சினிமா சொன்ன நீதியின் மறுபக்கம்!
சமீபகாலமாக சிறைச்சூழலை மையமாகக்கொண்ட பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அதற்கு முன்பே 1972-ல் நீதித்துறையின் அடித்தளத்தையே கேள்விக்குட்படுத்திய ஒரு திரைப்படம் வெளிவந்தது. அது சிவாஜிகணேசன் நடித்த "நீதி'. அந்தப் படத்தில், குற்றவாளியான சிவாஜி வெறும் சிறையில் அடைக்கப்படாமல், அவர் செய்த தவறால் சிதைந்த குடும்பத்தின்முன் நிறுத்தப்படுகிறார். தண்டனையை அனுபவித் தான்’என்ற சட்ட உண்மையை விட, “தவறை உணர்ந்தான்” என்ற மனித உண்மையை அந்தப் படம் தேடுகிறது. அப்போது அது ஒரு கதை. இன்று அது ஒரு சமூக அவசியம்.
நாம் நீதியைப் பெரும்பாலும் தீர்ப்பின் அளவால் அளக்கிறோம். எத்தனை ஆண்டுகள் தண்டனை? ஜாமீன் கிடைத்ததா? மேல்முறையீடு வரை போகிறதா? இவை சட்டத்தின் அளவுகோல்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மனம் அந்த அளவு கோலில் இயங்குவதில்லை. வழக்கு நீள்கிறது, சாட்சி மாறுகிறது, தீர்ப்பு தாமதமாகிறது. அந்த இடைவெளியில் கோபம் அமைதியாக மாறாமல், பழிவாங்கும் எண்ண மாக மாறுகிறது. “நீதிக்காகக் காத்திருக்கலாம்” என்ற மனம் பலவீனமடைந்து, “நானே முடிவு செய்கிறேன்” என்ற ஆவேசம் மேலோங்கு கிறது. அங்கே ஒரு குற்றம் முடிவதற்குப் பதிலாக, இன்னொரு குற்றத்திற்கான விதை விதைக்கப்படுகிறது.
செய்திகளில் நாம் பார்க்கும் சில சம்பவங்கள் -ஜாமீனில் வெளியே வந்தவர் மீது தாக்குதல், நீதிமன்ற வளாகங்களில் நிகழும் வன்முறை, குடும்பங்களுக்கு இடையிலான பழிக்குப் பழி -இவை அனைத்தும் ஒரு எச்ச ரிக்கை. சட்ட அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், சட்டத்தின் மீது உறுதி யான நம்பிக்கை இல்லாவிட்டால், மக்
சினிமா சொன்ன நீதியின் மறுபக்கம்!
சமீபகாலமாக சிறைச்சூழலை மையமாகக்கொண்ட பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அதற்கு முன்பே 1972-ல் நீதித்துறையின் அடித்தளத்தையே கேள்விக்குட்படுத்திய ஒரு திரைப்படம் வெளிவந்தது. அது சிவாஜிகணேசன் நடித்த "நீதி'. அந்தப் படத்தில், குற்றவாளியான சிவாஜி வெறும் சிறையில் அடைக்கப்படாமல், அவர் செய்த தவறால் சிதைந்த குடும்பத்தின்முன் நிறுத்தப்படுகிறார். தண்டனையை அனுபவித் தான்’என்ற சட்ட உண்மையை விட, “தவறை உணர்ந்தான்” என்ற மனித உண்மையை அந்தப் படம் தேடுகிறது. அப்போது அது ஒரு கதை. இன்று அது ஒரு சமூக அவசியம்.
