Advertisment

JAIL FOLLOW UP 61 தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்!

jail

கைதிகளின் உடல் உரிமைப் போராட்டம்!

பொதுவாக கிளை மற்றும் மாவட்டச் சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளை வெளி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் நேர்வுகளில், அந்தச் சிறைவாசியின் மீது வழக்குப் பதிவு செய்த காவல் நிலையத்திலிருந்து வழிக்காவல் பெறப்படுகிறது. மத்திய சிறைகள் என்றால், அந்தச் சிறை அமைந்துள்ள எல்லையின் அடிப்படையில் மாவட்ட அல்லது மாநகர ஆயுதப்படையிலிருந்து வழிக்காவல் வழங்கப்படுகிறது. 

Advertisment

சிறை DGP அசுதோஷ் சுக்லாவிற்கு, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ஒரு மத்திய சிறையில் சராசரியாக 1,500 கைதிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஒரு வாரத்திற்கு சுமார் 35-40 கைதிகள் சிகிச்சை பெறுவதற்காக மத்திய சிறைகளிலிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். மேலும், அவசர அல்லது சிறப்பு சிகிச்சை தேவைப்படும் 5-8 கைதிகளும் அவ்வாறு அனுப்பப்படுகின்றனர். இதனால், ஒவ்வொரு மாவட்ட/மாநகர ஆயுதப்படையிலும் கைதிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆறு போலீஸ் குழுக்களையும், அவசரநிலை ஏற்பட்டால் ஒவ்வொரு மத்திய சிறையிலும் இரண்டு போலீஸ் குழுக்களையும் நியமிக்க வேண்டும் என சிறை உஏட, காவல்துறை உஏட-க்கு கடிதம் எழுதி, அதற்கான பதிலுக்காகக் காத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறைகளின் பராமரிப்பு மற்றும் பழுதுகளை நீக்க ரூ.12.40 கோடி தேவையுள்ளதாக உள்துறை மற்றும் நிதித்துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப் பப்பட்டு, அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் எ

கைதிகளின் உடல் உரிமைப் போராட்டம்!

பொதுவாக கிளை மற்றும் மாவட்டச் சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளை வெளி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் நேர்வுகளில், அந்தச் சிறைவாசியின் மீது வழக்குப் பதிவு செய்த காவல் நிலையத்திலிருந்து வழிக்காவல் பெறப்படுகிறது. மத்திய சிறைகள் என்றால், அந்தச் சிறை அமைந்துள்ள எல்லையின் அடிப்படையில் மாவட்ட அல்லது மாநகர ஆயுதப்படையிலிருந்து வழிக்காவல் வழங்கப்படுகிறது. 

Advertisment

சிறை DGP அசுதோஷ் சுக்லாவிற்கு, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ஒரு மத்திய சிறையில் சராசரியாக 1,500 கைதிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஒரு வாரத்திற்கு சுமார் 35-40 கைதிகள் சிகிச்சை பெறுவதற்காக மத்திய சிறைகளிலிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். மேலும், அவசர அல்லது சிறப்பு சிகிச்சை தேவைப்படும் 5-8 கைதிகளும் அவ்வாறு அனுப்பப்படுகின்றனர். இதனால், ஒவ்வொரு மாவட்ட/மாநகர ஆயுதப்படையிலும் கைதிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆறு போலீஸ் குழுக்களையும், அவசரநிலை ஏற்பட்டால் ஒவ்வொரு மத்திய சிறையிலும் இரண்டு போலீஸ் குழுக்களையும் நியமிக்க வேண்டும் என சிறை உஏட, காவல்துறை உஏட-க்கு கடிதம் எழுதி, அதற்கான பதிலுக்காகக் காத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறைகளின் பராமரிப்பு மற்றும் பழுதுகளை நீக்க ரூ.12.40 கோடி தேவையுள்ளதாக உள்துறை மற்றும் நிதித்துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப் பப்பட்டு, அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப் பிடப்பட்டது. இவ்வாறு தெளிவான கோரிக்கை கள் முன்வைக்கப் பட்டிருந்த போதிலும், இதுகுறித்து நீதிமன்றம் உடனடி உத்தரவு வழங்கவில்லை என்பது கவலைக்குரியதாகும்.

