ஆன்மிக முகமூடியின் பின்னால் ஜெயேந்திரர்!
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்” என்பது ஜனநாயகத்தின் உயிர்நாடி. அதாவது - யார் என்றாலும், எவ்வளவு அதிகாரம் இருந்தாலும், எத்தனை பணம், பதவி, செல்வாக்கு இருந்தாலும், சட்டம் பார்க்க வேண்டியது மனிதனையே; பெயர், பதவி, ஜாதி, மதம் அல்ல. ஆட்சியாளரோ, சாதாரண குடிமகனோ, பணக்காரனோ, ஏழையோ, ஆணோ, பெண்ணோ - ஒரே சட்டம், ஒரே நீதிமுறை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு இதனை உறுதி செய்கிறது. இந்த நியாயமான சமத்துவமே ஒரு சமூகத்தின் நம்பிக்கைக்கும் நீதிக்கும் அடித்தளமாகிறது.
காவல்துறையும், சிறைத்துறையும் சில நேரங்களில் ஆளுக்கேற்ற நீதி, ஆளுக்கேற்ற பார்வை என்ற வகையில் செயல்படுவது நாம் அறியாததல்ல. கடந்த அத்தியாயத்தில், விடுதலைக்காகப் போராடி கைதான வ.உ.சி., சிறைச்சாலையில் அனுபவித்த சித்ரவதைகளைப் பார்த்தோம்.
உடல் உழைப்பின் வலி, வியர்வை, அனுபவம் ஆகியவற்றை வாழ்க்கையின் ஒரு பகுதியாக அறிந்திடாத ஒருவர், இ.பி.கோ. 302 மற்றும் 120-இ பிரிவுகளின் கீழ் கைதாகி விசாரணையை எதிர்கொண்டபோது, காவல்துறை அவரிடம் நடந்துகொண்ட விதம் இதற்கு முற்றிலும் மாறுபட்ட காட்சியாகும். காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலக வளாகத்திலுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், தரையில் மெத்தை விரித்து அதன் மேல் கம்பளி மற்றும் போர்வை போட்டு, அவரை அமரவைத்தபடியே விசாரணை நடத்தப்பட்டது. அவர் 2500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்க காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் 69வது சங்கராச்சாரியாரான ஜெயேந்திர சரஸ்வதி. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சங்கரராமன் கொலை வழக்கில், இவர் 2004 நவம்பர் 11 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு, பின
ஆன்மிக முகமூடியின் பின்னால் ஜெயேந்திரர்!
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்” என்பது ஜனநாயகத்தின் உயிர்நாடி. அதாவது - யார் என்றாலும், எவ்வளவு அதிகாரம் இருந்தாலும், எத்தனை பணம், பதவி, செல்வாக்கு இருந்தாலும், சட்டம் பார்க்க வேண்டியது மனிதனையே; பெயர், பதவி, ஜாதி, மதம் அல்ல. ஆட்சியாளரோ, சாதாரண குடிமகனோ, பணக்காரனோ, ஏழையோ, ஆணோ, பெண்ணோ - ஒரே சட்டம், ஒரே நீதிமுறை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு இதனை உறுதி செய்கிறது. இந்த நியாயமான சமத்துவமே ஒரு சமூகத்தின் நம்பிக்கைக்கும் நீதிக்கும் அடித்தளமாகிறது.
காவல்துறையும், சிறைத்துறையும் சில நேரங்களில் ஆளுக்கேற்ற நீதி, ஆளுக்கேற்ற பார்வை என்ற வகையில் செயல்படுவது நாம் அறியாததல்ல. கடந்த அத்தியாயத்தில், விடுதலைக்காகப் போராடி கைதான வ.உ.சி., சிறைச்சாலையில் அனுபவித்த சித்ரவதைகளைப் பார்த்தோம்.
உடல் உழைப்பின் வலி, வியர்வை, அனுபவம் ஆகியவற்றை வாழ்க்கையின் ஒரு பகுதியாக அறிந்திடாத ஒருவர், இ.பி.கோ. 302 மற்றும் 120-இ பிரிவுகளின் கீழ் கைதாகி விசாரணையை எதிர்கொண்டபோது, காவல்துறை அவரிடம் நடந்துகொண்ட விதம் இதற்கு முற்றிலும் மாறுபட்ட காட்சியாகும். காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலக வளாகத்திலுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், தரையில் மெத்தை விரித்து அதன் மேல் கம்பளி மற்றும் போர்வை போட்டு, அவரை அமரவைத்தபடியே விசாரணை நடத்தப்பட்டது. அவர் 2500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்க காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் 69வது சங்கராச்சாரியாரான ஜெயேந்திர சரஸ்வதி. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சங்கரராமன் கொலை வழக்கில், இவர் 2004 நவம்பர் 11 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் தமிழ்நாட்டின் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கின் விரிவான விவரங்களை அலசுவதோ, அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதையோ, போதிய ஆதாரங்களை காவல்துறை நிரூபிக்கத் தவறியதையோ, ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் விடுதலை செய்யப் பட்டதையோ இங்கு விரிவாகப் பார்ப்பது அவசியமில்லை.
வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், “சிறை” ஒரே மாதிரி இருந்தாலும், “கைதி” ஒரே மாதிரி நடத்தப்படவில்லை என்பதைக் காட்டும் சம்பவங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. அடிமை இந்தியாவில் வ.உ.சி. அனுபவித்த கொடுமைகளும், சுதந்திர இந்தியாவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அனுபவித்த சிறை வாழ்வும் -இந்த இரண்டு காட்சிகளும் நேர்மாறான இரண்டு இந்தியாவைப் போலத் தோன்றுகின்றன.
"பத்து நிமிஷம்.. பத்து நிமிஷத்துல என் வாழ்க்கையே இப்படி ஆயிடுத்து. கோபுரத்துல தங்கக்கலசமா ஜொலிச்சிட்டிருந்தேன். இன்னைக்கு சாக்கடையிலே கிடக்கிறேன். இதற்கப்புறம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? நேக்கு யார் மதிப்பு கொடுக்கப் போறா? நான் தற்கொலை பண்ணிக்கப்போறேன்''’என்று புலம்பியதோடு, காவித்துணியை அரைஞாண் கயிறுபோல் இடுப்பில் கட்டியிருந்த ஜெயேந்திரர், அதில் கோவணத்தைக் கட்டி, அந்த நீளமான துணியை உடலில் சுற்றிக்கொண்டார். அந்தக் காவித்துணி யைப் பயன்படுத்தி அவர் தற்கொலை செய்துகொண்டால் என்ன ஆகும்? காவல்துறை விசாரணையின்போது கையாண்ட இந்தக் காவி மிரட்டலே பின்னர் வேலூர் மத்திய சிறையிலும் தொடர்ந்தது.
குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரருக்கு வேலூர் சிறைச்சாலை எந்த அளவுக்கு இறங்கி மரியாதை செய்தது தெரியுமா?
சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பாதுகாப்பு மிக்க மூடப்பட்ட சிறை (Closed Prison) நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் புதர்களால் சூழப்பட்ட நிலையில் இருந்தது. அந்தத் தொகுதியை ஜெயேந்திரருக்காக ஒதுக்க தீர்மானிக்கப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அங்கு அனுப்பப்பட்டு, அவர்களைக் கொண்டு இரண்டு மணி நேரத்தில் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டன. போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலையிலுள்ள அதிகாரிகள் இருவரின் தலைமை யில், 40 காவலர்களைக் கொண்ட குழு இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.
அங்கு ஜெயேந்திரர், "என்னதான் எல்லாவற்றையும் துறந்தாலும் எனக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. லோக க்ஷேமத்துக்காக பூஜை செய்யாமல் சாப்பிடக்கூடாது. நான் நினைத்தவாறு சிறைக்குள் பூஜை செய்யவேண்டும். பூஜை செய்ய தனி இடம் வேண்டும். சிறையில் கொடுக்கப்படும் உணவை என்னால் சாப்பிட முடியாது; என் ஆசாரப்படி என்னுடைய உணவு ஒரு பிராமணரால்தான் சமைக்கப்பட வேண்டும். கிணற்று நீர்தான் அருந்துவேன்''’என்று சில நிபந்தனைகளை விதித்தார். அவற்றிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறை நிர்வாகத்தால் அவசரமாக செய்து முடிக்கப்பட்டன. தண்டனைக் கைதியாக இருந்த ஒரு பிராமணக் கைதியால் அவருக்கான உணவு சமைக்கப்பட்டு, பரிசோதனைக்குப் பிறகு வழங்கப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/12/jail1-2026-02-12-17-51-08.jpg)
பூஜை போன்ற விஷயங்களில் அவர் எவ்வாறு நடந்துகொண்டார் என்பது இங்கு விவாதப் பொருளல்ல. ஆனால் ஜெயேந்திரர் முன்வைத்த கோரிக்கையை ஒரு தனிப்பட்ட உணவு விருப்பமாக மட்டும் பார்க்க முடியாது. அது சாதி அடையாளத்தின் அடிப்படையில் ஒருவரின் (பிராமணரல்லாத சமையலர்) உழைப்பையும் சமையலையும் நிராகரித்த செயலாகும். சட்ட ரீதியாக இது “தீண்டாமைக் குற்றம்” என நிரூபிக்கப்படாமல் போகலாம். ஆனால் சட்டம் மட்டும் சமூகநீதியை முழுமையாக அளிக்காது. சட்டம் குற்றம் என சொல்லாத அனைத்தும் நியாயமாகிவிடாது. அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு சிறைச் சூழலில், அனைவருக்கும் ஒரே விதிகள் பொருந்தவேண்டிய நிலையில், “நீ எந்த ஜாதி, அதனால் உன் கையால் சமைத்ததை நான் உண்ணமாட்டேன்’என்ற நிலைப்பாடு, தீண்டாமை மனப்போக்கின் தெளிவான வெளிப்பாடாகும்.