நாம் நீதியைப் பெரும்பாலும் தீர்ப்பின் அளவால் அளக்கிறோம். எத்தனை ஆண்டுகள் தண்டனை? ஜாமீன் கிடைத்ததா? மேல்முறையீடு வரை போகிறதா? இவை சட்டத்தின் அளவுகோல்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மனம் அந்த அளவு கோலில் இயங்குவதில்லை. வழக்கு நீள்கிறது, சாட்சி மாறுகிறது, தீர்ப்பு தாமதமாகிறது. அந்த இடைவெளியில் கோபம் அமைதியாக மாறாமல், பழிவாங்கும் எண்ண மாக மாறுகிறது. “நீதிக்காகக் காத்திருக்கலாம்” என்ற மனம் பலவீனமடைந்து, “நானே முடிவு செய்கிறேன்” என்ற ஆவேசம் மேலோங்கு கிறது. அங்கே ஒரு குற்றம் முடிவதற்குப் பதிலாக, இன்னொரு குற்றத்திற்கான விதை விதைக்கப்படுகிறது.
செய்திகளில் நாம் பார்க்கும் சில சம்பவங்கள் -ஜாமீனில் வெளியே வந்தவர் மீது தாக்குதல், நீதிமன்ற வளாகங்களில் நிகழும் வன்முறை, குடும்பங்களுக்கு இடையிலான பழிக்குப் பழி -இவை அனைத்தும் ஒரு எச்ச ரிக்கை. சட்ட அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், சட்டத்தின் மீது உறுதி யான நம்பிக்கை இல்லாவிட்டால், மக்கள் தாங்களே தீர்வு காண முயற்சிக்கிறார்கள்.
சட்டம் இருக்கிறது. நீதிமன்றம் இருக்கிறது. சிறை இருக்கிறது. இருந்தும் “எனக்கு நீதி கிடைக்குமா?” என்ற கேள்விக்கு உள்ளம் தெளிவான பதிலைப் பெறவில்லை என்றால், தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகும் உள்ளத்தின் பாரம் குறைவதில்லை. நாம் இன்னும் ஒரு சிறைவாசிக்கு தண்டனை வழங்கப்பட்ட தையே நீதி கிடைத்துவிட்டதாக நம்பு கிறோம். ஆனால் தண்டனை பாதிக்கப் பட்டவரின் உள்மன அழுத்தத்தை குறைக் கிறதா? தவறு செய்த வரை பொறுப் புணர்வுடன் வாழத் தூண்டுகிறதா? சமூகத்தில் மீண்டும் நம் பிக்கையை உருவாக்குகிறதா? இக்கேள்வி கள் ஆழமாக ஆராயப்படுவதில்லை.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. சமூக அமைப்பு ஒன்று. சட்ட நடை முறையின் சிக்கல்கள் ஒன்று. உணர்ச்சியை கட்டுப்படுத்தாத மனநிலை இன்னொன்று. நமது கல்வி, அறிவை வழங்குகிறது. ஆனால் இழப்பைத் தாங்கும் மனவலிமை, கோபத்தை அடக்கும் முதிர்ச்சி, தீர்ப்பு தாமத மானாலும் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்கும் பொறுமை -இவை வாழ்க்கை நெறிகளாக எவ்வளவு கற்பிக்கப்படு கின்றன? தேர்வுகளில் இவை கேட்கப்படுவதில்லை. மதிப்பெண்களில் இவை அளவிடப்படுவதில்லை.
அதன் விளைவு தெளிவாகத் தெரிகிறது. சட்டம் மெதுவாக நகரும்போது, உணர்ச்சி அதைவிட வேகமாகச் சுடுகிறது. அந்த ஆவே சம் கட்டுப்பாட்டை இழந்தால் வன்முறையாக மாறுகிறது. இத்தகைய சூழலில் மறுசீரமைப்பு நீதி (Restorative Justice) தண்டனையை மட்டும் நோக்காமல், பிரச்சினையைச் சரிசெய்யும் ஒரு மாற்றுப் பாதையை முன்வைக்கிறது. இது தண்டனையை மறுப்பதில்லை; ஆனால் அதில் மட்டும் நிற்காமல், அடுத்தபடி என்ன என்று கேட்கிறது.
