ஆட்டோ சங்கர் வழக்கு: பத்திரிகை சுதந்திரத்துக்கு
நக்கீரன் பெற்றுத் தந்த வரலாற்று வெற்றி!
சிறைக் கைதி புத்தகம் எழுது வது குற்றமா? சிறை குறித்த ஆய்வில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும், சிறையில் தண்டனை அனுபவிப்பவர்களாக இருந்தாலும், சிறை நிர்வாகத்தில் பணியாற்றி யவர்களாக இருந்தாலும், சிறை அனுபவம் என்பது ஒவ்வொரு வருக்கும் கையில் உள்ள ரேகை யைப் போலவே தனித்துவமானது. அந்த அனுபவங்களைப் பகிர வேண்டும் என்ற எண்ணம் இயல் பானதே. அந்த விருப்பங்களி லிருந்தே சிறை சார்ந்த நூல்கள் (Prison Literature) உருவாகி, “சிறை இலக்கியம்” எனப்படும் தனித்துவ மான இலக்கியப் பிரிவாக வளர்ந்து, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
உலக வரலாற்றைப் பார்த் தால், சிறையிலிருந்து ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. பொது வாக, சிறைவாசிகள் எழுதும் நூல்கள் இரண்டு விதம். ஒன்று சிறை வாழ்க்கை, நிர்வாகம், மனித உரிமை சிக்கல்கள், சிறைச் சூழ் நிலைகளின் உண்மை நிலை ஆகிய வற்றை பதிவு செய்வது. மற் றொன்று கவிதை, சினிமா, அரசி யல் சிந்தனை, தத்துவம், பொது அறிவு போன்ற பரந்த தலைப்பு களை மையமாகக் கொண்டது. கடுமையான அடக்குமுறைகள் நிலவும் சிறைகளில்கூட, கைதிகள் புதுமையான யுக்திகளைப் பயன் படுத்தி எழுதி, அந்த எழுத்துகளை வெளியுலகத்துக்குக் கொண்டு வந்து புத்தகங்களாக வெளியிட்டுள்ளனர்.
கைதியின் எழுத்து உரிமை:
உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்புகள்-
State of Maharashtra Vs Prabhakar Pandurang Sanzgiri (1966): தடுப்புக் காவலில் வைக்கப்பட் டுள்ள ஒருவரை, சிறையில் அவர் எழுதிய புத்தகத்தை வெளியிடுவ திலிருந்து தடுக்க முடியாது என் றும், தடுப்புக் காவல் உத்தரவுகளில் புத்தகம் எழுதுவதைத் தடை செய்யும் எந்தச் சட்ட விதியோ, நிபந்தனையோ இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
கைதிகள் எழுதிய கையெழுத்துப் பிரதிகளை சிறை அதிகாரிகள் வெளியிட மறுப்பது, அந்தக் கைதியின் தனிப்பட்ட சுதந்திரத்தை நேரடியாக மீறுவதாகும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. ஒருவரின் சிந்தனை, எழுத்து, படைப்பு வெளிப்பாடு ஆகியவை சிறைச் சுவர்களுக்குள் முடங்கிப் போக வேண்டியவை அல்ல என்பதையும் இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது.
Francis Coralie Mullin Vs Delhi Administration (1981): இந்த வழக்கில், அரசியல் சாசனத்தின் பிரிவு 21-ல் குறிப்பிடப்பட்டுள்ள “வாழ்க்கை (கண்ச்ங்)” என்ற சொல்லின் பொருளை உச்ச நீதிமன்றம் மேலும் விரிவுபடுத் தியது. வாழ்க்கை என்பது உயிர் வாழ்வதற்கான உடல் தேவைகள் மட்டுமல்ல; பல்வேறு வடிவங்களில் எழுத, படிக்க, சிந்திக்க, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சிந்தனை சார்ந்த சுதந்திரங்களையும் உள்ளடக்கியது என விளக்கியது.
