கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்; புழல் ஏரிக்கு மாசு, அரசுக்கு நஷ்டம்!
சென்னை மத்திய சிறை, 18.12.2006 முதல் புழல் பகுதிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது G.O.Ms.No.635, உள் (சிறை-IV) துறை, நாள் 09.11.2024-ன்படி, “புழல் மத்திய சிறைகள்” என இருந்த பெயர், “சென்னை மத்திய சிறைகள்’என மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், புழல் மத்திய சிறைகள் மற்றும் அங்குள்ள சுமார் 370 பணியாளர்களின் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் கொட் டப்பட்டு தேங்குவதால், பொதுமக்களுக்கு கடுமையான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், சிறையிலிருந்து வெளியேற்றப்படும் மனிதக்கழிவுகள் மற்றும் கழிவுநீர், சிறை வளாகத்திற்கு வெளியே உள்ள திறந்தவெளிகளில் அப்படியே விடப்படுவதால், நகரத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியில் கடும் காற்று மற்றும் நீர் மாசுபாடு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, சிறை வளாகத் தில் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பை நிறுவ தமிழக அரசு மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் டி.ஜே.வெங்கடேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை (ர.ட.சர்.9829 ர்ச் 2012) ஏப்ரல் 2012-ல் தாக்கல் செய்தார்.
இதற்குப் பதிலாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்(TNPCB), சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை தாக்கல் செய்
கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்; புழல் ஏரிக்கு மாசு, அரசுக்கு நஷ்டம்!
சென்னை மத்திய சிறை, 18.12.2006 முதல் புழல் பகுதிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது G.O.Ms.No.635, உள் (சிறை-IV) துறை, நாள் 09.11.2024-ன்படி, “புழல் மத்திய சிறைகள்” என இருந்த பெயர், “சென்னை மத்திய சிறைகள்’என மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், புழல் மத்திய சிறைகள் மற்றும் அங்குள்ள சுமார் 370 பணியாளர்களின் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் கொட் டப்பட்டு தேங்குவதால், பொதுமக்களுக்கு கடுமையான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், சிறையிலிருந்து வெளியேற்றப்படும் மனிதக்கழிவுகள் மற்றும் கழிவுநீர், சிறை வளாகத்திற்கு வெளியே உள்ள திறந்தவெளிகளில் அப்படியே விடப்படுவதால், நகரத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியில் கடும் காற்று மற்றும் நீர் மாசுபாடு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, சிறை வளாகத் தில் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பை நிறுவ தமிழக அரசு மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் டி.ஜே.வெங்கடேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை (ர.ட.சர்.9829 ர்ச் 2012) ஏப்ரல் 2012-ல் தாக்கல் செய்தார்.
இதற்குப் பதிலாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்(TNPCB), சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை தாக்கல் செய்த பதிலுரைகளில், புழல் சிறை வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மூன்று பெரிய கழிவுநீர்த் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டதாகவும், அவை நிரம்பியபோது அகற்றுவதற்கான நிரந்தர ஏற்பாடு இல்லாததால், கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, தினசரி சராசரியாக 6 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தன.
மேலும், சிறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொது மக்கள் பயன்படுத்தும் கிணறுகளில் ஏற்பட்ட மாசு பாட்டை குறைப்பதற்காக பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் பயன்படுத்தப்பட்டதாகவும், சிறை வளாகம் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புகளை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் கழிவுகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அந்த காலகட்டத்தில் சிறை வளாகம் பொதுப்பணித் துறையால் பராமரிக்கப் பட்டு வந்ததாகவும், CMWSSB-க்கு இதில் நேரடி பங்கு இல்லை என்றும் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் உள்ள உண்மைத்தன்மையை விசாரித்து, 15 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, நீதிபதிகள் எலிப் தர்ம ராவ் மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 21.01.2013 அன்று சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற முதன்மை நீதிபதிக்கு உத்தரவிட்டது. அந்த அறிக்கையில், மேற்கண்ட நிகழ்வுகள் உண்மையென உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/jail1-2026-01-08-15-39-01.jpg)
இதன் அடிப்படையில், G.O.Ms.No.37,, உள் (சிறை-IV) துறை, நாள் 13.01.2015-ன்படி, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகம் (TNPHC)மூலம், புழல் சிறை வளாகத்தில் ரூ.2.5 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என, புழல்-I சிறையின் கண்காணிப்பாளர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித் தார். இதனைத் தொடர்ந்து, அந்த சுத்திகரிப்பு ஆலை 2016 ஜூலைக்குள் நிறுவப்படும் என்றும், அதுவரை ஈஙரநநஇ சிறை நிர்வாகத்துடன் இணைந்து செயல்படும் என்றும், ஏதேனும் புகார்கள் எழுந்தால் நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு சுதந்திரம் வழங்கப்படுவதாகவும் கூறி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் 04.09.2015 அன்று வழக்கை முடித்துவைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, வேலூர் மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் ரூ.4.94 கோடி செலவிலும், G.O.Ms.No.2419, (சிறை-IV) துறை, நாள் 15.12.2018-ன்படி, கோயம் புத்தூர், திருச்சி, சேலம் மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் ரூ.3.80 கோடி செலவிலும் கழிவுநீர் மறுசுழற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன.
