மனிதனை மாடாக மாற்றிய கொடுமை: வ.உ.சி.
காந்தி, நேரு, காமராஜர் போன்ற தலைவர்கள் இந்திய விடுதலைக்காகப் போராடினர். சிறைத்தண்டனை அனுபவித்தனர்; துன்பங்களைச் சந்தித்தனர். அவர்களது போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் இந்தியா பெரும் அங்கீகாரத்தை வழங்கியது. காந்தி, “மகாத்மாவாக கொண்டாடப் பட்டார்; நேரு இந்தியாவின் முதல் பிரதமராக உயர்ந்தார்; காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்ச ராக மக்கள் மனங்களில் இடம்பிடித்தார். அரசியல் அதிகாரமும், சமூக மரியாதையும் அவர்களைத் தேடி வந்தது.
நாட்டுக்காகப் பலர் ரத்தம் சிந்தியிருக்கிறார் கள்; சிலர் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த தேசம், அந்த அனைவரையும் ஒரே அளவில் அங்கீகரித்ததில்லை. சிலர் வரலாற்றின் உச்சியில் நிறுத் தப்பட்டனர்; சிலர் காலத்தின் ஓட்டத்தில் மறக்கப்பட்டனர். வாழும் காலத்தில் மரியாதையும் பாதுகாப்பும் கிடைக்காதவர்களே அதிகம் என்பதே வரலாற்றின் கசப்பான உண்மை.
அத்தகைய தியாகிகளுள் ஒருவர் வ.உ.சி. - வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. விடுதலைப் போராட்ட வரலாற் றில், உலகிலேயே மிக நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் தலைவர் இவரே. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை (சுமார் 40 ஆண்டுகள்) வழங்கிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், அவரை “வெறுக்கத்தக்க ராஜதுரோகி, “மிக ஆபத்தான மனிதன்” என முத்திரை குத்தியது. இந்தக் குற்றச்சாட்டு, அவரது செயல்பாடுகள் ஆட்சியை எவ்வளவு அசைத்தன என்பதற்கான சாட்சியே.
பிரிட்டிஷ் ஆட்சியின் பார்வையில், வ.உ.சி. வெறும் அரசியல் எதிரியல்ல, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக ஆதிக்கத்துக்கே நேரடியாகச் சவால் விட்ட மனிதன். தூத்துக்குடி - கொழும்பு கடல
மனிதனை மாடாக மாற்றிய கொடுமை: வ.உ.சி.
காந்தி, நேரு, காமராஜர் போன்ற தலைவர்கள் இந்திய விடுதலைக்காகப் போராடினர். சிறைத்தண்டனை அனுபவித்தனர்; துன்பங்களைச் சந்தித்தனர். அவர்களது போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் இந்தியா பெரும் அங்கீகாரத்தை வழங்கியது. காந்தி, “மகாத்மாவாக கொண்டாடப் பட்டார்; நேரு இந்தியாவின் முதல் பிரதமராக உயர்ந்தார்; காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்ச ராக மக்கள் மனங்களில் இடம்பிடித்தார். அரசியல் அதிகாரமும், சமூக மரியாதையும் அவர்களைத் தேடி வந்தது.
நாட்டுக்காகப் பலர் ரத்தம் சிந்தியிருக்கிறார் கள்; சிலர் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த தேசம், அந்த அனைவரையும் ஒரே அளவில் அங்கீகரித்ததில்லை. சிலர் வரலாற்றின் உச்சியில் நிறுத் தப்பட்டனர்; சிலர் காலத்தின் ஓட்டத்தில் மறக்கப்பட்டனர். வாழும் காலத்தில் மரியாதையும் பாதுகாப்பும் கிடைக்காதவர்களே அதிகம் என்பதே வரலாற்றின் கசப்பான உண்மை.