மேலும், அறிவும் சிந்தனையும் சார்ந்த படைப்புத்திறன் வெளிப்பாடு கள் (The idea that intellectual and creative expression are basic human needs) என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்றும், அவை சிறை அமைப்பிற்குள்ளும் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும் இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியது. கைதி என்ற காரணத்தால் ஒருவரின் சிந்தனைச் சுதந்திரத்தை பறிக்க முடியாது என்பதே இந்தத் தீர்ப்பின் மையக் கருத்தாகும்.
ஆர். ராஜகோபால் யள் தமிழ்நாடு மாநில அரசு (1995): கௌரிசங்கர் அ ஆட்டோ சங்கர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, செங்கல்பட்டு நீதிமன்றம் 31.05.1991 அன்று அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் 17.07.1992 அன்று உறுதி செய்தது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மேல்முறையீடு 05.04.1994 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரது கருணை மனு இந்திய குடியரசுத் தலைவரிடம் அப்போது பரிசீலனையில் இருந்து வந்தது. இந்தச் சூழலில், 1991-ஆம் ஆண்டு செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டி ருந்த காலகட்டத்தில், ஆட்டோ சங்கர் சுமார் 300 பக்கங்கள் கொண்ட தனது சுயசரிதையை எழுதி யுள்ளார். அந்தக் கையெழுத்துப் பிரதியை, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் தனது மனைவி ஜெகதீஷ்வரியிடம் வழங்கி, அவர் மூலம் தனது வழக்கறிஞர் சந்திரசேகரனிடம் ஒப்படைத்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/jail1-2026-02-16-16-48-21.jpg)
இந்தச் சுயசரிதையை “நக்கீரன்” இதழில் வெளியிட வேண்டும் என்ற தனது விருப்பத்தை, ஆட்டோ சங்கர் தனது வழக்கறிஞரிடம் தெளிவாகத் தெரிவித்திருந்தார். மேலும், வழக்கறிஞருக்கும், நக்கீரன் ஆசிரியர் கோபாலுக் கும் எழுதிய பல கடிதங்களில் இந்த விருப்பத்தை அவர் தொடர்ந்து உறுதிப்படுத்தியும் வந்தார்.
இதன் அடிப்படையில், சுயசரிதைத் தொடரை வெளியிடத் தொடங்குவதற்கு முன், 21.05.1994 தேதியிட்ட நக்கீரன் இதழில், “ஆட்டோ சங்கரின் பரபரப்பான வாழ்க்கை வரலாறு விரைவில் வெளியாகும்” என நக்கீரன் அறிவித்தது. இந்த அறிவிப்பு, காவல்துறை மற்றும் சிறை நிர்வாக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, 15.06.1994 அன்று, சிறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.எஸ். பஞ்சாப கேசன், நக்கீரன் ஆசிரியருக்கு ஆட்சேபனைக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், சிறையில் இருந்தபோது ஆட்டோ சங்கர் தனது சுயசரிதை யை எழுதியதாகக் கூறப்படுவது தவறானது என்றும், சம்பந்தப்பட்ட கைதியே அந்தப் புத்தகத்தை எழுதியதை மறுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், அந்த நூலை வெளியிடுவது தொடர்பாக, ஆட்டோ சங்கர் தனது வழக்கறிஞர் சந்திரசேகர னுக்கு, சிறை அதிகாரிகள் முன்னிலையில் எந்தவொரு Power of Attorney-யும் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் பெயரில் பத்திரிகையில் கட்டுரைகள் வெளியிடுவது சிறை விதிகளுக்கு எதிரானது என்றும், மேற்கண்ட செயல்களுக்காக உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம் என்றும், எனவே அந்தத் தொடரை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் பல்வேறு சட்ட நிலைகளைக் கடந்து உச்ச நீதிமன்றத்தை அடைந்தபோது, இந்த மனுவைச் சார்ந்து சில அடிப்படை கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.