2015 மார்ச் முதல் அக்டோபர் வரை 8 மாதங்களில், புழல் மத்திய சிறைகளுக்கான Domestic Customer ID: 772314 மற்றும் Institutional (Others) Customer ID: 772323 ஆகிய இரண்டு குடிநீர் இணைப்புகளுக்காக, சென்னை மெட்ரோ வாட்டர் வாரியத்திற்கு செலுத்தப்பட்ட தொகை ரூ.1.58 கோடியாக இருந்தது.
TNPHC நிர்வாக இயக்குநர் மற்றும் காவல் துறை தலைவர் டி.ஜி.பி. எம்.என். மஞ்சுநாதா, ஐ.பி.எஸ். கூறுகையில், "இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதன் பயனாக, ஏப்ரல் 2017-ல் புழல் சிறை வளாகத்தில் 5 ஏக்கர் பரப் பளவில், 10 அடி ஆழம்கொண்ட செயற்கை குளம் TNPHC மூலம் உருவாக்கப்பட்டது. இந்த ஆலை யின் மூலம் தினசரி 7 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, அந்த குளத்தில் செலுத்தப்பட் டது. குளம் முழுமையாக நிரம்புவதற்கு சுமார் ஆறு மாதங்கள் ஆனது. இந்த நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்பதால், நிலத்தடி நீர் ரீசார்ஜ் செய்யப்பட்டு, சிறை தோட்டங்களில் விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பு போன்ற பயன்பாடுகளுக்குப் பயன்படுகிறது. மீன் வளர்ப்பிற்காக ஆக்ஸிஜன் அளவைக் கட்டுப்படுத்த இரு முனைகளிலும் இயந்திரங்கள் நிறுவப் பட்டுள்ளன''’என தெரிவித்தார்.
TNPHC தலைமைப் பொறியாளர் கே. தென்னரசு கூறுகையில், "சென்னை மத்திய சிறைகள் மற்றும் பணியாளர் குடியிருப்புகளின் மொத்தமாக தினசரி நீர் நுகர்வு 14 லட்சம் லிட்டர் ஆகும். அதில் 11 லட்சம் லிட்டர் மெட்ரோ வாட்டர் மூலம் பெறப்படுகிறது. மீதமுள்ள 3 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் நிலத்தடி நீர் ரீசார்ஜ் செய்யப்பட்டு கிடைக்கிறது. ஒவ்வொரு வாரமும் சுமார் 200 கிலோ காய்கறிகள் வளர்க்கப்படுகிறது. குளத்திலிருந்து ஆண்டுக்கு சுமார் 5,000 கிலோ மீன்கள் அறுவடை செய்யப்பட்டு, சிறை பஜார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது'' என்று விவரித்தார்.
மேற்கூறிய அனைத்தும் இன்று நடைமுறையில் இல்லை என்பதே உண்மை. அரசாங்கம் செலவிட்ட பெருந்தொகை முழுமையாக வீணாகியுள்ளது.
சிறை கல்லறை விதிகள்!
சிறை விதி 775/1983-ன்படி, கைதிகளை அடக்கம் செய்வதற்காக ஒவ்வொரு சிறையிலும், சிறை வளாகத்துக்கு வெளியே தனியான கல்லறை இருக்கவேண்டும். அது பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் ஆதாரங்களுக்கு அருகில் இருக்கக்கூடாது. வீசும் காற்று சிறையை நோக்கி அடிக்கும் வகையில் சுடுகாடு அமைக்கப்படக்கூடாது. குறைந்தது 15 ஆண்டுகளுக்குப் போதுமான நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். கல்லறை பகுதியில் புல், சவுக்கு மற்றும் விரைவாக வளரும் மரங்கள் நடப்பட வேண்டும்.
இறந்த கைதியின் உடல், குறைந்தது 183 செ.மீ. ஆழத்தில் அடக்கம் செய்யப்படவேண்டும். காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மண் நன்கு அழுத்தப்படவேண்டும். அதன் மீது தரையிலிருந்து 31 செ.மீ. உயரத்தில் மண் குவிக்கப்பட வேண்டும். இயன்றால் கனமான கற்கள் அல்லது முட்கள் மேலே வைக்கப்பட வேண்டும். எப்போதும் குறைந்தது ஒரு கல்லறைக் குழி பயன்படுத்தத் தயாராக இருக்க வேண்டும். அவசியமான சூழ்நிலைகளில், ஒன்றுக்கு மேற்பட்ட கல்லறைகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
இறுதிச் சடங்குகள், The Tamil Nadu District Municipalities Act, 1920 -பிரிவு 284-ன் விதிமுறைகளின்படி நடைபெறவேண்டும். சிறைக் கண்காணிப்பாளரும் மருத்துவ அதிகாரியும் காலந்தோறும் கல்லறைகளை ஆய்வு செய்யவேண்டும். ஒவ்வொரு கல்லறையிலும் கைதியின் எண் மற்றும் இறந்த ஆண்டு குறிப்பிடப்படவேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இவ்விதிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
(ஊழல் தொடர்ந்து கசியும்..,)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us