அத்தகைய தியாகிகளுள் ஒருவர் வ.உ.சி. - வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. விடுதலைப் போராட்ட வரலாற் றில், உலகிலேயே மிக நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் தலைவர் இவரே. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை (சுமார் 40 ஆண்டுகள்) வழங்கிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், அவரை “வெறுக்கத்தக்க ராஜதுரோகி, “மிக ஆபத்தான மனிதன்” என முத்திரை குத்தியது. இந்தக் குற்றச்சாட்டு, அவரது செயல்பாடுகள் ஆட்சியை எவ்வளவு அசைத்தன என்பதற்கான சாட்சியே.
பிரிட்டிஷ் ஆட்சியின் பார்வையில், வ.உ.சி. வெறும் அரசியல் எதிரியல்ல, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக ஆதிக்கத்துக்கே நேரடியாகச் சவால் விட்ட மனிதன். தூத்துக்குடி - கொழும்பு கடல் வழியில் ஆங்கிலேயர்களின் முழு வியாபார ஆதிக்கத்தை முறியடிக்க, இந்தியர்களின் முதலீட்டில் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத் தைத் தொடங்கினார். “சுதேசி” என்பது கோஷம் அல்ல, செயல் என்பதை அவர் நிரூபித்தார். இந்தியர்கள் ஆங்கிலேயர் இன்றி தொழில் நடத்த முடியாது என்ற காலனிய எண்ணத்தை, அவர் தனது செயலால் உடைத்தார்.
அத்துடன் கோரல் மில் தொழிலாளர் களின் கூலி உயர்வு, வேலை நேரக் கட்டுப்பாடு போன்ற அடிப்படை உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். தொழிலாளர்களின் வாழ்க்கையை மனிதநேயமாகப் பார்க்க வேண்டும் என்ற சிந்தனை, அன்றைய காலத்தில் ஆட்சியாளர் களுக்கு மிகப்பெரிய அச்சமாக இருந்தது. இது மக்களிடையே ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான விழிப்புணர்வையும் எழுச்சியையும் உருவாக்கியது. பொதுக்கூட்டங்களில் சுயராஜ்ஜியத்தை உரத்த குரலில் பேசியதால், ஆட்சிக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியவர் எனக் குற்றம் சாட்டப்பட்டார். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் அவர் ஏற்படுத்திய எழுச்சி, ஆட்சியாளர்களின் தூக்கத்தை கெடுத்தது.
கைது, வழக்குகள், எச்சரிக்கைகள் எதுவும் அவரை அச்சுறுத்தவில்லை. தனது நிலைப்பாட்டை மாற்ற மறுத்த இந்த உறுதியே, பிரிட்டிஷ் ஆட்சியாளர் களின் கோபத்தையும், பயத்தையும் அதிகரித்தது. அவரது பொருளாதார சுதந்திரம், தொழிலாளர் உரிமைகள், தேசிய சுயமரியாதைக்கான போராட் டங்கள் அனைத்தும் சட்டப்படி “குற்றங்கள்” எனப் பதிவு செய்யப் பட்டன. கைது செய்யப்பட்ட பின்னர் கூட, அவருக்குரிய அடிப் படை சட்ட உரிமைகள் மறுக்கப் பட்டன. ஜாமீன் பெறும் வாய்ப்பு இருந்தும், அதை மறுத்து சிறையில் அடைப்பதில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர். நோக்கம் ஒன்றே -வ.உ.சி.யை உடலாலும் மனதாலும் நொறுக்க வேண்டும்.
