சீர்திருத்த நிர்வாகத்தில் பயிற்சியின் அவசியமும் சவால்களும்

சிறைவாசிகளை சீர்திருத்தி மறுவாழ்வு அளிப்பதே இந்தியச் சிறைகளின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. அந்த நோக்கத்தை திறம்பட நிறைவேற்ற, சிறைப்பணியாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும் என இந்தியச் சிறைகள் கமிட்டி 1920-ஆம் ஆண்டு பரிந்துரைத்தது. 

Advertisment

1936-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சிறைப்பணி யாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை. நீண்டகாலமாகச் சிறைகளில் பணியாற்றியவர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் மூலமாக நடைமுறை அனுபவப் பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்பட்டன. இதனால், சில சமயங்களில் தவறான அல்லது மோசமான நடைமுறைகள் பழைய ஊழியர்களிடமிருந்து புதியவர்களி டம் பரவின. புதிய ஊழியர்கள் பல நேரங்களில் செல்வாக்கு மிக்க கைதிகளின் அழுத்தத்திற்கு ஆளாகி, சிறையின் பாதுகாப்பும் ஒழுங்கும் பாதிக்கப்படும் வகையில் செயல்பட்டனர்.

Advertisment

1936ஆம் ஆண்டு மும்பையில் உள்ள “சர் தோராப்ஜி டாடா சமூகப்பணி பட்டதாரிப் பள்ளி”  (Sir Dorabji Tata Graduate School of Social Work) நிறுவனத்தில் முதன்முறையாக சிறைப்பணியாளர்களுக்கான தொழில்முறைப் பயிற்சி தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் 1944-ஆம் ஆண்டு Tata Institute of Social Sciences (TISS) எனப் பெயர் மாற்றம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

குழு பரிந்துரைகள் மற்றும் நடைமுறை வேறுபாடுகள்

1957-59 காலகட்டத்தில் செயல்பட்ட அகில இந்தியச் சிறைக் கையேட்டுக் கமிட்டி தனது அறிக்கையில், “சீர்திருத்த நிர்வாகத்தின் வெற்றி சிறைப்பணியாளர்களின் நம்பிக்கை, தத்துவப்போக்கு மற்றும் செயல்திறன் ஆகியவற்றைப் பொறுத்தது. ஆகையால், சிறைப்பணிகளுக்கான ஆட்சேர்ப்பு மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். சிறந்த விதிமுறைகள் மற்றும் முற்போக்கான சீர்திருத்த நடவடிக்கை கள் கூட தகுதியற்ற பணியாளர்களால் செயல்திறன் இழக்கக்கூடும்’என்று குறிப்பிட்டது.

Advertisment

நீதிபதி ஆ.ச.முல்லா தலைமையில் செயல்பட்ட அகில இந்தியச் சிறைச் சீர்திருத்தக் குழு (1980-83) தனது அறிக்கை யில், அனைத்து நிலை பணியாளர்களுக்கும் அடிப்படை ஆரம்பப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும், பிற துறைகளிலிருந்து மாற்றுப்பணியமர்த்தப்படும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு குறுகியகாலப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. மேலும், பல மாநிலங்களில் புதிதாக நியமிக்கப்படும் சிறை ஊழியர்கள் முதலில் பணியில் அமர்த்தப்பட்டு பின்னர் பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

சிறைகள் மாநிலப் பட்டியலில் உள்ளதால், ஆட்சேர்ப்பு முறை, பயிற்சி நடைமுறை, நிர்வாக அமைப்பு மற்றும் பதவிப் பெயர்கள் ஆகியவற்றில் மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான நடைமுறை இல்லை. சில மாநிலங்களில் வார்டர்கள் மற்றும் உதவி ஜெயிலர்கள் என்ற இரண்டு நிலைகளில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. மற்ற சில மாநிலங்களில் வார்டர்கள் (ஈர்ய்ள்ற்ஹக்ஷப்ங்), உதவி ஜெயிலர்கள் (நஒ தஹய்ந்) மற்றும் ஜெயிலர்கள் (DSP Rank) என மூன்று நிலை அமைப்புகள் உள்ளன.

கீழ்நிலைப் பணியாளர்களான வார்டர்கள் மாநில சீர்திருத்த நிர்வாக நிறுவனங்கள் (WTS)  அல்லது வார்டர்கள் பயிற்சிப் பள்ளிகளில் (ரபந) பயிற்சி பெறுகின்றனர். அதிகாரி நிலைக்கு தேர் வாகும் நபர்கள் பிராந்திய சீர்திருத்த நிர்வாகப் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர்.

தற்போது வழங்கப்படும் சிறைப்பணிப் பயிற்சிகளின் தரமும் கால அளவும் மாநிலத் திற்கு மாநிலம் மாறுபடுகின்றன. சில மாநிலங் களில் காவல் பயிற்சி மையங்களில் முதல்நிலை ஊழியர்களுக்கு உடல் தகுதி, அணிவகுப்பு மற் றும் சட்டப் பாடங்கள் போன்ற அடிப்படைப் பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்படுகின்றன. நடத்தை அறிவியல் தொடர்பான முக்கியப் பயிற்சிகள் பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. சில மாநிலங்களில் முதல் நிலை ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக் கும் அடிப்படைப் பயிற்சி வழங்கப் பட்டாலும், அது எதிர்பார்க் கப்படும் தரத்தை எட்டவில்லை.

