தப்பிச் செல்லும் கைதிகள்; மறைக்கப்படும் உண்மைகள்!
சிறை என்பது தண்டனை அனுபவிக்கும் இடம் மட்டுமல்ல; சட்டத்தின் ஒழுங்கும், நிர்வாகத்தின் நேர்மையும் சோதிக்கப்படும் இடம். ஆனால் அந்த இடமே அலட்சியம் மற்றும் தவறுகள் நடைபெறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டால், அது ஒரே ஒரு கைதியின் பிரச்சனை அல்ல - சட்டத்தின் மரியாதைக்கே சவாலாகும். மதுரை சரகத்தில் நடைபெற்றுவரும் தவறான பிணை விடுதலைச் சம்பவங்கள் இந்தக் கேள்வியை நேருக்கு நேர் எழுப்புகின்றன.
மதுரை சரகத்திற்கு உட்பட்ட மத்திய சிறைகளான மதுரை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில், சிறைவாசி களுக்கு வழக்குகள் நிலுவையில் இருந்தபோதும் விடுதலை செய்வது தொடர் கதையாகி வருகிறது. இது குறித்து பார்ப்போம்.
தவறான பிணை விடுதலை என்றால் என்ன? ஒரு சிறைவாசிக்கு நான்கு வெவ்வேறு வழக்குகள் உள்ளன என்று எடுத்துக்கொள்வோம். அந்த நான்கு வழக்குகளுக்கும் தனித்தனியாக பிணை பெற வேண்டும். ஆனால் மூன்று வழக்குகளுக்கு மட்டும் பிணை பெற்றும், ஒரு வழக்கில் பிணை பெறாத நிலையிலும் சிறை நிர்வாகம் விடுதலை செய்தால், அதுவே “தவறான பிணை விடுதலை”ஆகும்.
சென்னை-II மத்திய சிறை சம்பவம்: கடந்த 04.05.2020 அன்று சென்னை-ஒஒ மத்திய சிறையில் அந்த காலகட்டத்தில் பணியாற்றிய சிறைக் கண்காணிப்பாளர் இருந்தபோது, 185 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஆந்திராவைச் சேர்ந்த ராமசிவா (த/பெ சதிபாபு) மற்றும் வந்தல முரளி (த/பெ கங்காராஜு) ஆகியோர் மீது வழக்கு நிலுவையில் இருந்தபோதும் பிணை விடுதலை செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் 10 நாட்களுக்குள், 14.05.20

அதன் பின்னர் 10 நாட்களுக்குள், 14.05.2020 அன்று அதே சென்னை-ஒஒ மத்திய சிறையில் கோடிக்கணக்கான பண மோசடி வழக்கில் சிறையில் இருந்த ரகுநாத் (த/பெ அழகர்சாமி) என்பவரும் தவறாக பிணை விடுதலை செய்து அவரைத் தப்பிக்க வைத்தனர்.
DGP சுற்றறிக்கை -நடைமுறையா? காகிதமா? - இந்த சம்பவங்களுக்குப் பின், இனி வழக்கு நிலுவையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக் கூடாது என்பதற்காக, பிணை விடுதலை ஆணையை இளநிலை உதவியாளர் முதல் சிறைக் கண்காணிப்பாளர்வரை முழுமையாக சரிபார்த்து மட்டுமே விடுதலை செய்ய வேண்டும் என சிறை DGP சுற்றறிக்கை எண்: 15749/PW1/2020, நாள்: 14.05.2020, அனைத்து சிறைகளுக்கும் அனுப்பப் பட்டது.
ஆனால், இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக் கும் சேர்த்து அந்தச் சிறைக் கண்காணிப்பாளருக்கு அரசு ஊழியர்களின் சிறு குற்றங்களுக்கு வழங்கப்படும் 17(a) மட்டுமே வழங்கப்பட்டது. மிகக்குறைந்த தண்டனையுடன் அடுத்த ஒரு வருடத்தில் DIG பதவி உயர்வு வழங்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் பதவி இறக்கம் செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
17(க்ஷ) குற்றக்குறிப்பாணை - கணபதி சம்ப வம்: சுற்றறிக்கை அனுப்பிய பின்னரும், 2022-ல் சிறை அலுவலர் கணபதி நீதிமன்ற உத்தரவை தவறாகப் புரிந்து கொண்டு ஒரு சிறைவாசியை விடுதலை செய்ததற்காக, பெரிய குற்றங்களுக்கு வழங்கப்படும் 17(க்ஷ) குற்றக்குறிப்பாணை வழங்கப்பட்டது. பின்னர், பணியி-ருந்தபோதே அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கார்த்தீசன் சம்பவம் -ஆவணப் போலி குற்றச்சாட்டு: 23.12.2023 அன்று பாளையங் கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்தீசன் (த/பெ இசக்கி) என்பவருக்கு சாத்தான்குளம் காவல் நிலைய குற்ற வழக்கு எண்: 82/2023 நிலுவையில் இருந்தபோதும், மீண்டும் அந்தச் சிறைக் கண்காணிப்பாளர் தவறாக விடுதலை செய்தார்.