Advertisment

நீதிமன்றம், ஒரு நபரின் நடமாடும் சுதந்திரத்தை உத்தரவுகளால் கட்டுப்படுத்தலாம், ஆனால் கைதிகளின் அடிப்படை சுகாதார உரிமைகளைப்  பறிக்க முடியாது என்றும், கைதிகளும் மனிதர்களே என்பதையும் டிவிஷன் பெஞ்ச் (நீதிபதிகள் எஸ். மணிகுமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத்) சுட்டிக்காட்டியது. ஒன்பது மத்திய சிறைகள் மற்றும் மூன்று பெண்கள் சிறைகளில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, சிறை உஏட கோரிய ரூ.12.40 கோடியை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் உள்துறை மற்றும் நிதித்துறை செயலாளர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. 

அதன்படி, புழல் மத்திய சிறைக்கு ரூ.1.30 கோடி, வேலூருக்கு ரூ.64.60 லட்சம், கடலூருக்கு ரூ.56.41 லட்சம், சேலம் மத்திய சிறைக்கு ரூ.1.31 கோடி, திருச்சிக்கு ரூ.2.95 கோடி, திருச்சியில் உள்ள பெண்கள் சிறப்புச் சிறைக்கு ரூ.50.51 லட்சம், மதுரைக்கு ரூ.1.17 கோடி, பாளையங்கோட்டைக்கு ரூ.1.52 கோடி மற்றும் கோயம்புத்தூருக்கு ரூ.2.40 கோடி ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகம் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்ப டைக்கப்பட்டது. இது கைதிகளைத் தொற்று  நோய்களிலிருந்து பாதுகாப்பதையும்,  சுகாதார வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. முன்பு, அரசாணை எண்:799, உள் (சிறை-IV) துறை, நாள்:07.10.2013-ன்படி, ரூ.3.6 கோடியை தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகம் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைத்திருந் தது; அதன் தற்போதைய நிலை தெரியவில்லை. 

jail1

மேலும் அப்போதைய சிறை  DGP, கைதி களுக்கு நல்ல தரமான குடிநீர் வழங்குவதற்காக, G.O.Ms.No.943, உள் (சிறை-IV துறை, நாள்:22.12.2015-ன் படி, ரூ.51.75 லட்சம் செலவில், 9 மத்திய சிறைகளில் மணிக்கு 1000 லிட்டர் நீரையும், புழல், வேலூர், திருச்சியில் உள்ள 3 பெண்கள் சிறப்புச் சிறைகளில் மணிக்கு 500 லிட்டர் நீரையும் சுத்திகரித்து வழங்கும் கொள்ளளவு (Capacity) கொண்ட எதிர் சவ்வூடுபரவல் நிலையங்கள் (Reverse Osmosis Plants) நிறுவப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். ஆனால் சிறை ADGP சுற்றறிக்கை எண்:48700/ஐசி.1/2011, நாள்:15.07.2015-ல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, சிறை அங்காடியின் செயல்பாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற 20 சதவீத லாபத் தொகை பணியாளர் நல நிதியில் சேர்க்கப்பட்டு, பணியாளர் நலன் சார்ந்த பணிகளுக்குச் செலவிடப்படுகிறது என்றும், இந்த நிதியிலிருந்து சிறைப் பணியாளர்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக 13 Reverse Osmosis Plants, Ozone Technologies, Chennai#78 என்ற நிறுவனத்தின் மூலம் நிறுவப் பட்டுள்ளன என்பதும் தெரிய வருகிறது. சிறைப் பணியாளர்களுக்காக வழங்கப்பட்ட வ
சதிகளை, சிறைவாசிகளின் பயன்பாட்டுக்கு வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவித்து அப்போதைய சிறை நிர்வாகம் தப்பித்துக் கொண்டது. மேலும், பெரும்பாலான Reverse Osmosis Plants  செயல்படவில்லை என்பதும், இதற்காக செலவழிக்கப்பட்ட பணம் வீணானது என்பதுமே உண்மை.

