விலங்குகளை விட மோசமான கைதிகளின் வாழ்வு!
கடந்த 15.09.2017 அன்று உச்ச நீதிமன்றம், சிறைகளுக்குள் இயற்கைக்கு மாறாக உயிரிழக்கும் கைதிகளின் நிலை குறித்து கடும் கவலை தெரிவித்து முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தது. சிறைகளில் நிகழும் இத்தகைய மரணங்களுக்கு உரிய பொறுப் புணர்வை உறுதி செய்யவும், உயிரிழந்த கைதிகளின் நெருங்கிய உறவினர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கவும், இந்தியாவில் செயல்படும் அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் தாமாக முன்வந்து பொதுநல வழக்குகளை (Suo Motu PIL) பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இந்த உத்தரவு, Re#Inhuman Conditions in 1382 Prisons (W.P.(Civil) No.406/2013 with I.A. No.68248/2017) என்ற வழக்கில் வழங்கப்பட்டது. மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) பரிந் துரைத்தபடி, சிறைகளில் நடைபெறும் இயற்கைக்கு மாறான மரணங்களை முறையாக ஆவணப்படுத்த வும், அவற்றைக் குறைக்கும் வகையில் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண் டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இதனைத் தொடர்ந்து, 2017 டிசம்பரில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்விடம் உச்ச நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையில், 2012-க்கு பிறகு சிறைகளில் நிகழ்ந்த இயற்கைக்கு மாறான மரணங்கள் தொடர்பாக, 16 உயர் நீதிமன்றங்கள் மட்டுமே தாமாக முன்வந்து பொதுநல வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளன என்றும், கொல்கத்தா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்கள் உட்பட எட்டு உயர் நீதிமன்றங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த எந்தத் தகவலையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்த லுக்கு இணங்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து(Suo Motu) W.P. Nos. 26774 of 2017, 13930, 15660 மற்றும் 13931 of 2018 ஆகிய வழக்குகளைப் பதிவு செய்தது. இவ்வழக்குகளில், உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், இயற் கைக்கு மாறான மரணங்களைச் சந்தித்த கைதிகளின் நெருங்கிய உறவினர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. இது தொடர்பாக, அன்றைய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண னுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அரசு சார்பில், அப்போதைய கூடுதல் அரசு வழக்கறிஞர் இ. மனோகரன் தாக்கல் செய்த அறிக்கையில், தேசிய குற்ற ஆவணப் பணியகம்(NCRB) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2012 முதல் 2015 வரை தமிழகச் சிறைகளில் இயற்கைக்கு மாறாக உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 157 எனவும், அவற்றில் 134 வழக்குகளுக்கான நீதித்துறை மாஜிஸ்திரேட் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள் ளன என்றும், மீதமுள்ள 23 வழக்குகளுக்கான அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.
அந்த 134 வழக்குகளில், 109 கைதிகள் நோய் மற்றும் முதுமை காரணமாக உயிரிழந்ததாகவும், இரண்டு பேர் தவறுதலாகக் கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயங்களால் மரணமடைந்ததாகவும், 22 கைதிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், மேலும் ஒரு கைதி விடுப்பில் இருந்தபோது சிறைக்கு வெளியே கொலை செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நோய் மற்றும் முதுமை காரணமாக ஏற்பட்ட மரணங்கள் சிறைகளுக்குள் நடந்ததா அல்லது வேறு சூழ்நிலை களில் நிகழ்ந்ததா என்பது குறித்தும், சிறைகளில் உள்ள மருத்துவ வசதிகளின் நிலை குறித்தும் அறிக்கையில் தெளிவான விவ ரங்கள் இல்லை என நீதிமன்றம் சுட் டிக்காட்டியது. குறிப் பாக, தற்கொலை காரணமாக நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, அவற்றை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க, மூத்த வழக்கறிஞர் ஆர். வைகையை நீதிமன்றத்தின் நண்பராக (Amicus Curiae) நியமித்து, நீதிபதிகள் எஸ். மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் 03.10.2018-ல் உத்தரவிட்டது.