இங்கு எழும் அடிப்படைக் கேள்வி, அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதல்ல. ஒரு மனிதனின் உழைப்பு, அவர் பிறந்த ஜாதியின் காரணமாக நிராகரிக்கப்படலாமா என்பதே மையக் கேள்வி. “அனைவரிலும் ஒரே ஆத்மா” என்ற தத்துவத்தை வலியுறுத்தும் அத்வைத மரபைச் சேர்ந்த ஆன்மிகப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர், சாதி அடிப்படையில் உணவை மறுப்பது அந்தத் தத்துவத்திற்கே முரணான நடைமுறையாகிறது. ஆகவே, இது சாஸ்திர நியமம் அல்லது தனிப்பட்ட மத நடைமுறை என்ற பெயரில் விளக்கப்பட்டாலும், சமூக நீதியின் பார்வையில் அது தீண்டாமை மனப்போக்கிலிருந்து வேறுபட்டதாக இருக்க முடியாது.
சட்டம் மௌனமாக இருக்கும் இடத்தில், நியாயத்தின் குரல் எழ வேண்டிய அவசியம் உருவாகிறது. ஆன்மிக அதிகாரமும், சாதி மனோபாவமும் ஒரே இடத்தில் கூடும்போது, சமத்துவம் எவ்வாறு பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்பதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் உள்ளது.
இங்கு மேலும் ஒரு விஷயத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் எழுகிறது. பொதுவாக வெளியில் பேசப்படாமல் விடப்படும் அம்சங் களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இதைச் சொல்ல வேண்டியுள் ளது. ஒரு கொலை வழக்கின் பின்னணியில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்ட ஜெயேந்திரர், தனிப்பட்ட நடத்தையில் வெகு சாதாரண மனிதராகவே இருந்தார். ஆனால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும், லோக குரு ஆதிசங்கரர் மரபில் வந்த சங்கராச்சாரியார் என்ற உயர்ந்த ஆன்மிகப் பதவியின் அடையாளத்தோடு, மேல்மட்ட அரசியல் தலைவர்களால் மரியாதையுடன் நடத்தப்பட்டார்.
இந்த பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக, பழங்காலத்துடன் தொடர்புபடுத்தப்படும் ஒரு ஐதீக நடைமுறையை ஜெயேந்திரர் வலியுறுத் திக் கடைப்பிடித்துள்ளார்.
அப்போது வேலூர் சிறையில் பணி யாற்றிய ஒருவரின் கவனத்தை, ஜெயேந்திரர் அடைக்கப்பட்டிருந்த தொகுதிக்குத் தொடர்ந்து அதிக அளவில் வாழை இலைகள் கொண்டு செல்லப்படுவது ஈர்த்தது. இதன் காரணம் குறித்து மட வட்டாரத்தில் விசாரித்தபோது, வாழை இலையின் “மற்றொரு பயன்பாடு’குறித்து விளக்கமளித்தனர்.
“சில சந்நியாச மரபுகளில், மல-மூத்திரம் போன்ற உடல் கழிவுகள் பூமிக்கு நேரடியாகச் சேரக்கூடாது என்ற கடுமையான ஆசௌச (தீட்டு நிலை) கட்டுப்பாடு நிலவுகிறது.
இயற்கை உபாதைகளுக்குப் பிறகு மண் அல்லது இலை கொண்டு அதை மூடிவிடும் நடைமுறை, பழங்கால துறவற வாழ்க்கையுடன் தொடர்புடையது. இயற்கையாகக் கிடைக்கும், அழுகக்கூடிய, எளிதில் அகற்றக்கூடிய பொருளாக வாழை இலை பயன் படுத்தப்படுகிறது. "இது காஞ்சி மடம் மட்டுமன்றி சில பிற சந்நியாச மரபுகளுடனும் தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது' என்கிறார்கள்.
சுயநலம், சாதி வெறி, ஆத்திரம், கோபம், பழிவாங்கும் மனோபாவம் போன்ற கீழ்மையான குணங்கள் வெளிப்பட்ட சூழலிலும், சாஸ்திரம், சம்பிரதாயம், ஐதீகம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து முன்னிறுத்தி தன்னை “மேலான வர்” என்ற தோற்றத்தை உருவாக்கிக்கொண்ட ஜெயேந்திரரை இச்சமூகம் உணரத் தவறி விட்டது. இவ்வாறான ஒருவரை வாழ்நாள் முழுவதும் போற்றத்தக்க ஆன்மிகத் தலைவராக மதித்துவந்தவர்களையும், அவருக்கு விதிவிலக்கு வழங்கிய சிறை நிர்வாகத்தையும் யாரால் கேள்வி கேட்க முடியும்?
(ஊழல் தொடர்ந்து கசியும்)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us