குற்றம் செய்தவரும், பாதிக்கப்பட்டவரும் பாதுகாப்பான சூழலில் சந்திக்கும்போது, “நான் செய்தேன்” என்ற ஒப்புதலும், “இதனால் நான் சிதைந்தேன்” என்ற அனுபவமும் ஒரே இடத்தில் எதிர்கொள்கின்றன. அங்கே சட்டப்பிரிவு மட்டும் பேசப்படுவதில்லை; அதன் தாக்கமும் பேசப்படுகிறது. அவ்வாறான சந்திப்பு எளிதானது அல்ல. அது கண்ணீரையும், வெட்கத்தையும், பதட்டத்தையும் கொண்டு வரும். ஆனால் அதே நேரத்தில் புரிதலுக்கும் வாய்ப்பளிக்கும். ஒருவர் தனது செயலின் மூலம் சட்டத்தை மட்டும் மீறவில்லை; ஒரு மனித வாழ்க்கையின் அமைதியைக் குலைத்தது என்பதை உணரும் தருணம் அதுவாகும். பாதிக்கப்பட்டவருக்கு, தனக்கு ஏற்பட்ட பாதிப்பு புரிந்துகொள்ளப்பட்டது என்ற உணர்வு கிடைக்கிறது. இந்த இரு உணர்வுகளும் சேர்ந்தால்தான் பழிவாங்கும் சுழற்சி மெதுவாகத் தளர ஆரம்பிக்கும்.
இந்தியச் சட்டத்தில் திருத்த வாய்ப்புகள் இல்லையா? உள்ளன. கண்காணிப்புடன் விடுதலை, சமரச நடைமுறைகள், சிறுவர் களுக்கான மறுவாழ்வு மையங்கள் - இவை அனைத்தும் தண்டனையைத் தாண்டிய அணுகுமுறைகளே. சட்டம் மாற்றத்திற்கு இடமளிக்கிறது. ஆனால் நடைமுறையில் அவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. காரணம் பாதுகாப்பு அச்சம், சமூக அழுத்தம், நிர்வாகச் சிக்கல்கள், மேலும் “கடுமையான தண்டனை தான் தீர்வு” என்ற ஆழமான எண்ணம். அது மாறாமல் சட்டப் பிரிவுகளை மட்டும் மாற்றினால் பயன் குறைவு.
சிறைத்துறையின் நோக்கம் பாதுகாப்பு மட்டும் அல்ல; திருத்தமும் அதில் அடங்கும். ஒருவர் தன் தவறை புரிந்துகொள்ளாமல் வெளியே வந்தால், அவர் சட்டத்துக்குப் பயந்து வாழலாம். ஆனால் சமூக உறவுகளைப் புரிந்துகொண்டு வாழ்வதற்கான அடித்தளம் உருவாகாது. பயம் தற்காலிகக் கட்டுப்பாட்டைத் தரலாம். ஆனால் மனமாற்றமே நீண்டநாள் ஒழுக்கத்தை உருவாக்கும். சூழ்நிலையால் தவறிச்செல்லும் இளைஞர்கள், முதன்முறை குற்றம் செய்பவர்கள், ஆதரவின்றி தள்ளாடுபவர் கள் -இவர்களுக்கு தண்டனை மட்டும் போதாது. வழிகாட்டுதல், ஆலோசனை, சமூகத்தின் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை இணைந்தால் தான் வாழ்வின் திசை மாறும். அதனால் கேள்வி தெளிவாகிறது: நீதியை நாம் வெறும் நீதிமன்றத் தீர்ப்பாகப் பார்க்க வேண்டுமா, அல்லது ஒரு சமூகத்தின் குணமடைதல் எனப் பார்க்க வேண்டுமா? ஒரு தீர்ப்பு கோப்பை மூடலாம். ஆனால் மனங்களில் திறந்தே இருக்கும் பக்கங் களை யார் மூடுவார்கள்?
ஒருவரை சிறையிலடைப் பது எளிது. ஆனால் அவரது சிந்தனை மாறுவது ஒரு நாளில் நடப்பதில்லை. அதற்கு நேரம் தேவை, துணை தேவை. திறந்த பேச்சு, பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனம், மன்னிக்கும் சக்தி, சமூகத்தின் ஆதரவு -இவை சேரும் போதுதான் நீண்டநாள் அமைதி உருவாகும்.