சிறைக் கழிப்பறைகள் பூமியில் நரகம்’- ஆய்வில் வெளிச்சம்: வேலூர், திருச்சி மற்றும் மதுரை மத்திய சிறைகள், சிவகங்கை திறந்தவெளி சிறை ஆகியவற்றை 15.10.2018 முதல் 27.10.2018 வரை நேரில் சென்று ஆய்வு செய்த மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை, தமிழகச் சிறைகளில் கைதிகள் வாழும் நிலை “விலங்குகளை விட மோசமானதாக” இருப்பதாக வும், சிறைக் கழிப்பறைகள் “பூமியில் நரக மாக’இருப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது முதற்கட்ட அறிக்கையை 01.11.2018-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பெண் கைதிகளின் உடை அவலம்: பெண் கைதிகளுக்கு ஆண்டுக்கு ஒரு செட் துணிகள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், பெரும்பாலான பெண்கள் உள்பாவாடை இல்லாமல் கிழிந்த ரவிக்கைகளுடன் வாழ்ந்து வருவதை நேரில் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, துணிகள் தேவை என பல ஆண்டுகளாக கடிதம் அனுப்பியும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது தெரியவந்ததாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பின்னர் குடும்பத்தினரால் கைவிடப்படும் பெண்கள் அதிகமாக இருப்பதால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பெண் கைதிகளுக்கும் (விசாரணைக் கைதிகள் உட்பட) உடனடியாக துணிகள் வழங்கவும், அவற்றின் எண்ணிக்கையை மூன்று செட்களாக உயர்த்தவும் அவசர உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஆர். வைகை பரிந்துரைத்தார்.
வழிக்காவல் பற்றாக்குறையால் கைதிகள் உயிரிழப்பு: சிறைகளில் உள்ள மருத்துவமனைகள் அடிப்படை சிகிச்சைக்காக மட்டுமே அமைக்கப்பட் டுள்ளன என்றும், வெளி மருத்துவ நிபுணர்களின் உதவி தேவைப்படும் சூழ்நிலைகளில், காவல்துறை வழிக்காவல் (Escort) கிடைக்காததால் கைதிகளைச் சரியான நேரத்தில் வெளி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லமுடியாமல் போவதாகவும், சனிக்கிழமைகளில் மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கைதிகளுக்கு வழிக்கா வல் வழங்கப்படுவ தாகவும், இதனால் பலர் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உயி ரிழக்கின்றனர் என்றும், அவசரகால அடிப் படையில் வழிக்காவல் வழங்கும் முறையை அமல்படுத்தினால், சிறைகளில் ஏற்படும் பல மரணங்களையும் நோய்களின் தீவிரத்தையும் தவிர்க்க முடியும் எனவும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/jail1-2026-01-19-16-38-02.jpg)
தனிமைப்படுத்தப்பட்ட மனநலக் கைதிகள்: சிறைக் கைதிகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பேர் மனநல மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும், பலர் schizophrenia, bipolar disorder, severe depression போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகள் தனிமைப்படுத் தப்பட்டு, ஒரு ஆயுள் தண்டனை பெற்ற கைதியின் மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மருந்துகளைத் தவிர வேறு எந்த மனநல ஆலோசனையும் வழங்கப்படவில்லை என்றும், இத்தகைய கைதிகளுக்கு சிறைக்கு வெளியே உள்ள மறுவாழ்வு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
குடிநீர் -சுகாதார நெருக்கடி: வேலூர் மத்திய சிறையில், காலை திறப்பிற்குப் பிறகும், மாலை அடைப்பதற்கு முன்பும் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதாகவும், அது 1,336 கைதிகளுக்குப் போதுமானதாக இல்லை என்றும், 50 பேர் தங்கக்கூடிய அறையில் 129 கைதிகள் அடைக்கப் பட்டிருந்ததாகவும், அந்த அறையின் உள்ளே கழிப் பறைக்கு அருகில் சிமெண்ட் தொட்டி அமைக்கப்பட்டு, அதில் கழிப்பறை தேவைக்காக தண்ணீர் சேமிக்கப்படுவதாகவும், மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கைதிகள் லாக்கப் செய்யப்படுவதால், குடிப்பதற்கும் அதே வாளிகளில் சேமித்த தண்ணீரையே பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறை மற்றும் மகளிர் சிறப்பு சிறைகளில், தரைமட் டத்திற்குக் கீழே வட்ட வடிவில் தோண்டப் பட்டு சிமெண்டால் பூசப்பட்ட தொட்டி களில் குடிநீர் சேமிக்கப் படுவதாகவும், அதற்கு மிக அருகில் நிரம்பிக் கசிந்து கொண்டிருந்த பெரிய செப்டிக் தொட்டி இருந்தது “மிகவும் கொடூரமான காட்சி’எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், சுகாதாரமான கழிவுநீர் வசதிகளை உறுதி செய்து, கழிப்பறைகளின் மிக மோசமான நிலையை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளின் பராமரிப்பு தொடர்பாக, அமிகஸ் கியூரியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஆர். வைகை சுட்டிக்காட்டிய குறைபாடுகளை உடனடி யாகச் சரிசெய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம். சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. அஷுதோஷ் சுக்லா, ஐ.பி.எஸ்.ஸுக்கு 01.11.2018 அன்று இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்தது.
(ஊழல் தொடர்ந்து கசியும்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/19/jail-2026-01-19-16-37-50.jpg)