கோவை சிறையில் அவருக்கு அரசியல் கைதி என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை. கரடுமுரடான சணல் ஆடை, கால்களில் சங்கிலி, மனிதனை மிருகமாக மாற்றும் அளவிலான கடும் உழைப்பு -இவையே அவரது தினசரி வாழ்க்கை யாகின. பயிற்சி பெற்ற காளைகள் இழுக்கும் எண்ணெய் செக்கில், அவரைக் காளை போல பூட்டி இழுக்க வைத்தனர். தோள்கள் சிதறின; நரம்புகள் கிழிந்தன. இது உழைப்பு அல்ல; மனித கவுரவத்தை நசுக்கும் திட்டமிட்ட அவமானம். உடல் வலியைவிட, மனிதராக நடத்தப்படாத அந்த இழிவே அவரை அதிகமாக வதைத்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/10/jail1-2026-02-10-10-58-03.jpg)
உணவு என்ற பெயரில் அழுகிய கஞ்சி, புழு மிதந்த சோறு, குடிக்கத் தகாத தண்ணீர். நோய் வந்தாலும் மருந்தில்லை; வலி வந்தாலும் இரக்கம் இல்லை. எண்ணெய் செக்கு வேலை அவரது உடல்நலத்தைக் கடுமையாகச் சிதைத்தது. மூச்சுத்திணறல், குடல் நோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்பட்டபோதும், மருத்துவ சிகிச்சை திட்டமிட்டு மறுக்கப்பட்டது. உடலை அழித்தால் தேசப்பற்று அழிந்துவிடும் என ஆங்கிலேயர்கள் தவறாகக் கணக்கிட்டனர்.
இந்த வேதனைகளுக்கிடையிலும், வ.உ.சி. மன உறுதியை இழக்கவில்லை. கோவை சிறையில் இருந்தபோது "மெய்யறம்'’என்ற நூலை எழுதினார். உண்மை, தர்மம், நீதி குறித்து அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை, அந்த நூலின் 125 அதிகாரங்களில் வெளிப்பட்டது. சிறை அவரது உடலை அடைத்தாலும், சிந்தனையை அடைக்க முடியவில்லை. அது அவரது போராட்டத்தின் இன்னொரு வடிவமாக மாறியது.
மேல்முறையீட்டில் இரட்டை ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டு, சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விடுதலை பெற்றார். ஆனால் 1912-ஆம் ஆண்டு கிடைத்த அந்த விடுதலை, வாழ்க்கைக்கான விடுதலையாக அமையவில்லை. ஆங்கிலேய அரசின் மீதான அச்சம் காரணமாக, சிறைக்கு வெளியே அவரை வரவேற்க யாரும் திரளவில்லை. தேசத்தின் நாயகன், அதே தேசத்தில் தனியாக நின்றார். சுப்ரமணிய சிவாவும், சுரேந்திரநாத் ஆர்யாவும் மட்டுமே அருகில் நின்றனர்.
வழக்குரைஞர் உரிமம் பறிக்கப்பட்டதால், அவர் தனது தொழிலைத் தொடர முடியவில்லை. அரசியல் தனிமையும், சமூக அலட்சியமும் அவரைச் சூழ்ந்தது. வறுமை அவரை நிழல்போல் தொடர்ந்தது. யாரிடமும் கையேந்தாமல், தூத்துக் குடியில் ஒரு சிறிய கடையைத் தொடங்கி மண்ணெண்ணெய், அரிசி, மளிகைப் பொருட்கள் விற்றார்.
ஒருநாள், டப்பாக்களில் வைத்து மண்ணெண் ணெய் விற்றுக் கொண்டிருந்த அவரிடம் “"இவ்வளவு பெரிய தேசபக்தர் இவ்வாறு வாழ வேண்டுமா?'”என்று அவருக்கு நெருக்கமானவர்கள் வருத்தப்பட்டனர். அவர் அமைதியாக, ஆனால் உறுதியாகச் சொன்னார்: “"உழைப்பதில் தாழ்வு இல்லை. தேசத்திற்காகச் சிறை சென்றது பெருமை என்றால், என் உழைப்பில் உயிர் வாழ்வதும் அதே பெருமைதான்''’-அவரது இந்த வார்த்தைகள் தியாகத்தின் உயரத்தை வெளிப்படுத்தின.
வெளிநாட்டில் இருந்த தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அனுப்பிய 347 ரூபாய் 12 அணாவைப் பெற கூட, ஒரு ஆண்டுக்கும் மேலாக காந்திக்கு அவர் கடிதங்கள் எழுத வேண்டியிருந்தது. உதவி கேட்கும் ஒவ்வொரு கடிதமும், அவரது மௌன வேதனையின் சாட்சியாக இருந்தது. இறுதியில், 1936-ஆம் ஆண்டு, வ.உ.சி. கடனோடும் நோயோடும், எந்த அரசியல் மரியாதையும் இன்றி அமைதியாக உயிர்நீத்தார்.
தேசத்திற்காக எல்லாவற்றையும் கொடுத்த வ.உ.சி., இந்த தேசத்திடமிருந்து புகழ் அல்ல - மௌனத்தையே பரிசாகப் பெற்றார். ஆனால் அந்த மௌனம், வ.உ.சி.யின் தியாகத்தை அழித்து விடவில்லை. வரலாறு சில நேரங்களில் தாமதமாகப் பேசுகிறது. அதிகாரத்தின் குரல் அடங்கிய பிறகே, உண்மையின் குரல் தெளிவாகக் கேட்கப்படுகிறது. வ.உ.சி.யின் வாழ்க்கை அதற்கான சாட்சியாக நிற்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் மறுக்கப்பட்ட மரியாதை, அவர் மறைந்த பிறகும் நீண்டகாலம் தள்ளிப்போன அங்கீகாரம் - இவை அனைத்தும் இந்த தேசத்தின் நன்றி கெடுதல் எவ்வளவு கொடூரமானது என்பதையே காட்டுகிறது.
வ.உ.சி. போராடியது அரசியல் பதவிக்காக அல்ல; அதிகாரத்திற்காக அல்ல. இந்தியன் என்ற அடையாளத்துக்காக, சுயமரியாதைக்காக, பொருளாதார சுதந்திரத்துக்காக. “ஆங்கிலேயர் இன்றி இந்தியன் வாழ முடியாது’என்ற அவமானகரமான நம்பிக்கையை முறியடிப்பதே அவரது கனவாக இருந்தது. அந்தக் கனவுக்காகவே அவர் உடலைக் கொடுத்தார்; வாழ்க்கையை இழந்தார்; குடும்பத்தை வலியில் தள்ளினார்.
இன்றைய தலைமுறை அனுபவிக்கும் பல சுதந்திரங்கள், அறியப்படாத தியாகிகளின் ரத்தத்திலும் வலியிலும் வளர்ந்தவை. அந்தப் பட்டியலில் வ.உ.சி. ஒரு பெயர் அல்ல -ஒரு யுகம். அவர் தொடங்கிய பொருளாதார சிந்தனை, தொழிலாளர் உரிமைகளுக்கான குரல், சுயமரி யாதை அரசியல் - இவை அன்றைய காலத்திற்கு மட்டுமல்ல, இன்றும் கூடப் பொருத்தமான உண்மைகளாகவே இருக்கின்றன
ஒரு நாடு உண்மையில் பண்பட்ட நாடா என்பதை, அது தன் அதிகாரத்தில் உள்ளவர்களை எப்படிக் கொண்டாடுகிறது என்பதை வைத்துப் பார்க்கக்கூடாது; மாறாக, அது தன் தியாகிகளை யும், எளியவர்களையும் எப்படி நடத்துகிறது என்பதை வைத்தே அளவிட வேண்டும். இன்று வ.உ.சி. போற்றப்படுகிறார். ஆனால் அவர் உயிருடன் இருந்த காலத்தில் இந்த தேசம் அவரைத் தாங்கியதா? என்பது இன்றும் விடை தெரியாத சோகமான கேள்வியாக இருக்கிறது. அந்தக் கேள்வி எளிதானது.
தேசத்திற்காக எல்லாவற்றையும் கொடுத்த ஒருவருக்கு, தேசம் திரும்ப என்ன கொடுத்தது?
(ஊழல் தொடர்ந்து கசியும்)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us