பல்வேறு குழுக்களின் பரிந்துரைகள், இந்திய அரசின் பயிற்சிக் கொள்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நெறி முறைகள் இருந்தபோதிலும், சிறைப்பணியாளர்களுக்கான தரமான பயிற்சி அனைத்து இடங்களிலும் வழங்கப்படவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முறையாகப் பயிற்சி பெறாத பணியாளர்கள் பயனற்றவர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சீர்திருத்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கே தடையாக மாறுகின்றனர். முறை யான பயிற்சி சிறைத்துறையில் நல்ல பணிச்சூழலை உருவாக்கவும், நல்ல நிர்வாக நடைமுறைகளை நிலை நிறுத்தவும், அவற்றை நீண்டகாலம் தொடரவும் உதவுகிறது.

நன்கு பயிற்சிபெற்ற ஊழி யர்கள் சிறைச் சீர்திருத்தங்களை திறம்பட செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக இருப்பார்கள். பயிற்சி அவர்களின் தனிப்பட்ட அணுகுமுறைகளை யும் தொழில்திறன்களையும் மேம்படுத்தும். சிறைப்பணி யாளர்களின் பயிற்சிக்காக செலவிடப்படும் தொகை, இறுதியில் குற்றவாளிகளின் மறுவாழ்வை உறுதிசெய்து சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.

உச்ச நீதிமன்றத் தலையீடும் பயிற்சிக் குறைபாடுகளும்

20.12.1979 அன்று வழங்கப் பட்ட சுனில் பத்ரா யள் டெல்லி நிர்வாகம் வழக்கின் தீர்ப்பில், இந்திய உச்ச நீதிமன்றம் குறிப் பிடத்தக்க கருத்துகளை வெளியிட்டது. நீதிபதிகள் V.R.கிருஷ்ணய்யர்,  R.S.பதக் மற்றும் O.சின்னப்ப ரெட்டி ஆகியோர், "தற்போதைய சிறை அமைப்பு கைதியின் வாழ்க்கையின் பல அம்சங்களில் சிறை அதிகாரிகளுக்கு விரிவான அதிகாரத்தை வழங்குகிறது. கைதிகளின் உரிமைகள் மறுக்கப்படும்போது, அவர்கள் நிர்வாகத்தின் மீது ஆழ்ந்த விரக்தி மற்றும் வெறுப்பை உருவாக்குகின்றனர். மருத்துவச் சிகிச்சை அல்லது நூலகப் பயன்பாடு போன்ற எளிய விஷயங்களிலும் காவலரின் அதிகாரம் அதிகமாக உள்ளது. மேலும், பல மாநிலங்களில் கைதிகளைக் கையாள்வதற்கான சிறைப்பணியாளர்களின் பயிற்சி வெறும் வார்த்தை அளவிலேயே உள்ளது'’என்று சுட்டிக்காட்டினர்.

அதேபோல், ‘1382 சிறைகளில் மனிதாபிமானமற்ற நிலைமைகள்’ தொடர்பான ரிட் மனு (சிவில்) எண் 406/2013-ல், 17.02.2017 அன்று வழங்கிய உத்தரவிலும், சிறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சியில் கடுமையான குறைபாடுகள் உள்ளன என நீதிமன்றம் குறிப்பிட்டது. பல ஆண்டுகளில் சுமார் 7800 ஊழியர்களுக்கே பயிற்சி வழங்கப்பட்டுள்ள துடன், அதிலும் பெரும்பாலும் புத்தாக்கப் பயிற்சிகள் (Refresh Course)  மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்பது வருத்தத்துக்குரி யது எனக் கூறப்பட்டது. அனைத்து நிலை சிறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான அடிப்படைப் பயிற்சியை தரப்படுத்தவும், அதற்கான பயிற்சிக் கையேடுகளைத் தயாரிக்க வும் இந்திய அரசுக்கு உள்துறை அமைச்சகம் மூலம் அவசர உத்தரவு வழங்கப்பட்டது.

பயிற்சிக் கையேடுகள்: உருவாக்கமும் பயன்பாடும்

இதனைத் தொடர்ந்து, சிறைப்பணியாளர் களுக்கான பயிற்சிக் கையேடுகளை உருவாக்கும் பொறுப்பு இந்திய அரசால்  Bureau of Police Research and Development (BPR&D), நியூ டெல்லிக்கு ஒப்படைக்கப்பட்டது. சிறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்காக தனித்தனி கையேடுகளைத் தயாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் தலைவராக V.S.K. கவுமுதி, IPS, ADGP, BPR&D செயல்பட்டனர். உறுப்பினர்களாக திருமதி சம்பத் மீனா, IPS, IG (Research & Correctional Administration), Dr.விஜயகுமார்,  IPS, SP (R&CA), வேலூர் APCA-வைச் சேர்ந்த குற்றவியல் பேராசிரியர் கள்    Dr. A.மதன்ராஜ் மற்றும் Dr. T.H.அன்சார் ஆகியோர் இணைந்தனர். ஆந்திர மாநிலத்தின் முன்னாள் சிறைத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் Dr. M.R.அகமது ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

பல ஆலோசனைகள் மற்றும் கலந்துரை யாடல்கள் நடைபெற்ற பின், இந்தக் கையேடுகள் 31 அக்டோபர் 2017 அன்று BPR&D இணையதளத்தில் வெளியிடப்பட் டன. இக்கையேடுகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சியில் ஒரே மாதிரியான பொதுவான வழிகாட்டுதல்களை உருவாக்க உதவும். மேலும், மாநிலங்களின் தேவைகளுக்கேற்ப பயிற்சி நிறுவனங்கள் தங்களது நடைமுறைகளை மேம்படுத்திக் கொள்ளவும் இவை வழிகாட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(ஊழல் தொடர்ந்து கசியும்..)