தண்டனை அளித்தத னால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நம்ப லாமா? அல்லது மனிதர்களுக் குள் புரிதல் உருவானால்தான் உண்மையான அமைதி நிலைக்குமா? ஒருவர் தனது செயல் எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தியது என்பதை உணர்ந்தால், மீண்டும் அதே பாதையில் செல்லும் வாய்ப்பு குறையும். பாதிக்கப்பட்டவர் தனக்கு ஏற்பட்ட அநியாயம் மதிக்கப்பட்டது என்பதை உணர்ந்தால், உள்ளத்தின் கடுப்பு மெதுவாகக் குறையும். இந்த மன அமைதிதான் சமூக நம்பிக்கையை நிலைநிறுத்தும். அந்த நிலையை அடையும் வரை, “நீதி” என்ற சொல்லுக்கு முழு அர்த்தம் கிடைக்காது.
(ஊழல் தொடர்ந்து கசியும்..)
__________________
மனிதன் மாற முடியாதவனா?
"நீதி' திரைப்படம் அவன் தவறை உணர்ந்தானா?”என்று கேட்டது. 1975-ல் "பல்லாண்டு வாழ்க' “அந்த உணர்வை உருவாக்க முடியுமா?” என்று அடுத்த கேள்வியை முன்வைத்தது.
இத்திரைப்படத்தில் நேர்மையான ஜெயிலராக எம்.ஜி.ஆர். தோன்றுகிறார். சட்டம் தண்டனை அளிக்கிறது; தண்டனை மட்டும் மனிதனை மாற்றுமா என்ற கேள்விக்கு அவர் செயலால் பதில் தேடுகிறார். ஆறு கடுமையான குற்றவாளிகளைத் தேர்ந்தெடுத்து, ‘திறந்தவெளி சிறை’ முறையில் நம்பிக்கையை அளித்து, பொறுப்பைக் கற்றுத்தந்து அவர்களைத் திருத்த முயற்சிக்கிறார். கடுமையான கட்டுப்பாட்டை விட நம்பிக்கையே மனிதனை மாற்றும் என்று அவர் நம்புகிறார். பயத்தைவிட உள்ளார்ந்த மாற்றமே நிலையான பலனைத் தரும் என்பதை கதை எடுத்துக்காட்டுகிறது. தண்டனை அனுபவித்தவர் களாக அல்ல, தவறை உணர்ந்து திருந்திய மனிதர்களாக அவர்கள் மாறுவதுதான் இந்தக் கதையின் மையக்கருத்து. இந்த அணுகுமுறை, நீதியை ஒரு தீர்ப்பாக மட்டும் அல்ல -ஒரு சமூகத்தின் குணமடைத லாகவும் பார்க்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
இந்த நீதிச் சிந்தனையின் வழித்தடத்தில், "நீதிக்கு தலைவணங்கு' திரைப்படம் நீதியின் மேன்மையை முன்னிறுத்தியது. தன் மீது பழி விழுந்தாலும், சட்டத்தின் முன் தாழ்மையுடன் நிற்கும் மனித உயர்வை எம்.ஜி.ஆர். அந்தக் கதையில் வெளிப்படுத்தினார்.
சினிமாக்கள் வெறும் பொழுதுபோக்காக வந்துபோவதில்லை; அவை காலத்தின் மனநிலையையும் சமூகத்தின் ஏக்கங்களையும் பிரதிபலிக்கின்றன. சில கதைகள் திரையரங்கில் முடிந்தாலும், அவை விதைக்கும் சிந்தனைகள் சமூகத்தில் நீண்டகாலம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இவ்வகை திரைப்படங்கள் தண்டனையைத் தாண்டி மனிதன் மாற முடியுமா என்று சிந்திக்க வைக்கின்றன.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us