இரும்புக் கம்பிகளுக்குள் எழுந்த நெஞ்சுக்கு நீதி!
வாசகர் ஒருவர் தனது கடிதத்தில்... ‘"சிறை தொடரை தவறாமல் படித்து வருகிறேன். கடந்த நக்கீரன் இதழில் வெளியான அத்தியாயத்தில் நெல்சன் மண்டேலா படம் இடம்பெற்றிருந்தது. அதை வாசிக்கும்போது எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் கட்டுரையில் நெல்சன் மண்டேலாவின் கருத்தும், அதைச் சென்னை உயர்நீதிமன்றம் மேற்கோள் காட்டியதும் மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. பன்முகத் தன்மை கொண்ட இந்தத் தொடரில், நெல்சன் மண்டேலாவின் சிறை வாழ்க்கை யைப் பற்றியும் சில வரிகள் சேர்த்திருக்கலாமே என்று தோன்றியது. ஊழல் முதல் நீதிமன்ற தீர்ப்புகள் வரை பல விஷயங்களை உள்ளடக்கும் இந்தத் தொடரில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறை சம்பவங்களையும் சேர்த் தால் தொடரின் வலிமை அதிகரிக்கும். நம் நாட்டில் பல அரசியல் தலைவர் கள் சிறைவாசம் அனுபவித்துள்ளனர். மொழிப்போர் தியாகிகள் குறித்து சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியான பிறகே இன்றைய இளைஞர்கள் அந்த வரலாற்றைப் பற்றி அறிய ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடி சிறை சென்ற மகாத்மா காந்தி முதல், ஊழல் வழக்கில் சிறை சென்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வரை - சிறையில் இருக்கும்போது அவர்கள் செய்த செயல்களையும், அவர்கள் மனநிலையையும் இந்த தொடரில் சேர்க்க வேண்டும்'’ என எழுதியிருந்தார்.
அந்த வாசகர் கேட்டுக்கொண்டபடி வரலாற்றின் சில பக்கங்களை நெருங்கிப் பார்ப்போம்.
சிறைவாசம் அனுபவித்த 27 ஆண்டுகளை நெல்சன் மண்டேலா வீணாக்கவில்லை. சட்டம் படித்து பட்டம் பெற்றார். அரசியல் சிந்தனைகள் உள்ளிட்ட பலவற்றை மனதில் வளர்த்தார். சிறை கால நினைவுகளின் அடிப்படையில் அவர் எழுதிய “கர்ய்ஞ் ரஹப்ந் ற்ர் எழ்ங்ங்க்ர்ம்” என்ற புத்தகம் உலக அளவில் வெகு பிரபலமானது. சிறை வாழ்க்கை அவருக்கு மனநிலையைக் கட்டுப்படுத்தவும், பொதுச் சிந்தனையை வளர்ப்பதற்கும் ஒரு பயிற்சியாக இருந்தது. பல அரசியல் மற்றும் வரலாற்றுப் புத்தகங்களைப் படித்து உலகைப் புரிந்துகொண்டார். இந்த அனுபவம் அவருக்கு மன்னிப்பு, அமைதி, ஒற்றுமை போன்ற கொள்கை களை வலியுறுத்த உதவியது. மொத்தத்தில் அவருடைய சிறைக்காலம் கட்டுப்பாடு அல்ல, மனிதநேயத்தை நோக்கிய பயணமாக மாறியது. அவர் சிறையில் கற்ற, சிந்தித்த, எழுதிய வாழ்க்கை இவ்வுலகிற்கு அமைதி மற்றும் நீதியின் அடையாளமாக அமைந்தது.
மகாத்மா காந்தி வெவ்வேறு காலகட்டங் களில் பல சிறைகளில் சுமார் 6 ஆண்டுகள் மொத்தமாக சிறைவாசம் அனுபவித்தார். அதை அவர் தண்டனை என்று பார்க்கவில்லை, தன்னைக் கட்டுப்படுத்தும், வளர்ச்சிக்கான வாய்ப்பாகவே பயன்படுத்தினார். தினமும் இராட்டையில் (ள்ல்ண்ய்ய்ண்ய்ஞ் ஜ்ட்ங்ங்ப்) நூல் நெய்து, தன்னிறைவு மற்றும் சுதந்திரத்தின் கருத்தை அவர் நடைமுறைப் படுத்தினார். எவ்வாறு என்றால், ஒவ்வொருவரின் சிறு செயலும் ஒன்றுசேர்ந்து ஒரு நாட்டின் சுதந்திரத்தையும் வலிமையையும் “நெய்து” உருவாக்கும் என்பதில் அவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். நிறைய கடிதங்கள் எழுதினார். தனது சிந்தனைகளைப் பதிவு செய்தார். இந்த எழுத்துகளால் தனது அரசியல், ஒழுக்கம், ஆன்மிக எண்ணங்களைத் தெளிவுபடுத்தினார். பகவத் கீதை உள்ளிட்ட பல மத, தத்துவ நூல்களை வாசித்தார். அதன் மூலம் தியானம், பிரார்த்தனை போன்றவற்றில் ஈடுபட்டார். எளிய உணவு, நடைப்பயிற்சி, சுத்தம் ஆகியவற்றில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார். மொத்தத்தில் தனது சிறை வாழ்க்கையை ஒரு ஆன்மிகப் பயிற்சி மையமாக மாற்றினார். இதனால் அவர் சுய ஒழுக்கம், அறிவு, மன அமைதி ஆகியவற்றை வளர்த்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/02/jail1-2026-02-02-16-36-11.jpg)
பெருந்தலைவர் காமராஜர் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் பலமுறை ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டார். ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். அப்போது அவர் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாசித்து தனது அறிவை வளர்த்தார். வரலாறு, உரிமைகள் மற்றும் சுதந்திரப் போராட்ட சிந்தனைகள் குறித்து ஆழமான புரிதலைப் பெற்றார். பிற விடுதலைப் போராட்டத் தலைவர்களுடன் பழகி அரசியல் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். சிறை அனுபவம் அவரது சிந்தனைகளையும் அரசியல் ஒழுக்கத்தையும் மேலும் வலுப்படுத்தியது. இந்த அனுபவங்களே பின்னர் அவரை ஒரு திறமையான தேசியத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் உருவாக்க உதவின.
அறிஞர் அண்ணா பல முறை அரசியல் போராட்டங்களில் பங்கேற்று சுமார் 15 மாதங்கள் வரை சிறை வாழ்வு அனுபவித்தார். சிறைவாசத்தின் போதும் அவர் தமிழ் மொழி உரிமை, சமூக சமத்துவ கோரிக்கைகள் போன்ற அரசியல் கருத்துகளை எழுத்து, பேச்சு வாயிலாகப் பரப்பினார். சிறையில் இருந்தபோதும் அவர் தனது கட்சியின் (தி.மு.க.) செயல்பாடுகளை வழிநடத்தி, ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருந்தார். அவரது சிறைவாசம் நீண்டதாக இல்லா விட்டாலும், அது அவரது போராட்ட உறுதி யையும், தியாக உணர்வையும் தெளிவாக வெளிப்படுத்தியது. இதனால், அண்ணாவின் சிறைவாசம் தமிழகம் முழுவதும் மொழி மற்றும் சமூக உரிமை இயக்கத்திற்கு முக்கியமான ஒரு கட்டமாகக் கருதப்படுகிறது.
கலைஞர் தனது அரசியல் வாழ்க்கையில் பல முறை கைது செய்யப்பட்டாலும் நீண்ட ஆண்டுகள் தொடர்ச்சியாக சிறைவாசம் அனுபவித்தவர் அல்ல. ஒரு போராட் டத்தில் கைது செய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் சிறையில் இருந்தார். 62 நாள்கள் தனிமைச் சிறையில் இருந்த காலமும் அவர் எழுதிய நெஞ்சுக்கு நீதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் கழித்த அனுபவங்கள் அவரது சிந்தனையிலும், எழுத்துக்களிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. சிறையை அவர் தண்டனையாக அல்ல, அரசியல் போராட்டத்தின் ஒரு கட்டமாகவே பார்த்தார். உடல் சிறையில் இருந்தாலும், சிந்தனையை யாராலும் அடைக்க முடியாது என்ற நம்பிக்கையுடன், வாசிப்பு, எழுத்து, சமூக நீதி குறித்த சிந்தனை ஆகியவற்றை தொடர்ந்து கொண்டி ருந்ததாக அந்நூலில் குறிப்பிட் டுள்ளார்.
சிறை வாழ்க்கையின் கடினங் கள் - உணவு, வசதி இல்லாமை, தனிமை, காவலர்களின் அணுகு முறை - அனைத்தும் மனித மரியா தையை சோதிக்கும் அனுபவங்களாக இருந்ததை அதில் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார்.
அந்த அனுபவங்களில் மிகவும் மனதை உலுக்கும் ஒரு சம்பவத்தை அவர் குறிப்பிடுகிறார்: "ஒரு இரவு முழுவதும் சிறை அறையில் கழிப்பறை வசதி இல்லாமல், மல வாடை தாங்க முடியாமல், சிறைக்கம்பிகளுக்கு அருகே மூக்கை வைத்து இரவைக் கழித்தேன்” என்கிறார். இதை அவர் தனிப்பட்ட துன்பமாக மட்டும் சொல்லவில்லை. மனிதனை மனிதனாகக் கூட மதிக்காத அமைப்பின் முகமூடியை கிழிக்கும் சாட்சியமாக அதை முன்வைக்கிறார். அந்த அனுபவத்தின் பின்னால் அவர் எழுப்பும் மௌனக் கேள்வி: “சட்டம்
காக்கும் இடமே மனித மரியாதையைக் கொன்றால், அந்தச் சட்டம் யாருக்காக?” என்பதாகும். இவ்வாறு, சிறை என்பது சீர்திருத்த இடமா? அல்லது மனிதரை உடைக்கும் இடமா? என்ற ஆழமான சமூக -அரசியல் கேள்வியை நெஞ்சுக்கு நீதியைப் படிப்பவர்களின் மனதில் விதைத் துள்ளார்.
‘இரும்புப் பெண்மணி’ என அ.இ.அ.தி.மு.க.வினர் பெருமிதமாக அழைத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் கூட, சிறையின் இரும்புக் கம்பிகளுக்குள் அடைக்கப் பட்ட நிலை ஏற்பட்டது. தனது அரசியல் வாழ்க்கையில் இரண்டு முறை சிறை அனுபவம் பெற்ற அவர், ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்குகளில் சிக்கினார். 1996-ல் டான்சி நிலம், கலர் டிவி ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா, சென்னை மத்திய சிறையில் 28 நாள்கள் சிறைவாசம் அனுபவித்து, பின்னர் ஜாமீனில் வெளியேவந்தார்.
2014 செப்டம்பர் 27-ல், சுமார் 18 ஆண்டுகள் நீடித்த, வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதனைத் தொடர்ந்து அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருடன் நெருங்கிய தொடர்புடைய சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத் தண்டனை பெற்றனர்.
2014 அக்டோபர் 17-ல், உச்ச நீதிமன்றம் ஜெய லலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதன் மூலம், 21 நாள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், அவர் மறைவுவரை நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகள் உலகமெங்கும் அறிந்தவையே. ஆனால் மொத்தமாக 49 நாள்கள் சிறைவாசத்தில் இருந்த காலத்தில், மேலே குறிப்பிடப்பட்ட அரசியல் தலைவர்களைப் போல ஜெயலலிதா சமூக அக்கறையுடன் மக்களுக்காகச் சிந்தித்த தென்ன? செயல்படுத்தியது என்ன?
அதுவும் அந்த போட்டோவை பார்த்துப் பார்த்து பரப்பன அக்ரஹாரா சிறை சிரித்த அந்தச் சிரிப்பு இருக்கிறதே?
(ஊழல் தொடர்ந்து கசியும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/jail-2026-02-02-16-35-59.jpg)