைதியின் இலக்கியப் படைப்புகளைத் தடுக்க அதிகாரம் அளிக்கும் விதி இல்லை. தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் இல்லையெனில் வெளியீட்டை மறுக்க முடியாது” என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
பத்து ஆண்டுகால சிறைவாசத்தில் ரூபேஷ் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். கணினி வன்பொருள், மொபைல் பழுதுபார்ப்பு பயிற்சிகளும் முடித்தார். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதியதுடன், தற்போது தத்துவத்தில் மேலும் ஒரு முதுகலைப் பட்டம் படித்து வருகிறார் என ஷைனா தெரிவிக்கிறார்.
தண்டனையிலும் தொடர்ந்தமருத்துவப் பணிகள்
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த முடநீக்கியல் நிபுணர் டாக்டர் பிரகாஷ், அண்ணாநகரில் மருத்துவமனை நடத்தி வந்தார். 2001ஆம் ஆண்டு, புதுச்சேரியைச் சேர்ந்த கணேசன், வடபழனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். மிரட்டல் மூலம் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கச் செய்து வீடியோ பதிவு செய்து, அவற்றை இணையத் தில் விற்றதாகக் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து 24.12.2001 அன்று பிரகாஷ் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஐந்தாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராதா, 07.02.2008 அன்று பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். வீடியோ பதிவு செய்த நர்ஸ் சித்ரா அப்ரூவராக மாறியதால் விடுவிக்கப்பட்டார். தீர்ப்பு வரும் வரை பிரகாஷுக்கு பிணை மறுக்கப்பட்டு, சிறையிலேயே இருந்தார்.
வெளிநாட்டு மருத்துவர்களுக்கே பாடம் நடத்தும் திறமை பெற்ற முடநீக்கியல் நிபுணரான அவர், சிறையில் கணினி பயன் படுத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐ.ஈ.ட.சர்.486/2008 என்ற வழக்கு தாக்கல் செய்து, 23.07.2008 அன்று அனுமதி பெற்றார். இதன் மூலம் மருத்துவத் துறையின் நவீன மாற்றங்களைத் தொடர்ந்து அறிந்தார். கைதிகளுக்கு பாடம் நடத்துதல், சிகிச்சை அளித்தல், கவுன்சிலிங் வழங்குதல் போன்ற பல நல்ல பணிகளில் ஈடுபட்டார்.
சென்னை ரேஞ்ச் உஒஏ எஸ்.ராஜேந்திரன் நினைவுகூரும்போது, “"பைக்கில் சென்றபோது கீழே விழுந்து தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட சிறை வார்டனுக்கு முடி அளவுக்கு சிறிய எலும்பு முறிவு இருப்பதாக பிரகாஷ் சொன்னார். பின்னர் ஸ்கேன் பரிசோதனையில் அது உறுதியானது''”என்கிறார். புழல் சிறைக் கைதிகள் முதல், தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த சிறை ஊழியர்கள் வரை பலர் அவரிடம் சிகிச்சை பெற்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/jail1-2026-02-19-18-28-14.jpg)
காலத்தை வென்ற கற்பனை
புழல் சிறையிலிருந்த தண்டனைக் காலத்தையே தனது கற்பனைக்கு உயிர் கொடுக்கும் காலமாக மாற்றிக்கொண்டார். காலத்தை வீணாக்காமல், மருத்துவம், ஆன்மிகம், கிரைம் உள்ளிட்ட பல துறைகளில் சுமார் 120 நூல்கள் எழுதியுள்ளார். இதில் 70-க்கும் மேற்பட்டவை வெளியிடப்பட்டு விற்பனையாகின. ‘சிறையின் மறுபக்கம், ‘வாழ்வதற்கான நூறு வழிகள், ‘கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்’ உள்ளிட்ட நூல்கள் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. அவரது எழுத்துக்களை அசோகன் என்பவர் புத்தகங்களாக வெளியிட்டார். மகாபாரதம், ராமாயணம் குறித்து தலா நான்கு தொகுதிகளாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். மொத்தம் சுமார் 1,50,000 பக்கங்கள் எழுதியிருக்கிறார்.
‘யாமா’ -மூன்று நாட்களில் வடித்த அதிசயம்
‘மாயன்’ கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு "யாமா'’என்ற பெயரில் ஒன்பது அடி உயரம், நான்கரை அடி அகலம், 250 கிலோ எடையுடைய மனிதத் தலை சிற்பத்தை பைபரில் மூன்று நாட்களில் வடித்தார். சிறைச் சந்தையில் இந்தச் சிற்பம் ரூ.3.50 லட்சத்திற்கு விற்பனையானது. புழல் சிறை மற்றும் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாக சிறை பஜார்களில் அவரது ஓவியங்கள் ஆயிரக்கணக்கில் விற்றன.
நன்னடத்தையால் பெற்ற விடுதலை
பிரகாஷ் தனது தவறை உணர்ந்து திருந்தியுள்ளார் என்றும், கடந்த 13 ஆண்டுகளாக சிறை வாசத்தில் அவர் வெளிப்படுத்திய நன்னடத்தையும் செய்த நல்ல செயல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈழ்ப்.ஆ.சர்.770/2011 என்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 24.04.2015 அன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன் மற்றும் சி.டி. செல்வம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுவரை அனுபவித்த தண்டனையை முழுத் தண்டனைக் காலமாகக் கருதி, நன்னடத்தை அடிப்படையில் பிரகாஷை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
சிறையில் இருந்த காலத்தில் கைதிகளுக்கும் ஊழியர்களுக்கும்
ஒரே நேரத்தில் மருத்துவராகவும் நண்பராகவும் இருந்த ‘டாக்டர்’ பிரகாஷ், விடுதலை நாளில் அனைவரையும் தனித்தனியாகச் சந்தித்து நன்றி தெரிவித்தார். விடை பெறும்போது, அவர் தானும் கண்கலங்கியே சிறையைவிட்டு வெளியேறினார்.
சிறை எழுத்துக்கள் என்பது கைதிகளின் தனிப்பட்ட பதிவுகள் மட்டுமல்ல. சிறைகளின் உண்மை நிலையையும், அதன் சமூக விளைவு களையும் வெளிக்கொணரும் முக்கிய இலக்கியம். இந்தியாவில் சிறைச் சீர்திருத்தத்திற்கு இது வலுவான பங்களிப்பாக அமையும். தமிழகச் சிறைகளில் கைதிகள் எழுதி வெளியிடுவதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டியது காலத்தின் தேவை.
(ஊழல் தொடர்ந்து கசியும்..)
-ராம்கி
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us