இந்தத் தவறு தெரியவந்ததும், அந்தச் சிறைக் கண்காணிப்பாளர் அந்த சிறைவாசியை வீட்டிலிருந்து அழைத்து வந்து வெளியிலுள்ள ஒரு லாட்ஜில் ஐந்து நாட்களுக்கும் மேல் அடைத்து வைத்து, மருத்துவ சிகிச்சைக்காக வெளியே சென்று வந்தது போல ஆவணங்களைப் போலியாக உருவாக்கி 29.12.2023 அன்று மீண்டும் சிறைக்குள் அனுப்பி விட்டார். எனினும், இவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ராகுல் -Main Gate சம்பவம்: அந்தச் சிறைக் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள பேரூரணி மாவட்டச் சிறையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த ராகுல் என்ற கைதியை 15.11.2025 காலை 7.30 மணிக்கு வெளியே அனுப்பி விட்டனர். இந்தக் கைதியின் வழக்கறிஞர் மனு பார்க்க அவரது பெயரைப் பதிவு செய்திருந்த நிலையில், விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
காவல்துறைக்கோ சிறை DGP-க்கோ தகவல் தெரிவிக்காமல், அந்தச் சிறைக் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் சிறைக் காவலர்கள் திருச்செந்தூருக்கு அனுப்பப்பட்டு, “ஒரு ஆவணத்தில் கையெழுத்து விடுபட்டுள்ளது” எனக் கூறி அன்று மதியம் 3.00 மணிக்கு ராகுல் மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். சிறைக்குள் அடைக்க முற்பட்டபோது ஏமாற்றி கூட்டி வந்து அடைக்க முயல்கிறார்கள் என்ற விரக்தியில் சிறை Main Gate-ல் தலையை மோதிக்கொண்டார். பின்னர் சமாதானப்படுத்தி சிறைக்குள் அடைக்கப் பட்டார். இதற்கும் அந்தச் சிறைக் கண்காணிப் பாளர் மீதோ, சம்பந்தப்பட்ட பணியாளர் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழ்ச்செல்வன் -மீண்டும் அதே தவறு: திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறைவாசி எண்: 3416 & PID No. 736283, தமிழ்ச்செல்வன் (த/பெ நட ராஜன், வயது 45), CJM திண்டுக்கல் நீதிமன்றத் தால் கஞ்சா வழக்கில் 7 ஆண்டு தண்டனை பெற்று 20.01.2026 அன்று மதுரை மத்திய சிறையில் தண்டனைச் சிறைவாசியாக அடைக்கப்பட்டி ருந்தார்.
இந்த வழக்குடன் சேர்த்து பிற வழக்குகளும் நிலுவையில் இருந்தன. 12.02.2026 அன்று வேறு ஒரு வழக்கில் பிணை வழங்கப்பட்டபோது, அவர்மீது நிலுவையில் இருந்த பிற வழக்குகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், விடுதலை செய்து தப்பிக்க விட்டனர். இதுவரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
விதிமுறைகள் மீறப்படுகிறதா? -சிறை விதி 2024, பிரிவு 39(5) மற்றும் சிறை உஏட சுற்றறிக்கை எண்: 15749/டர1/2020, நாள்: 14.05.2020 படி, கூடுதல் கண்காணிப்பாளர் பொறுப்பு வகிக்கும் சிறைக் கண்காணிப்பாளர்கள் அன்றாட பிணை விடுதலை செயல்பாடுகளில் நேரடியாக ஈடுபடுவதில்லை. இதுவே இதுபோன்ற தவறுகள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதற்கும், தமிழக அரசுக்கு அவப்பெயரும் சிறை நிர்வாகத்திற்கு பாதிப்பும் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது.
தவறு நடந்தால் கீழ்நிலைப் பணியாளர்கள்மீது குற்றம் சுமத்தி விடுவது வழக்கமாகி வருகிறது. சிறைக் கண்காணிப்பாளர்களும் பிணை விடும் பணியை நேரடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கூறும் சிறை விதியையும் சுற்றறிக்கையையும் முறையாக நடைமுறைப்படுத்த, சிறை DGP உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தப்பித்து ஓடும் கைதிகள் -புகார் ஏன் இல்லை? தமிழகச் சிறைகளில் கடந்த சில ஆண்டுகளாக வெளிக்குழுவில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பித்து ஓடுவது மற்றும் அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல், சிறைக் காவலர்களை அனுப்பி பிடித்துவருவது தொடர்கதையாகி வருகிறது.
பொதுவாக, தவறான விடுதலையோ அல்லது கைதி தப்பியோடினாலோ, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்து இசந பிரிவு 262ன்படி வழக்குப் பதிவு செய்யவேண்டும். ஆனால் வெளியில் பிரச்சனை பெரிதாகிவிடும் என்ற அச்சத்தில், காவல் நிலையத்தில் புகாரளிக்காமல் சட்டவிரோதமாக சிறைக் காவலர்களை வைத்து தேடுகின்றனர்.
ஒருவேளை சிறைக் காவலர்கள் கைதியைப் பிடித்துவிட்டால், "தற்செயலாக அந்த வழியாகச் சென்றபோது கண்ணில் பட்டார்'” என்ற வகையில் நாடகக்கதை உருவாக்கி மீண்டும் சிறைக்குள் கொண்டு வருகின்றனர். சட்டப்படி, அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்த பிறகே சிறைக்குள் கொண்டு வர வேண்டும். சிறை நிர்வாகம் என்பது சட்டத்தின் கடைசிக் காவலாகும். தவறான பிணை விடுதலை, புகார் அளிக்காமல் மறைக்கப்படும் தப்பிச்செல்லும் சம்பவங்கள் மற்றும் போலியான ஆவணங்கள் ஆகியவை சட்ட ஒழுங்கின் அடித்தளத்தையே சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.
சிறை DGP தகுந்த சுற்றறிக்கைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் இத்தகைய சட்டவிரோதங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், சிறைச்சுவர் உள்ளேயே சட்டம் சிக்கிக்கொள்ளும் நிலை தொடர்ந்துகொண்டே போகும்.
(ஊழல் தொடர்ந்து கசியும்..)
-ராம்கி
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us