ஒரு இந்திய குடிமகன் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதுவதைத் தடுக்க முடியுமா? அவ்வாறு தடுப்பது, அந்தக் குடிமகனின் தனிப்பட்ட வாழ்வுரிமையை மீறுவதல்லவா?
அரசின் அதிகாரிகள் குறித்து அவதூறாகக் கூறப்படும் தகவல்கள் வெளியிடப்படலாம் என்ற காரணத்தால், பத்திரிகைகளுக்கு முன்கூட்டியே தடை விதிக்க அரசாங்கத்திற்கு ஏதேனும் சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளதா? அத்தகைய வெளியீடுகளைத் தடுக்க முன்கூட்டியே தடை விதிக்க முடியுமா?
ஒரு கைதி சிறையில் இருப்பதால், தனது உரிமைகளைப் பாதுகாக்க சட்டப்பூர்வ தீர்வுகளைப் பயன்படுத்த இயலாத சூழ்நிலையில், அவரது வாழ்க்கைக் கதையை வெளியிடுவதைத் தடுக்க முடியுமா?
இந்தக் கேள்விகளை முன்வைத்த உச்ச நீதிமன்றம், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களைத் தடை செய்யவோ அல்லது முன்கட்டுப்பாடு விதிக்கவோ அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும் அதிகாரம் அளிக்கும் எந்தச் சட்டமும் இல்லை என்று தெளிவுபடுத்தியது. தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில் வெளியீடு இருந் தால் மட்டுமே, அதற்கு முன் தடை விதிக்க முடியும் என்றும் கூறியது. அதே போல், அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தால், அதற்கான தீர்வு அவதூறு வழக்கு தொடர்வதேயாகும்; அதனை முன்கூட்டியே தடுத்து நிறுத்த முடியாது என்றும் வலியுறுத்தியது.
இவ்வாறு, சிறைக்கைதி தனது வாழ்க்கை வரலாற்றை வெளியிடும் உரிமையையும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1)(ஹ)-இல் உறுதி செய்யப்பட்டுள்ள பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜீவன் ரெட்டி 07.10.1994 அன்று வழங்கினார்.
தீர்ப்புகளுக்குப் பின் நிலவும் சவால்கள்: சிறை விதிகள் மற்றும் சிறை நிர்வாக நடைமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகின்றன. இதன் விளைவாக, சில சிறை அதிகாரிகள் கைதிகளின் கையெழுத்துப் பிரதிகளைப் பறிமுதல் செய்வது, எழுதும் பொருட்களை அனுமதிக்க மறுப்பது போன்ற தன்னிச்சையான தடைகளை உருவாக்கு கின்றனர். நடைமுறையில், கைதிகள் எழுதுவதற்கும், தங்கள் படைப்புகளை வெளியிடுவதற்குமான உரிமையைச் செயல்படுத்துவதற்கும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களை நாட வேண்டிய கட்டாய நிலை உருவாகிறது.
“அரசின் அல்லது சிறையின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும்” அல்லது “பொது அமைதிக் குப் பங்கம் விளைவிக்கும்” தகவல்கள் அதில் இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்து வதற்காக, கைதி எழுதிய நூலின் ஒரு பிரதியை ஆய்வு அல்லது தணிக்கை செய்யும் அதிகாரம் சிறை நிர்வாகத்திடம் உள்ளது.
அதே நேரத்தில், சிறை நிர்வாகத்தை பாதிக்காத வகையில், ஒரு கைதி புத்தகம் எழுதுவது, அவரது நன்னடத்தைக்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது. இதனை நீதிமன்றத்தில் முன் வைத்து, விடுப்பு அல்லது விடுதலை பெற உதவும் ஒரு வழியாகவும் சில நேரங்களில் பயன்படுத்தப் படுகிறது.
(ஊழல் தொடர்ந்து கசியும்..)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/16/jail-2026-02-16-16-48-09.jpg)