மூத்த வழக்கறிஞர் வைகை தனது அறிக்கை யில், தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளி லும் “தண்டனை அறைகள்’உள்ளன. அங்கு கைதிகள் நிர்வாணமாக்கப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்படுவதாகவும், அதிகாரி கள் கைதியிடம் கேள்வி கேட்பதை அல்லது குரல் எழுப்புவதைத் தடுக்கும் நடைமுறை பின் பற்றப்படுகிறது என்றும், அடிப்படை வசதிகள் இல்லாதவாறாக தனிமைச் சிறைத் தண்டனை கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

பெரும்பாலான கைதிகள் வறுமைக் குடும்பங்களில் பிறந்தவர்கள் மற்றும் தங்களின் வழக்கை எதிர்த்துப் போராடுவதற் கான சட்ட உதவிகளைப் பெற முடி யாதவர்கள் என்பதால், பல ஆண்டு களாக தண்டனையை அனுபவித்து  வருகிறார்கள். பணம் படைத்தவர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்துச் செல்வதும் உண்டு.

உடல் குறைபாடுகள், பார்வைக் குறைபாடு கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயதான கைதிகள் போன்ற பலவீனங்கள் காரணமாக, சில சந்தர்ப்பங்களில் அனைத்து வழக்குகளையும் மறுபரிசீலனை செய்து மாநில அரசின் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் முன்விடுதலை(Premature Release) செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு சிறை விதி 341/1983-ல் தகுதி/அளவுகோல்கள் திருத்தம் செய்யப் பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. 

சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் குறித்து, தமிழகச் சிறைகளில் அனுமதிக்கப் பட்ட 155 துப்புரவுப் பணியாளர்களில் 66 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 89 பணியிடங்களை விரைவாக நிரப்ப  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சிறை DIG மற்றும் சிறைக்  கண்காணிப் பாளர்கள் 30.06.2019-க்குள் பணியிடங்களை நிரப்புமாறு கேட்டுக்  கொள்ளப்பட்டதாகவும் சிறை DGP நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

(ஊழல் தொடர்ந்து கசியும்)


___________

சிறைப் பணியாளர் மருத்துவப் பதிவு!

சிறை DGP-யின் குறிப்பாணை எண்:34031/EW1/2008, நாள்:20.08.2008, சிறை விதி:741/1983, 739/2024-ன் படி, சம்பந்தப்பட்ட மத்திய சிறையின் மருத்துவ அதிகாரி, சிறைக் கண்காணிப்பாளருடன் கலந்தாலோசித்து, சிறைப் பணியாளர் களுக்கு ஆண்டிற்கு ஒரு முறையாவது தவறாமல் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அத்தகைய மருத் துவப் பரிசோதனைகளின் அறிக்கைகள் கண்காணிப்பாளரின் அலுவலகத்தில் பாதுகாப்பாகப் பேணப்பட வேண்டும்.

மேலும் தொற்றுநோய் பரவும் காலங்களில், சிறையின் மருத்துவ அதிகாரி உடனடியாக அனைத்துக் கைதிகள் மற்றும் சிறைப் பணியாளர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் (சிறை விதி:677). அவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் Vaccination Register-ல் பதிவு செய்யப்பட வேண்டும் (சிறை விதி:738).

சிறையில் மருத்துவர்களாகப் பணிபுரியும் போதும், சிறைக்கு வந்து குறிப்பிட்ட காலம் பணியாற்றி விட்டு அரசு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம்/பதவி உயர்வில் சென்ற போதும், அவர்கள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளில் சிறைப் பணியாளர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக 99 சதவீத மருத்துவர்கள் கட்டணம் பெறுவதில்லை. சிறைப் பணி யாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அறுவைச் சிகிச்சை செய்யும் நேர்வுகளிலும் மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகின்றது என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். இதை ஒரு கொள்கையாகவே சிறை மருத்துவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

nkn240126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe