கைதிகள் மீதான கண்காணிப்பு!
முல்லா கமிட்டி, 1983, அறிக்கை, தொகுதி-II, பக்கம் 260-ல் Community Involvement in Corrections’ என்ற தலைப்பின் கீழ், பார்வையாளர் குழு சிறை நிர்வாகத்தை பிற துறைகளுக்கும், சமூகத்துக்கும் இணைக்க உதவுகிறது. இந்தக் குழு திறம்பட செயல்பட்டால், கைதிகளின் குறைகளை நிவர்த்தி செய்யவும், சீர்திருத்தம் செய்து, மறுவாழ்வு ஏற்படுத்தவும் பெரிதும் உதவும். தன்னார்வலர்களை பார்வையாளர்களாக நியமிப்பதால், குற்றவாளிகளைச் சீர்திருத்துவதில் பொதுமக்கள் மற்றும் சமூகத்தின் பங்கேற்பும் கிடைக்கும். இது தேசிய சிறைக்கொள்கையின் ஒரு பகுதியாக ஆக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையில் The United Nations Standard Minimum Rules for the Treatment of Prisoners (The Mandela Rules)-ல் பிரிவு 83, 84 மற்றும் 85, United Nation Rules for the Treatment of Women Prisoners (Bangkok Rules) பிரிவு 25 மற்றும் The United Nation Convention against Torture (UNCAT) பிரிவு 17 ஆகியவை, சிறை சீர்திருத்த நோக்கங்களை நிறைவேற்று வதற்காக, சிறையின் வெளியில் இருந்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறுகிறது. தகுதியான திறமையான பார்வையாளர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றும், ஒவ்வொரு வருகையிலும் அவர்கள் வழங்கும் எழுத்துப்பூர்வ அறிக்கைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. Commonwealth Human Rights Initiative என்ற NGO, 'Handbook of Prison Visitors'’’ என்ற கையேட்டை வெளியிட்டுள
கைதிகள் மீதான கண்காணிப்பு!
முல்லா கமிட்டி, 1983, அறிக்கை, தொகுதி-II, பக்கம் 260-ல் Community Involvement in Corrections’ என்ற தலைப்பின் கீழ், பார்வையாளர் குழு சிறை நிர்வாகத்தை பிற துறைகளுக்கும், சமூகத்துக்கும் இணைக்க உதவுகிறது. இந்தக் குழு திறம்பட செயல்பட்டால், கைதிகளின் குறைகளை நிவர்த்தி செய்யவும், சீர்திருத்தம் செய்து, மறுவாழ்வு ஏற்படுத்தவும் பெரிதும் உதவும். தன்னார்வலர்களை பார்வையாளர்களாக நியமிப்பதால், குற்றவாளிகளைச் சீர்திருத்துவதில் பொதுமக்கள் மற்றும் சமூகத்தின் பங்கேற்பும் கிடைக்கும். இது தேசிய சிறைக்கொள்கையின் ஒரு பகுதியாக ஆக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையில் The United Nations Standard Minimum Rules for the Treatment of Prisoners (The Mandela Rules)-ல் பிரிவு 83, 84 மற்றும் 85, United Nation Rules for the Treatment of Women Prisoners (Bangkok Rules) பிரிவு 25 மற்றும் The United Nation Convention against Torture (UNCAT) பிரிவு 17 ஆகியவை, சிறை சீர்திருத்த நோக்கங்களை நிறைவேற்று வதற்காக, சிறையின் வெளியில் இருந்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறுகிறது. தகுதியான திறமையான பார்வையாளர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றும், ஒவ்வொரு வருகையிலும் அவர்கள் வழங்கும் எழுத்துப்பூர்வ அறிக்கைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. Commonwealth Human Rights Initiative என்ற NGO, 'Handbook of Prison Visitors'’’ என்ற கையேட்டை வெளியிட்டுள்ளது. அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Bureau of Police Research and Development, New Delhi, 'and book for Board of Visitors'’ என்ற வழிகாட்டுக் கையேட்டையும் வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையம்: மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993, பிரிவு 12(C)-ன் படி, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் மனித உரிமை மீறல்கள் நடக்கிறதா என்பதை ஆய்வு செய்ய மனித உரிமை ஆணையம் திடீர் வருகை நடத்த அதிகாரம் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள சிறைகளுக்குச் செல்வது கடினமானது என்பதால், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா 25.09.1996 அன்று அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் கடிதம் அனுப்பினார். அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம், சுற்றறிக்கை எண்:RO.C.No.3616-A/96/F1, நாள்: 04.10.1996-ன் படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட/அமர்வு/முதன்மை நீதிபதிகளும், நீதிமன்ற நடுவர்களும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளுக்கு ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒருமுறையாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஓ.ந. வர்மா, 01.01.2000-ல் அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில், Official Visitor ஆன அமர்வு நீதிபதிகள், சிறைக் கைதிகளுக்கு சுகாதாரம், தூய்மை மற்றும் அடிப்படையான மனித மரியாதை அளிக்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
நீதிமன்ற வழக்குகள்: 1986-ல் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மத்திய சிறையில், வங்காரியா என்ற கைதி சிறை மருத்துவமனையில் ஆர்டர்லியாக பணிபுரிந்து வந்தார். சிறை மருத்துவர், செவிலியர் மற்றும் கம்பவுண்டரின் துணிகளைத் துவைக்கும் பணியின்போது, ஒரு துணி தொலைந்தது. அதனைத் தொடர்ந்து, சிறைப் பணியாளர்கள் அந்தக் கைதியை மனரீதியாகத் தொடர்ச்சியாகக் கொடுமைப்படுத்தினர். உடல்நிலை மோசமான நிலையில், அவருக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடிய Chloroquine மற்றும் Analgin ஊசி மூலம் செலுத்தப்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட ஊசிப்புண் மற்றும் Cellulitis காரணமாக அந்தக் கைதி, M.Y. மருத்துவமனை, இந்தூரில் 18.11.1987 அன்று உயிரிழந்தார்.
வங்காரியாவுடன் சிறையில் இருந்த அவரது தந்தை பந்தா மற்றும் சகோதரர் ரஞ்சோத், வங்காரியா இறக்கவேண்டும் என்று திட்டமிட்டே நடந்ததாக, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினர். இதனை M.P.No.66/1987 என்ற வழக்காகப் பதிவு செய்த நீதிபதிகள் V.D. கியணி மற்றும் B.B.L. ஸ்ரீவஸ்தவா, சிறை நிர்வாகத்திடம் கடுமையாகக் கேள்வி எழுப்பினர். அதில் Official மற்றும் Non-Official Visitors தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யவில்லை என்றும், தாசில்தார் செய்த நீதிவிசாரணை போதியதல்ல என்றும், சிறை ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளன என்றும், கைதி இறக்கும்போது மரண வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும், இறந்த 9 மாதங்கள் கழிந்தும் Viscera வேதியியல் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை என்றும் 03-09-1987-ல் குறிப்பிட்டனர்.
மேலும், Official மற்றும் Non-Official Visitors நியமனம் மற்றும் வருகையின் அவசியம் குறித்து கீழ்க்கண்ட வழக்குகள் தெளிவாகக் கூறுகின்றன: Rama Murthy Vs State of Karnataka (1997), Rasikbhai Ramsingh Rana Vs State of Gujarat (1999), Sitaben Govabhai Desai Vs State of Gujarat (2005), Master Jithu Vs State of Tamil Nadu (2010), Maja Daruwala Vs State of Maharashtra (2010), Suo Moto Vs State of Rajasthan (2015)..
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு: Model Prison Manual, 2003, அத்தியாயம் 29-ல் கூறியபடி Non-Official Visitors நியமிக்கப்பட வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை (F.No.16014/4/2005#PR, நாள் 18.02.2011) வெளியிட்டது. தமிழகச் சிறை விதிகளிலும் Non-Official Visitors நியமனம் குறிப்பிடப்பட்டுள்ள போதும், செயல்படுத்தப்படவில்லை. இதை People’s Watch-ன் தலைவர் ஹென்றி டிபேன், தமிழக உள்துறை செயலாளருக்கு 02.12.2015 அன்று கடிதம் மூலம் கோரினார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், W.P.(MD) No.15321 of 2017 என்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. Non-Official Visitors நியமனம் செய்ய உத்தரவிட்டு அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆனால் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், சிறைத்துறைக்கு ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதி ஊழல் இல்லாமல், நியாயமாகச் செலவிடப்படுகிறதா என்பதைப் பட்டியலிட்டு, அதனைப் பார்வையிடவும், மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்கவும் Non-Official Visitors-களை நியமித்து உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் (WMP(MD) Nos.9492, 9493 and 9495 of 2022 அவரால் தொடரப்பட்டன.
"சிறைகளுக்குள் சென்று பார்க்காத வரை, எந்தவொரு நாட்டின் உண்மையான தரத்தையும் அறிய முடியாது. ஒரு நாடு, தனது அடித்தட்டு குடிமக்களை (கைதிகளை) எப்படி நடத்துகிறது என்பதை வைத்தே மதிப்பிட வேண்டும்'” என்ற நெல்சன் மண்டேலாவின் கருத்தைச் சுட்டிக் காட்டி, Non-Official Visitors நியமனம் உள்ளிட்ட 11 வழிகாட்டுதல்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் த. மகாதேவன் மற்றும் ஓ. சத்திய நாராயண பிரசாத் 02.01.2023 அன்று வழங்கினர்.
Official மற்றும் Non-Official Visitors அதிகாரங்கள் மற்றும் கடமைகள் - விதி 509-ன் படி நீதி மற்றும் வருவாய்த்துறை பார்வையாளர்கள், சிறை நிர்வாகத்தில் சட்டம் மற்றும் விதிகள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வுசெய்து திருப்தியடைய வேண்டும். சிறையின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அனைத்துக் கைதிகளையும் பார்வையிட வேண்டும். எந்தவொரு கைதியின் புகாரையும் பொறுமையாகக் கேட்டு மனுக்களைப் பெற வேண்டும். சிறையில் உள்ள எந்தப் புத்தகத்தையும் அல்லது பதிவேட்டையும் ஆய்வு செய்யலாம். சிறைக் கண்காணிப்பாளர் ஆவணங்களை வழங்க மறுத்தால், அதற்கான எழுத்துப்பூர்வ பதிலைப் பெற வேண்டும். கைதிகளுக்கான உணவு தரமானதாகவும், சுகாதாரமாகவும் சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுவாக Official மற்றும் Non-Official Visitors வருவதை சிறை நிர்வாகம் தேவையற்ற தலையீடாகவே கருதுகிறது. ஓய்வு பெற்ற சிறைப் பணியாளர்கள் பலர் Non-Official Visitors ஆக வர வரும்பினாலும், சிறை அதிகாரிகள் அவர்களை அனுமதிக்கவில்லை.
(ஊழல் தொடர்ந்து கசியும்…)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us